Friday, 29 September 2017

சரஸ்வதி யாரு? கல்வி கடவுளாம்.

சரஸ்வதி யாரு?
கல்வி கடவுளாம்.
அடேய் இந்த கல்வி கருமத்த எப்ப இருந்துடா படிக்கிங்க? அதிகபட்சம் 100 வருசம் இருக்குமா? கடவுள்னா எதோ உலகம் தோன்றதுல இருந்து இருக்குனு சொல்விங்க? அப்போ 100 வருசம் முன்னாடி உங்க சரஸ்வதி எங்க இருந்துச்சுனு யோசிக்கவே மாட்டிங்களாடா?
கல்வின்றத உருவாக்கி உங்க மூளைல தேவையில்லாதத விதைக்குறதும் நாங்க தான். அதுக்கு ஒரு சாமிய உருவாக்குனதும் நாங்க தான்.
அதுக்கு ஒரு அரசு விடுமுறைய விட்டா தான் கல்வி முக்கியமானதுனு நம்புவானுங்க.
அந்த கல்வில அப்படி என்னடா கத்துகிட்டங்க மொத்த இளமை காலத்தையும் லட்சகனக்கான பணத்தையும் செலவு பன்னி?
அடிமைகளே ஒழுங்க அந்த கருமத்த மூளைல பதிவு பன்னி தேர்வுனு வைக்குறதுல வாந்தி எடுங்க. மதிப்பெண் தருவோம் சிறந்த அடிமைக்கு. பெருமையாவது பட்டுக்கோங்க அத வச்சு.
புத்தகத்த வச்சு பொறியும் பொங்கலும் படைச்சு இல்லாத தெய்வத்துகிட்ட வேண்டுனா சிறந்த அடிமையாக மதிப்பென் எடுக்க முடியாது. மதிப்பெண் குறைஞ்சா நாங்க உருவாக்குன சமூகம் மக்கு அறிவில்லாதவன்னு உங்கள தற்கொலைக்கு தூண்டும்.
படிக்காமலும் இருக்க விடமாட்டோம். நாங்க கட்டமைச்ச சமூகம் அப்படி. முடிஞ்சா அடிமை கட்டமைப்ப உடைச்சு பாரு.
நன்றி:
நர்சரி தொடக்க ஆரம்ப உயர் மேல்நிலை மத்திய பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள்
ஒடியாடி விளையாடும் நேரத்தை குறைத்த மாலை நேர டியூசன் சென்டர்கள்.
#சரசுதினவாழ்த்து
தொடரும்...
#அரசகுடும்ப_ஏஜென்ட்

No comments:

Post a Comment