மஞ்சு விரட்டு ஒரு பார்வை:-
எங்கள் பகுதியில் மஞ்சு விரட்டு என்ற பெயரே பிரசித்தம்,,
தை ஒன்று அன்று பொங்கல் திருநாள் உழவுக்கு உதவிய மாடுகளுக்கும், வேளாண்மைக்கு ஒத்துழைத்த சூரியனுக்கும் நன்றி சொல்லும், பண்டிகை,
பொங்கல் தினத்தில் காலை வேளையில் வீட்டில் உள்ள காளை மற்றும் காலங்கன்றுகளை குளிப்பாட்டி வண்ணங்கள் பூசி ஊருக்கு பொதுவில் உள்ள தொழுவில் மாடுகளை அடைத்து விரட்டி விட்டு ஒத்திகை பார்ப்பார்கள்,, பொங்கல் அன்று பொங்கல் முடிந்து, மறுநாள் மாட்டு பொங்கள், பல ஊர்களில் கட்டு தறியில் பொங்கல் வைப்பார்கள், ஆனால் மிக அதிகமான ஊர்களில் குறிப்பாக புதுக்கோட்டை மேற்க்கு பக்கம் உள்ள 200 ஊர்களிலும் மாட்டு பொங்கல் அன்று சாதி சாதியாக தெருக்கல் பிரிந்து இருக்கும் ஒவ்வொரு சாதிக்கும் தனி கோவில் இருக்கும், அங்கு அந்த ஒட்டு மொத்த சாதி காரவர்கள் அனைவரும் பெருங்கூடையில் பானை பச்சரிசி வெள்ளம் ஒரு கரும்பு உழவுக்கு உதவிய நகத்தடி,மாட்டு தும்பு, எல்லாத்தையும் பெண்கள் எடுத்து வருவார்கள், ஆண்கள் பசு காளை கன்று எருது என்று எல்லா மாட்டை பிடித்து சாதி பொதுப்பட்டியில் அடைப்பார்கள்,, பொங்கல் அனைவரும் வைத்து இறக்கியவுடன்,மேல தாளத்துடன் மாடுகளை அழைத்து ஊரணியில் குளிப்பாட்டி பொட்டு வைத்து மாலை அணிவித்து மறுபடியும், சாதி பொதுப்பட்டயில் அடைத்து கோவிலில் பூசை முடித்தவுடன் மாடுகளுக்கு பொங்ச்சோறை ஊட்டி மகிழ்வார்கள், அடுத்து காற்று கற்றாளையில் மஞ்சி செய்து வர்ணம் பூசி காய வைத்து இருப்பார்கள் அதை அழகுக்கு கட்டி எல்லா மாட்டையும் விரட்டி விடுவார்கள், எல்லா மாடு சுதந்திர மாக ஓடி அவர் அவர் பட்டிக்கு சென்று விடும்,
இது இவ்வளவுதான் இதற்க்கு பின் தை மூன்றிலிருந்து ஒவ்வொரு ஊர் மஞ்சு விரட்டு நடக்கும், இதில் காளைகள் மட்டுமே பங்கு பெரும், சுத்துப்பட்டியில் 200 ஊர்களில் மஞ்சுவிரட்டானது நடக்கும், தை மாசி பங்குனி சித்திரை வரை, மஞ்சு விரட்டு நடக்கும் எப்படி தெரியுமா? எந்த ஊரில் மஞ்சுவிரட்டானாலும் மற்ற ஊர்களில் காளைகள் வைத்திருப்பவர்களிடம் பாக்கு வைப்பார்கள், இன்ன தேதியில் மஞ்சுவிரட்டு இந்த தேதியில் மாடு எங்க வீட்டுலே கட்டி கெடக்கனும்னு பாக்கு வைப்பாங்க, எல்லா சாதி கார ஆட்களும் தங்கள் ஊரில் மஞ்சு விரட்டு என்றால் வேறு ஊரில் யார் மாடு வைத்திருந்தாலும் பாக்கு வைப்பார்கள், மாடுகள் பாக்கு வைத்தவர்கள் வீட்டில் வந்து கட்டிபோடுவார்கள், ஊரே கறி வாசம் மீன் வாசமடிக்கும், கறியும் சோறும் காய்கறிகளும் ஆக்கி தங்கள் வீட்டுக்கு மாடி ஓட்டி வந்த ஆட்களுக்கு சாப்பாடு போடுவார்கள், ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிற்க்கு மாடு ஓட்டி வந்த உயர்ந்த சாதி ஆட்கள் சாப்பிட மாட்டார்கள் அனைத்திற்க்கும் காசு கொடுத்து விடுவார்கள், கிருஷ்தவர்களும் இசுலாமியர்கள் பொது பாக்கு வைத்து விடுவார்கள்.அடுத்து பதினொரு மணி அளவில் மாட்டுக்காக வாங்கி வைத்த வேட்டிகளை மாட்டு காரர்களிடம் கொடுப்பார்கள் மாட்டு காரர்கள் மாட்டுக்கு அழகு சோடித்து வீட்டு காரவர்கள் எடுத்து கொடுத்த வேட்டியை மாட்டிற்க்கு கட்டி வீட்டின் முன் வந்து நிறுத்துவார்கள், வீட்டு கார ஆணும் பெண்ணும் மாட்டிற்க்கு பச்சரிசி வைப்பார்கள் இன்னும் சில காய்கறிகளை நறுக்கி மாட்டிற்க்கு ஊட்டுவார்கள், ஊட்டிய பின் வீட்டு சார்பில் விபுதியும் பணமும் கொடுத்து மாட்டிற்க்கும் எதுவும் ஆக கூடாது, மக்களுக்கும் எதுவும் ஆக கூடாது எங்க வீட்டுக்கு வந்த மாடி எந்த கெட்ட பேரும் எடுக்காமே நல்ல பேரு எடுத்து குடுக்கனும்னு சொல்லி வேண்டி வபுதி குடுத்து, அடுத்த வருசமும் நம்ம வீட்டுக்கே மாடு வரனும்னு வழியனுப்பி வைப்பாங்க, மாட்டு காரவங்க மாட்டே புடுச்சுகிட்டு தொழுவுக்கு போவாங்க, அதுக்குள்ளே ஊரு மக்கள் எல்லாறும் தொழுவுலே படையெடுத்து வேடிக்கை பாக்க கட்டுன மதிலுலே ஏறி வேடிக்கை பாப்பாங்க, ஒரு ஊருக்குன்னு ஒட்டு மொத்த ஊருக்கும் பொது கோவில் இருக்கும் பொது சாமி இருக்கும் அந்த கோவில் காளையே தொறப்பாங்க தொறக்கும்போது சொல்லிருவாங்க முதன்முதலில் கோவில் காளை வருகிறது யாரும் கட்ட கூடாது தொடக்கூடாது என்று, சுத்துப்பட்டி ஊரே ஒரு நிமிசம் புள்ளரிச்சு போகும் கோவில் காளை சீரி வரும்போது, அதுக்கு அப்புரம் ஒவ்வொரு காளையா தொறந்து விடுவாங்க, இது எப்படி என்றால் இந்த 200 ஊர்களிலும் அம்மன் கோவில்கள் இருக்கும், திருவிழா 15 நாட்களுக்கு முன் பூச்சொறிதல் நிழகழச்சியன்று,மஞ்சு விரட்டு வைத்து திருவிழா தொடங்கும் இல்லை திருவிழாவிற்க்கு எட்டு நாள் முன்பு காப்பு கட்டுதல் அன்று மஞ்சுவிரட்டு வச்சு திருவிழா தொடங்கும்,
திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவில் மஞ்சுவிட்டு,
நார்த்தா மலை முத்துமாரியம்மன் கோவில் மஞ்சு விரட்டு,
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் மஞ்சுவிரட்டு,
எழஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோவில் மஞ்சு விரட்டு,
அன்னவாசல் மஞ்சுவிரட்டு, கூத்தினிப்பட்டி மஞ்சு விரட்டு,இலுப்பூர் மஞ்சு விரட்டு வயலோகம் மஞ்சு விரட்டு,புல் வயல் பதினெட்டு பட்டி மஞ்சு விரட்டு, வெள்ளஞ்சார் மஞ்சு விரட்டு, தாண்டீசுவரம் மஞ்சுவிரட்டு, மாங்கடி நான்கு ஊர் மஞ்சுவிரட்டு,கீரனூர் மஞ்சுவிரட்டு,
இதில் எங்க ஊர் மாங்குடி நான்கு ஊர் மஞ்சு விரட்டு பங்குனி ஒன்று அன்று தொன்று தொட்டு நடக்கும், இதில் நார்த்தா மலை முத்துமாரியம்மன் கோவில் மஞ்சுவிரட்டுதான் பெரிய மஞ்சு விரட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய திருவிழாவும் நார்த்தா மலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாதான் பெரிய திருவிழா, திருச்சி, தஞ்சை,திண்டுக்கல்,புதுக்கோட்டையில் கும்பகோனம் மகாமகம் திருவிழாதான் பெரியது அது பன்னிரண்டு வருடத்திற்க்கு ஒரு முறை நடக்கும் அதற்க்கு அடுத்த படியாக திருச்சி சமய புர மாரியம்மன் கோவில் திருவிழாதான் வருடம் வருடம் நடக்கும் மிக பெரிய திரூவிழா, பூச்சொரிதலே மிக பெரிய திருவிழாவாக நடக்கும், சமய புர மாரியம்மன் கோவிலுக்கு அடுத்த படியாக நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, இரவும் பகலும் சரி சமமான கூட்டத்தை கொண்ட ஒரே தேர் திருவிழா, புதுக்கோட்டை திண்டுக்கல் திருச்சி பகுதியில் 300 கிராமங்கள் சிற்றூர்கள் இணைந்து நடத்தும் திருவிழா, வைகாசி 15 ம் தேதியுடன் அனைத்து மஞ்சு விரட்டுகளும் அம்மன் கோவில் திருவிழாக்கலும் முடிந்து மஞ்சுவிரட்டு இனிதே நிறைவுரும்,,
இவ்வாறு மஞ்சு விரட்டு என்னும் ஜல்லி கட்டு எந்த சாதிக்கும் சொந்த மில்லை,
No comments:
Post a Comment