கண்டம் விட்டுக் கண்டம் நோக்கிப் பறந்து செல்லும் பல பறவையினங்கள், ஆண்டுதோறும் தவறாமல் ஓரிடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னோர் இடத்துக்கு அச்சுப் பிசகாமல், கொஞ்சம் கூட வழி தவறாமல் வந்து சேரும். அதே போல் திரும்பவும் பழைய இடத்துக்கு வழிதவறாமல் திரும்பிச் செல்லும்.
இவ்வாறான ஜீவராசிகள் இவ்வளவு நுணுக்கமாக எப்படி வழிகளை அறிந்து கொள்கிறது என்பதை சென்ற நூற்றாண்டுகளில் ஆய்வு செய்த பல விஞ்ஞானிகள், இறுதியில் ஓரளவுக்கு உண்மையைக் கண்டுபிடித்தார்கள். அதாவது இந்தப் பூமியின் மின்காந்தப் புலனை (Electromagnetic field) அடிப்படையாகக் கொண்டு தான் இவ்வாறான ஜீவராசிகள் தமது பயணப் பாதைகளைத் துல்லியமாக வகுத்துக் கொள்கின்றன என்ற உண்மை தான் அது.
இருந்தாலும், இவ்வளவையும் கண்டறிந்த அன்றைய விஞ்ஞானத்தால், அது எப்படி? என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டறிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால், சமகாலத்தில் வாழக்கூடிய சில விஞ்ஞானிகள், குவாண்ட்டம் கோட்பாடுகளின் அடிப்படையில் சில பறவையினங்களை ஆய்வு செய்த போது தான் உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து வியந்து போனார்கள். இவ்வாறான ஜீவராசிகளின் புலன்கள் இயங்குவது “சக்திச்சொட்டுப் பின்னல்” எனும் ஜோடிக் கட்டமைப்புத் தத்துவத்தின் அடிப்படையில் தான் என்ற உண்மை தான் அது.
அதாவது, பறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அவற்றின் பார்வைப் புலனுக்கும் பூமியின் மின்காந்தப் புலத்துக்கும் இடையில் தொடர்ச்சியான சக்திச்சொட்டுப் பின்னல் தொடர்பு நிலவிக் கொண்டேயிருக்கின்றது. இந்தச் சக்திச்சொட்டுப் பின்னல் உறவு மூலமே ஒவ்வொரு கணப் பொழுதிலும் தான் பயணிக்கும் பாதை சரியானதா? தவறானதா என்பதை அவற்றால் துல்லியமாகக் கண்டறிந்து கொள்ள முடிகிறது.
இதன் விளைவாக எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கூட்டை விட்டுச் சென்றாலும், சரியான பயணப் பாதையைத் துல்லியமாகக் கண்டறிந்து, வழி தவறாமல் இவ்வாறான பறவைகள் வீடு வந்து சேர்கின்றன என்பது தான் இதுவரை மனிதன் புரிந்து கொள்ளத் தவறிய உண்மை
(நான் ஒரு கட்டுரையில் இதை படித்தேன்)
No comments:
Post a Comment