ஆறு - 6 / 12
தமிழில் ஒரு நாளை ஆறு பொழுதாக பிரிக்கிறார்கள்...!
ஒரு வருடத்தை ஆறு பருவங்களை பிரிக்கிறார்கள்
வருடங்களின் பெயர்கள் 60 ஆண்டிற்கு ஒரு முறை திரும்ப வரும்..
12 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ!
60 நாழிகைகள் கொண்ட நாளை 12+12 மணி நேரமாக பொதுமைபடுத்தியவன் யார்?
12 inch (விரல் கட்டை) என்பது ஒரு அடி.. இது எதேச்சையானதா அல்லது கட்டமைக்கப்பட்டதா?
6-12-60-120-144(12*12) என ஆறின் மற்றும் பன்னிரெண்டும் பயன்பாடு நிறைய தொடர்பு இருக்கிறது…
12 வருடத்திற்கு ஒரு முறை மாகாமகம் கும்பகோணத்தில்
12 வருடத்திற்கு ஒரு. முறை குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) கேவில்களுக்கு செய்வதேன்
வருடங்களை 12 ஆக பிரித்து அதற்கு 12 இராசிகளை கொடுத்தவன் யார்? மாதங்களை பத்தாக பிரித்திருக்கலாம் ஏன் 12 ஆக பிரித்திருக்கிறார்கள்…
நம்மளுடைய தற்போதைய எண்ணின் அளவு 1, 10, 100 என்று போகும் ஆனால் நடைமுறையில் உள்ள சிலவை 6 மற்றும் அதனால் வகுபடும் எண்ணாகவே இருக்கிறது.. இந்த ஆறின் பயன்பாடு உலக வாழ்வியலில் கலந்துள்ளது.. எண்ணின் பத்து கட்டமைப்புக்கும் இந்த கோணங்களின் பயன்பாடும் ஏதோ ஒன்றை சொல்லுகிறது.. 10 அடிப்படையாக இல்லாமல் 12 அடிப்படையாக எண்ணை உருவாக்கினால் இவற்றை எளிதாக புரிந்து கொள்வார்கள் என்ற எண்ணமா?
PI (22/7=3.143) கோணவியல் (trigonometry) பிரச்னைகளைக்கான தீர்வை கொடுக்கும் ஆனால் அதை 6*60 (degree) = 2 * pi (radians) என பிரித்ததின் நோக்கம் என்னவோ? ஒரு வேலை இது பூமி சூரியனைச்சுற்றி வரும் நாட்கள் 360 ஐ 360 கோணங்களாக பிரித்தானோ.. ஏன் 400 ஆக பிரித்திருந்தால் வசதியாக இருந்திருக்கும்.. அதாவது ஒரு கால் வட்டத்தை 100 கோணங்களாக சொல்லாம்..
ஆறுங்கோணம் என்பது முருகனின் இலட்சினமாக உள்ளது அதின் விளம்புகள் மற்றும் முனைகளின் எண்ணிக்கை மொத்தம் பண்ணிரண்டு.. அவனுக்கு ஆறுமுகம் என்ற பெயரின் நோக்கம்தான் என்ன? இதே சின்னம் இஸ்ரேல் கொடியில் கொண்டு சென்றவன் யார்?
இந்த பதிவு ஒரு வித தேடல் மட்டுமே.. விடை தெரிந்தவர்கள் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களை இணைக்க முடிந்தவர்கள் இணைக்கலாம்!
(ஆறே அனைத்தின் அடிப்படை.நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்.
ஆறு தான் எல்லாம்.
ஆறு முகம் என்பது உண்மையில் வேட்டை மனிதர்களே.
இவர்களே .காக்கும்,தாக்கும்.உணவளிக்கும் மனிதர்கள்.
ஆறு முகம் உண்மையில் ஒருவன் இல்லை.
இது ஆறு பேர் கொண்ட படை.
ஆறுபடை.
எல்லாவற்றையும் முன்பே விளக்கி விட்டேன்.
இந்த வேட்டை இன் பெயரே முருகு.
இதை முன்னின்று நடத்திபவனே முருகன்.
முருகு அதாவது வேட்டையில் கொல்லப்பட்ட
விலங்கு காவு. அந்த காவை கொண்டு வரும் தடியே காவடி.
காவடி என்பது உண்மையில் பழங்குடிகள் வேட்டையில் கொல்லப்பட்ட உயிரினத்தை கொண்டு வரும் தடி.
உருவமில்லா இந்த பழங்குடிகளின் வேட்டை நுட்பத்தை
எவன் கடவுளாக மாற்றினானே அவனே எதிரி.இது நம் பழங்குடிகளின் சொத்து)
No comments:
Post a Comment