Sunday, 15 October 2017

ஒருவனிடம் துப்பாக்கி கொடுத்தால் ஒரு வங்கியை கொள்ளையடிக்க முடியும் .

ஒருவனிடம் துப்பாக்கி கொடுத்தால் ஒரு வங்கியை கொள்ளையடிக்க முடியும் .

அதுவே அவனிடம் ஒரு வங்கியை கொடுத்தால் இந்த உலகையே கொள்ளையடிக்க முடியும் .

பணம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு காகிதம்.
அந்த காகிதம் கிடைப்பதற்காக நாம் வேலைக்கு செல்கிறோம்.
அந்த காகிதம் எதிர்காலத்தில் நம் குழந்தைகளுக்கும் கிடைக்க பள்ளி மற்றும் கல்லூரி அனுப்புகிறோம்.

இப்படி நம் வாழ்க்கையையே அந்த காகிதத்திற்காக செலவிடுகிறோம். ஆனால் அந்த காகிதம் பற்றி நம் எத்தனை பேருக்கு தெரியும்.

அந்த காகிதத்தில் எழுதி இருப்பதற்குகூட நமக்கு அர்த்தம் தெரியவில்லை .

இந்த காகிதம் சம்பாதிப்பது தான் வாழ்க்கை என்று நம்புகிறோம்.
இந்த காகிதம் இல்லாமல் நாம் வாழ்க்கை வாழ முடியாது என்று நம்புகிறோம்.

இது தவறு ...

பணம் தேவையில்லாமல் அரசாங்கம் தேவையில்லாமல் நிம்மதியாக மகிழ்வுடன் வாழ வழி இருக்கிறது.

இது பண்டமாற்று அல்ல.

இதுவே "பங்களிப்பு வாழ்க்கை முறை"

இதன் செயல்திட்டமே "ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மாற்றும்"

நன்றி Albert Raj Contributionism

No comments:

Post a Comment