சீமான் ஏன் தேவை: 3 காரணங்கள்
ஏன் தேவை இந்தச் சீமான் தமிழ்நாட்டுக்கு ?
1. ரெட்டை இலைக்கி இல்ல சூரியனுக்கு போட்டு பழக்கமாயிருச்சு,
2. பணத்தை வாங்கிட்டோம்,
3. 30 வருசமா அந்தக் கட்சியில இருக்கோம்,
4. வேற யாரு இருக்கா?
5. டீச்சர்ஸ்க்கு அவர் தான் சம்பளம் கூட்டினாரு
6. போலீஸ் க்கு இவர் வந்தா நல்லது செய்வாரு
7. மிக்சி, கம்ப்யுட்டர் கொடுத்தாரு
என பழைய பஞ்சாங்கத்தையே பாடுகிறவர்கள்
நம் எதிர்கால தலைமுறை எப்படி இருக்கவேண்டும்,
அடுத்த 50 ஆண்டுகளில், தமிழ்நாடும், தமிழ்மக்களும் உலக அரங்கில் எங்கு செல்ல வேண்டும்,
என்று கேள்வி எழுப்பி
அடுத்த 5 ஆண்டுக்கான தலைவிதியை நிர்ணயிப்போம்.
ஏன் வேண்டும் இந்தச் சீமான் தமிழ்நாட்டுக்கு?
எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் சுருக்கமாய் 3 காரணங்கள் சொல்ல நினைக்கிறேன்.
முதலாவதாக
1. தாய்மொழி வழி கல்வி, சிந்தனை, வேலைவாய்ப்பு, வளர்ச்சி
சில செய்திகளை வாட்ஸ் அப் பில் பார்த்திருப்போம். சில இந்தியர்கள் அமெரிக்காவின் நிறுவனங்களில் தலைவர்களாய் இருக்கிறார்கள் என்று.
"வாட்ஸ்அப்'பில், மைக்ரோசாப்டின் சத்யா நாதெள்ளா, எச்.சி.எல்., தலைவர் சிவ நாடார், கூகுளின் சுந்தர் பிச்சை ஆகியோர் பெயர்களைக் குறிப்பிட்டு, "சத்யம், சிவம், சுந்தரம்' எனக் கூறி கொண்டாடுகின்றனர். காண்க:
சிலருக்கு இதைப் பார்த்தவுடன் புல்லரிக்கும். என்னவோ அப்படியே அமெரிக்காவே இந்தியாவின் காலடியில் இருப்பது போல ஒரு நினப்பு...
இதிலே பெருமைப்பட என்ன இருக்கிறது. அடிப்படை அறிவு, கல்வி எல்லாம் இங்கே படிச்சிட்டு அந்நிய நாடு முன்னேற அங்கே போய் உழைக்கிறாங்க, தாங்களும் சம்பாரிக்கிறாங்க.
இதில தமிழனா, இந்தியனா, பெருமைப்பட ஒன்னும் இல்லையே?
எந்த அமெரிக்கனாவது அமெரிக்காவுல படிச்சுட்டு இந்திய நிறுவனத்துல வேலை செய்றானா? இந்தியாவை முன்னேத்துறானா?
ஆனா நாமதான் அவங்களை முன்னேத்துரதோட அதுல பெருமையும் வேற...
1. எல்லாவற்றுக்கும் அடிப்படையான கோளாறு
ஆங்கில அடிமைத்தனக் கல்விமுறை:
ஆங்கிலேயனின் ஆதிக்கத்தின் போது அவர்கள் நம் இந்தியர்களுக்கு அளித்த கல்விக்கான வரைமுறை:
உடல் அளவில் இந்தியனாகவும்,
உணர்வில், சிந்தனையில் ஆங்கிலேயனாகவும்
அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்பவனாகவும் இருக்கவே
ஆங்கிலேயக் கல்விமுறை மெக்காலே என்பவனால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அடிமைத்தன கல்விமுறை, தொழில்முறை இன்று வரை தொடர்வதுதான் கொடுமை.
கஷ்டப்பட்டு விதைக்கிறவன் ஒருத்தன்;
வலிக்காம அறுவடை பண்றவன் இன்னொருத்தன்.
வடிவேலு சொல்வதைப்போல விதை விதைச்சு வெள்ளாமை பண்றது ஒரு வெள்ளையப்பன், அதை தெனாவெட்டா திண்ணையில உட்கார்ந்து தின்னுட்டு போறவன் தின்னைஅப்பனா ?
காரணம் என்ன?
அந்நிய ஆங்கில மொழி அடிமைத்தனம்
இங்கே மிக முக்கியமா பார்க்க வேண்டியிருப்பது
எந்த அளவுக்கு மனித அறிவு வளங்களை நாம் இழக்கிறோம்.
கொரிய மொழி பேசுறவன் கொரியனில் படிச்சு கொரியாவில் உழைக்கிறான் கொரியா நாடு முன்னேறுது.
ஜெர்மன் மொழி பேசுறவன் ஜெர்மன் மொழியில் படிச்சு ஜெர்மனில் உழைக்கிறான் ஜெர்மனி முன்னேறுது.
தமிழனும், இந்தியனும் ஆங்கிலத்தில படிச்சு அமெரிக்கா வுலயும், ஆஸ்திரேலியாவில யும் உழைக்கிறான். அமெரிக்காவும், ஆஸ்திரேலியா வும் முன்னேறுது.
நமது மண்ணின் திறமையாளர்களை நாம் இழக்கக் காரணம்
1. தனி நபர்களின் சொத்து சேர்க்கும் ஆசை என்பதைவிட,
2. அவர்களின் திறமைக்கான சூழல் வெளி நாட்டில் தான் இருக்கிறது என்பதைவிட
3. நம் மாநிலத்தில், நாட்டில் ஆள்வோர் மாநில, நாட்டின் முன்னேற்றத்தில் எந்தவிதமான அக்கறையுமே இல்லாமல் இருப்பதே மாபெரும் குறைபாடாய் தேசத்தின் புற்று நோயாய் சீரழிக்கிறது.
ஊழல், நாட்டின் மீது அக்கறையின்மை, தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்களை அனுமதித்து கொள்ளை அடிக்க விடுவது, இங்குள்ள கண்டுபிடிப்பாளர்களை உற்சாகப் படுத்தாதது போன்றவைகளை ஒழித்து தாய் மொழியில் கல்வி, தொழில், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு என்று இல்லாத வரை நாம் முன்னேற, வல்லரசாக வாய்ப்பே இல்லை. ஆங்கில அடிமைகளாகவே வாழ்ந்து தொலைய வேண்டியது தான்.
ஆங்கிலத்தில் படிப்பதால் தானே ஆங்கில நாட்டுக்கு ஓடிப்போகிறார்கள்.
நமது அரசு முழுவதுமாக
புரிந்து படித்து,
நமது ஆராய்ச்சி,
நமது சொந்த புதிய கண்டுபிடிப்பு,
இவைகளுக்கு அடிப்படையான
தமிழ் வழி மட்டுமே படிக்கும் சூழலை,
தமிழ் வழி படித்தோருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு
என்ற சூழலை உருவாக்கினால்
அந்த அறிவுச்செல்வங்கள் எல்லாம் தமிழ் நாட்டுக்கே பயன் தரும் இல்லையா?
அதே போல அவரவர் தாய்மொழியில் இந்தியாவெங்கும்.
ஆக கோளாறின் மூல வேர் அந்நிய அடிமை மொழி மோகத்தில் தான் புரையோடிப்போய் இருக்கிறது.
திராவிடக் கட்சிகள் ஆங்கில வழிக் கல்வி, மெட்ரிகுலேசன் பள்ளிகள், நாமக்கல் பகுதி பிராய்லர் கோழி பள்ளிகள் இவைகளில் பணத்தை வாங்கிக் கொண்டு கல்வியை
வியாபாரமாக்கும் வேசித்தொழில் செய்கின்றன.
இரண்டாவதாக
2. தமிழக அரசியலின் ஆணிவேர்,
அடித்தள அஸ்திவாரம் 40% கமிஷனில் உள்ளது
ஒரே ஒரு உதாரணம்
1. வீராணம் ஏரியும் திராவிடக் கொள்ளையும்.
வீராணம் ஏரி (வீர நாராயணபுர ஏரி)
வீராணம் ஏரி ராஜா ஆதித்ய சோழனால் கி.பி. 907-955 கால கட்டத்தில் கட்டப்பட்டது. இந்த ஏரியின் நீளம் 16 கிலோமீட்டர். கொள்ளிடத்திலிருந்து வடவாறு வழியாக நீர் வருகிறது. காண்க:
இந்த மாபெரும் ஏரி யை உருவாக்கி சாதனை புரிந்ததும் தஞ்சை சோழன்தான்.
வீராணம் ஏரி குழாய் ஊழல் என்ற வேதனை யை உருவாக்கியதும் தஞ்சை ஆரூரான் தான்.
2011ல் போரூர் ஏரியை ஆழப்படுத்தி வெறும் 24 mcft (Million Cubic feet) அதிகம் தண்ணீர் சேமிக்க அரசு செலவழித்தது 20 கோடி. ஆனால் 10 ம் நூற்றாண்டிலேயே 1465 mcft தண்ணீர் சேமிக்க ஏரி கட்டி இருப்பது 2011ஆண்டு மதிப்பில் 1350 கோடி ரூபாய் செலவழிப்பதற்கு சமம். என்ன ஒரு சமுதாய முன்னோக்கு சிந்தனை அவர்களுக்கு. காவிரியில் அதிகமாய் தண்ணீர் வரும் சமயங்களில் அது வீணாகக் கடலில் கலக்க விடாமல் சேமித்து 20,000 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் திட்டம். காண்க:
வீராணம் ஏரியில் 47,50 அடிக்கு (1,465 மில்லியன் காண அடி) தண்ணீர் தேக்க முடியும். 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஜெயலலிதா விதி 110 ன் கீழ் வீராணம் ஏரியை தூர் வார 2013 ல் 40 கோடி ஒதுக்கினார். ஒதுங்கியது எங்கே என தெரியாது, தூர் வாரப்படவே இல்லை. 2015 நவம்பருக்கு முன்பு வரை வழக்கமாக தேக்க அனுமதியுள்ள 44 அடியையும் மீறி 46 அடிவரை தேக்கப்பட்டது. சென்னைக்கு தண்ணீர் தர பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக. மழைக்காலத்தில் அணையை திறந்துவிட்டு 20 கிராமங்கள் மூழ்கியது, 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம். ஒரு வாரத்தில் மட்டும் 7 tmc தண்ணீர் வீணாகக் கடலுக்குப் போனது.
காண்க:
வீராணம் திட்டம்: 1967 முதல் 2015 வரை
(50 ஆண்டுகளாக கொள்ளைடிக்கும் திட்டம்)
சென்னையிலிருந்து 235 கிலோமீட்டர் தூரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து நீர் வர வேண்டும்.
1. முதல் வீராணம் திட்டத்திற்கு தி.மு.க.வின் முதல் மந்திரி அண்ணாதுரை 1967 ல் அடிக்கல் நாட்டினார். பின்னர் 1969 ல் வந்த கருணாநிதி அதில் ஊழலை நாட்டினார்,
முதல் விஞ்ஞான ஊழல் கான்க்ரீட் குழாய்களில். காண்க:
2. 1993ல் ஜெயலலிதா அரசு 464 கோடியில் திட்டத்தை விரிவுபடித்தி கொள்ளையடித்தது.
3. 1996ல் கருணாநிதி அரசில் இத்திட்டம் மாற்றப்பட்டு திட்ட மதிப்பீடு 1638 கோடி ஆனது. 1073 கோடி தருவதாய் இருந்த உலக வங்கி திட்ட மாற்றத்தை ஏற்கவில்லை. காவிரியின் கிளை ஆறான கொள்ளிடத்திலிருந்து வடவாறு என்று கால்வாய் வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வரும் வழியை மேம்படுத்துவதை திட்டத்தில் கொண்டு வந்து சமாளித்தனர்.
4. 2001 ல் மீண்டும் ஜெயலலிதா அரசு புது வீராணம் திட்டம் என்று புதுப்பெயர் சூட்டியது. 720 கோடியில் புது வீராணம் திட்டம். கருணாநிதியின் கான்கிரிட் குழாய்களுக்குப் பதிலாக இரும்புக்குழாய்கள்.
ஏரியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுப்புற விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கிடையில் 45 ஆழ் துளைக் கிணறுகள் தோண்டப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொன்றும் 250 மீட்டர் அதாவது 820 அடி வரை ஆழமானது. இவ்வளவு ஆழம் தோண்டி நீர் உறிஞ்சினால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு போகும், எப்படி விவசாயிகள் பிழைப்பது.
வடவாறு பாசனம் பெறும் விவசாய நிலங்கள் 11,000 ஏக்கர். வீராணம் ஏரி பாசனம் பெறும் விவசாய நிலங்கள் 45,000 ஏக்கர். எங்கே போவார்கள் விவசாயிகள். 800 அடிவரை நீரை உறிஞ்சினால் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடலில் இருந்து கடல் நீர் உள்ளே வந்துவிடாதா? விவசாயிகளின் வயிற்றில் அடித்தாவது ஊழல் செய்ய நினைப்பவர்களை என்ன செய்வது? காண்க:
அவ்வாறு 45 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நீரின் அளவு என்ன தெரியுமா?
0.33 டி.எம்.சி. தான். இந்த தண்ணீரை சென்னையைச் சுற்றி உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தினாலே கிடைக்குமே.
ஆனால் அங்கே ஊழல் அதிகம் பண்ண முடியாதே?
சரி அப்படியாவது வீராணம் நீரைக்கொண்டு சென்னையின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்திருக்கிறார்களா இந்த 50 வருடத்தில் என்று பார்த்தால் அதுவும் இல்லையே?
கேடுகெட்ட அரசாங்கங்கள், பிணந்தின்னும் கழுகுகள்,
மலத்திலும் ஒட்டுப்பொறுக்கும் பன்றிக்கூட்டங்கள்.
இந்த ஒரு திட்டமே இப்படி என்றால்
ஒவ்வொரு திட்டத்தையும் ஆய்வு செய்தால் ???
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
எங்கு பார்த்தாலும் ஊழல்...ஊழல்... ஊழல்...
மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை முதல்வரில் இருந்து வார்டு கவுன்சில் உறுப்பினர் வரை சங்கிலித் தொடர் போல ஊழல் வலை.
இந்த வலைப்பின்னல் தொடர்ந்து கொள்ளை அடிக்க தேர்தலிலும் கூட்டணி வைத்துக் கொள்கிறது.
கவுன்சிலர், வட்டச்செயலர் என்ற அடிமட்ட தொண்டர்படைக்கும்
எம்.எல்.ஏ, மந்திரி, முதல்வர் என்ற மேல்மட்ட கொள்ளைக்கூட்ட தலைவர்களுக்கும்
இடையே எழுதப்படாத கூட்டணி.
நீ அடிக்கிற பெரிய கொள்ளையை நானும் கேட்கலை நான் அடிக்கிற சின்னக் கொள்ளையை நீயும் பாக்காத.
இந்த வலைப்பின்னல் கொள்ளையால்
நாட்டின் அநியாயங்களை எதிர்த்துக் கேட்கும் மனசாட்சியை அடியோடு அழிக்கும் சமூகத்தை உருவாக்குகிறது இந்தக் கூட்டணி.
புற்று நோயைவிட கொடூரமானது இந்தப் புற்று.
திராவிட கட்சிகளுக்கு கட்டுவோம் சமாதி.
மூன்றாவதாக
3. எதிர்கால தமிழகம் எதன் மீது கட்டப்பட வேண்டும். (Blue Print)
கல்லணை மூலம்
உலகத்திற்கே கட்டடக் கலையையும்
கற்றுக்கொடுத்த இனம் தமிழினம்.
1. எகிப்தில் காராவி (Garawi) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத் எல் காபாரா (Sadd El Kafara) என்ற அணைதான் உலகின் மிகப் பழைமையான அணை என்று சொல்லப்படுகிறது. காண்க:
கி.மு 2650 ல் கற்களாலேயே கட்டப்பட்டதாக சொல்லப்படும் அந்த அணையின் இன்றைய நிலை
அணை இருந்ததற்கான அடையாளமே இல்லை. அணையின் எச்சமாக வெற்றுத்தரை தான் உள்ளது.
அழிந்துபோன தங்கள் அணையின் தொழிநுட்பம் உலகில் வேறெங்கும் உண்டா என்று அலைந்த எகிப்தின் நீரியல் வல்லுனர்கள் இறுதியில் வந்த இடம் நம்ம கரிகால் சோழன் கட்டிய கல்லனைக்குத்தான். செயற்கையான காரை பூசாமல் கற்களால் கட்டப்பட்ட அணை.
மணற்பாங்கான பகுதி ஆதலால் zigzag வடிவில் அதாவது ஒரு கல் மற்றொரு கல்லை இணைக்கும்
காடி வடிவில் கற்களை தரை மணலின் அடி ஆழத்தில் இணைத்து அடித்தளத்தை அமைத்திருக்கிறார்கள் சோழத்தமிழர்கள்.
இன்றும் மணல்பாங்கான கல்லணை.
(கல்லணையில் கொள்ளிட ஆற்றுக்கான திறப்புக்கருகில் மணல் புதைகுழி குளிக்க வேண்டாம் என்று எழுதி இருப்பதைக் காணலாம்)
கல்லணையின் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தித்தான்
ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர் 1874ல் ஆந்திராவில் கோதாவரி தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார். அந்த அணையின் முன்பாக அவரின் சிலை:
தமிழக முல்லைப்பெரியாரில் பென்னி குக் என்பவர் போல் ஆந்திராவில் ஆர்தர்.
Arthur Cotton was promoted to the rank of Captain in 1828, and was put in charge of Investigation for the Cauveri Scheme. He started working to remove the soil settling in Kallanai dam and with the model of Kallanai dam he built the Upper Dam in Cauveri in Mukkombu near Tiruchirapalli and success of these projects paved the way for great projects on the Godavari and Krishna Rivers. Sir Cotton once told, after analyzing the Kallanai dam and the basement of the dam, they learned how to build basement in place full of bed of sand. காண்க:
எகிப்தின் சாத் எல் காபாரா அணை இன்று இல்லை. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதே தொழிநுட்பத்தில் கட்டப்பட்டு இன்றும் செயல்பாட்டில் இருக்கும்
உலகின் மூத்த அணை தமிழன் கட்டிய கல்லணை.
இன்றைய நமது அரசுகள் ஏரிகளை பராமரிக்கும் லட்சணத்தை பார்ப்போமா?
1. இன்றைய நிலையில் சராசரியாக 30 ஏரிகளுக்கு ஒரு பொறியாளர் மட்டுமே இருக்கிறார். மைல் கணக்கில் ஊர், ஊராக நீளும் ஏரிகளை வைத்துக்கொண்டு ஒரு பணியாளர் எத்தனை ஊர்களுக்குதான் செல்வார்?
2. ஒற்றை ஏரியை எத்தனை துறைகள் கூறு போடுகின்றன தெரியுமா?
1. ஏரிக்குள் இருக்கும் மண் கனிம வளத்துறையின் பொறுப்பு.
2. ஏரிக்குள் இருக்கும் மீன்கள் மீன் வளத்துறையின் பொறுப்பு.
3. ஏரியின் அடிநிலம் வருவாய்த் துறையின் பொறுப்பு.
4. சிறிய ஏரிகளின் கரை மற்றும் கங்குகள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு.
5. பெரிய ஏரிகளின் கரை, கங்குகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பு.
6. ஏரியிலும் அதன் சுற்றிலும் வளரும் மரங்கள் வனத்துறையின் பொறுப்பு. ஆனால்,
ஏரிக்கு ஒரு பிரச்சினை என்றால் எந்தத் துறையும் பொறுப்பு இல்லை
ஆனால், நாட்டின் இதர மாநிலங்கள் ஏரிகளை எவ்வளவு பாதுகாக்கின்றன தெரியுமா?
1. கர்நாடகம் ஏரி அபிவிருத்தி ஆணையத்தை உருவாக்கி கர்நாடகா சொசைட் டிஸ் பதிவுச் சட்டம் 1959-ன் கீழ் அதனை ஒரு சொசைட்டியாக பதிவு செய்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் ஏதுவும் இல்லாத தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆட்சிகள் மாறினாலும் ஏரி பாதுகாப்பு, மறு சீரமைப்பு, மீட் டெடுப்பு, மீள் உருவாக்கம், கொள்கை வகுத்தல் எனப் பணிகள் தொடர்கின்றன.
2. மத்தியப்பிரதேசத்தில் 2004-ம் ஆண்டு ‘ஏரி பாதுகாப்பு ஆணையம்’ அமைத்து ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் உதவியுடன் ஏரிகளைப் பாதுகாக்கிறது.
3. ஒடிசாவின் ‘சிலிகா அபிவிருத்தி ஆணையம்’ இந்தியாவின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்றான சிலிகா ஏரிக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையே பாதையை ஆழ மாக்கி, அதன் நீரியல் மற்றும் உவர்ப்பு அமைப்பை மேம்படுத்தியது. இதன் மூலம் அங்கு மீன்பிடித் தொழில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. இதற்காக அந்த ஆணையம் நீர் நிலை மேம் பாட்டுக்காக உலகளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ராம்சர்’ விருதை 2003-ம் ஆண்டு இந்தி யாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது.
4. மகாராஷ்டிரா அரசு பல்வேறு தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏரி களைப் பராமரிக்கிறது.
5. மணிப்பூரில் ‘லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்’,
6. ஜம்மு காஷ்மீரில் ‘ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்’,
7. உத்தரகாண்டில் ‘நைனிடால் ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்’,
8. ராஜஸ்தானில் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏரிகளைப் பாதுகாக்கின்றன.
அதேபோல பல மாநிலங்களில் ஏரிகளைப் பாதுகாப் பதற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
1. கேரளா வின் ‘லிம்னாலஜி’ சங்கம்,
2. ராஜஸ் தானில் ‘ஜில் சன்ரக்ஷன் சமிதி’,
3. இமாச் சலப்பிரதேசத்தில் ‘சேவ்’ (Social of appeal for vanishing environment),
4. ஹைதராபாத்தில் ‘இந்திய நீர் நிலை உயிரியலாளர்கள் சங்கம்’ ஆகியவை ஏரிகளைப் பாதுகாக்கின்றன.
தமிழகத்துக்கு வருவோம்.
மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் (1983-89) என்று ஒன்று இருந்தது. அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உட்பட 14 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1015.59 கோடியில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏரிகளையும் மிகப் பெரிய பாசன ஏரிகளையும் மேம்படுத்திக்கொண்டன.
தமிழகமும் ரூ. 12.17 கோடியில் இரண்டு ஏரிகளை மேம்படுத்திக்கொண்டது.
எந்தெந்த ஏரிகள் தெரியுமா?
ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகள்.
விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகள் படகில் உல்லாச சவாரி செல்ல வேண்டியது முக்கியம் அல்லவா! காண்க:
சேலம் பேருந்து நிலையம், காந்தி விளையாட்டு மைதானம், நாகர்கோவில் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், விழுப்புரம் பேருந்து நிலையம், நீதி மன்றம், அரசு மருத்துவக்கல்லூரி, மதுரை உயர் நீதிமன்றக்கிளை, வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர், இன்னும் பல எல்லாம் ஏரியை அழித்து கட்டப்பட்டவைகள் தானே. காண்க:
சென்னையில் 36 ஏரிகள், மதுரையில் 30 கண்மாய்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டதே. தொல்தமிழர் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாத்து வைத்ததை நாம் நமது எதிர்கால தலைமுறைக்காக தமிழினத்துக்காக பாதுகாத்தோமா??
நமது ஆட்சியாளர்கள் இவைகளை எல்லாம் அழித்துவிட்டு அண்டை மாநிலத்தோடு சண்டை போடுவது சின்னத்தனமாகத், சிறுபிள்ளைத் தனமாகத் தெரியவில்லை ?
மதுரை வைகை ஆறும்
வெறும் ஆறாக மட்டும் இல்லை 3000 ஏரிகள் மூலமாக மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு உயிர் கொடுத்து வந்தது. தமிழ்நாட்டில் கடலில் கலக்காத ஆறு எனப்படுவது வைகை ஆறு மட்டுமே. வழியில் உள்ள ஏரி, கண்மாய் களையெல்லாம் நிரப்பி, இறுதியில் இராமநாதபுரம் ஏரியில் கலந்து விடும்.
பிரெடெரிக் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் 1901 ல் எழுதினார்: நீர்ப்பாசனத்தைப் பெருக்குவதென்றால் வைகையைப்போல செய்திட வேண்டும். காண்க:
காண்க-மதுரை நாட்டு அரசிதழ் (Madura Country Manual) நன்றி: வினவு.
கீழ் வைகை என்று மதுரையின் கிழக்கு புறத்தில் 96 கால்வாய்களையும் 400 ஏரிகளையும், நீட்சியாக 1000 குளங்களையும் வாழ்விக்கும் வைகை ஏறக்குறைய மணல் கொள்ளையால் அழிக்கப்பட்டு விட்டது.
மணல் குவாரிகளும்
ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளில் இயந்திரங்களைக் கொண்டு மணல் அள்ள தடை விதித்திருக்கிறார்கள். 44 ஆறுகள் பாயும் கேரளாவிலும் அப்படியே. காண்க:
இன்றைய தமிழக ஆட்சி, அதிகார அமைப்புகள் பணத்திற்காக
அசுர வெறி கொண்டு எதிர்கால தமிழினத்தை படு பாதாள குழியில் தள்ளி அழிக்கும் திசையில் கொண்டு செல்கிறார்களே?
மணல் இல்லை என்றால் ஆறு இல்லை
ஆறு இல்லை என்றால் குளம், ஏரி இல்லை
குளம், ஏரி இல்லை என்றால் நிலத்தடி நீரும் இல்லை,
கனமழை வெள்ள வடிகாலும் இல்லை.
தமிழ் முன்னோர்களுக்கு தெரிந்தது. இன்றைய மெத்தப்படித்த ஆட்சியாளனுக்கு தெரியவில்லை.
தன்னுடைய வட்டம், மாவட்டம், பினாமி எல்லாம் சேர்ந்து நிலத்தை, நீரை, மணலை, மலையை கபளீகரம் செய்ய வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
2004 ல் வெளியிடப்பட்ட வைகை அறிக்கை மதுரை விரகனூருக்கு கிழக்கே மணல் அள்ளப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அதிகமானதால் கால்வாய் களே இல்லை. காண்க:
என்ன ஒரு இதயத்தை சுக்கு நூறாக்கும், தமிழக அழிவை முன்னறிவிக்கும் கொடூர உண்மை.
எனவே தேவை அடிப்படையான நீர் மேலாண்மைக் கொள்கை
பிற மாநிலங்களை விட அதிகம் மழை பெரும் தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தைப் பெருக்கி அனைவருக்கும் சுகாதார குடிநீர் வழங்கும் நாம் தமிழர் கட்சியின் நீர் மேலாண்மைக் கொள்கையை ஆதரிப்போம்.
1. அனைவருக்கும் சுகாதார குடிநீர்
2. அனைவருக்கும் சமத்துவக் கல்வி
3. அனைவருக்கும் உயர்தர மருத்துவம்
என தெளிவான தொலைநோக்கு, நல்ல சிந்தனை, வெறும் உணர்ச்சி மட்டுமல்ல உணர்வு பூர்வமாகவும் மாற்றத்தை முன்னெடுக்கும் சீமான் தொடர்ந்து ஒரே இலக்கு, தமிழின மீட்பில் மாறுபடாத கொள்கை, எதிர்காலத்திற்கான நடைமுறை சாத்தியமுள்ள செயல்திட்டங்கள் என்று புதுப் பாதையை தரும்போது, அவர் ஒருவரே தமிழ்நாட்டு மக்களுக்கு மாற்றாக இருப்பார் என்று உறுதியாக நம்ப முடிகிறது.
எதிர்காலத் தமிழகம் மீது இதுவரை அக்கறைப்படாத ஊழல் பெருச்சாளிகள் மத்தியில் அக்கறைப்பட இதோ நான் என்று புறப்பட்டிருக்கும் சீமான், நம்பிக்கை தரும் வழிகாட்டி.
மாற்று அரசியல் இதுதான் என்று தெளிவான கொள்கையோடு களம் இறங்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி
இன்னும் 50 , 100, 500 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு உள்ள தமிழர்கள் எல்லாம்
நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்.
செய்ய வேண்டியது என்ன ?
1.
நாம் வாழும், பணிசெய்யும் இடங்களில் எல்லாம் நாம் தமிழர் கட்சியின் தேவையை எடுத்துச் சொல்லுவோம், ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 20 நபர்களையாவது தேவையை விளக்கி உறுதிப்படுத்துவோம்.
(அனைத்து கட்சி ஊடகங்களும் நாம் தமிழர் கட்சியை
திட்டமிட்டு தவிர்ப்பது நாம் அறிந்ததே )
2.
திட்டமிட்டு பரப்பப்படும் மத ரீதியான, மொழி ரீதியான பிளவுக்கான பொய்ப் பிரச்சாரங்களை சரிப்படுத்துவோம்.
இன்றைய அடிப்படைப் பிரச்சினை உடலில் செயலிழந்த இதயம், நுரையீரல்.
இதை விட்டுவிட்டு சட்டையில் பித்தான் இல்லை போன்ற மேலோட்ட பிரிவுக்கான காரணங்களைக் களைவோம்.
3.
3வது அணியான வைகோ-விசயகாந்த் கூட்டணி
அதிமுக வுக்கு மட்டுமான " B " டீம் இல்லை
திமுக வுக்கும் அதுதான் " B " டீம்.
காரணம், திமுக-அதிமுக வுக்கு உண்மையான மாற்றாக நாம் தமிழர் கட்சி தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே தொடங்கப்பட்ட அவியல் கூட்டணி.
திமுக வென்றால் அதிமுக வுக்கு இழப்பு
அதிமுக வென்றால் திமுக வுக்கு இழப்பு
நாம் தமிழர் தோற்றால் அது தமிழருக்கு இழப்பு
நமக்கு, தமிழ் நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இந்த நாம் தமிழர் கட்சியே.
No comments:
Post a Comment