Monday, 16 October 2017

சூரியனை மையப்படுத்தி அமையும் ஜோதிடத்தை

சோதிடம் பகுதி 1

தற்பொழுது சூரியனை மையப்படுத்தி அமையும் ஜோதிடத்தை ஆதிகாலத்தில் யார் பார்த்தார்கள் தவம் செய்து வல்லமை பெற்றோம் என்று கூறிய பார்ப்பனர்கள் , அரசர்கள் போருக்கு போகும் போது குறி சொல்வார்கள் , ஆனால் ஆதி மனிதனுக்கு ? சூரியனை மையப்படுத்தி கூறும் ஜோதிடம் கூற தெரியாது , தம் முன்னோருக்கு ஒரு பவுர்ணமி இரவில் பலி முன்னோர்களின் ஆசி வாங்குவார்கள்,

மஹாபாரத கதையில் கூட " பாரத போருக்கு " முன்  " துரியோதரன்
" என்னும் ஆரியன் " நகுலன் " எனும் ஆரியனிடம் எந்த நேரத்தில் பலி கொடுத்து போரை துவங்கினால் வெற்றி கிட்டும் என்று கேட்க " அமாவாசை திதி " அன்று பலி கொடுத்து போரை துவங்கினால் வெற்றி கிட்டும் என்று கூறுவார்,அதாவது நமது முன்னோர்களின் ஆன்மாவை கட்டி தமக்கு இடையூறு இல்லாதிருக்க செய்வது.

தொடரும்.ஜோதிடம் பகுதி 2

ஒருவனை அடிமை ஆக்க வேண்டுமெனில் முதலில் உளவியல் ரீதியாக அடிமை படுத்த வேண்டும்,பின் பயத்தை உண்டு பண்ண வேண்டும்,பின் அதன் மூலம் லாபம் பார்க்கலாம்,அதன் மூலம் தமிழர்களின் காவல் கருப்புகளை கட்டி, தமது பெரு தெய்வ வழிபாட்டை திணிக்கலாம், இது தான் ஜோதிடத்தின் மூலம் நிகழ்கிறது,

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது அந்த குழந்தையின் ராசி , நட்சத்திரம் ஆகியவற்றை கூறுவர், மொத்தம் உள்ள பனிரெண்டு ராசிகளும் , இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் உள்ளதாக கூறுவார்கள் ,அந்த இருபத்தேழு நட்சத்திரங்களும் அந்த நட்சத்திரத்திற்கும் உள்ள தெய்வங்களையும் கீழே குறிப்பிடுகிறேன்

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன்
ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன்.
மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர்
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீ ராமர்
பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன்
மகம் - ஸ்ரீ சூரிய பகவான்
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள்
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் 
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் 
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர்
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

மேழே குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கு உள்ள கடவுள் என்று சொல்லப்பட்ட பெயர்களை முதலில் உற்று நோக்குங்கள்,அவை ஏதேனும் தமிழர் காவல் தெய்வங்களின் பெயர்கள் உள்ளனவா ? எல்லாம் வலிந்து இம்மண்ணில் ஆரியனால் திணிக்கப்பட்ட உருவங்களின் பெயர்களாக இருப்பதை கவனியுங்கள்.

ஆய்வுகள் தொடரும்.
ஜோதிடம் பகுதி 3

சோதிடத்தின் மூலம் மூடர்களான தமிழர்களை விழிப்புணர்வு அடைய  செய்யும் சிறு முயற்சியே இது.

ஒருவன் திறன் மிக்கவனாக இருந்தாலும் இங்கு சோதிடம் என்று அவனுக்கு நேரம் சரியில்லை , காலம் சரியில்லை என்று கூற கேள்வி பட்டு இருப்போம்,இங்கு ஒருவன் படிக்கவில்லை , தொழில் சரிவர நடக்கவில்லை என்றால் அவர்கள் உடனே சூரியனை மையப்படுத்தி எழுதிய " ஜாதக நோட்டை " எடுத்து கொண்டு ஓடுவார்கள்,ஆனால் தன்னுடைய முயற்சி சரிவர செய்யவில்லை என்பதை ஏற்று கொள்ளமாட்டார்கள்.அதனால் தான் தோல்வி அடைத்தோம் என்பதை உணராமல் நேரம் , காலம் சரியில்லை இல்லாத ஒன்றின் மேல் பழி போடுவார் தமிழர்கள்,இயற்கையின் பேராற்றலை நம்பி செய்யும் எந்த காரியமும் நிறைவேறும் என்பது இயற்கையின் நியதி.

ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் இருப்பதாக கூறுவார்கள் அதை கணிப்பவர்கள் அவை

1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது

இதில் மற்ற ஏழு கிரகங்களும் பார்க்க முடியும் ஆனால் மீதமுள்ள ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று சொல்வார்கள்,இந்த இரண்டு கிரகத்தில் ஒன்றுக்கு உடல் கிடையாது ,ஒன்றுக்கு தலைகிடையாது,இதை வைத்து தான் பயம் காட்டினார்கள் ஆரியர்கள் அன்று,இன்றும் தொடர்கிறது அது

ஆய்வுகள் விரியும்.
சோதிடம் பகுதி-4

ஒருவரின் ஜாதகத்தை கணிக்க கணிப்பவர் பார்ப்பது தான் ' பஞ்சாங்கம் " அதை ஐந்து வகையாக பிரிப்பார்கள் அவை

1.திதி
2.வாரம்
3.நட்சத்திரம்
4.யோகம்
5.கரணம்

இதில் கவனிக்க வேண்டியும் விடயம் திதி என்று இறந்தவர்களுக்கு கொடுப்பதை சொல்வோம்,ஆனால் இவர்கள் திதி என்பதை சூரியனுக்கும்,சந்திரனுக்கும் உள்ள இடைவெளியை குறிப்பிடுகிறார்கள்,சூரியனும்,சந்திரனும் இணைந்து உள்ள நாள் " அமாவாசை "  என்று நாம் அறிவோம் அன்று தான் நம் காவல் கருப்புகள் வீரியமிக்கவைகளாக இருக்கும் அதற்கு பலி கொடுத்து நம் வேண்டியதை பெற்றுக்கொள்வோம் ஆனால் ஜோதிடம் என்ன சொல்கிறது அன்று நம் மூதாதைகளுக்கு பார்ப்பனர்களை வைத்து அவர்களுக்கு திதி என்று சொல்லி அவர்களை கட்டுகிறது சைவம் படைக்கப்படுகிறது,இதனால் எதிரியின் கட்டு வீரியம் ஆகிறது,நம் கருப்புகள் கட்டப்படுகிறது.

அமாவாசையில் இருந்து பவுர்ணமி வரை உள்ள தேதிகளை இப்படி குறிக்கின்றனர் அமாவாசை மறுநாள் பிரதமை,அடுத்து துதியை,அடுத்து திருதியை,சதுர்த்தி.பஞ்சமி.சஷ்டி,சப்த,மி,அஷ்டமி,தசமி,ஏகாதசி,துவாதசி,திரயோதசி,சதுர்தசி,பௌர்ணமி என்று ஒவ்வொரு நாளும் ஒரு பெயர்கள்

மேலே குறிப்பிட்ட நாட்களை கவனியுங்கள் அதில் அமாவாசைக்கு அடுத்து வரும் நாட்கள் எல்லாம் சமஷ்கிருத பெயர்கள் வருகின்றன ஏன் என்பதை உங்கள் தேடலுக்கே விட்டு விடுகிறேன்..

ஆய்வுகள் தொடரும்.
சோதிடம் பகுதி 5

சோதிடம் யாருக்கு பார்க்கப்படுகிறதோ அவரின் பிறந்த நேரத்தை வைத்து சொல்வார்கள்,சோதிடம் பார்ப்பவர்கள் , இந்த தொடக்கத்திலேயே குளறுபடி தொடங்குகிறது அதாவது எப்படி என்றால் இந்திய நேரம் என்று பொதுவாக குறிப்பிடுவர்,ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மாறும் இதற்கு இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரம் எனப் பெயர்.ஏனென்றால் ஒவ்வொரு ஊரின் longtitude, latitude வித்தியாசப் படுகிறது.

இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரம் என்பது ஆந்திராவிலுள்ள கோல்கொண்டாவின் ரேகாம்சம் 82 1/2 டிகிரிக்கு உள்ள நேரமாகும். இந்த நேரத்தையே இந்தியா முழுவதற்கும் நாம் வைத்துள்ளோம். ஆனால் Longtitude, Latitude க்குத் தகுந்தவாறு நேரம் ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. ஊருக்கு ஊர் மாறுபடும் இந்த நேரத்திற்கு சுதேச மணி அல்லது local meantime என்று பெயர்.

உதாரணமாக இப்போது தஞ்சாவூரின் சுதேச மணியை நாம் கண்டுபிடிப்போம். தஞ்சாவூரின் ரேகாம்சம்கள் என்ன ?

Longtitude 79 Degrees 10 Minutes

Latitude 10 Degrees 47 Minutes.

இப்போது தஞ்சாவூரின் சுதேச மணியைக் கண்டு பிடிப்போம்.

இந்தியாவின் Longtitude 82. 30

தஞ்சாவூரின் Longtitude 79. 10

வித்தியாசம் 3. 20

இப்படி நேரத்தை வைத்து கணிக்கும் சோதிடத்தில் தொடக்க புள்ளியே முரண்பட்டு நிற்கிறது,இந்த பூமி ஒரு DEGREE நகர்வதற்கு 4 நிமிடங்கள் ஆகின்றன ஒருவரின் ஜாதகத்தை கணிப்பது நேரத்தையும் காலத்தையும் வைத்து தான் , காலத்தையும் நேரத்தையும் வைத்து கணிக்கும் ஜோதிடத்தில் நேரம் மாறுகிறது ஓவ்வொரு பகுதிக்கும் அப்படி இருக்கையில் எப்படி சரியாக இருக்கும் ஜோதிடம்.

ஆய்வுகள் விரியும்....
சோதிடம் பகுதி 6.

காடுகளிலும்,மலைகளிலும் இயற்கையையும்,முன்னோர்களையும் வழிபட்ட ஆதி தமிழன்,நடுகல் வழிபாட்டாளன் என்பது அறிந்தது அப்படி இருக்கையில் சம்ஸ்கிருத பெயர்களாக வரும் நிகழ்கால சோதிடத்தை பார்த்து இருப்பானா என்பதை சிந்தியுங்கள்.

ஒருவன் சோதிடம் சொல்ல வேண்டுமாயின் அவனுக்கு " நவாம்சம் " போட தெரிந்து இருக்க வேண்டுமாம் அது என்ன நவாம்சம்.கீழே குறிப்பிடுகிறேன்

1. நவாம்சம்
2. பாவம்
3. திரேக்காணம்
4. ஓரை
5. திரிசாம்சம்
6. சப்தாம்சம்
7. சஷ்டியாம்சம்.

மேற்கண்ட பெயர்களை கவனியுங்கள்,தமிழன் சோதிடத்தை தோற்றியிருப்பான் எனில் ஏன் அனைத்தும் " சம்ஸ்கிருத" வர வேண்டும்,இந்நிலத்தில் வாழ்ந்தவனுக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,பின் எப்படி சம்ஸ்கிருத சொற்கள் வந்தன?

ஆய்வுகள் விரியும்

No comments:

Post a Comment