Sunday, 29 December 2019

aseevagam ஆசீவகம் - "மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு ."


ஒர் அரசனின் குணமும் அதுதானே…?) -

கட்டுப்பாடற்ற தாவரங்களின் பரவலை அதை உணவாக உட்கொள்ளும் கால்நடைகள் கட்டுக்குள் வைக்கிறது. தாவரங்களை உணவாக உட்கொண்டு கட்டுப்பாடில்லாமல் இனவிருத்தி செய்யும் கால்நடைகளை சிங்கம், புலி போன்ற மாமிச விலங்குகள் கட்டுப்படுத்தி வைக்கிறது. அதாவது தாவரங்களின் விகிதம் 100% என்றால், கால்நடைகள் 20%, மாமிச உண்ணிகள் 1% என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். இயற்கையே இந்த விகிதாச்சாரத்தை தக்க வைக்கிறது. இதில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் உணவுச்சங்கிலித் தொடர் அறுபட்டு உலகம் அழியத் தொடங்கும். குறிப்பாக சிங்கம், புலி போன்ற மாமிச பட்சினிகளின் பிறப்பு விகிதாச்சாரத்தைக் கட்டுப்படுத்த ஒற்றைத் தலைமைத்துவ குணத்தை (Oneness) இயற்கையே அவற்றுக்கு அளிக்கிறது. அதிகாரப் போட்டியை அவற்றுக்கிடையே பற்றவைத்து விடுகிறது. தனது செக்ஸ் உறவுக்கு இடையூறாக இருப்பதால் ஒரு ஆண் சிங்கம் தான் பெற்ற குட்டியையே கொன்றுவிடுகிறது. ஆனால் பெண் சிங்கமோ மிச்சம் மீதி இருக்கும் ஒரு (ஆண்) குட்டியை மட்டும் காப்பாற்றி தனது வாழிட எல்லைக்கு அப்பால் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகிறது. அந்த குட்டி ஆண் சிங்கம் மனதில் பழிவாங்கும் எண்ணத்தோடு வளர்ந்து அதற்காக காத்திருந்து ஒரு கட்டத்தில் தனது தந்தை சிங்கத்தையே தீர்த்துக்கட்டிவிடுகிறது. அதனால்தான் ஜோதிடத்தில் சிம்ம இராசியின் அதிபதியான சூரியனுக்கு சிங்கத்தை அடையாளமாக வைத்துள்ளனர். அதன் எண் ஒன்று ஆகும். 
-
ஒரு சிங்கக் கூட்டத்தில் உள்ள அத்துனை ஆண் சிங்கத்துக்குமே ஒற்றை அதிகார வெறி இரத்தத்தில் ஊறிப்போயுள்ளதால் அவைகள் தங்களுக்குள் சண்டையிட்டு மோதிக்கொண்டு முடிவில் இனமே கூட இல்லாமல் போய்விட வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு பெண் சிங்கத்துக்கு மட்டும்தான் அதிகார வெறியோடு சேர்த்து தனது இனத்தையும் தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால்தான் ஒரு ஆண்குட்டியை மட்டுமாவது மிக சாதுர்யமாக தந்தை சிங்கத்திடம் இருந்து காப்பாற்றி விடுகிறது. ஜோதிட விதிகளின் படி சிம்ம லக்னத்தில் பிறந்தவருக்கு சூரியன் உச்சமானால் அவரது தந்தையின் கதை இளம் வயதிலேயே முடிந்து விடுகிறது. மற்றும் மரபணுவில் சூரிய தோஷத்தோடு பிறக்கும் ஜாதகருக்கும் அவரது தந்தைக்கும் மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்கி விடுகிறது. நிற்க, சூரியனுடைய Oneness தத்துவப்படி இவ்வுலகை மறைமுகமாக ஆண்டுவரும் ஒரு கூட்டத்தார் தனது ஆளுமையின் அடையாளமாக ஆண்சிங்கத்தை வெளிக்காட்டிக்கொண்டாலும் அதிகார மையத்தில் ஒரு பெண் சிங்கத்தையே அமர்த்தி வைத்திருக்கிறார்கள். மணிரத்னம் டைரக்ட் செய்த தளபதி திரைப்படத்தில் ஓடையில் விடப்பட்ட தெப்பத்தில் மிதந்து சென்று வேறிடத்தில் வளரும் கதாநாயகன் தனது சகோதரனான கலெக்டருடன் ஒருகட்டத்தில் அதிகாரப் போட்டியில் ஈடுபடுவார். (சிட்டியை யார் அதிகாரம் செய்வது என்று) மேலும் ஒரு சகோதரன் விரும்பிய பெண்ணை மற்றொரு சகோதரன் கரம் பிடிப்பார். பாகுபலி திரைப்படத்திலும் இதே கதைதான். உலகம் முழுக்க இதே கதைக்கருவை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளிவந்திருக்க வாய்ப்புண்டு. 
-
காப்பாற்றப்படாத பெண் குட்டி சிங்கங்களின் கதி என்னவாகும் எனக்கேட்க வேண்டாம். அது உவ்வே சமாச்சாரம் என்பதால் பதிவிடவில்லை. சிங்கங்களுக்கிடையே உறவுமுறைகள் இல்லை. சிங்கத்தைப் போலவே புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடி உண்ணும் ஏனைய விலங்குகளின் வாழ்க்கை முறையும் ஏறக்குறைய இதேமாதிரிதான். ஆனால் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சிங்கத்திடம் இந்த ஒற்றைத் தத்துவ அதிகாரவெறி சற்று அதிகம். தனித்து வேட்டையாடும் குணம் புலியிடம் மட்டுமே உண்டு. அதனால்தான் அதற்கு “ஒண்டிப்புலி” என்று பெயர் வந்தது. அதற்காக ஒரு சிங்கம் புலியைவிட பலவீனமானது என எண்ணக்கூடாது. புலியிடம் காணப்படும் (பதுங்கிப்பாயும்) தந்திரம்மிக்க குணம் சிங்கத்திடம் இல்லை. எதுவாக இருந்தாலும் நேரடித்தாக்குதல்தான். பெரும்பாலும் ஆண் சிங்கங்கள் வேட்டையாடுவதில்லை. பெண் சிங்கங்கள் மட்டுமே கும்பலாகச் சென்று வேட்டையாடுகிறது. அந்த உணவை ஆண் சிங்கம் எடுத்துக்கொள்கிறது. அதற்காக ஆண்சிங்கத்தை சோம்பேறி என எடுத்துக்கொள்ளக் கூடாது. அது தனது அதிகாரத் திமிறால் அவ்வாறு நடந்து கொள்ளுகிறது. ஒரு ஆண்சிங்கம் தான் வேட்டையாடுவதற்காக தன்னுடைய ஆற்றலை செலவு செய்வதில்லை. அதிகாரத்தை அடைவதற்காக மட்டுமே தன்னுடைய பெரும்பான்மையான ஆற்றலை செலவு செய்கிறது. அதிகாரத்தை அடைந்தவுடன் அதை சுகமாக அனுபவிக்க எண்ணுகிறது. அதனால்தான் ஆண்சிங்கங்கள் வேட்டையாடுவதில்லை. (ஒர் அரசனின் குணமும் அதுதானே…?) 
-
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எந்த பாவத்தில் அமருகிறதோ அந்த பாவம் வேலை செய்வதில்லை மாறாக, அந்த பாவம் சம்மந்தப்பட்ட உறவுதான் நம்மை வேலை வாங்குகிறது. (எ.கா) ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கக் கூடிய 7-ம் இடத்தில் சூரியன் போய் தனித்து அமர்ந்துவிட்டால் திருமணத்திற்கு பின்னான வீட்டு வேலைகளை அந்த ஆண்தான் செய்ய வேண்டும். பெண் செய்யமாட்டாள். இதே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ல் சூரியன் தனித்து அமர்ந்துவிட்டால் கணவன் வேலை செய்ய மாட்டான். கட்டிலில் அவனுக்கு பதிலாக மனைவியே குதிரை ஓட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நிற்க, ஓர் ஆண் சிங்கம் அதிகாரத்தை அடைவதற்காக மட்டுமே தனது அளவற்ற பலத்தை வெளிக்காட்டுவதாக கூறியிருந்தேன். அங்ஙணம் ஓரு யானையை வீழ்த்த குறைந்தது 2 ஆண்புலிகள் இணைந்து செயலாற்ற வேண்டும். ஆனால் ஒரேயொரு ஆண் சிங்கம் தனித்து நின்று ஒரு யானையை வீழ்த்திவிடும். அது ஒரே தாவில் யானையின் முதுகின் மேல் ஏறி நின்று அதன் பின்னந்தலையில் உள்ள புடனியின் மீது ஒரு முன்னங்காலைத் தூக்கி ஓங்கி அடிக்கும். அதன் அளவு ஒன்றரை டன் அளவிற்கு இருக்கும். ஒரே அடியில் யானை இறந்துவிடும். இதனால்தான் ஜோதிட திருமணப் பொருத்தத்தில் யானையை அடையாளமாகக் கொண்ட நட்சத்திரத்தோடு சிங்கத்தை அடையாளமாகக் கொண்ட நட்சத்திரத்தை சேர்ப்பதில்லை. இதற்கு யோனிப் பொருத்தம் என்று பெயர்.
************************** 
தொடர்புக்கு
ஜோதிடர் நா.எழிலன்

எருக்கு – மருத்துவ பயன்கள்

எருக்கு பொதுவாக காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. எருக்கு இலை வாந்தி உண்டாக்குதல்; பித்தம் பெருக்குதல்; வீக்கம், கட்டிகளைக் கரைத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது.

எருக்கு பட்டை, பூ ஆகியவை கோழையகற்றும்; பசி உண்டாக்கும்; செரிப்பு உண்டாக்கும்; உடல் உரமாக்கும். எருக்கு பால் புண்களை ஏற்படுத்தும்.

எருக்கு நேராக வளரும் பாலுள்ள பெரிய புதர்ச்செடி. எருக்கின் இலைகள் அகன்று எதிர் எதிர் அடுக்கில் அமைந்ததுள்ளது. எருக்கு செடி முழுவதும் வெண்மையான மாவு படர்ந்தது போலக் காணப்படும்.

எருக்கு மலர்கள் பெரும்பாலும் கத்தரிப்பூ நிறமானவை. அரிதாக வெள்ளை நிறமான பூக்களுடன் காணப்படும். பச்சையான காய்களில் உள்ள விதைகள் மென்மையான வெள்ளைப் பஞ்சுடன் கூடியவை. இவை காற்றில் பறக்கக் கூடியவை.

எருக்கு இலை, பட்டை, வேர், பூ, பால் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை. வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் வளர்பவை. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே வளர்கின்றது.

வெள்ளெருக்கன் செடியின் வேரிலிருந்து விநாயகர் போன்ற சுவாமி விக்கிரகங்கள் செய்து வணங்குவார்கள். வெள்ளெருக்கன் வேர்க் கட்டை வீட்டில் இருந்தால் பூச்சிகள், விஷ வண்டுகள் வராது என்கிற நம்பிக்கை சார்ந்த நடைமுறையும் நமது மக்களிடையே உள்ளது.

பெரியவர்களுக்கான மருத்துவத்தில் மட்டுமே எருக்கு உள் மருந்தாக உபயோகிக்கப்படலாம்.

நன்றாக நெருப்பில் சுட்ட சூடான செங்கல் மீது எருக்கன் பழுப்பு இலைகள் மூன்றை வைத்து அதன் மீது பாதிக்கப்பட்ட குதிகாலை ஐந்து நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய குதிகால் வாதம் குணமாகும்.

எருக்கு பூ ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, கிராம்பு அரைப் பங்கு சேர்த்து அரைத்து, மிளகு அளவு உருண்டையாக்கி, காய வைத்து, தேனில் 2 உருண்டைகள் கரைத்து சாப்பிட இரைப்பு நோய் கட்டுப்படும்.

வெள்ளெருக்கன் பூக்களை சேகரித்து, காம்பு உள் நரம்புகள் ஆகியவற்றை நீக்கி, சிறிது மிளகு சேர்த்து அரைத்து மிளகு அளவு மாத்திரைகளாக செய்து கொள்ள வேண்டும். இந்த மாத்திரையில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று வேளைகள் தேனில் உரைத்து சாப்பிட மார்பில் கட்டிய கோழை வெளியாகும்.

எருக்கு இலையை வதக்கி இளஞ் சூட்டோடு வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து சீக்கிரமாக உடையும் அல்லது

நன்கு முதிர்ச்சியடைந்த எருக்கு செடியிலிருந்து பழுப்பான இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை அனலில் இட்டு வதக்கிச் சாறு பிழிந்து அத்துடன் சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் தேன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ள வேண்டும். இதனை வெளி உபயோகத்திற்கான பூசு மருந்தாக உபயோகிக்கலாம்.

உலர்த்தி பொடியாக்கிய எருக்கு இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் தடவ நாள் பட்ட புண்கள் குணமாகும்.

குளவி, தேனீ, தேள் கொட்டு விஷம் முறிய அவை கொட்டிய இடத்தில் எருக்கு பாலைத் தடவ விஷம் இறங்கும்.

பல் நோய்,பல் சொத்தை குணமாக எருக்கு பாலைத் தொட்டு பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் பூசலாம்.

3 துளி எருக்கு இலைச்சாறு, 10 துளி தேன் விட்டு உள்ளுக்குள் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

எருக்கின் வேர் சூரணத்தை ஆமணக்கு எண்ணெய் விட்டு தடவி வர குஷ்ட நோய் கட்டுப்படும்.

தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீகப் பாரம்பரியம்


































தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீகப் பாரம்பரியம்

தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீகப் பாரம்பரியம் 

தேவேந்திரகுல வேளாளர் சமூகம் மிக உயரிய பண்பாட்டிற்குச் சொந்தகார்கள். ஆம்.. கி.பி.1500-ம் ஆண்டுகளில் இச்சமூகம் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளும், பதிவுகளும் நம்மிடம் உள்ளன. அப்போது தேவேந்திரர் வம்சமாகிய மூவேந்திரர்களான  சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், தெலுங்கு வடுகநாயக்கர்களின் படையெடுப்பால் தங்கள் ஆட்சியையும், உடமைகளையும் பறிகொடுத்தனர். இதனால், அன்றைய ஆட்சியாளராகவும் நிலஉடமைகளராகவும் இருந்த தேவேந்திரர்கள் அனைத்தையும் இழந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, நிலஉரிமையாளராக இருந்தவர்கள் பண்ணை அடிமைகளாக ஆக்கப்பட்டனர். மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளர் சமூகமாக அழைக்கபட்டவர்கள், தங்கள் சமூகப்பெயரும், வாழ்வியல் அடையாளங்களும் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதை அப்போது, அவர்களால் உணர முடியவில்லை. இதற்கு பல குறிப்புகள் கண்டறியபட்டுள்ளனர். கி.பி.1528-யில்  எழுதப்பட்ட பழனி செப்பேடு மற்றும் 1938-யில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் சேவல் கொடியோன் கோயில் தண்ணீர் பந்தல் கட்டிடம் கட்ட 11-ஊர் முக்கியஸ்தர்கள் இணைந்து கையெழுத்திட்டனர். அதில் மூப்பர் என்ற பதிவும், தேவேந்திரகுல வேளாளர் சமூகம் என்றே குறிபிடப்பட்டுள்ளது, மேலும், சென்னை-பார்த்தசாரதி கோயிலின் குறும்பர் பற்றிய கல்வெட்டு, உக்கிரன் கோட்டையில் பாண்டியர்களின் கோட்டை மற்றும் அதன் கல்வெட்டுகள், உலகில் முதல் நாகரிகம் தோன்றிய ஆதி நித்தன் குடும்பன் (தேவேந்திரர்) வாழ்ந்த தூத்துகுடி-ஆதிச்சநல்லூர் கல்வெட்டு என பல கல்வெட்டுகளும் கண்டறியபட்டுள்ளன. மேலும் கி.பி.1881 திருச்செந்தூர் கோயில் அருகில் தேவேந்திரகளால் கட்டப்பட்ட 9-நாட்டார் (தேவேந்திரர்) மடங்கள், கோவை-அவினாசிலிங்கம், போரூர் கோயில்களில் தேவேந்திரர் மடங்கள், மதுரை திருபரங்குன்றம் தேவேந்திரர் மடங்கள், பழனி மாரியம்மன் கோயில் குளக்கரையில் கட்டப்பட்ட தேவேந்திரர் மடங்கள், மதுரை மீனாட்சியம்மனுக்கு தேவேந்திர மடத்திலிருந்து பச்சைப்பட்டு கொடுத்தல் என பல்வேறு மடங்களும் இன்றளவும் உள்ளன, ஆம்.. தேவேந்திரர்களே,  பாண்டியர்கள். தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்திரர் குடி, சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், இக்குலமே என பல மிகச்சிறந்த ஆதாரங்கள் உள்ளன. சங்கரன் கோயில் கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு, கேரளா சாதிப்படியலில் தேவேந்திரர்களே பாண்டியர்கள் எனப் பதிவு, நிலப்பகுதி பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளனர், 325 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இராஜபாளையம் வெண்குடை திருவிழா, மதுரை-திருபரங்குன்றம் பங்குனி மாத தேரோட்ட திருவிழா, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா, நாற்று நடவு திருவிழா மற்றும் கதிர் அறுப்பு திருவிழா, தூத்துகுடி-நவகைலாயம் என்ற சிவதலங்கள் வழிபாட்டுத் திருவிழா, தூத்துகுடி-கோவில்பட்டி சென்பகவள்ளியம்மன் மற்றும் பாண்டியராஜா தேரோட்ட திருவிழா, விளாத்திகுளம்-மீனாட்சி சுந்தரேசுவரர் தேவேந்திரர் தேரோட்டம் மற்றும் மண்டகபடி பெறுதல், விருதுநகர்-சாத்தூர்-இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா, மதுரை-கார்செரி காரின்நாயன்மார் மாசி மாத பூராடம் வழிபாட்டுத் திருவிழா, திண்டுகல்-பழனி கோயில் தைப்பூசத் திருவிழா, திண்டுகல்–பழைய வத்தலகுண்டு மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா, கரூர்-வாங்கலம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா, நாமக்கல்-சின்காலண்டபுரம் செல்லபாண்டியம்மன் கோயில் திருவிழா, சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா, இராமநாதபுரம்-அபிராமம் பொன் ஏர்ப்பூட்டும் இந்திர விழா, திருச்சி மற்றும் பெரம்பலூர் மாரியம்மன் கோயில் திருவிழா, திருவாரூர்-மாவூர்-திருநாட்டியத்தான்குடி சிவபெருமான் கோயில் திருவிழா, புதுகோட்டை-இலுப்பூர் நார்த்தாமலை மாரியம்மன் கோயில் திருவிழா மற்றும் மண்டகபடி பெறுதல், என இன்னும் பல விழாக்களும், மண்டகபடி பெறுதலும் வெவ்வேறு பரிமாணங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் படம்பிடித்து காட்டுகிறது. மேலும், சிவ மரப்பில் வந்தவர்கள் என்றும், சிவ வழிபாடு செய்பவர்கள் என்றும், சிவ மதம் சார்ந்தவர்கள் என்றும் உலகில் இவர்களுக்கு தனிப்பெரும் வரலாற்று பெருமைகளும் உண்டு. 63 நாயன்மார்களில் 18 பேர்களும், உலகபுகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை நிறுவிய மாமள்ளர் இராசராச சோழனும் தேவேந்திரர்களே. ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டியதும் தேவேந்திரர்களே என்பது தகவல் உரிமை சட்டம் மூலம் 
அறியப்பட்டது. மேலும், மதுரை மீனாட்சியம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் M வடிவிலான தாலியும் தஞ்சைப் பெருவுடையார் பெரிய நாயகி அம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் M வடிவிலான தாலியும் போன்று தேவேந்திரர் குல வேளாளர் பெண்கள் இன்றளவும் அணிகின்றனர் என்பது வெளிப்படை. பாண்டியர்கள் ஆண்ட பெரு நாட்டில் தேவேந்திரகுல உட்பிரிவான காலாடி கடற்கரை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கிரேக்கம், கொரியா, இந்தோனேசியா போன்ற இன்னும் பல்வேறு நாடுகள், நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பறைச்சாட்டுகிறன. இதை பற்றிய தொலைநோக்கு பார்வையில் ஓர் ஆய்வை தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும். 

இவ்வாறு தொன்மையான நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்ட இச்சமூகம் நாயக்கர்களின் ஒடுக்குமுறைக்கு  ஆளானது, வியப்பின் சரித்திர குறியீடு. 1935-யில் வெள்ளையர் ஆட்சியின் போது, ஒடுக்கப்பட்ட சமூகமும், தீண்டாமை சமூகமும் என தனித்தனியே பகுத்தறியாமல் இவ்விரண்டையும் இணைத்து பட்டியல் சாதி (Scheduled Caste) என உருவாக்கப்பட்டதே இச்சமூகத்தின் வரலாற்று பிழை. இந்த குறியீடுகளிருந்து விடுபட முடியாமல் ஒரு நீண்டகால போராட்ட களமாக மாற்றிவிட்டது. அதை போல, அரசியல் சுதந்திரம், அரசியல் சமூக பொருளாதாரச் சுதந்திரம் என இவ்விரண்டையும் தனித்தனியே பகுத்தறியாமல் தான், இந்நாடு சமநிலையின்றி பல ஏற்றத்தாழ்வுகளுடன் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். எனவே, இந்த சமூகச் சூழலில் இச்சமூகத்தின் பிரிவுகளான குடும்பர்(35), பன்னாடி(54), காலாடி(28), கடையர்(26), பள்ளர்(49), தேவேந்திரர் குலத்தார்(17) மற்றும் வாதிரியார்(72) என்ற ஏழு வகையான உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்கிற பொது பெயரில் அழைத்திட அரசானை பெறுவதில் முதன்மை நோக்கமாக கொண்டு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று முடிவு நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இது வெறும் கையெழுத்து மட்டும் அல்ல, நம் தலையெழுத்தை மாற்றியமைக்கவிருக்கும் தலையெழுத்து என்பதை நாம் உணரவேண்டும். எனவே, யார் பாராட்டினாலும், பாராட்ட விட்டாலும் கவலை வேண்டாம். ஏனெனில், கவலைக்கு நாம் இடம் கொடுத்தால் அது நம்மை கவலைக்கிடமாக்கிவிடும். எனவே, வெற்றியோ, தோல்வியோ எதுவரினும் நம் தொடர்ந்து கடமையாற்றுவோம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது, பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான். இது ஒரு குறுகிய மனபான்மை என்று யாராவது கருதினால், அதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், குடியிருக்கும் வீட்டை செப்பனிட எண்ணுவது குறுகிய மனபான்மையா இல்லை சுயநலமா! சிந்திப்பீர்!. இந்நாட்டின் சுயநலத்திற்காகவும் இச்சமூக நலனிற்காகவும், இம்முயற்சியை நாம் விதை போல விதைத்துக்கொண்டே இருப்போம். அது முளைத்தால் மரமாகட்டும் இல்லையென்றால் அது மண்ணிற்கு உரமாகட்டும் என்கிற வேளாணறிஞர் நம்மாழ்வரின் முன்னோக்கு பாதையில் நாம் தொடர்ந்து பயணிப்போம் பணியாற்றுவோம்.
நன்றி Ragupathi pandian அண்ணா

Saturday, 28 December 2019

இதுக்கு தான் உள்ளாட்சி பதவிக்கு அடிச்சிகுராங்களா? ஊழல் மெகா ஊழல்


Jenmam Nirainthathu (ஜென்மம் நிறைந்தது) with lyrics in Tamil


|தமிழன் குரல்| |தங்கராஜ்| |தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை |


இந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..?

இந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..? அப்படியென்றால் வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுததுக்கொண்டு சொல்லுங்க…
ஏன் தெரியுமா.? இதனைப் படியுங்கள்..!
==========================
மூக்குத்திப் பூ செடி” இந்த செடியை தெரியாதவர்கள் யாரும் கிராமங்களில் இருக்க முடியாது. இது எல்லா கிராமங்களிலும் இருக்கும் இதற்கு தாத்தப் பூ செடி, தலைப்வெட்டிப் பூ செடி, என பல பெயர்கள் உண்டு. அட அதுக்கென்னங்க நம்ம ஊரிலும் உண்டு என நீங்கள் சொன்னால் உங்கள் ஆயுள் காலம் அதிகம் என்பதாக பொருள்.
புண்களை ஆற்றக் கூடியதும், விஷத் தன்மையை முறிக்கவல்லதும், மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும், மூட்டு வலியை போக்கவல்லதும், சளி, இருமலுக்கு மருந்தாக அமைவதுமான கூத்தன் குதம்பை செடியை பற்றி நாம் இன்று பார்ப்போம்.
கூத்தன் குதம்பை செடியானது புதர்போல் சாலை ஓரங்களில் மண்டிக் கிடக்கும். இதற்கு மூக்குத்தி பூ என்ற பெயரும் உண்டு. வளைந்த மற்றும் கூரிய முட்களை இருக்கும் என்பதால், இந்த செடியை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். மஞ்சள், வெள்ளை, ஊதா நிறங்களில் பூக்கள் இருக்கும். காய்கள் மிளகை போன்று காணப்படும். காய்கள் விஷத்தன்மை உடையாதால் இதை சாப்பிடக் கூடாது.
அட ஆமாங்க இந்த குட்டிச் செடி ஏராளமான நோய்களை தீர்க்கக் கூடியது. இந்த இலைகளை எடுத்து நன்றாக கழுவி மிளகு ரசத்தில் போட்டு குடித்தால் சளி இருமல், தலை பாரம் , தலை வலி ஆகியவை குறைந்துவிடுமாம்.
எதேச்சையாக உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் நிற்காமல் சென்றால் அந்த இடத்தில் மூக்குத்திப் பூ இலை சாரை விட்டால் உடனடியாக இரத்தம் அதிகம் போவது நின்று விடும். முழங்கால் வலி, மூட்டு வலி போன்றவற்றிற்கு சிறிது நல்லெண்ணை விட்டு அதில் இலை பூ வேர் போன்றவற்றை போட்டு சிறிது வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் கட்டி விடுங்கள் வலி உடனடியாக தீர்ந்துவிடும்,
பெறிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.
இந்த அறிய வகை மூக்குத்தி பூ செடி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது. இதனுடைய பூ மூக்குத்தியை போன்று இருக்கும் சர்க்கரை நோயாளிகளின் புண்களை கூட இது எளிதாக குணப்படுத்தும் தன்மை கொண்டது.
அதே போல் தேமல் சொரி போன்றவற்றிக்கு இதன் இலைகளை கழுவி பின் இரண்டு கைகளாலும் கசக்கி சாற்றுடன் இலைகளை சொரி, தேமல் மீது தேய்க்க வேண்டும், அப்படி இரண்டு மூன்று நாட்கள் செய்யும் போதே தேமல் காணமல் போய்விடும்..
இத தகவல் பிடிச்சிருந்தால் செயார் பண்ணுங்க..!!

சிங்கம் மற்றும் புலி இவைகளை பற்றி சில இயல்பான விஷயங்கள்

(சிங்கம் மற்றும் புலி இவைகளை பற்றி சில இயல்பான விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.. )
காட்டின் இரண்டு பெரும் தலைகள்.. தேர்ந்த வேட்டைகாரர்கள்... கொடூர கொலையாளிகள் சிங்கம் மற்றும் புலி.
இவைகள் இரண்டிற்கும் இடையிலான சில சுவாரஷ்யமான ஒற்றுமை வேற்றுமை பற்றி பார்க்கலாம்.
முதலில் ஒரு சுவாரஷ்யமான கேள்வி சிங்கம் புலி இவை இரண்டுமே பெரும் கொலையாளிகள் சிறந்த வேட்டை விலங்குகள். ஒரு வேளை இவை இரண்டுமே மோதி கொண்டால் இவற்றில் எது வெற்றி பெறும் ?
இந்த கேள்விக்கு பதில் அந்த விலங்கின் வயது அனுபவம் உடல் ஆரோக்கியம் எல்லாம் சார்ந்த விஷயம் தான் என்றாலும் பொதுவாக இவை இரண்டும் மோதி கொள்வதாக வைத்து கொண்டால் இவற்றில் வெற்றி பெறுவது எதுவாக இருக்கும் தெரியுமா ?
உங்களில் பல பேர் சிங்கம் என்று நினைத்திருந்தால் மன்னிக்கவும் அது தவறான விடை .இவை இரண்டும் மோதிக் கொண்டால் அதில் வெற்றி பெறுவது பெரும்பாலும் புலியாக தான் இருக்கும். அதற்கான காரணத்தை பார்க்கும் முன் அதற்க்கான ஆதார சம்பவம் சிலதை பார்க்கலாம்.
இதற்க்கு பண்டைய காலத்தில் இருந்தே ஆதாரங்கள் இருக்கின்றன..பழைய ரோம் நகரத்து பேரரசர்கள் மக்கள் சூழ பெரும் விளையாட்டு மைதானங்களில் சிங்கம் மற்றும் புலிகளுக்கு இடையில் சண்டை வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். அதில் பெரும்பாலும் புலியே வெற்றி பெற்றிருக்கின்றன. அதிகம் பணம் புலியின் மேல் தான் கட்ட பட்டு இருக்கின்றன. அதை பல ஓவியங்களில் கூட அவர்கள் வரைந்து வைத்து இருக்கிறார்கள். புலி வெற்றி பெறுவதை போன்ற பல பழங்காலத்து பெயிண்டிங்குகள் இன்றும் அங்கே காணலாம்.
1800 களில் baroda gaekwad ஒருவர்.. (பரோடா பகுதியை ஆளும் மன்னர்களை குறிக்கும் சொல்.. ) புலி சிங்கம் சண்டை ஒன்றில் கலந்து கொண்டார். அந்த சண்டையை நடத்தியவர் தனது புலி தான் ஜெயிக்கும் என புலியின் மேல் 37000 ரூபாய் பெட் கட்டி இருந்தார் அதை எதிர்த்து மன்னர் பணம் கட்டினார். இறுதியில் சிங்கத்தை புலி அடித்து வீழ்த்தி மன்னருக்கு பெரும் தொகையை (அந்த காலத்தில் 37000 ரூபாய் ) நஷ்டத்தை உண்டு பண்ணியது.
2011 இல் துருக்கியில் உள்ள ankara எனும் zoo வில் ஒரு முறை ஒரு புலி ஓரு சிங்கதை கொன்றது. அதை பார்த்தவர்கள் அது அதனை ஒரே ஒரு அடியில் அடித்து கொன்றதாக சொன்னார்கள்.
மேலும் அங்கே இருந்த ஆய்வாளர்கள் சிலர் புலிகள் அடிக்கடி தங்கள் கூண்டை விட்டு சிங்கத்தின் கூண்டில் சென்று இறையை தேடுவதாகவும் அப்போது சிங்கதை அடித்து கொல்வதாகவும் தெரிவித்து இருந்தனர்.
ஒரு முறை கிர் காடுகளின் சிங்கத்தை புலிகள் அதிகம் வாழும் பகுதியான kuno paplur எனும் இடத்திற்கு மாற்றுவதாக ஒரு திட்டம் வைத்து இருந்தார்கள். ஆனால் அந்த திட்டம் கைவிட பட்டது.
"The University of Minessota’s Lion Research Center " அதற்க்கு சொன்ன காரணம் 'அங்கே காலம் காலமாக வாழ்ந்து வரும் "பழங்குடி "புலிகள் இந்த புதிதாக வந்து சேரும் சிங்கங்களை அடித்துக் கொன்று விடும் என்று தாங்கள் பயந்துதான்' என்றார்கள்.
புலிகள் சிங்கத்தை வெல்ல முடிவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அடிப்படையில் அவைகள் சிங்கங்களை விட பல விஷயத்தில் தலை சிறந்தவை.
சரி சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான சில நடுநிலைமையான ஒப்பீட்டை பார்க்கலாம்.
முதலில் ஒரு சிங்கதை விட ஒரு புலி அளவில் பெரியது.. அதிக எடை கொண்டது.
உலகத்தில் உள்ள சிங்கங்களில் அதிக ஆக்ரோஷமான வலிமையான சிங்கம் என்றால் அது ஆப்ரிக்க சிங்கம் தான்.
ஒரு ஆப்ரிக்க சிங்கத்தின் எடை சராசரியாக 250 கிலோ.
அதே போல உலக புலிகளில் அதிக வலிமை கொண்ட பெரிய புலி என்றால் அது சைபிரியன் புலிகள் தான். அதன் சராசரி எடை 360 கிலோ.
ஒரு சிங்கத்தின் பல் 3. 2 அங்குல நீளம் கொண்டது ஆனால் ஒரு புலியின் பல் 3.6 அங்குலம்.. முதல் 4 அங்குலம் வரை.
சிங்கத்தின் கூர் நகங்கள் 3 அங்குல நீளம் கொண்டது. ஆனால் புலியின் நகங்கள் 4 அங்குலம்.
அப்படியே அகலத்தை பார்த்தால் சிங்கத்துக்கு 5 அங்குல அகலம். புலிக்கு 6.5 அங்குலம் அகலம்.
கால்களால் அறைவதில் சிங்கதால் சண்டையின் போது ஒரு நேரத்தில் ஒரு காலால் மட்டும் தான் அடிக்க முடியும் ஆனால் புலிகள் சண்டையில் இரண்டு காலில் நின்று இரண்டு காலால் சில சமயம் 3 கால்களால் தாக்கும்.
உடல் நீளம் சிங்கம் கிட்ட தட்ட 8..9 அடி என்றால் புலி 9 ..10 அடி
நீந்தும் திறமையில் புலி கில்லாடி சிங்கம் சோம்பேறி.
அதிக வெய்யிலில் மற்றும் மிக குறைவான வெளிச்சத்தில் நல்ல பார்வை திறனில் கிட்ட தட்ட இரண்டுமே ஒரே மாதிரி திறமை கொண்டவை.
Athletic ..body.. மற்றும் flexibility யில் புலிகள் சிறப்பானவை.
வேகம் என்று வரும் போது ஆன் புலியை விட பெண் சிங்கம் வேகமானது ஆனால் அதை விட பெண் புலி வேகமானது.
கடிக்கும் போது கொடுக்கும் அழுத்தம் (biting force ) சிங்கம் 600 psi (pounds per inch ) புலி 1000 psi
(ஒரு தொடர்பில்லாத தகவல் இங்கே சொல்கிறேன் உப்பு நீர் முதலை 3700 psi அழுத்தத்தில் கடிக்க முடியும் )
அடுத்து இரண்டில் யார் அதிக புத்தி சாலி ?? சந்தேகம் இல்லாமல் புலி தான்.
அதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்றால்... Cranial Volume ஐ கொண்டு..
அதிக Cranial Volume என்றால் அதிக புத்திசாலித்தனம் என்று அர்த்தம்..
மேலும் செயல்திறன் சோதனையில் புலிகளின் புத்திசாலிதனம் தெரிகிறது.
கர்ஜனையில் பார்க்கும் போது நிச்சயம் சிங்கத்தை புலி மட்டும் அல்ல வேறு எந்த விலங்கும் அடித்து கொள்ள முடியாது. சிங்கத்தின் கர்ஜனை 8 லிருந்து 10 கிலோ மீட்டர் வரை கேட்கும் புலியின் கர்ஜனை 3 யிலிருந்து 5 கிலோ மீட்டர்.
இது தவிர முக்கியமான ஒரு சிறப்பான குணம் சிங்கத்திடம் உண்டு அது புலியிடம் இல்லை.
அது தான் கூட்டு முயற்சி . team work இல் சிங்கங்கள் கில்லாடிகள். அவைகள் இனைந்து வேட்டை ஆடுகின்றன். கடினமான வேட்டையில் மானசிக வியூகம் திட்டம் அமைத்து வேட்டை ஆடுகின்றன . பெண் சிங்கம் மற்றும் குட்டி சிங்கங்கள் கடினமான வேட்டையில் திணற நேர்ந்தால் அதை வளர்ந்த ஆன் சிங்கம் எதிர்கொண்டு முடித்து கொடுக்கின்றன.
ஒரு நன்கு வேட்டை பயிற்சி அடைந்த சிங்க கூட்டணியை எந்த விலங்குகளும் வீழ்த்துவது மிக அரிது.
சிங்கம் ஒரு சமூக விலங்கு. ஆனால் புலி எப்போதும் தனி ஒருவன். அவைகளுக்கு கூட்டு முயற்சி என்றால் என்ன என்றே தெரியாது. புலி தனித்து மட்டுமே வேட்டை ஆடுகின்றன்.
எனவே 'சிங்கம் சிங்கிலா தான் வரும்' என்ற சினிமா வசனத்தை விட நமது பேச்சு வழக்கில் உள்ள "ஒற்றை புலி, ஒண்டி புலி " போன்ற வாசகம் உண்மையானது.
சிங்கத்திடம் இருக்கும் இன்னோரு தனி தன்மை என்ன வென்றால் அவைகள் தங்கள் ராஜ்யங்களை ஆளும் குணம் கொண்டவை. தங்கள் எல்லையை பராமரிப்பது அதற்குள் யாரையும் அனுமதிக்காமல் போராடி காப்பது எல்லையை விரிவு செய்வது தங்கள் ராஜ்யத்திற்கு ஆபத்து என்றால் உயிரை கொடுத்து போராடுவது.. எதிரி பகுதியை ஆக்கிரமிக்க முயல்வது போன்ற குணாதிசயங்கள் மற்ற விலங்குகளிடமும் இருக்கிறது என்றாலும் சிங்கத்திடம் அது மிக அதிகம்.
எல்லாவற்றிற்கும் மேல் வேட்டை நுட்பத்தில் சண்டை நுட்பத்தில் சிங்கங்கள் கைதேர்ந்தவைகள். சமயத்துக்கு சூழ்நிலைக்கு ஏற்றார் போல புதிய நுட்பங்களை உண்டாக்க கூடியது.
கூட்டமாக உள்ள சிங்கத்திடம் புலி ஜெயிக்க முடியாது ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் புலியை சிங்கம் ஜெயிக்க முடியாது.
ஒரு அடிபட்ட புலியை விட ஆபத்தான விலங்கு வேறு எதுவும் இல்லை என்பார்கள். ஆம் அடி வாங்கி விட்டால் அவைகள் இன்னும் ஆபத்தானவை.
காட்டு விலங்குகள் என்றைக்குமே வியப்பானவை.. அதில் இவை இரண்டுமே மிக சுவாரஷ்யமான காட்டுத்தனமான முரட்டு படைப்புகள் தான்.
ஆனால் அதில் சிங்கம் தானே அரசன் என்கிறார்கள்.
ஆம்...சிங்கம் தான் காட்டின் அரசன். அவைகள் தான் காட்டை ஆளுகின்றன.
ஆனால்.....
அதற்கு காரணம் புலிக்கு ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லாமல் இருப்பது தான்.
(உலகை ஆள நினைப்பவர்கள் தங்கள் சின்னமாக சிங்கத்தை தேர்ந்தெடுத்ததும் ... அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடியவர்கள் தங்கள் சின்னமாக புலியை தேர்ந்தெடுத்ததும் தற்செயலானது தானா ??? )
பின் குறிப்பு : புலிகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பதாக ஆய்வு சொல்கிறது 🤣
பதிவு ஆருயிர் நண்பர் 
யு.ப டென்னிஸ் பட்டங்கட்டியார்🙏

Friday, 27 December 2019

ஊராட்சி மன்ற அதிகாரங்கள் | கிராமசபை கூட்டம் | powers of panchayati raj Gram Sabha meeting

ஊராட்சி மன்றத்தின் பணி
படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள்.
தெரு விளக்குகள் அமைத்தல்
சிறுபாலங்கள் கட்டுதல்
ஊர்ச்சாலைகள் அமைத்தல் ,சாலை பராமரிப்பு
குடிநீர்க் கிணறு தோண்டுதல்
கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்
சிறிய பாலங்கள் கட்டுதல்
வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்
கிராம நூலகங்களைப் பராமரித்தல்
தொகுப்பு வீடுகள் கட்டுதல்
இளைஞர்களுக்கான பொழுது போக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அந்நிதியிலிருந்து பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.

கிராம சபைக் கூட்டம்
ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும்  ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன. அந்நாட்கள்: 
1,ஜனவரி, 26 குடியரசு நாள்
2,மே, 1 தொழிலாளர் நாள்
3,ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை நாள், 
4,அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாள். 
முறை கூட்டப்படும் கிராம மக்களின் அவைக் கூட்டத்தில், கிராமங்களின் கல்வி, சமூக வளர்ச்சி, போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்த அறிக்கையையும் ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர் முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கிராமசபைக் கூட்டமே கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் ஆகும்.
கிராம ஊராட்சி
தமிழ்நாட்டில் 500 க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே:.
கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு கிராம ஊராட்யிலும் 7 உறுப்பினர்களுக்கு குறையாமல் 15 உறுப்பினர்களுக்கு மிகாமல் உள்ளனர். உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியாளர் செயல்படுகிறார்.

கிராம ஊராட்சியின் வருவாய்

வீட்டுவரி,
தொழில் வரி,
கடைகள் மீது விதிக்கப்படும் வரி 
அபாரதக் கட்டணங்கள் 
குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம் 
நிலவரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு 
சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு 
சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது. 
இவைகளால் வரும் வருவாய் மட்டுமே போதாது. எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும் ,மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன. மத்திய மாநில அரசுகள்வழங்கும் மானியங்கள் தான் முதன்மையானவருவாய் ஆகும்

 
பஞ்சாயத்து சட்டம் 
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 1950 ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்ப்ட்டது. இதன்படியே தற்போது இந்தியாவில் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் 1996 வரை மத்திய, மாநில ஆகிய இரு அரசுகள் மட்டுமே இருந்து வந்தன. அதன் பிறகு மூன்றாவதாக ஒரு அரசு உள்ளது அது தான் உள்ளாட்சி அரசு . 

1959 ல் பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது.இந்தசட்டத்தில் ஒரு ஊராட்சியில் யார் பஞ்சாயத்து தலைவராக இருக்க வேண்டும் என்பதை கூறவில்லை. அதனால் பணபலம் மற்றும் ஆள்பலம் உள்ள நபர்கள் தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளனர். மேலும் பெண்கள் பெருப்பாலும் அரசியலில் இல்லை. இதலாஇ பெண்களுக்கான இட உதுக்கீட்டை 33 சதவீததில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். கிராமம் தன்னிறைவு அடைந்தால் தான் நமது  வல்லரசாக முடியும் என்று காந்தி கூறினார். இதுவே காந்தியின் கனவாகும். உனவே நாம் காந்தியின் கனவை நனவாக்க வேண்டும் என்றால் பஞ்சாயத்து அளவில் நிறைய திட்டங்களை கொண்டு வர வேண்டும். 

மேலும் அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் செல்ல வேண்டும் அந்த மாதிரியான சிறப்பு திட்டங்களை ஆண்டிற்கு நான்கு முறை கட்டாயம் நடக்கும். கிராமசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் மேலும் கிராம சபை  கூட்டங்களை நடத்தலாம். கிராம சபை கூட்டத்திற்கு மக்களை வரவைக்க நோட்டிஸ் அடித்து பொது இடத்தில் ஒட்டலாம். மைக்செட் கட்டலாம் பெரிய அதிகாரிக்ளை வரவைக்கலாம். முக்கியமாக வனத்து , EB ஆகியோரை வரவைக்கலாம். கிராம சபை கூட்டம் திருவிழா மாதிரி நடத்த வேண்டும் தலைவராக இருப்பவர் கடைசியில் தீர்மானத்தை கூட்டத்தில் படித்து காட்ட வேண்டும். மேலும் ஊராட்சியில் இருக்கும் மக்கள் தொகையில் 10 சதவீத மக்களைல் கையெழுத்து இருக்க வேண்டும் என்பது விதி. 

கிராம சபை கூட்டம் நடத்தவில்லை என்றால் கலெக்டரிடம் உரிய காரணங்களை கூற வேண்டும். மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊராட்சி முறை உள்ளது. 50000 மக்களை உள்ளடக்கியது மாவட்ட ஊராட்சி ஆகும். 5000 மக்கள் தொகையை உள்ளடக்கியது ஊராட்சி ஒன்றியம் ஆகும். அடுத்தாக கிராம  ஊராட்சி  உள்ளது. இதில் ஏதாவது இடைத்தேர்தல் வந்தால் மாநில தேர்தல் ஆணையம் தலையிட்டு தேர்தலை நடத்தும் பொறுப்பு உள்ளது. நிதி வளத்தை பஞ்சாயது மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் பெருக்குவதற்கு வழிவகை உண்டு. மக்களால் புதியதாக  தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். தலைவர் என்பவர் மக்களால் நேரடியாக ஓட்டு போடு தேர்வு செய்யப்பட்டவராவார். அவருடைய பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். தலைவர் என்பவர் வார்டு உறுப்பினர்களை   ஒருங்கிணைத்து மாதந்தோறும் கூட்டம் போட வேண்டியது அவருடைய கடமை ஆகும். அந்த கூட்டங்களில் என்ன பேச வேண்டும் என்ன தீர்மானம் போட வேண்டும் என்பதை தலைவர் அவர்கள் வார்டு உறுப்பினர்களிடம்  7 நாடகளுக்கு முன்னரே நோட்டிஸ் கொடுத்து தெரிவிக்க வேண்டும். மேலும் தீர்மானங்களை தலைவரே எழுத வேண்டும். அதை இறுதியில் வார்டு உறுப்பினர்களின் முன்னிலையில் படித்து காட்ட வேண்டும். பஞ்சாயத்தில் நடக்கும் அனைத்து கூட்டங்களுக்கும் தலைவரே தலைமை  தாங்குவார். கூட்டத்தில் எடுக்க பட்ட தீர்மானங்களை நடைபுறைப் படுத்தும் அதிகாரம் இவரிடம் உள்ளது. மேலும் அவசர காலங்களில் நிதியை செலவு செய்யும் அதிகாரம் இவரிடம் உள்ளது. அதை சரியாக கணக்கு காட்ட வேண்டியது அவருடைய கடமையாகும். கட்டாய கடமையை தவிர தன் விருப்ப கடமையும் செய்ய கூடியவர். அவர் அரசு துறைகளுடனும் வங்கிகளுடனும்  தொடர்பு கொள்ள  வேண்டும் மேலும் பஞ்சாயத்து அளவில் நடைபெறும் வளர்ச்சி  திட்டங்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டியது இஅவருடைய பொறுப்பாகும். இவர் பஞ்சாயத்தில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்தலாம். மேலும் கிராமங்களை பசுமையாக்க மரங்களை  நடலாம். ஊராட்சியின் நிதிவளத்தை பெருக்க முயற்சி எடுக்க வேண்டும். இவர் நிர்வாக குளறுபடி செய்து கண்டுபிடிக்க  பட்டால் மட்டுமே மாவட்ட ஆட்சி தலைவர் தலையிட்டு இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். துணைத்தலைவராவார். இவர் தலைவருக்கு உதவியாக இருப்பார்.     அவருடைய பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவருக்கு சரியான அதிகாரம் சட்டத்தில் கொடுக்க படவில்லை என்றாலும் தலைவருக்கு நிகராக செக்கில் கையெழுத்து போடும்   அதிகாரம் பெற்றவர். இவர் கையெழுத்து போடவில்லை என்றால் அந்த ஊராட்சியில் எந்த  ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறாது. இவர் தலைவர் இல்லாத  நேரங்களில் ஊராட்சியில் நடக்கும் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார். இவர் தலைவருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றால் இவர் மீது கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்  நிறைவேற்றி அதை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஒப்புதல் பெற்று அவரை துணைத்தலைவர் பதவியில்  இருந்து நீக்கலாம்.
கவுன்சிலர் என்பவர் மக்களால் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்ய பட்டவராவர். அவருடைய பதவி காலம் 5 ஆண்டுகள்  ஆகும். மக்கள தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக இதுவரை மட்டுமே அணுகுவாஅர்கள். அதனால் இவர் தங்கள் பகுதியில் உள்ள தெவைகள மற்றும்  பிரச்சனைகள் குறித்து தலைவட்ரிம் கூறவேண்டும். அதை வாய் மூலம் தெரிவிக்க கூடாது.  எழுத்து மூலம் தான் தெரிவிக்க வேண்டும். தலைவர் அழைப்பு விடுக்கும் அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல்  கலந்து கொள்ள வேண்டும். இவருக்கு அதிகாரங்க்ள் சட்ட்டத்தில் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் முக்கியமாக பஞ்சாயத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து இருக்க வேண்டும்  தலைவர் தன்னுடைய பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை கூறியும் கேட்காமல் இருந்தால் அது பற்றி BDO, மற்றும் ADO  அவர்களிடம் கூறாமல் நேரடியாக  மாவட்ட ஆட்சியாளருக்கு இவர்களுடைய முகவரியில் மனு எழுத வேண்டும். அதை கலெக்டர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.  மேலும் நிர்வாக குளறுபடிகள் இருந்தால் தகவல் அறியும் உரிமை ச்ட்டத்த்ன் கீழ் அதை கேட்டு  தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் என்ன தொழில் வளம் உள்ளது என் கண்டறிந்து அதை பெருக்க வழிவகுக்கலாம். கூட்டத்திற்கு தலைவரோ அல்லது துணைத்தலைவரோ வரவில்லை என்றால் அந்த கூட்டத்தை  வார்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவருடைய தலைமையின் கீழ் கூட்டம் நடத்தலாம்.தலைவர் அவர்கள் ஊராட்சி அளவில் செய்யும் அனைத்து பணிகளுக்கும் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் தான் செய்ய முடியும். ஒரு ஊராட்சியில் கிராமசபை கூட்டங்களை தவிர சிறப்பு கூட்டம், அவச கூட்டம், கோரிக்கை கூட்டம் என் நடத்தலாம். சிறப்பு கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பான திட்டம் என்ன வந்திருக்கிறாதோ அதை மட்டுமே விவாதித்து பயனாளிகள தேர்வு செய்து தீர்மானம் பொட வேண்டும். அந்த கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு முன்னரே உறுப்பினர்களுக்கு தலைவர் தெரிவிக்க வேண்டும். அவச கூட்டத்தில் அவசர காலங்களில் பேரிடர்களான புயல், சுனாமி மற்றும் தீபிவத்து பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க கூட்டம் போடலாம். இதை 24 மணிநேரத்திற்குள் போட வேண்டும். அடுத்ததாக கோரிக்கை கூட்டம் இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கைகளை தலைவரிடம் தெரிவிக்க இக்கூட்டம். போடலாம். இக்கூட்டம் போடும் போது இது பற்றி 7 நாட்களுக்கு முன் தலைவருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.


 
ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 பணி குழுக்கள் இருக்கும் 
 1.      நியமனக் குழு
 2.      வளர்ச்சி திட்ட  குழு
 3.      வேளாண்மை குழு
 4.      கண்காணிப்பு குழு
 5.      சுகாதாரக் குழு
 6.      கல்விக் குழு

மேற்கண்ட இந்த 7 குழுக்கள் கண்டிப்பாக ஊராட்சியில் இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். இந்த 7 குழுக்களிலுமே குறைந்தது 2 முதல் 5 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த 7 குழுக்களின் உறுப்பினர்களை  தலைவர் அவர்கள் நியமிப்பார். நியமனக்குழு ஊராட்சி அளவில் நடைபெறும் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வது இதன் வேலையாகும். வளர்ச்சி திட்ட குழு என்பது ஊராட்சி அளவில் நடைபெறும் கட்டுமான பணி அனைத்துக்கும் திட்டமிடுவது இதன் வேலையாகும். வேளாண்மை குழு என்பது கிராம அளவில் விவசாயம் சார்ந்த பணிகளை  கொண்டு வர வேண்டியது இதன் வேலையாகும். நீர் மேலாண்மை குழு  என்பது ஊராட்சி அளவில் நீர் மேலாண்மையை கையாளுவது இதன் பணிகளாகும். கண்காணிப்பு குழு  என்பது ஊராட்சி அளவில் நடைபெறும் ரோடு மற்றும் கட்டுமன் பணி அனைத்தையும் கண்காணிப்பது இதன் வேலையாகும். சுகாதாரக்குழு என்பதுகிராமத்தை சுத்தம் செய்வது இதன் வேலையாகும்  கல்விக் குழு என்பது ஊராட்சியில் உள்ள பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை உயர்த்துவது இதன் பணி என்று தி: கரடி அவர்கள் பஞ்சாயத்தில் நடைமுறையில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் கூறினார்கள்



உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள் 

ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ போட்டியிடுவதற்கு கீழ்க்கண்ட  தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள  தகுதியின்மை எதனையும் பெற்றிருக்க கூடாது.

 தகுதி 
(அ) நீங்கள் எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட விரும்புகின்றீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, கிராம ஊராட்சி வார்டின் உறுப்பினர் பதவியிடத்திற்கு நீங்கள் போட்டியிட்டால், அந்த கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் அந்த மாவட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.  
(ஆ) வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று நீங்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 
(இ) ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர் பதவியிடத்திற்கோ நீங்கள் போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர் அல்லது பெண்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு இடம் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆதி திராவிடர் வகுப்பினரைச் சேர்ந்தவராகவும், பெண்ணாகவும் இருக்க வேண்டும். அதே போன்று பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவ்வகுப்பைச் சேர்ந்த பெண்கள்தான் போட்டியிட இயலும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பொது (பெண்கள்) என ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்கள் (அனைத்து வகுப்பைச் சார்ந்த பெண்களும்) மட்டுமே போட்டியிடலாம். 2.2. தகுதியின்மை தகுதியின்மை தகுதியின்மை கிராம நிர்வாக அலுவலராகவோ அல்லது கிராமப் பணியாளராகவோ மற்றும் எந்த ஒரு ஊரக அல்லது நகர்ப்புற அல்லது தொழில் நகரங்கள் அல்லது பாளையம் (கண்டோன்மென்ட்) ஆகிய உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது அரசு சார்புடைய நிறுவன பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநில அரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக்கூடாது. இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக பணியறவு (னுளைஅளைளயட) செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார். 
1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (ஞசடிவநஉவiடிn டிக ஊiஎடை சுiபாவள ஹஉவ, 1955) தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது. மேலும், வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர் 4 ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் – 2016 நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தண்டனை / தீர்ப்பு ஆனது – 
(அ) அபராதம் மட்டுமிருப்பின் - குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார். 
(ஆ) அத்தகைய தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார். மேற்படி சட்டப்பிரிவு 37 (1)-ன்படி தெரிவிக்கப்பட்ட குற்ற செயல்களை தவிர வேறு ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார். மேலும், பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பதவியிடங்களில் அவ்வகுப்பைச்சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி சட்டப்பிரிவு 38 (3) (ந)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார். மேலும், (அ) மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது. 
(ஆ) பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரிய நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது. 
(இ) நீங்கள் எந்த ஊராட்சி யில் உறுப்பினராக அல்லது தலைவராகப் போட்டியிட விரும்புகிறீர்களோ அந்த ஊராட்சியுடன் மற்றும் எந்த ஒரு ஊராட்சியுடனும் எந்த ஒரு வேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது. ஊராட்சி என¦பது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன¦றியம் மற¦றும் மாவட்ட ஊராட்சியினை குறிக்கும். வேட்பாளர் கையேடு 5 (ஈ) ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ அல்லது ஊராட்சிக்கு எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ பணியமர்த்தப்பட்டிருக்கக் கூடாது. (உ) முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய எந்த வகையான நிலுவையும் வைத்திருக்கக் கூடாது. (ஊ) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் எந்த ஒரு பிரிவின் கீழும் மற்றும் விதிகளின்படியும் தகுதி அற்றவராக நீங்கள் இருக்கக்கூடாது. (எ) தேர்தல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவினக் கணக்குகளை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அத்தகைய தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார். மேற்கண்ட இனங்களுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிப்பது பின்னர் அறியவரின், அவர் மீது 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 41-ன்கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Monday, 23 December 2019

11 - மாடுகளின் உடலுறவில் தலையிடா திருப்போம் | தினமும் ஒரு காணொளி


ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11

செய்யவே கூடாத பாவங்களைக்கூட, அன்றாட வேலையாகச் செய்வது இந்தக் காலத்து இயல்பாகிவிட்டது. உடலுக்கு சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) வேண்டும் என்பதற்காக மாடுகளின் வாழும் உரிமையையே ஒழித்துக்கட்டுவது, அத்தகைய பாவங்களில் ஒன்று. `பாலில் சுண்ணாம்புச்சத்து மிகுதியாக உள்ளது’ என்ற அறிவிப்பால், நாம் பெற்றவை சரிசெய்ய இயலாத நோய்கள்; இழந்தவையோ மீட்க இயலாத செல்வங்கள்.

கன்றுகளுக்கான பாலைச் சுரண்டாமல், மிகக் குறைவாக மட்டுமே பால் பீய்ச்சுவதுதான் நமது மரபு. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர், பால் அருந்தும் வழக்கம் மிகமிகக் குறைவாக இருந்தது. இப்போதுதான் லிட்டர்கணக்கில் பால் வாங்கும் பழக்கம் உள்ளது. அந்தக் காலத்தில், பாலை விலைக்கு விற்பதே பாவம் எனக் கருதினார்கள். நோயுற்றோருக்கு மருந்தாகவும், தவிர்க்க இயலாத சூழல்களில் தாய்ப்பாலுக்கான மாற்றாகவும் பால் பருகப்பட்டது.

தயிர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்கள் மட்டும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டன. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல், நமது மரபில் இருந்த அறக்கொள்கைகளை எல்லாம் வீழ்த்திவிட்டு, மாடுகளுக்கு எதிரான எல்லா பாவங்களையும் நியாயப்படுத்திவிட்டது.

`எல்லோருக்கும் பால் உணவு’ என்பது அந்தப் புரட்சியின் மந்திரம். அதை உச்சரித்த வித்தகர்கள், பல்வேறு ஆய்வறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டார்கள். `ஒட்டுமொத்த சமூகத்திலும் சத்துக் குறைபாடு உள்ளது. எல்லோரும் அதிக அளவில் பால் பருகினால்தான் அந்தக் குறை நீங்கும்' என்றும் அந்த அறிக்கைகள் முழங்கின. 

நமது சமூகத்தில் இருந்த பெரும்பாலான மாட்டு வகைகள், ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் அளவில்  மட்டும்  பால்  சுரக்கும்  தன்மைகொண்டவை. அந்தக் காலத்தில், மாடு வளர்ப்போர் அதிகமாக இருந்தனர்; பால் சுரப்பு அளவும் தேவைக்கு ஏற்ப இருந்தது. வெண்மைப் புரட்சியின் செயல் திட்டப்படி, ஒரு நாளைக்கு 20 லிட்டர் வரை சுரக்கும் மாட்டு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. 

அந்த மாடுகள் நம் ஊரில் உள்ள புற்களையும் புதர்களையும் மட்டும் மேய்ந்தால், நோயுற்றுச் செத்துவிழக்கூடியவை. ஆகவே, அவற்றுக்கான தீவன நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அந்தத் தீவனங்களுக்காக மக்காச்சோளம் போன்ற அயல்நாட்டுப் பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. காட்டில் கிடைக்கும் புற்களையும் வைக்கோலையும் மேய்ந்துவிட்டு, அற்புதமான உணவாகிய பாலைச் சுரந்துகொண்டிருந்த நமது பசுக்கள், முற்றிலும் ஒதுக்கித்தள்ளப்பட்டன. முழுக்க முழுக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே உண்டு வாழும் அயல் வகை மாடுகள் போற்றி வளர்க்கப்பட்டன.

ADVERTISEMENT

Learn More

`பால் சுரப்பு’ என்பது, இயற்கையாகச் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல். வெண்மைப் புரட்சி எனும் மாய நிகழ்வுக்குப் பிறகு, ‘பால் உற்பத்தி’ என்ற சொல் மிக நேர்த்தியாக நிலைநாட்டப்பட்டது. சீப்பு, உள்ளாடை, குப்பைக்கூடை போன்றவை உற்பத்தி செய்வதைப்போல பாலும் `உற்பத்தி’ செய்யப்பட்டது. எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைக்கப்படுகிறது. ஆனால், இவர்களோ பாலை `உற்பத்தி’ செய்கிறார்கள்.

இந்தச் சொல் மாற்றம் மிகக் கூர்மையானதுதான். ஏனெனில், இவர்கள் பசு எனும் உயிரினத்திடம் இருந்து பாலைப் பகிர்ந்துகொள்ளவில்லை; பசுவின் உடலில் இருந்து பாலைத் தயாரிக்கிறார்கள். 
இயற்கையாக பால் சுரப்பதற்கு, பசுவின் மடியைக் கன்று முட்டி மோதி ஊட்ட வேண்டும். பசுக்களைத் தடவிக்கொடுத்து, அவற்றோடு பேசிக்கொண்டே கன்றுகளை ஊட்டவைத்து, பால் சுரந்ததும் பீய்ச்சத் தொடங்குவது நம் மரபு. 

இப்போது பால் சுரப்பதற்குக் கன்றுகளே தேவை இல்லை; பசுக்களின் கழுத்தில் ஓர் ஊசியைக் குத்தினால் பால் சுரக்கிறது. பாலைக் கறப்பதற்கு மனிதர்கள் தேவை இல்லை; இயந்திரங்களே போதும். `பசுவின் கழுத்தில் ஊசி, மடியில் இயந்திரம்’ இந்தக் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள். குப்பைக்கூளங்களை உறிஞ்சி எடுக்கும் இயந்திரம்போல, ஓர் உயிரினத்தின் மடியில் இயந்திரம் பாலை உறிஞ்சுகிறது. இதுதான் ‘பால் உற்பத்தி’ எனும் நவீனத்தின், விபரீதச் சொல்லாடலின் உண்மை முகம். உங்கள் மனதுக்கு இது நியாயமாகத் தெரிகிறதா?

எந்தப் பசுவும் இப்போது உடலுறவுகொள்வது இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபட்டு உயிர்கள் பெருக வேண்டும் என்பது படைப்பு விதி! இரு உயிர்கள் இன்பமாக இருந்தால், அங்கே மேலும் பல உயிர்களை அனுப்பிவைப்பதுதான் படைப்பவரின் குணம். நவீன மேதைகளின் பேராசைச் செயல்களால், மாடுகளின் உடலுறவு கொள்ளும் உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. 

பசுக்களின் பிறப்புறுப்பில் விந்து ஊசிகளைச் செலுத்துவதுதான் வெண்மைப்புரட்சியின் புதிய தொழில்நுட்பம். வேதிப்பொருட்கள் அடங்கிய தீவனங்கள்தான் இப்போதைய மாடுகளின் உணவு. அவ்வப்போது செலுத்தப்படும் மருந்து ஊசிகள்தான் அவற்றின் உடல்நலப் பராமரிப்பு. காலையும் மாலையும் கழுத்தில் குத்தப்படும் ஊசிகள்தான் பால் சுரப்புக்கான தூண்டுதல். மடிக்காம்புகளை உறிஞ்சி எடுக்கும் இயந்திரங்கள்தான் இந்தக் காலத்துக் கன்றுக்குட்டிகள். பிறப்புறுப்பில் செலுத்தப்படும் விந்து ஊசிகள்தான் காளைகளின் ஆண்குறிகள்.

இவ்வளவுக்கும் பிறகு உற்பத்தி செய்யப்படும் பாலைத்தான் நீங்கள் பருகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு எல்லாம் உற்பத்திசெய்யப்பட்ட பால், பல நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டு, மேலும் பல வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு, பல்வேறு `கலப்புகளும் சுத்திகரிப்புகளும்’ செய்யப்பட்டுத்தான் உங்களை வந்தடைகின்றன என்பதையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். 

உங்கள் வீதியில் வாழ்ந்த பால்காரர் பாலில் நீர் கலந்தார் என்பதற்காகத்தான், பாக்கெட் பால் வகைகளைப் போற்றி வளர்த்தீர்கள். இப்போது பாலில் நீர் கலப்பது இல்லை; யூரியா உள்ளிட்ட வேதி நஞ்சுக்களைத்தான் கலக்கிறார்கள். 

இந்த இடத்தில் நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில், ‘சுண்ணாம்புச்சத்து நிறைந்த பால் உற்பத்தி பொங்கி வழியும் இந்த நாட்டில், ஏன் எலும்புச்சிதைவு மற்றும் பற்சிதைவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகுகிறது?’ 

ஒரே ஒரு தேநீர் வாங்கித் தருபவரைக்கூட நன்றியோடு பார்க்கும் கூலித் தொழிலாளர்கள்தான், மூட்டைகளைச் சுமக்கிறார்கள்; சாலைகளை வெட்டுகிறார்கள்; சாக்கடைகளை அள்ளுகிறார்கள். `சத்துக்களுக்காக’ பாலை உறிஞ்சி எடுக்கும் சமூகம் மூட்டுவலியுடனும் பல்வலியுடனும் நாட்களை நகர்த்திவருகிறது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11

‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது மூடநம்பிக்கை அல்ல... உண்மையான அறிவியல். மிகக் குறைவான அளவு பால் அருந்திய காலத்தில் வாழ்ந்த மக்கள், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் அளவுக்கு வலிமையுடன் இருந்தனர். விடிந்தது முதல் அடைவது வரை பால் பருகும் இந்தக் கால மனிதர்களோ, காலை மாலை நடப்பதைக்கூட பெரும் பயிற்சியாகச் செய்கின்றனர். காரணம், மிக எளிமையானதுதான்... வலுவான பசுக்கள் தரும் பால், வலுவான மனிதர்களை உருவாக்கும். எல்லா வகையிலும் துன்பத்தில் உழலும் பசுக்களின் பால், துன்பங்களைத்தான் தாங்கியிருக்கும். இதுதான் அறிவியல்; இதுதான் அறவியல். 

இந்த அறச் சிந்தனையை நிறுவனங்களால் ஒப்புக்கொள்ள இயலாது. ஏனெனில், பால் எனும் `பொருள்’ மீது பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி தொழில் செய்கின்றன அந்த நிறுவனங்கள். பால் இப்போது உணவு அல்ல, வணிகப்பண்டம். மண்புழுக்களையும் பிள்ளைப்பூச்சிகளையும் கொலை செய்துவிட்டு விவசாயம் செய்தால் உணவு நஞ்சாகும். கோழிகளைத் துன்புறுத்தினால் இறைச்சி நஞ்சாகும். பசுக்களையும் காளைகளையும் வதைசெய்து பால் கறந்தால் அந்தப் பாலும் நஞ்சே! 

மீண்டும் கூறுகிறேன்... இந்தப் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும்,  கூடிவாழப் படைக்கப்பட்டவை. சக உயிரினங்களை வாட்டிவதைத்து உற்பத்தி செய்யப்படும் ஒரே ஒரு பொருள்கூட, மனிதர்களுக்கு நன்மை தராது. மனித உடலில் மிகுதியான சுண்ணாம்புச்சத்து சேர்ந்தால், சிறுநீரகங்கள் சீரழியும் சூழல் உருவாகும். சில மணித்துளிகள் கண்களை மூடி சிந்தித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றி எவ்வளவு சிறுநீரக நோயாளிகள் இருக்கிறார்கள்! 

ஆண், பெண் ஆகிய இரு பாலினங்கள் புணர்ச்சியில் ஈடுபடுவதைக்கூட நவீன அறிவியல் தடுக்கும் என்றால், இதற்கான தண்டனையே கிடைக்காது என எல்லோரும் நம்புகிறீர்களா? வினைப் பலன் என்பது, கடவுளின் கணக்குப் புத்தகத்தில் எழுதப்படுவது அல்ல; நமக்கு நாமே எழுதிக்கொள்ளும் விதி. எந்தச் செயல் செய்தாலும் அதற்கான பலனை நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.

ஓர் உயிரினத்தின் உணவு உண்ணும் உரிமை, உடலுறவு உரிமை, தான் ஈன்ற கன்றுக்குப் பால் கொடுக்கும் உரிமையை எல்லாம் மறுப்பது தீவினைகள்தான். இவற்றுக்கான பலன்களையும் இந்தச் சமூகம் அனுபவித்துக்கொண்டுதான் வருகிறது என்பது என் கருத்து.

ஆயம் என்ற சொல்லுக்கு, ‘கூடி வாழும் இடம்’ எனப் பொருள். ஆயர் என்றால், ‘கூடி வாழ்வோர்’ எனப் பொருள். ஆடு, மாடுகளின் பட்டியும், அவற்றை மேய்க்கும் மனிதர்களின் குடில்களும் ஒரே வேலிக்குள்தான் இருக்கும். ஆக, ஆயம் என்பது ஆடு, மாடு, மனிதர் ஆகிய மூன்று உயிரினங்களையும் சேர்த்துக் குறிக்கும் சொல். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆயர்களாக வாழ்ந்துள்ளோம். மாடுகளையும் ஆடுகளையும் நமது குடும்ப உறுப்பினர்களாகத்தான் கருதி வாழ்ந்தோம்.

எருதுகள் பூட்டிய வண்டிகளை முல்லை நிலத்துப் பெண்கள் ஓட்டிச் சென்று, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களில் வெண்ணெய், தயிர் விற்றதாக சங்கப் பாடல்கள் குறிக்கின்றன. நமது ரத்தத்தில் பால் தொழில் ஊறியுள்ளது. ஆயிரக்கணக்கான மாடுகளை வளர்த்து, கன்றுகளுக்குக் கொடுத்து, நாமும் பால் பெற்று வாழ்ந்த காலம்தான் வரலாற்றில் நெடியது.

இப்போது நாமும் நன்றாக இல்லை; நம் கால்நடைகளும் நன்றாக வாழவில்லை. இந்த நிலையை மாற்ற இயலும். அயல்வகை மாடுகளின் பாலைப் பருகும் வழக்கத்தில் இருந்து விடுபடுங்கள். தரமான வெண்ணெய் விற்பனை செய்வோரைத் தேடிக் கண்டறியுங்கள். தனிப்பட்ட முறையில் பால் விற்பவர்களை ஆதரியுங்கள். அவர்கள் தரும் பால் தரம் இன்றி இருந்தால், அவர்களிடம் நேரடியாகப் பேசுங்கள்.

 

பால் கொள்முதலின் அளவைக் குறையுங்கள். வீட்டிலேயே தயிருக்கு உறை ஊற்றுங்கள். தனிப்பட்ட முறையில் வெண்ணெய் விற்பனை செய்வோரிடம், வெண்ணெய் வாங்கி வீட்டில் நெய் உருக்கிப் பயன்படுத்துங்கள். இந்த இரு வழக்கங்களையும் நீங்கள் கடைப்பிடித்தால், இந்தச் சூழலில் தலைகீழான மாற்றங்கள் உருவாகும். தேநீர் போன்ற பானங்களில் பால் சேர்த்துப் பருகுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். 

அடுத்ததாக, நாட்டுப் பசுக்களைப் போற்றிப் பாதுகாக்கத் தொடங்குங்கள். பசுக்களை மட்டும் அல்ல நாட்டுக் காளைகளையும் பாதுகாக்க முன்வாருங்கள். முருங்கைக்கீரையையும் காயையும் ரசமாக வைத்து அன்றாடம் பருகினால், கிடைக்கும் சத்துகளுக்கு அளவே இல்லை. 

நமது மரபில் எல்லா உணவுகளும் சத்துப் பெட்டகங்கள்தான். உணவுத் துறையில் உள்ள நவீனத் தொழில் நிறுவனங்களின் பிடியில் இருந்து நமது மரபு உணவுப் பழக்கங்களை மீட்டெடுத்தாலே, நிம்மதியான வாழ்க்கையை வாழ இயலும்!

இனிமேல் யாரும் மாட்டுப்பால் குடிக்கலாமா, குழந்தைக்கு பால் கொடுக்கலாமா என்று கேள்வி கேட்காதீர்கள் 🖕🖕🖕

இனிமேல் யாரும் மாட்டுப்பால் குடிக்கலாமா, குழந்தைக்கு பால் கொடுக்கலாமா என்று கேள்வி கேட்காதீர்கள்
🖕🖕🖕

உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் சீரகம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களும் அருமருந்தாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது. உடலில் நீர் சத்து குறைந்து போனால் உள்ளுறுப்புகள் பலவற்றையும் அது பாதிக்கிறது. எனவே நீரை பயன்படுத்தி மருத்துவ முறையை மேற்கொள்ளும் முறைகளை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இதற்காகத்தான் நெய்யை உருக்கு, மோரை பெருக்கு, நீரை சுருக்கு என்று சொல்வார்கள். இதன் பொருள் என்னவென்றால், நெய்யை நன்றாக உருக்கி பயன்படுத்த வேண்டும். மோரை நன்றாக நீர் மோராக மாற்றி நீர்க்கச் செய்து பருக வேண்டும்.

அதே போல் நீரை சுருக்கு என்றால், தண்ணீரை நன்றாக காய்ச்சி வடிகட்டித்தான் பருக வேண்டும் என்பதுதான் அதன் பொருள். நமக்கு அன்றாடம் கிடைக்கும் எந்த வகை தண்ணீராக இருந்தாலும் அது மிகவும் சுத்தமானதாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சுத்தமான குடிநீர் அவசியம் ஆகும். எனவே நாம் அன்றாடம் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே தண்ணீரை சுத்தமான, ஆரோக்கியமான குடிநீராக எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்.


 
சீரகம், சோம்பு , வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி நாம் அன்றாட குடிநீரையே மருத்துவ குடிநீராக மாற்றலாம். ஒரு டம்ளர் நீர் அளவுக்கு தயார் செய்வதற்கு, நாம் அரை ஸ்பூன் அளவுக்கு சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக காய்ச்சிய நீரில் இட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். இதை சீரக குடிநீர் என்றும், சீரக ஊறல் நீர் என்றும் சொல்வார்கள். சீரகம் நன்றாக ஊறிய பிறகு இதை மீண்டும் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை டம்ளர் அளவுக்கு எடுத்து அதை ஒரு டம்ளராக சுருக்கிக் கொள்ள வேண்டும்.

இது மிகுந்த மருத்துவ குணம் உடையதாகும். உள் உறுப்புகளை சீர் செய்வதாலேயே இதற்கு சீரகம் என்ற பெயர் வந்தது. சீரகத்தை எந்த வகையில் உள்ளுக்குள் எடுத்துக் கொண்டாலும் அது உள்ளுறுப்புகளை சீர் செய்யும் குணம் கொண்டதாக விளங்குகிறது. குறிப்பாக செரிமானத்தை தூண்டக் கூடியது. மலச்சிக்கலை போக்கக் கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கக் கூடியது. சீரகம் உடலுக்கு உஷ்ணத்தை தந்து வியர்வையை வெளியேற்றக் கூடியது. கல்லீரலை பலப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் பித்தத்தின் அளவை கட்டுப்படுத்தக் கூடியது.


 
அதே போல் சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தை பயன்படுத்தி மருத்துவ குடிநீர் தயார் செய்யலாம். தண்ணீரை நன்றாக காய்ச்சி எடுத்து அதில் 3 முதல் 4 மணி நேரம் வரை ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் சோம்பை சேர்த்து ஊற வைக்க வேண்டும். இதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க செய்ய வேண்டும். பின்னர் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.பெருஞ்சீரகம் பித்த சமனியாக செயல்படுகிறது. வயிற்று கோளாறுகளை சோம்பு போக்குகிறது. மிக சிறந்த மலமிளக்கியாக சோம்பு செயல்படுகிறது. ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது.

சர்க்கரை நோய்க்கு சோம்பு குடிநீர் மிகச் சிறந்த மருந்தாகிறது. சோம்பு வயிற்றில் ஏற்படும் புற்று நோய் கிருமிகளை முன் கூட்டியே வராமல் தடுக்கும் சக்தி உடையது. இதனால்தான் நமது கலாச்சாரத்தில் உணவுக்கு பிறகு சோம்பை வாயில் இட்டும் மெல்லும் பழக்கம் உள்ளது. இது போல் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களையும் கொண்டு மருத்துவ குடிநீரை தயார் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

வெந்தயம்* *வெந்த+அயம்*அயம் என்றால் இரும்பு

*வெந்தயம்*

 *வெந்த+அயம்*
அயம் என்றால் இரும்பு

ஆங்கிலேயர்கள் இரும்பை ஆங்கிலத்தில் Iron னு சொன்னது நம்ம தமிழ் வார்த்தையில் இருந்துதான்

உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது *வெந்தயம்*

சூடா *வெந்தய_டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?*

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். 

எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை.

அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். 

அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.

 *அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது.* 

சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.

 *அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப் பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உணவில் சேர்ப்பது என நீங்கள்  செய்திருப்பீர்கள்* 

 *வெந்தயத்_தேநீரை குடித்திருக்கிறீர்களா?* 

 *அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?* 

இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், 
அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.

 *வெந்தய தேநீர்* 
*தயாரிக்கும் முறை*

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, 

மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். 

பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, 

*தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்*

 *வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :

*குடலை_சுத்தமாக்க :
குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். 

குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.

 *ரத்தசோகை_போக்க*
இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். 

*மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள்.* 

அவர்களுக்கு இந்த வெந்தய_டீ அருமருந்தாகிறது.

 **மாதவிடாய் வலிக்கு :
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். 

அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். 

இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 *டீன் ஏஜ் பெண்கள் :
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. 

இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். 

பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

 *தாய்ப்பால் அதிகரிக்க :
 
*முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.* 

தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.

 *கொழுப்பு கரைய :
கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். 

இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். 

மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.

 
*மலச்சிக்கல் :
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.

நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், 

அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

 *உடல் எடைக்கு :
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. 

உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. 

அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.

 *இதய நோய்கள் :
தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். 

இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.

 *அசிடிட்டி :
அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. 

இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது.  *இதனால் அல்சர் போன்ற நோய்கள்* *தடுக்கப்படுகிறது.* 

 *சர்க்கரை வியாதி :
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம்.

அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. 

சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

 *கூந்தல் வளர்ச்சி :
இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. 

தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். 

முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.

 *பித்த நோய்கள் :
நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். 

இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

*– அனைவருக்கும் பகிருங்கள்*
 *ஆரோக்கியம் காத்து* *ஆனந்தமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்*

Saturday, 21 December 2019

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?

இதோ பட்டியல்

பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.
கலப்படமற்ற  பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.

சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள்  இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில்  மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

மிளகாய் தூளில் மரப்பொடி, செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள்.
நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml  acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.

காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.

நெய்யில் மசித்த உருளக்கிழங்கு,  வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்

பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்

பாலில்,நெய்யில்  மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும்.  பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில் இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதிசெய்யலாம்.  பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான  செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும்  கலப்பட பால்  எந்த அடையாளமும் ஏற்படுத்தாது  உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்

 சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக  ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.

குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.

ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.

தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்

"கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.

இலவங்கப்பட்டையுடன் (தால்சினி)  தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.

சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.

தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.
தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.

கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய்  கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ்  நிறமுண்டாகும்

ஐஸ் கிரீமில்  வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.

முட்டையில்  டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டையாக விற்கிறார்கள்.

விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.