சைவர்களின் புத்தாண்டு எது? சித்திரை 1;
வைணவர்களின் புத்தாண்டு எது? சித்திரை 1;
பௌத்தர்களின் புத்தாண்டு எது? சித்திரை 1;
இந்துக்களின் (இந்தியாவின் அரச நாள்காட்டி,சாலிவாகன நாள்காட்டி ) புத்தாண்டு எது? சித்திரை 1;
சிங்களர்களின் (இலங்கை ) புத்தாண்டு எது? சித்திரை 1;
தமிழர்களின் ( இலங்கை ) புத்தாண்டு எது? சித்திரை 1;
தமிழர்களின் ( இந்தியா ) புத்தாண்டு எது? சித்திரை 1;
மலையாளிகளின் புத்தாண்டு எது? சித்திரை 1;
சூரியன் உச்சமடையும் இந்த சித்திரை ஒன்றாம் நாள் யாருக்கு சிறப்பு தெரியுமா??
கடல் சாத்தன்களுக்கு. ஆம் பங்குனி கடைசி நாள் அனைத்து கணக்கு வழுக்குகளையும் முடித்துவிட்டு சித்திரை ஒன்றாம் நாளன்று புதிய கணக்கைத் தொடங்குவார்கள்.
சூரியன் உச்சமடையும் இந்நாளை சித்திரை விசு ( சூரிய கதிர்கள் 90 ˚ இல் பூமியின் மீது விழும் ) என்றும் அழைக்கிறார்கள்.
அனைத்து சமயங்களும் சொல்லி வச்சது போல ஒரே நாளை புத்தாண்டாக அறிவிப்பதில் பின்னால் உள்ள மர்மம் என்ன ??
இவை அனைத்தும் வேறு வேறு போலத் தெறியும்.ஆனால் அனைத்தும் ஒன்று தான்.அனைத்தும் கடல் சாத்தானால் உருவாக்கப்பட்டவை தான் .
எ .கா : சைவத்தை வளர்க்க நாயன்மார்களுக்கு உதவி செய்தது காரைக்கால் அம்மையார் என்ற செட்டிச்சி. அமராவதி நகரத்து பௌத்த பிக்குகளை ஆசியக் கண்டம் முழுவதும் பரப்பியது நகரத்தார்களின் கப்பல்களே !! காப்பியக் காலங்களின் பொழுதே பார்சுவநாதன் ( பெருமாள் ) வழிபாடு சமன செட்டிகளிடம் தான் இருந்து வந்துள்ளது, ஆதாரம் - சிலப்பதிகாரம்.
சாத்தான்,சாதவாகனன்,சாலிவாகனன் என அனைத்துப் பெயர்களும் ஒரு கூட்டத்தை மட்டுமே குறிக்கும்.இக்கூட்டம் தற்போது இந்தியாவை ஆள்வதால் தான் இவர்களின் சூரிய நாள்காட்டியே இந்தியாவின் அரச நாள்காட்டியாக பயன்பாட்டில் உள்ளது.
உள்ளே இருப்பவன் ஒருவன் தான்.சட்டையை மட்டும் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு வருகிறான்.ஆனால் கொண்டையை மறைக்க மறந்துவிட்டான்.
ஜைனத்தில் ( நிலச் சாத்தன் ) இது சற்று மாறுபட்டது.எப்படியென்றால் சூரியன் நீச்சமடையும் நாளான ஐப்பசி மறைநிலவு நாளில் ( தீபாவளி ) புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. குஜாராத்தி மக்கள் பெரும்பாலும் ஜைனத்தைக் கடைப்பிடிப்பவர்கள்.அதனால் குஜராத் மக்களுக்கு தீபாவளி நாள் தான் புத்தாண்டு. இதுவும் சூரியனை மையப்படுத்தி தான் கணக்கிடப்படுகிறது
பி.கு: பழங்குடிகளுக்கும் இச்சூரிய வழிபாட்டுக்கும் சிறிதும் தொடர்பில்லை. காரணம் பழங்குடிகள் யாவரும் காவல் கருப்புகளுக்கு பலி கொடுக்கும் சந்திர வழிபாட்டாளர்கள்.
No comments:
Post a Comment