நிலவேம்பு குடிநீர்:
நிலவேம்பு குடிநீரை குடிப்பதால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும், தமிழக மக்களை வாரிசுகள் இல்லாமல் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு அரசின் மீதும் சித்த மருத்துவர்கள் மீதும் சுமத்தப்படுகிறது.
அறிவியல்பூர்வமாக எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி சில நவீன மருத்துவர்கள் கேள்வியை எழுப்பியதால், இது எதிர்கட்சி தலைவர் முதல் அரசியலில் அடி வைக்க காலம் பார்த்து கொண்டிருக்கும் நடிகர் வரை முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்தப்படுகிறது.
மக்கள் தலைவர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பாரட்டிற்குரியது.அவர்கள் அறிவியல் ஞானம் உள்ள மருத்துவர்கள் அல்ல.ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த மருத்துவர்கள் அறிவியல் ஞானம் உடையவர்கள்.ஒரு குற்றச்சாட்டை சுமத்தும் முன், அறிவியல்பூர்வமாக சிந்தித்து தெளிய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.அவசர கோலத்தில் அவர்கள் அள்ளி தெளித்த சேறு அவர்களின் பாரம்பரிய மருத்துவ வெறுப்புணர்வை மட்டும் பறைசாற்றுகிறது.
ஆங்கிலத்தில் சொன்னால் அறிவு என்று நம்பும் சில ஊடகங்களும், சித்த மருத்துவர்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல் நிலவேம்பு குடிநீருக்கு எதிரான தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
உண்மை தான் என்ன?
நிலவேம்பு இலைக்கு விந்தணு உற்பத்தியை தடுக்கும் குணம் உண்டு என்று எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவு உண்மை தான்.
ஆனால்,1997 ஆம் ஆண்டு Journal of Ethnopharmacology இல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் வேறு விதமான முடிவுகளை உள்ளது. நிலவேம்பை எலிகளுக்கு 60 நாட்கள் கொடுத்து பார்த்து ஆய்வு செய்ததில் அவைகளின் விந்து பைகளில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆதாரம்:
http://www.sciencedirect.com/science/article/pii/S0378874197000998
அறிவியல் ஆய்வு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முடிவு வருவது இயல்பானது தான்.எனவே நான் மேற்சொன்ன ஆய்வு முடிவுகளை புறம்தள்ளி வைத்து, விந்து உற்பத்தியை தடுக்கும் என்ற ஆய்வை ஏற்று கொள்வதாகவே இருக்கட்டும்.
நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு என்ற ஒற்றை மூலிகை உடைய மருந்து அல்ல. இது இந்த பரப்புரையை செய்யும் எத்தனை பேருக்கு தெரியும்.நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சு வேர்,பேய்ப்புடல், பற்படாகம்,கோரைக்கிழங்கு, சந்தனம் என்ற 9 மூலிகைகளை சம அளவில் உள்ளடக்கிய கலவை மருந்து.அதில் நிலவேம்பு என்பது 9இல் ஒரு பங்காக கலக்கப்படும் ஒரு மூலிகை சரக்கு.
இதில் நிலவேம்பு தவிர மற்ற மூலிகைகள் விந்து உற்பத்தியில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பரப்புநர்கள் படித்ததுண்டா?அது தொடர்பான ஆய்வுகளை தேடியதுண்டா? கண்டிப்பாக செய்திருக்க மாட்டீர்கள். அப்படி தேடி படித்திருந்தால் இந்த குற்றச்சாட்டும், பரப்புரையும் நடந்திருக்காது.
எனவே அந்த ஆய்வுகளை இங்கே எழுதியுள்ளேன். படித்து பார்த்து விட்டு அறிவியல் பேசுங்கள்.
சுக்கு(Zingiber officinale):
https://www.ajol.info/index.php/ajbr/article/view/50750/39442
மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும்.எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது.
Zingiber officinale aqueous extract treatment causes significant increase in weight of testis and epididymis.There were dose and duration dependent increase in sperm quality and motility.There was also significant increase in serum testosterone level. Malonhydialdehyde levels were significantly reduced.Our results indicated that Zingiber officinale posses pro-fertility properties in male rats.
அதாவது இந்த மூலிகையை எலிகளுக்கு கொடுத்து பார்த்ததில் விந்து உற்பத்தி செல்களை உள்ளடக்கிய testis , epididymis எடையை அதிகரிக்கிறது, ஆண் பாலின ஹார்மோன் டெஸ்டோஸிடரோன் அளவை அதிகப்படுத்துகிறது.மொத்தத்தில் இந்த மூலிகை மலட்டுதன்மையை அகற்றும் குணங்கள் நிறைந்தது..
https://www.ajol.info/index.php/ajbr/article/view/95189
மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும்.
Sodium arsenite மற்றும் Zingiber officinale சேர்த்து எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்ட போது, ஆர்ஸ்னைட்டால் எலிகளின் விந்துப்பைகளின் ஏற்பட்ட பாதிப்புகளை திருத்தி அமைக்கும் பண்பு இம்மூலிகைக்கு இருந்தது கண்டறியப்பட்டது என்பதே இந்த ஆய்வறிக்கையின் உள்ளடக்கம்.
கோரைக்கிழங்கு ( Cyperus rotundus):
http://www.ijppsjournal.com/Vol4Issue1/3066.pdf
Cisplastin என்ற மருந்தின் மூலம் விந்தகத்தில் பாதிப்பை உண்டாக்கப்பட்ட எலிகளில், கோரைக்கிழங்கின் aqueous extract கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. கோரைக்கிழங்கு விந்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் செய்கையை உண்டாக்கியது நிரூபிக்கப்பட்டது.
பேய்ப்புடல் (Tricosanthes cucumerina):
http://www.webmedcentral.com/article_view/3498
one would observe reduction in the testes weights (shrinkage) because, no spermatogenic activity occurred, as the spermatogenic cells have been inhibited from their actions, but with the extract administration, the initial spermatogenic state of the testes were approached.
அதாவது, ஹார்மோன் கொடுத்து எலிகளின் விந்தகங்களில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது.இம்மூலிகையை கொடுத்து பரிசோதித்த போது, விந்து உற்பத்தி முன்பிருந்த நல்ல நிலைக்கு திரும்பியது கண்டறியப்பட்டது.
நிலவேம்பு குடிநீரில் உள்ளது 9 மூலிகைகள். இதில் நான் மேலே சொன்ன 3 மூலிகைகள் எலிகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் ஆற்றல் உள்ளது.
நிலவேம்பும் மிளகும் மட்டும் விந்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் உள்ளன.
(மிளகின் இந்த செய்கை அவதூறு பரப்புவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நேர்மையான ஆராய்ச்சியாளனாக தெளிவுப்படுத்துவது எனது கடமை.(ஆதாரம்- http://nopr.niscair.res.in/handle/123456789/5973)
ஆக நிலவேம்பு மட்டும் டெங்கு கிருமியை எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், இன்ன பிற மூலிகைகளும் சம அளவில் சேர்க்க வேண்டிய அவசியம் சித்தர்களுக்கு ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நுனிப்புல் மேய்ந்து விட்டு வதந்தி பரப்பும் அரைகுறை அறிவாளிகள் சித்தர் அறிவியலின் சத்ரு, மித்ரு சரக்குகளின் அறிவியல் கோட்பாட்டை தேடி படியுங்கள்.அல்லது சித்த மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.நிலவேம்பின் கெட்ட குணங்கள், மற்ற மூலிகைகளால் முறிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
டெங்கு உயிரியல் ஆயுதமாக நம் நாட்டின் ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.(பூச்சாண்டி காட்டவில்லை, Indian defence studies and analyses என்ற மத்திய தன்னாட்சி பாதுகாப்பு துறை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான, கேப்டன் அஜய் லீலீயின் கட்டுரையை படிக்கவும்.இவர் பாதுகாப்பு துறை ஆய்வுக்கான கே.சுப்பிரமணியம் விருதை பெற்றவர்- https://idsa.in/idsastrategiccomments/DengueAGermwithWeaponPotential_ALele_191006)
இப்போது வதந்தி பரப்பும் சில நவீன மருத்துவர்கள் டெங்குவிற்கு மருந்தை கண்டுபிடித்து கொடுக்க யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்? ஆயுதத்தை ஏவியவர்கள் மருந்தையும் கொடுப்பார்கள் என்று காத்திருக்கிறார்களா?
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆய்வு நடத்தி மருந்து கண்டுபிடித்து கொடுக்கும் வரை நிலவேம்பை விமர்சனம் செய்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது தான் உங்கள் கடமையா?
மலேரியாவிற்கு மருந்து சிங்கோனா பட்டையில் இருந்து தான் வந்தது.ஆஸ்பிரின் என்பது வில்லோ மரப்பட்டை பல கட்ட ஆய்வுக்கு பின் உருமாறி வந்தது தான்.உங்கள் ஊரில் உள்ள சித்த மருத்துவர் கொடுக்கும் நிலவேம்பு குடிநீரை ஆய்வு செய்து நீங்கள் கற்ற நவீன மருத்துவ அறிவியலுக்கு உங்கள் பங்களிப்பை செய்திருக்கலாமே.
டெங்குவிற்கு சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி விட்டு clinical trial செய்தீர்களா? Case report இருக்கிறதா? என்று கேட்பது அறிவுடமையா?
2012 ஆண்டு முதல் தமிழக அரசு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகிறது.அரசு சித்த மருத்துவர்கள் கௌரவம் பார்க்காமல் நிலவேம்பு குடிநீரை டீ கேனில் எடுத்து கொண்டு தெருதெருவாக கொடுத்து வருகின்றனர்.இதில் பெரும்பாலான மருத்துவர்களுக்கு மருந்தாளுனர்கள் துணை கிடையாது.குடிநீர் காய்ச்சுவது முதல் மருத்துவமனையை சுத்தம் செய்வது வரை இவர்கள் தான் ஆல் இன் ஆல்.
NRHM சித்த மருத்துவர்களோ, தினக்கூலியாக வேலை பார்த்து கொண்டே,தங்களின் நிரந்தர வேலைக்கு குரல் கொடுத்து கொண்டே தெருதெருவாக நிலவேம்பு குடிநீரை கொடுத்து சமூக மருத்துவர்களாக தமிழத்துக்கு கடமை ஆற்றி வருகிறார்கள்.
இவர்களின் வியர்வை சிந்தும் பணி தான் நிலவேம்பு குடிநீர் என்ற மக்கள் மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
Clinical trial செய்ய வேண்டும் என்றால் Integrative treatment செய்ய அவர்களுடன் சேர்ந்து நவீன மருத்துவர்கள் செயல்பட வேண்டும்.
இல்லை,நான் ஏதாவது மருந்து கம்பெனி ஆய்வு நடத்தி அறிவிக்கும் வரை காத்து கொண்டிருப்பேன், நேரம் போகாமல், நுனிபுல் மேய்ந்து விட்டு வதந்தி பரப்புவேன் என்று இருந்தால், காத்திருங்கள்.
அதுவரை செத்து கொண்டிருக்கும் நோயாளிகள் காத்து கொண்டிருக்க மாட்டார்கள்.அவர்களுக்காக சித்த மருத்துவர்கள் மக்களுக்கு ஆற்றும் சமூக கடமையை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
https://youtu.be/DdanPH3vv6o
#தற்சார்பு_வாழ்வியல்