Thursday, 19 October 2017

சிகரெட்டுக்கும் நுரையீரல் கான்சருக்கும்

சிகரெட்டுக்கும் நுரையீரல் கான்சருக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுபிடித்து சொன்னதையும், தானியத்துக்கும் டயபடிசுக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுபிடித்து சொன்னபோதும் நடக்கும் காமடி கூத்துக்கள் எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கு

அப்ப எல்லாருமே சிகரெட் பிடிச்சாங்க. டாக்டர், மருத்துவர், தொழிலாளி, முதலாளி, ஏழை, பணகாரன்ன்னு எல்லாரும் தம்மர்ஸ் தான். எல்லாரும் இப்படி சர்வசாதாரணமா பயன்படுத்தும் ஒரு பொருளை கான்சருக்கு காரணம் என்றவுடன் அதை கேட்டு எல்லாரும் நகைத்தார்கள். காரணம் இப்ப கோதுமை தான் டயபடிசுக்கு காரணம் என்றால் எப்படி பலரும் டென்சனாகிறார்களோ அப்படித்தான் சிகரெட்டுக்கும் டென்சனானார்கள்.
அப்புறம் ஆதாரங்கள் வர, வர சிகரெட் கம்பனிகள் களத்தில் இறங்கின. இப்ப எப்படி பெப்ஸியும், கோக்கும் "கலோரி சமன்பாடு" தியரியை முன்வைத்து "உடல்பருமனுக்கு சர்க்கரை காரணமல்ல" என அதற்கு விலைபோன சில விஞ்ஞானிகளை வைத்து கதை கட்டி வருகின்றனவோ, அதே போல அப்ப "நுரையீரல் கான்சருக்கு காரணம் தார் ரோடு, பொல்யூஷன்" என வேறு ஆராய்ச்சிகளை காரணம் காட்டி சில விஞ்ஞானிகள் சிகரெட் கம்பனிகளுக்கு வக்காலத்து வாங்கினார்கள்.

இப்போது எப்படி அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன், அமெரிக்க டயபடிக் அசோசியேஷன் எல்லாம் டயபடிஸ்- தானிய இனைப்பை மறுத்துுி வருகின்றனவோ அதே போல அப்ப மெடிக்கல் அசோசியேஷன்கள் எல்லாமே சிகரெட்- கான்சர் இனைப்பை மறுத்தே வந்தன.அப்போதும் இந்த மெடிக்கல் அசோசியேஷன்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள மருத்துவர்களுக்கு உண்மையை கூறவே இல்லை. மருத்துவ கல்லூரி சிலபஸ், மெடிக்கல் கான்பரன்ஸ் போன்றவற்றில் இந்த உண்மைகள் மறைத்தே வைக்கபட்டன. ஆக உண்மை அறியாத மருத்துவர்கள் தம்மிடம் சிகிசசிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகரெட்டை விடும்படி பரிந்துரைக்க முன்வரவில்லை

ஒரு கட்டத்தில் சிகரெட் பெயர் நாறியவுடன் இந்த அமைப்புகள் "சாதா சிகரெட்டை பிடிக்க வேன்டாம். பில்டர் சிகரெட் நல்லது" என விளம்பரம் செய்தன. அந்த காலகட்டத்தில் அமெரிக்க அரசு நிலவுக்கு மனிதனை அனுப்ப செய்த செலவை மிஞ்சும் அளவு தொகையை பில்டர் சிகரெட்டை உருவாக்க செலவு செய்தது. காரணம் புகையிலை விவசாயம் செய்து வந்த வடகரோலினா, வர்ஜினியா மாநில விவசாயிகளின் ஓட்டுக்கள்
அதே மாதிரி அரிசி, மைதா பெயர் கெட்டவுடன் இப்ப முழு தானியத்தை களமிறக்கி "மைதாவுக்கு பதில் முழு கோதுமை சாப்பிடுங்க" என சொல்லி வருகிறார்கள்.

ஆனால் வெளியுலகுக்கு இவர்கள் "சிகரெட்டால் பாதிப்பில்லை" என சொல்லி வந்தாலும் சிகரெட் கம்பனி நிர்வாகிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் எல்லாருக்குமே சிகரெட்டால் கான்சர் வரும் என்பது ரொம்ப காலம் முன்பே தெரிந்திருந்தது. பர்சனலாக அவர்கள் தாம் சிகரெட்டை பிடிக்காமலும், தம் குழந்தைகளுக்கு சிகரெட்டை கொடுக்காமலும் தான் இருந்து வந்தார்கள்.

அதே மாதிரி இப்ப டயபடிஸ்- தானியம் லிங்க் உலகறிந்த உண்மை.... உலக அளவில் டயபடிஸை பற்றி அறிந்த எல்லா பெரிய மருத்துவ ஆய்வாளர்களுக்கும் தானியம்- டயபடிஸ் தொடர்பு தெரியும். ஆயிரக்கணக்கில் அது குறித்த ஆய்வுகள் மெடிக்கல் ஜர்னல்கலில் வெளியே வந்துள்ளன. ஆனால் அடுத்த நிலையில் இருக்கும் பிராக்டிசியனர் எனப்படும் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் மருத்துவர்களுக்கு இந்த உண்மை இன்னமும் தெரியாது. அவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் கற்பிக்கபட்டது எல்லாம் "கொலஸ்டிரால் ஆபத்தானது, முட்டை அபாயகரமானது" என்ற கட்டுக்கதையே

கடைசியாக சிகரெட்- கான்சர் தொடர்பு நிருபணமாகி மேலைநாடுகளில் சிகரெட் விற்பனை சரிந்தவுடன் அக்கம்பனிகள் ஆசிய நாடுகளுக்கு நகர்ந்து ஆசியர்களை குறிவைத்தன. அதே போல குளிர்பானம், சீரியல், நூடில்ஸ் விற்பனை மேலை நாடுகளில் சரிந்தவுடன் அவை தம் கடையை இந்தியாவுக்கு நகர்த்திக்கொண்டு வந்தும் விட்டார்கள்.

உண்மை நாலு தெரு தான்டுவதுக்குள் பொய் உலகையே சுற்றிவந்துவிடும் என்பார்கள். பார்க்கலாம்..இன்னும் எத்தனை நாள் இதையே சொல்லி சாதிப்பார்கள் என smile emoticon

No comments:

Post a Comment