Friday, 8 January 2016

மூளையில் இவ்வளவு பதிவு செய்யலாம்

மூளையில் இவ்வளவு பதிவு செய்யலாம்உங்களது கணினியில் இருக்கும் வன்தட்டு நிலை நினைவகத்தில் (Hard Disc) எத்தனை TeraByte பதிவு செய்ய முடியும் என்பது தெரியுமா? 0.5 TB? 1 TB? 2 TB? 4 TB? தற்போது தனிப்பட்ட அமைக்கப்பட்ட(உலகின் அதிவேக ) கணினிகளில் அதிகபட்சம் 4 TB தான் இருக்கும். சரி, இப்படி நன்றாக உங்கள் கணினி பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே, ஆனால் உண்மை சொல்லப் போனால் உங்கள் மூளையும் ஒரு விதமான Hard Disc தானே? அதில் எவ்வளவு பதிவு செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனித மூளை சுமார் 100 பில்லியன் நியூரான்கள் கொண்டிருக்கிறது. இந்த நியூரான்கள் ஒவ்வொன்றும் சுமார் 1,000 நரம்பிணைப்புகளுடன் (Synapse) இணையமுடியும் என்றும், 1 நரம்பிணைப்பில் 1 Bit பதிவு செய்ய முடியும் என்று எண்ணினால் எமது மூளையில் 100,000,000,000 x 1000 = 100,000,000,000,000 = 100 TeraByte பதிவு பண்ண முடியும். ஆனால், இது குறைந்தபட்சம் தான்! சில அறிவியலாளர் 2.5 PetaByte = 2500 TeraByte பதிவு செய்ய முடியும் என்று கூட சொல்கிறார்கள்!

பிறப்பில் இருந்து பார்த்தது கேட்டது எல்லாமே நம் மூளைக்குள்ளே இன்னும் பதிந்து இருக்கிறது. ஆனால், மூளையில் எந்த இடத்தில் பதிவு செய்து இருக்கிறது என்பது தான் தெரிவதில்லை. இப்படித் தெரியாமல் போவதைத் தான் நாம் மறதி என்று அழைக்கின்றோம்.

சரி, 2500 TB என்றால் எவ்வளவு தெரியுமா? 2500 TBஇல் 3,000,000 மணி நேரம் (342 வருடங்கள்) தொடர்ந்து பார்க்கக்கூடியதாக TV Serials பதிவு செய்ய முடியும். அல்லது இதே 2500 TBஇல் 41,666,666 வருடங்கள் தொடர்ந்து கேட்கக்கூடியதாகப் பாடல்கள் பதிவு செய்ய முடியும்.

No comments:

Post a Comment