தும்பி எனும் தட்டான்
தும்பி எனும் தட்டான்
தும்பி அல்லது தட்டான் ஓர் அறிமுகம்:-
தும்பி அல்லது தட்டான் என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் அழகிய ஒல்லியான பூச்சியாகும்.தட்டான் என்பது வழக்குச் சொல். சங்கஇலக்கியங்களில் இவை தும்பி என்றழைக்கப்பட்டுள்ளன. தட்டான்கள் இரண்டு வகைப்படும். அமரும்போது இறக்கையை பக்கவாட்டில் விரித்து வைத்திருப்பவை தட்டான்கள் ஏனெனில் இவற்றால் இறகுகளை மடக்க இயலாது. இவற்றின் கண்கள் அருகருகே அமைந்திருக்கும். மேலும் சற்று பருமனான உடலமைப்பை கொண்டிருக்கும்.
தட்டான்.
இறக்கையை மடக்கி முதுகின் மேல் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை தட்டான்களைவிட பெரும்பாலும் உருவத்தில் சிறியதாகவும், ஒல்லியான உடலையும் கொண்டிருக்கும். இவற்றின் இரண்டு கண்களும் இடைவெளி விட்டு அமைந்திருக்கும். தட்டான்கள்பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகிலும்,பொது வெளிகளிலும் காணப்படும் ஆனால் ஊசித்தட்டான்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலேயேதான்இருக்கும்.
ஊசித்தட்டான்.
அழகிய உடலமைப்பு:-
தட்டான் பூச்சிகள் சராசரியாக (Dragonfly) 4 அங்குல நீளம் இருக்கும்.அதிகபட்சமாக 6 அங்குல நீளம் இருக்கும். ஊசித் தட்டான்கள் (Damselfly)அதிகபட்சமாக 3 அங்குல நீளம் இருக்கும். தட்டான்கள் பறவையினமாக அறியப்பட்டாலும், பிரிவு பூச்சி வகையில் Anisoplera வகையில் அடங்கும்.
தட்டானின் உடலமைப்பு ஓர் விளக்கப்படம்.
தட்டான் பூச்சியின் உடலை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதலில் தலைப்பகுதி. அடுத்து நெஞ்சுப் பகுதி கடைசியாக ஒல்லியாக நீண்ட குச்சி போல் உள்ள பகுதி வயிறு.இப்பூச்சிகளின் உடல், பல வண்ணங்களில் கண்ணைக் கவரும் நிறத்தில் மெல்லிய கம்பி போல் நீண்டுஇருக்கும். தட்டாரப்பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன. இவை வலைபோலவும் மிகமிக மெல்லிய,கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் வகையில் இருக்கின்றன. தட்டான் பூச்சிகளுக்கு இரண்டு பெரியகூட்டடுக்குக் கண்களும் அதாவது ஒவ்வொரு கண்ணிலும்ஆயிரக்கணக்கான விழியாடிகள் (லென்ஸ்) உள்ளன. ஆறு கால்களும் உண்டு. கால்களில் மெல்லிய மயிர்போன்ற இழைகள் நெடுகிலும் உண்டு.நீண்ட ஒல்லியான கம்பி போன்ற வயிற்றுப்பகுதியில் பல முக்கியமான உறுப்புகள் உள்ளன. இப்பகுதியில், கழிவுவாய், முள் போன்ற கொடுக்கு, பெண்தும்பிக்கு முட்டையிடும் உறுப்பு, ஆண்தும்பிக்கு விந்துகளைச் சேமித்து வைக்கும் துணை இனப்பெருக்க உருப்பு போன்றவை அடங்கும். தட்டானுக்குக் கீழிறக்கை மேலிறக்கையை விட அகலமாகக் காணப்படும்.
பறக்கும் திறன்:-
தும்பிகள் பொதுவாக மணிக்கு 20-30 கி.மீ விரைவில் பறக்கும் வல்லமை கொண்டவை, ஆனால் மணிக்கு 80-100 கி.மீ விரைவில் பறப்பதைப் பற்றியும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தனக்கான உணவை பிடிக்கும் போது 40முதல் 50 கி.மீ. வேகத்தில் பறந்தடிக்கும் என்பது ஆச்சர்யமான உண்மை மிகத்திறமையாக பறக்கக்கூடிய பூச்சிகளில் இனங்களில் முதலிடத்தில் இருப்பது தட்டான்களே. பூச்சி இனங்களிலேயே முதன்முதலில் பறக்கும் திறனைப் பெற்றவை தட்டான்களாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின்யூகம். இவற்றின் பறக்கும் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். தட்டானுடையமுதுகின் மேற்புறம் நான்கு இறக்கைகள் தனித்தனியாக அசையும் வகையில் உறுதியான தசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும்.
பறக்கும் நிலையில் தட்டான்.
தட்டான்களால் விரைவாக முன்னோக்கி மட்டுமல்லாமல் தலையைத் திருப்பாமலேயே பின்னோக்கிப் பறக்கவும், இருந்த இடத்திலிருந்து நிலை மாறாமல் மேலும் கீழும் மட்டுமில்லாமல்,சட்டென 3600 சுழன்று திரும்பவும் அவற்றால் முடியும். தும்பிகள் பறந்துகொண்டே ஒரே இடத்தில் நிற்கக்கூடிய திறம் கொண்டவை. பறவையைக் கண்டு விமானத்தை மனிதன் கண்டுபிடித்ததைப் போல,ஹெலிகாப்டர் தயாரிப்பதற்கான எண்ணம் பிறந்தது தட்டானைப் பார்த்துத்தான்.
தட்டாரப்பூச்சிகள் ஆண்டிற்கு 8000 கிலோ மீட்டர் தொலைவு பறக்கக்கூடியன என முன்பு அறிஞர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் பிப்ரவரி 2016ல் PLOS ONE இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி தட்டாரப்பூச்சிகள் 14000 முதல் 18000 கி.மீ வரைப் பறக்கக்கூடியன என நிறுவுகிறது.தங்கத் தட்டான் வகை (Golden Ringed Dragonfly) 8,000 அடி உயரத்திலும் வாழக்கூடிய தன்மை வாய்ந்தது.
தட்டான் பூச்சியின் பரவல்:-
உலகில் தட்டான், ஊசித்தட்டான் பூச்சிகளில் ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. அதாவது ஊசிதட்டான்களில் ஏறத்தாழ 2900 வகைகளும் தட்டான்களில் ஏறத்தாழ 3200வகைகளும் உள்ளது. இந்தியாவில் 536வகைத் தட்டான்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேபோல் இதுவரை தென்னிந்தியாவில் 73 வகை தட்டாங்கள் 44 தட்டான்கள், 29 ஊசித்தட்டான்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவை உலகில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் வாழ்கின்ற ஓர் உயிரினம்.
 |
பல மில்லியன் ஆண்டுகள் பழமையான தட்டானின் படிமம். |
 |
பல மில்லியன் ஆண்டுகள் பழமையான தட்டானின் படிமம். |
இப்பூச்சி இனம் நில உயிரிகள் உலகில் மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே வாழ்ந்து வரும் ஓர் உயிரினம். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிவுற்ற மிக முன்னதாகவே, ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வாழ்ந்துவரும் பூச்சியினம் ஆகும்.
உணவுகள்:-
இவை நீரிலுள்ள பூச்சிகள், கொசுவின்லார்வா, தலைப்பிரட்டை, சிறிய மீன்கள் போன்றவற்றை பிடித்து சாப்பிடுகின்றன. மேலும் வேளாண்மைக்கு தீங்கு செய்யும் புழுப்பூச்சிகளும் இதன் உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெறுகின்றது.
இணைசேரும் விதம்:-
 |
இணையை கவர நடனமாடும் தட்டான் |
இயல்பாக சிவப்பு நிறம் கொண்ட தட்டான் அதே நிற தட்டான்யுடன் இணை சேரும். அபூர்வமாக சில வேளைகளில் மற்ற இனத் தட்டான்களுடன் இணை சேர்வதும் உண்டு, ஊசித் தட்டான்களுக்கு மற்ற இன ஊசித் தட்டான்களுடன் இணை சேரும்.
தட்டான்கள் மற்றும் ஊசித்தட்டான்கள் இணைசேர்வது இயற்கையின் அதிசயநிகழ்வாகும். பெண் தட்டான் ஒரு புல்லின் நுனியை தன் கால்களால் இறுக பற்றிக் கொள்ள, அதன் வாயின் அடிப்பகுதி, ஆண் தட்டான்யின் கழுத்தை இறுகப் பற்றிக் கொள்கிறது. ஆண் தட்டான் தன் வாலின் கடைசிப் பகுதியை பெண் தட்டான்யின் அடிவயிற்றில் பதித்து இணை சேர்கிறது. நீர்நிலையை ஒட்டி பறந்து செல்லும் போது, வாலின் அடிப்பகுதியை நீரில் தொட்டு, முட்டை விட்டு செல்லும். முட்டைகள் நீரில் மூழ்கி அடிப்பகுதில் தங்குகிறது.
 |
பறந்த நிலையில் இணைசேர முயற்ச்சிக்கும் தட்டான்கள் |
பெண் தட்டாம்பூச்சி, தன்னுடைய சில நூறு முதல் சில ஆயிரம் முட்டைகளைநீரிலோ, நீரருகே உள்ள மண்ணிலோ,நீர்ச்செடிகளிலோ இடுகின்றது. வெப்பநாடுகளில் உள்ளவை சில நாட்கள் முதல் (5-15 நாள்கள் முதல்) ஒரு மாத அளவிலேபொரிக்கும். குளிர் நாடுகளில் இரண்டு மாதம் முதல் 7 மாதங்கள் வரை கூடஆகலாம் அந்த முட்டைகளில் இருந்து பிறக்கும் இளவுயிரி தட்டான்இனப்புணர்ச்சி; மேலே இருப்பது ஆண் தட்டான். கீழே இருப்பது பெண் தடான்;ஆண் தட்டாரப் பூச்சி, தன் நீண்ட வயிற்றுபகுதியின் கடைசியில் இருக்கும் இடுக்கி போல் உள்ள பகுதியால் பெண் தட்டாரப்பூச்சியின் தலையை அல்லது கழுத்துப் பகுதியைப் பிடித்திருக்கும். இந்த இடுக்கி போன்ற கடைப்பகுதி இனத்துக்கு இனம் சிறிது மாறுபடும் எனவே, இனப்பெருக்கம் தன்னினத்துக்குள்ளேயே நடப்பதுகாக்கப்படுகின்றது நீருக்குள்ளேயே தன் வாழ்க்கையை ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை வாழும்.அப்பொழுது இதற்கு இறக்கைகள் இருக்காது. இந்த நிலையிலும் இவற்றுக்கு நல்ல கண்பார்வை உண்டு,பெரிய கீழ்வாய்த் தாடை உண்டு. இவ் இளவுயிரிகள் செவுள் கள் மூலம் மூச்சுவிடுகின்றன.
 |
தும்பியின் வாழ்க்கை சுழற்ச்சி
நீரின் அடியில் உள்ள முட்டைகள் பொரிந்தவுடன் மீன்களைப் போல் செவுள்களின் மூலம் மூச்சுவிடுகிறது. குஞ்சுத் தட்டான் (Nymph) 12முதல் 15முறை தோலுரிந்து முழு வளர்ச்சிடைந்து நீரிலிருந்து வெளியேறும்
கண்டம்விட்டு கண்டம் வலசை சென்றுவரும் தட்டான்கள்:-
தட்டான்களும் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கிறது 12 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறது நம் தமிழ் நாட்டு தட்டான்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட்டு மாதம் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டு அக்டோபர் மாதம் மாலத்தீவை அடைகிறது. பின்னர் அங்கிருந்து நவம்பரில் செகேல்ஸ் தீவை அடைகிறது. டிசம்பரில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசம்பிக் நகரை அடைகிறது. அங்கு இருந்து ஏப்ரல் மாதம் மாலத்தீவு வழியாக மீண்டும் இந்தியாதிரும்புகிறது. இதில் ஆச்சரியப்படவேண்டிய தகவல் என்னவெனில் அவை ஒவ்வொருஇடத்திலும் சில நாட்களே தங்குகின்றன. இடையே 600 மிதல் 800 கிலோமீட்டர்தூரம் கடலை கடக்கின்றன. இவை 3 ஆயிரத்து 200 அடி உயரத்தில்பறக்கின்றன. தாழ்வாக பறந்தால் காற்றிந் வேகம் தட்டான்களை தள்ளிவிட்டு திசை மாற்றிவிடக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் சுவராசியமான தகவல் என்னவென்றால் இப்படி நீண்டதூரம் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்கு அவற்றின்அடிப்படைத் தேவையான தூய்மையான தண்ணிர் கிடைக்காததுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இயற்கை மனிதனுக்கு தந்த கோடை தட்டான்:-
பூச்சியினங்கள் அதிக அளவில் பெருகிவிடாமல் சமன் நிலையில் வைத்திட பறவைகளோடு தட்டான்களின் பங்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சுழற்சியில் தட்டான்கள் சுற்றுச் சுழலுக்கு பெரிய அளவில் நன்மை செய்கின்றன. பூச்சிகளை தொடந்துதான் உணவாக்கிட தாமே பல பறவை இனங்களுக்கு உணவாக அமைந்து சூழலியல் சமன்பாட்டில் தட்டான்கள் முக்கிய பங்காற்றுகிறது.
இன்றைய மனித செயல்பாட்டால் பல வகை தட்டான்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. மேலும் வேளாண்மைக்கு தீங்கு செய்யும் பூச்சிகளும் பெருகத்துடங்கியுள்ளது.
மனிதனுக்கும் உணவாக:-  | சமைக்கப்பட்ட தட்டான் |
பாலித்தீவிலும், அந்தோனேசியாவிலும் தட்டான்களை மக்கள் உணவாக உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. கரிச்சான், நாகணவாய், பஞ்ருட்டான் போன்ற பறவை இனங்களுக்குதட்டான்களே முக்கிய உணவாகும்.
தட்டான்களை பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய புத்தகங்கள்:- - தட்டான்கள், ஊசித்தட்டான்கள்: அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆர். பானுமதி, வெளியீடு: க்ரியா பதிப்பகம், தொடர்புக்கு: 97898 70307
 | தென்னிந்திய தட்டான்களின் குறிப்புகள் அடங்கிய தமிழ் நூல். |
|
- Dragonflies of India: A Field Guide, K.A.Subramanian
 | இந்திய தட்டான்களின் குறிப்புகள் அடங்கிய ஆங்கில நூல். |
|
ஒருவரின் கட்டுரையை தங்களின் தளத்தில் பகிர்வது வரவேற்க்கத்தக்கதே ஆனால் இப்படி தங்களின் சுயப்பதிவை போல எங்கு இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லாமல் போடுவது என்பதை எந்தவகை இழிசெயலில் சேர்ப்பதென தெரியவில்லை.
ReplyDeleteஇனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள்.