Friday, 1 January 2016

இடுப்பில் மடிப்பா – உஷார்

இடுப்பில் மடிப்பா – உஷார்

பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் மடிப்பு மடிப்பாகத் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுதான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப்போகிறது. தொப்பை போடப்போகிறது. இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப்போய் வரவழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி.

இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் “சப்ஜடேனியஸ்’ என்னும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கிவிடும். இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப்போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம்.

இதற்கான தீர்வு ஒன்று இருக்கவே செய்கிறது அது எங்கள் GM Diet குழுவில் இடம்பெற்றுருப்பவர்களுக்கு நாங்கள் அடிக்கடி கூறும் அறிவுரை இதுதான்

இதில் முக்கியமாக அவதிப்படுவோர் கர்ப்பம் தரித்த பெண்கள் அல்லது ஒரே இடத்தில் உட்க்கார்ந்து வேலை செய்யும் ஆண்கள் / பெண்கள் அல்லது அதிக அளவு நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொள்ளுபவர்களுக்கே இத்தகைய பிரச்சனைகள் தோன்றும்

தீர்வு

காலையில் எழுந்தவுடன் காபி டி பால் பருகுவதை நிறுத்தல் வேண்டும் அதாவது ஒரு மண்டலத்திற்கு (ஒரு மண்டலம் என்பது 45 நாட்கள் )

வெண்பூசணி கடையில் கிடைக்கும் அதை தினம் ஒரு பத்தை (ஸ்லைஸ்) வாங்கி வைத்துகொள்ளவும்

வாங்கியை பத்தியை இரண்டாக நறுக்கி கொள்ளவும் (ஒரு பத்தை வாங்கினால் இரண்டு நாட்கள் உபயோக படுத்திக்கொள்ளலாம்)

தோலை சீவி குப்பையில் எறியவும் விதைகளை* பத்திரமாக சேகரித்து கொள்ளவும்.

இப்போது அந்த அரைபத்தை பூசணியை சிறிது நீர்விட்டு (பூசணியில் நீர்சத்து அதிகம் இருப்பதால் சிறிது தண்ணீர் போதுமானது) மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டாமல் ஒரு குவளையில் பிடித்து சுவைக்கு உப்பு மிளகுதூள் சேர்த்து அருந்தவேண்டும். இதற்க்கு பின் 45 நிமிடங்கள் கழித்து காலை உணவு உண்ணலாம்.

இப்படி தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வர இடுப்பில் தோன்றிய ஊளை சதை அப்படியே கரைத்துவிடும் இந்த வெண்பூசணி சாறு.

* தொடர்ந்து நீங்கள் சேகரித்து வந்த பூசணி விதைகளை வெய்யிலில் காய வைத்து ஒரு மண்டலத்துக்கு பின் வேர்கடலை போல கைப்பிடி எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஊளைசதை வளர்வது அறவே தவிர்க்கப்படும்

மேலும் தொப்பையை தவிர்க்க படத்தில் காணும் தேக பயிற்சி செய்தாலோ அல்லது ஸ்கிப்பிங் செய்தாலோ அல்லது தினமும் குறைந்தது 200 முறை தோப்புகரணம் போட்டாலோ தொப்பையை குறைக்கலாம்

படத்தில் இருப்பது வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 1 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.

ஊட்டச்சத்தான உணவும் உடற்பயிற்சியும் நல்ல தீர்வு நமக்கு

No comments:

Post a Comment