Friday, 20 October 2017

உடனடி முதல்வராக்கு 1. ஒரு முதல்வர் இறந்த ஒரு மணி நேரத்தில் இன்னொருவர் முதல்வராக முடியும் என்றால்,

உடனடி முதல்வராக்கு
1. ஒரு முதல்வர் இறந்த ஒரு மணி நேரத்தில் இன்னொருவர் முதல்வராக முடியும் என்றால்,

2. ஒரு வீட்டு வேலைக்காரி, தோழி (?) நாப்பதாண்டு கட்சிக்கு ஒரு வாரத்தில் பொதுச்செயலாளர் ஆக முடியும்னா

3. ஏன் அதே வீட்டு வேலைக்காரி, தோழி இன்னும் ஒரு சில நாட்களில் 7 கோடி மக்களின் முதல்வராக முடியும்னா

4. ஒருத்தர் முதல்வர் ஆகிட்டு பின்னாடி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம்னா

5. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து குற்றம் நிரூபணமாகி இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டவர் முதல்வர் ஆகலாம்னா

6. விஞ்ஞான சர்க்காரியா ஊழலில் சிக்கியவர் 5 முறை முதல்வர் ஆகலாம்னா

7. 86 சதவிகித இந்திய மக்களை இன்று வரை பாதித்துக்கொண்டிருக்கும் 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தினை செல்லாக் காசாக்க ஒரே ஒரு நிமிடத்தில் முடியும் என்றால்

8. நாட்டின் 100 சதவிகித மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை ஒரு தனியார் அம்பானி நிறுவனம் ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஏற்றி மக்களைக் கொடுமைப்படுத்த முடியும் என்றால்

9. ஜெயலலிதாவின் காலத்தில் IAS, IPS அதிகாரிகளை, சக அமைச்சர்களை நினைச்ச இடங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாற்ற முடிந்தது சாத்தியம் என்றால்

10. ஒரே ஒரு அரசாணையில் ஒரு கவர்னரை மாற்றி புதிதாக ஒருவரை நியமிக்க முடியும் என்றால்

11. 40 எம்.பி. க்களும், 232 எம்.எல்.ஏக்களும், 24 அமைச்சர்களும், 2 முதல்வர்களும் 3 வருடங்களாக சாதிக்க முடியாத ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரே ஒரு வாரத்தில் மீட்க முடியும் என்றால்

12. தமிழ்நாட்டில் நேர்மையின் அடையாளமாய் இருக்கும்
சகாயம் அவர்களும் உடனடியாய் முதல்வர் ஆக முடியும் .

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தமிழர்கள் மெரீனாவுக்கு வர முடியாது.

ஒரே ஒருத்தர் (சகாயம்) மெரினாவில் (ஜார்ஜ் கோட்டையில்) இருந்தால் 7 கோடி தமிழரும் நிம்மதியாய் மத்த வேலையை பார்க்க முடியும்.


எந்த வித சட்ட பிரச்சினையும் இல்லை. (RK நகர் தொகுதியும் தயாரா இருக்கு) இன்றைக்கு
சட்டசபையில் இருப்பவர்கள் தான் பிரச்சினை பண்ணுவார்கள்.

தமிழ்நாடே ஒரு வாரமா வெயில்லயும், மழையிலயும், பனியிலயும் கிடக்குதே.
சட்டசபைக்காரங்க சனங்க சபைக்கு ஒருத்தராவது வந்தாங்களா?

40 வருசம் பொறுத்தாச்சு இன்னும் 4 வருசம் பொறுத்துக்கொள்ள முடியாது.

நமக்கு ஓட்டுப் பொறுக்கிகளின்
பிச்சை, இலவச சகாயம் தேவை இல்லை

நமக்குத் தேவை நாட்டை மாற்றும் சகாயம்.

                                                                                       தொடர்ந்து தேடுவோம்...

No comments:

Post a Comment