"சாமை"
அந்தக் காலத்துல அவங்கவங்களுக்கு ஒரு வருஷ சாப்பாட்டுக்குத் தேவையான பயிரையெல்லாம் வெள்ளாமை பண்ணி எடுத்து வெச்சுகிட்டு, மிச்சமிருக்குறதை மத்தவங்களுக்கு விப்போம்.
ஆனா, இப்போவெல்லாம் குச்சிக்கிழங்கு, மக்காச்சோளம்னு என்னமாவது ஒரு பயிரை வெள்ளாமை பண்ணி வித்து, அந்தக் காசுலதான் அரிசி வாங்கி சாப்பிட்டுகிட்டிருக்காங்க சம்சாரிக.
உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிறுதானியங்களின் பட்டியலில் சாமை அரிசிக்கு கண்டிப்பாக இடம் உண்டு.
அதனால், சாமைக்கு என்றுமே மதிப்புக் குறைவதில்லை. சாமையில் அரிசியைவிடப் பலமடங்கு நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.
மற்ற சிறுதானியங்களைவிட சாமையில் இரும்புச்சத்து அதிகம். இது, ரத்தசோகையை நீக்க உதவும். மலச்சிக்கலைப் போக்கும்.
வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். சாமையில் உள்ள தாதுஉப்புகள் உயிரணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
இதில், கலோரி அளவு மிகக்குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். புரதமும் இதில் இருக்கிறது. அதிகம் சேர்த்துக்கொண்டாலும் ஆபத்து இல்லை
இதில், இட்லி, மிளகுப் பொங்கல் (வெண்பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி என வகை வகையாக உணவுகளைச் செய்ய முடியும்.
பச்சை மலை, கொல்லி மலை, தர்மபுரி மாவட்ட மலைகள், ஜவ்வாது மலை உள்ளிட்ட பல மலைக்கிராமங்களில் இன்றைக்கும் சாமை சாகுபடி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 1.2 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது.
மானாவாரிப் பயிர்களில் சாமை 44% மனிதர்களின் உணவு தேவையையும் 65 % கால்நடைகளுக்கான உணவுத் தேவையையும் பூர்த்தி செய்கின்றது. வறட்சியான பகுதியாக இருந்தாலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதியாக இருந்தாலும் சாமையை சாகுபடி செய்யலாம்.
நாட்டுச் சாமை ரகத்தில் மகசூலுக்கு ஆறு மாதம் வரை காத்திருக்க வேண்டும்
No comments:
Post a Comment