Saturday, 7 December 2019

பரிமானம் வேறு / பரிணாமம் வேறு

பரிமானம் வேறு / பரிணாமம் வேறு
***************************************
“பரிணாமம்” (Deviation in Growth) என்பது உயிரியல் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய மாறுபாடுகளைக் குறிக்கும் ஒரு சொல். “பரிமானம்” (Dimension) எனப்படுவது நாம் வாழக்கூடிய ஒட்டுமொத்த சூழலைக் குறிக்கும் ஓரு சொல். இந்த பூமியில் வெவ்வேறு பரிமாணங்களில் உயிர்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஒரு Dimension –ல் வாழும் உயிர்களுக்கு இன்னொரு Dimension மறைக்கப்படுகிறது. வெகு சில சமயங்களில் இரு வெவ்வேறு Dimension –கள் ஒன்றுடன் ஒன்று Communicate செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது அல்லது சித்தர்கள் எனப்படுவோர்களால் தொடர்பு கொள்ளப்படுகிறது. இங்கு சித்தர்கள் தன் உடலை வேற்று பரிமாணத்திற்குள் கொண்டு செல்லும் நிகழ்வே “மறைதல்” எனப்படுகிறது. 
-
டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின்படி Ape வகைக் குரங்குகள் மனிதனாக பரிணாம வளர்ச்சியடைந்து விட்டதாக கூறப்படுவது உண்மையெனில் மீதிக்குரங்குகளால் ஏன் இன்றுவரை பரிணமிக்க முடியவில்லை? குறைந்தபட்சம் 2500 ஆண்டு வரலாறு நம்மிடம் இருக்கும் போது ஒரு மிகச்சிறிய அளவிலான மாற்றம் கூட Ape வகைக் குரங்குகளுக்கு ஏற்படவில்லை என்பதை கவனிக்க. குறைந்தபட்சம் அவைகள் தங்களுக்குள் பேசக்கூட முயற்சி செய்யவில்லை. டார்வினின் கோட்பாடு மனித இனத்திற்கு மட்டும் எக்காலத்திலும் பொருந்ததாது.
-
சுப்ரமணிய பாரதி தனது ஒரு பாடலில் இவ்வாறு பாடியிருப்பார். 
“நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே....
நீங்கள் எல்லாம் சொப்பனம்தானோ....
வெறும் தோற்ற மயக்கங்களோ....”
இப்பாடலில் வரும் “தோற்ற மயக்கம்” என்பது வேற்று பரிமாணத்தைக் குறித்த ஒரு சொல் ஆகும். அதாவது இப்போது நாம் கண்ணால் காணும் காட்சிகள் மற்றும் நம்மோடு வாழும் உயிரினங்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட அதிர்வலைகளில் அதிர்ந்துகொண்டிருக்கின்றன. நம்மோடு சேர்ந்து வேறு ஒரு அதிர்வெண்ணால் அதிர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு உலகமும் நம்முடனேயே பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதே அது. பொதுவாக இந்த கோட்பாட்டை நான் ஏற்கிறேன். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் இனி நான் கூறவரும் கருத்துக்களை புரிந்து கொள்ள முடியாது. 
-
மரபணு ஜோதிடப்படி ரோகிணி, உத்திரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களை அறிந்தோ, அறியாமலோ வேற்று பரிமாணத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். “அவிட்டம்” நட்சத்திரம் என்பது முழுக்க முழுக்க வேற்று பரிமாணத்தை குறிக்கக்கூடிய நட்சத்திரம் ஆகும். இதன் அதிதேவதை காளி. தஞ்சை பெரிய கோயிலுக்குள் வாழ்ந்தவர்கள் அவிட்ட நட்சத்திரம் தவிர்த்து ஏனைய 26 நட்சத்திரங்களை மட்டுமே கடைபிடித்தனர். 27-வது நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரம் அவர்களுக்கு வேலை செய்வதில்லை. இது உண்மை எனில், தஞ்சை பெரிய கோயிலுக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்ட வேற்று பரிமாணத்திற்கும், இப்பூமிக்கும் ஏறக்குறைய தொடர்பே இல்லை என்றாகிறது. 
-
என்னைப் பொருத்தவரையில் பெருங்கோயில்கள் என்ன காரணத்திற்காக கட்டப்பட்டதோ அது ஒரு கட்டத்தில் அதைக் கட்டியவர்களுக்கு தேவையில்லாமல் போயிருக்கலாம். அதன் பிறகே அனைத்து பெருங்கோயில்களும் Deactivate – செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டிருக்கலாம். இது இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும்.
********************** 
தொடர்புக்கு
ஜோதிடர் நா.எழிலன்
(DNA Astrologer)

1 comment:

  1. வேற்று பரிமாணம் பற்றி தமிழ் புத்தகம் இருக்கிறதா

    ReplyDelete