உங்க கையெழுத்தில் உங்க தலையெழுத்து...
நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்களை பற்றி கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?
1) கையெழுத்துப் போட்டுவிட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...தைரிய பார்ட்டிகள். நல்லவர்தான் ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் விவேகானந்தர், சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி.
உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள். அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
3) கையெழுத்துக்கு கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .
பிடிக்காதவர்களை த் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. டாக்டர் விக்ரம் சாராபாய்.
4) உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ, கோடோ கிடையாதா ?உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால்
கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக் ஒபாமா இருப்பார் .
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்... கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம் சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ, கபில்தேவ்.
6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால், யோசிக்காமல் முடிவெடுப்பீர்க ள்.ஒரு வரி பாராட்டுதலுக்கே
மயங்கி விடுவீர்கள். இதில்இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் .
7) முழுப் பெயரையும் பொறுமையாகக்கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள். பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் .
8.) வெறுமனே பெயரை எழுதிவைத்தால்.. அம்மாஞ்சி. பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள்.இந்த வகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.
சுப்புலட்சுமி, மதர் தெரஸா .
9) கையெழுத்துக்கு கீழே தேதி, வருடம் போடுவீர்களா ? ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும். முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி. சர்.சி.வி.ராமன்.
இதுல உங்க கையெழுத்து எதுலஇருக்கு..?
Tuesday, 26 January 2016
உங்க கையெழுத்தில் உங்க தலையெழுத்து...
Labels:
பொது அரிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment