Tuesday, 10 October 2017

ஜைனத்தின் முதல் தீர்த்தங்கரனின் பெயர் ரிசபநாதன் (சைவ சமயத்தில் சிவன் ).

ஜைனத்தின் முதல் தீர்த்தங்கரனின் பெயர் ரிசபநாதன் (சைவ சமயத்தில் சிவன் ).
அவனுக்கு இரு மகன்கள் இருந்தனர் .மூத்தவன் பெயர் பரதன் .இளையவன் பெயர் பாஹுபலி.
பரதன் தான் முதல் சக்கரவர்த்தி.இந்தியாவிற்கு பரத கண்டம் என்ற பெயர் வந்தது இவனால் தான்.அண்ணனோடு சண்டையிட்டு தெற்கே வந்தவன் தான் பாஹுபலி (சைவ சமயத்தில் முருகன் ).
காசியில் வாழ்ந்த சூரிய குல சத்ரியன் தான் ராமன்.தனது தங்கையான சீதையையே திருமணம் செய்தவன்.(ஆதாரம் தசரத ஜாதக என்ற பௌத்த ராமாயணம் ).
சூரிய குல செட்டியான குபேரனின் நாக நாட்டை (இலங்கை ) இராவணன் (குபேரனின் தம்பி , அதாவது ஒரே தந்தை வேறு வேறு தாய் ) கைப்பற்றிக் கொண்டதால் தான் சூரிய குல ராமன் நாகநாட்டை மீட்க இராவணன் மீது படையெடுத்துச் செல்கிறான்.
இராவணன் ஒரு வடயிந்தியன் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.ஆனால் இராவணனை தமிழன் என்று கூறியது தி.க கோமாளிகள் செய்த கூத்து.
முழுக்க முழுக்க வடஇந்தியாவில் நடந்த சமணக் கதைகளை சைவ சமயத்துக்குள் கொண்டுவந்தது சைவ வெள்ளாளர்களே!!
சைவம் என்பது வெள்ளாளர்களின் சமயம் மட்டுமே!!
திபெத் நாட்டில் இருக்கும் கைலாயத்தில் நடந்த நிகழ்வுகளை தமிழாக்கம் செய்து சிவன்,முருகன்,விநாயகன்,பார்வதி ஆகியோர் தமிழ்க் கடவுள்கள் என்று பரப்பிவிட்டதில் சைவ ஐயர்களை விட சைவ வெள்ளாளர்களுக்கே பங்கு அதிகம்.
காளை மாட்டோடு இருக்கும் ரிசபநாதனை சிவபெருமாள் ஆக்கியது, பாஹுபலியை முருகன் ஆக்கியது, வட்டிக்கடை செட்டியாரின் உருவத்தை விநாயகன் ஆக்கியது , சிங்கத்தின் மீது அமர்ந்த செட்டிச்சியை பார்வதி ஆக்கியது ; இது போன்ற பித்தலாட்டங்கள் பக்தி இயக்கம் என்ற பெயரில் இம்மண்ணில் நடந்தேறியுள்ளன.
பௌத்த இராமாயணத்தை தமிழாக்கம் செய்து கம்பராமாயணம் என்று பெயர் மாற்றி வடஇந்திய சேட்டு குடும்பத்து சண்டையை மிகப்பெரிய காவியத்தைப் போல எழுதி வைத்துள்ளனர்.
இதுவேறும் சேம்பில் தான் ,இது போலவே இந்தியத் துணைக்கண்டத்தில் ஆங்காங்கே நடந்த சம்பவங்களை எடுத்து தொகுத்து உருவாக்கப்பட்டதே இந்து மதம் என்னும் மசாலா படம்.

No comments:

Post a Comment