Sunday, 31 January 2016

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

Cloves are a highly prized medicinal spice that have been used for centuries in treating digestive and respiratory ailments

Cloves are a highly prized medicinal spice that have been used for centuries in treating digestive and respiratory ailments. Cloves contain good amounts of vitamins A, C, K, and B-complex as well as minerals such as manganese, iron, selenium, potassium, and magnesium. They also contain powerful antiseptic, antiviral, anti-inflammatory and anesthetic properties making them tremendously useful in helping to heal a wide variety of illnesses and health conditions.
Cloves are particularly beneficial for the digestive tract and are great for indigestion, gas, constipation, bloating, nausea, and countering the effects of heavy, rich food. They are excellent for relieving muscle spasms, headaches, and nerve pain. They are also often used to disinfect gums, teeth, kidneys, liver, skin, and bronchi.
Clove oil contains eugenol which is a powerful anesthetic and natural pain reliever and is commonly used to help relieve toothaches and to numb gums in dentistry. Clove oil is also beneficial for the circulatory system and is a potent platelet inhibitor which prevents blood clots. Clove oil is also excellent for athletes foot and for healing cuts, bruises, burns, rashes, and psoriasis.
Essential oil of Clove is an effective decongestant and should be used in a vaporizer, humidifier, or aromatherapy machine to help disinfect the air and to help benefit respiratory conditions such as sinusitis, tuberculosis, bronchitis, asthma, colds & coughs. Cloves are often combined with other herbs to create seasonings such as Curry Powder and Garam Masala in India, Chinese Five Spice in China, and Worcester Sauce in Great Britain.
They are also the ideal addition to deserts, fruit salads, smoothies, and savory dishes alike. Clove tea is helpful for strengthening the immune system and detoxifying the body. Steep 2 tsp of whole cloves in two cups of hot water for at least 10 minutes, sweeten with honey if desired.
Cloves can be found whole or powdered in you local supermarket or health food store. Capsules, extract, tincture, tea, and topical oils & creams can all be found online or at your local health food store.
Learn more about which spices can heal and restore your body in my new book, click here http://bit.ly/MM-book

என் வெளிநாட்டு காதல் கணவனே....! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாய்..!

என் வெளிநாட்டு காதல் கணவனே....!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாய்..!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டினாய்.!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல.இரவில் மல்லிகைப்பூ தந்துவிட்டு அதற்காக மன்றாடினாய்....!
பள்ளிக்கு செல்ல மறுத்து தூங்குவதாய்
நடிக்கும் சின்னப்பையனை போல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுத்தாய்.....!
இவை போன்ற எல்லா சொர்கத்தையும்
மூன்றே மாதம் தந்துவிட்டு...
எனை தீயில் தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...!
என் வெளிநாட்டு கணவா !ٌ
கணவா... - எல்லாமே கனவா.......?
கணவனோடு மூன்று மாதம்,கனவுகளோடு எத்தனை மாதம்?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...!
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....!
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...!
2 வருடமொருமுறை கணவன் ...!
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய் !ٌ
இது வரமா ..? சாபமா..?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
திரும்பி வந்துவிடு என் வெளிநாட்டு கணவா...!
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…..!
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து...
எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு...
தூங்குவதாய் உன் நடிப்பு.....!
வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி... இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்....!
மூன்று மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு, உல்லாச பயணம்..!
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?
விரைவுத்தபாலில் காசோலை வரும்,காதல் வரும..?
பணத்தை தரும் பாரத வங்கி ! பாசம் தருமா..?
நீ இழுத்து சென்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்....,அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
உன் வெளிநாட்டு தேடுதலில்,தொலைந்து போனது - நம் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த பாஸ்போர்ட் நமக்கு வேண்டாம்,கிழித்துவிடு!
விசா ரத்து செய்துவிட்டு வா,என் காதல் கணவனே,இல்லையென்றால் விவாக ரத்து செய்து விட்டு போ.!
நீ தொலைபேசியில் கொடுத்த அனைத்து முத்தத்ததையும் ஒன்றாக சேர்த்து வைத்து இருக்கிறேன்.........
என்றாவது ஒரு நாள் அதையெல்லாம் உனக்கு நேரில் தரவேண்டும் என்ற ஏக்கத்தோடு........!!
கனவுகளோடும்,அதைவிட ஒவ்வொரு வினாடியும் உன் நினைவுகளோடும்...!!

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில்
போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது
மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள்,
உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்)
பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து
உதவுங்கள்.
தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால்
நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்
(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில்
பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக
நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்
பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி
முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை
இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக
முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல்,
வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற
எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி
செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய
காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும்
ரகசியமான வழியை உங்களுக்காக
கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில்
தேவையான அளவு எடுத்து கொண்டு
அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்,
எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும்
தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில்
சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு
ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்)
பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்,
2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட
வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு
குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல்
இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம்
உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய
வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண
உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம்
செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை
கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத
ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று
வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே
சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம்
ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று
மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18
வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள்
தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு
எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.
மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில்
இருமுறை இதனை செய்யலாம்.

Friday, 29 January 2016

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறத.

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறத. இவ்விரு நாடுகளின்
மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்...
இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக
இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே அமெரிக்கா இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதியும் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண் களுக்கு பெரிதும் தேவையான போலிக்அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் மற்றும் போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம்.
அது தவறு.
நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
நாகரீகம் பகுத்தறிவு என்ற பெயரில் படிக்காதவர்களை விட படித்தவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்பதை பிற நாடுகள் இன்றும் நம்மிடம் நிரூபித்துகொண்டிருகிறது.
வேறு உதாரணம் - மேகி நூடுல்ஸ், குளிர் பானங்கள் மற்றும் பல....

குல தெய்வ சக்தியை வீட்டிற்க்குள் அழைக்கும் வழி !!

குல தெய்வ சக்தியை வீட்டிற்க்குள் அழைக்கும் வழி !!

வீட்டிற்குள் குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு ;
மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி - இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.
வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் - இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம் ( துணிக்கடையில் கலசத்திற்கு சுற்றும் பட்டு துணி என்று கேட்டால் கிடைக்கும்).
பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைக்கவும்.
வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ (கிராமங்களில் சிறுவர்கள் ரேடியோ பூ என்று சொல்வார்கள்) அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள் வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும். மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது. பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
கலசத்தில் உளளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்.
பூஜைக்குறிய மந்திரம்:-
ஓம் பவாய நம ஓம் சர்வாய நம ஓம்
ருத்ராய நம ஓம் பசுபதே நம ஓம் உக்ராய நம
ஓம் மஹாதேவாய நம ஓம் பீமாய நம ஓம்
ஈசாய நம
தினமும் 108 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள் என்பது நம்பிக்கை.
http://www.swasthiktv.com/index.php/music-culture/item/

TNPSC நடத்தும் VAO தேர்வுக்கு தயாராவது எப்படி?

TNPSC நடத்தும் VAO தேர்வுக்கு தயாராவது எப்படி?

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு தயாராவது எப்படி?
என்ன பாடத்திட்டம்?
கேள்வித்தாள் எப்படி அமையும்?
எந்த பாடப்பகுதிகளை படிக்க வேண்டும்?
அதில் இருந்து கேள்விகள் எப்படி கேட்கப்படலாம்?
தேர்வில் கேள்விகள் எப்படி அமைந்திருக்கும்?

என்பது உள்பட உங்களது பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த மாதிரி வினா விடை பகுதி அமைந்திருக்கும்.

முதலில் நாம் எந்த தேர்விற்கு தயார் ஆனாலும் அத்தேர்விற்கான பாடத்திட்டத்தையும் தேர்வுமுறையையும் அறிந்திருக்க வேண்டும்.

பாடத்திட்டம்

கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான பாடத்திட்டம் பற்றிய விவரம் பின்வருமாறு:

1. எழுத்துத்தேர்வு (கொள்குறி வகை) = 300 மதிப்பெண்கள்

இத்தேர்வில் பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்களும் திறனறி தேர்வில் 20 வினாக்களும் கிராம நிர்வாகம் தொடர்பாக 25 வினாக்களும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 கேள்விகளும் ஆக மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 1½ மதிப்பெண்கள் வீதம் (200x1½) 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் பொது அறிவுக்கேள்விகள் பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குள்ள சிறப்புகள்:-

1 மிக எளிமையான வழியில் அரசு துறையில் நுழைவதற்கு இத்தேர்வு வழி வகுக்கிறது.
2 பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே இத்தேர்வு எழுதுவதற்கான தகுதியாக இருப்பதால் அனைத்து தரப்பு மாணவர்களும் இதில் பங்கேற்க முடியும்.
3 குறைந்தபட்ச பொது அறிவு திறனும் பத்தாம் வகுப்பு கல்வி தரத்தில் கேள்விகளும் இடம்பெறுவதால் பட்டப்படிப்பு மாணவர்களும் முதுகலை மாணவர்களும் இதில் எளிதாக வெற்றி பெற முடியும்.
4 குறிப்பாக இத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் (70 சதவீதம்) 10-ம் வகுப்பு கல்வி தரத்தில் இடம் பெறுவதால் பள்ளி பாட புத்தங்கள் பெரிதும் உதவும்.

தேர்விற்கான பாடத்திட்டம் பின்வருமாறு:-
பொது அறிவு
அலகு – 1 
பொது அறிவியல் (General Science)
1. இயற்பியல் (Physics)
2. வேதியியல் (Chemsitry)
3. தாவரவியல் (Botany)
4. விலங்கியல் (Zoology)

அலகு – 2 

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் : (General Knowledge and Current Affairs)


அலகு – 3 
புவியியல்: (Geography)
1. புவியியல் கோட்பாடுகள் (Geographical Theory)
2. இந்திய புவியியல் (Indian Geography)
3. தமிழ்நாட்டு புவியியல் (Geography of TamilNadu)

அலகு – 4
இந்திய வரலாறு மற்றும் பண்பாடு
1. பழங்கால வரலாறு (Ancient India)
2. இடைக்கால வரலாறு (Medieval India)
3. தற்கால வரலாறு (Modern India)
4. இந்திய பண்பாடு (Indian Culture)

அலகு – 5
இந்திய அரசியலமைப்பு  (Indian Polity)

அலகு – 6 
பொருளாதாரதம் (Economy)
1. இந்தியப் பொருளாதாரம் (Indian Economy)
2. தமிழ்நாட்டுப் பொருளாதாரம் (Tamil Nadu Economy)

அலகு – 7 
இந்திய தேசிய இயக்கம் (Indian National Movement)
1. 1857 – பெருங்கிளர்ச்சி (1857 Revolt)
2. இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress)
3. தேசிய தலைவர்கள் எழுச்சி (Emergence of National Leaders)
4. சுந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு (Role of TamilNadu in Freedom Struggle)

அலகு – 8 
அறிவுக்கூர்மை காரணமறிதல் மற்றும் கணிப்பொறி அறிவு
(Mental Ability, Reasoning and Computer Awareness)
1. புள்ளியியல் (Statistics)
2. அறிவுக்கூர்மை – சதவீதம் மீ.சி.ம மீ.பெ.வ விகிதம் மற்றும் வீதம் தனிவட்டி கூட்டுவட்டி நேரம் மற்றும் வேலை அளவியல்
3. தர்க்க முறையில் காரணமறிதல் (Logical reasoning) – கனசதுரம் பகடை சம்பந்தமான கேள்விகள் திசை அறிதல் (Coding and decoding) எண்வரிசைகள் எழுத்து மற்றும் எண் சம்பந்தமான கேள்விகள் இரத்த உறவு தொடர்பான கேள்விகள் கொடுக்கப்பட்ட படத்தில் விடுப்பட்ட எண்ணைக் கண்டறிதல் (Visual Reasoning)

அலகு – 9 
கிராம நிர்வாகம் – பாடத்திட்டம்

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பாக 25 வினாக்கள் கேட்கப்படுகின்றன. அவற்றிற்கான பாடத்திட்டம் பின்வருமாறு:

1.கிராமம் மற்றும் வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிகள் கடமைகள் மற்றும் பொறுப்புகள்.
(அ) காவல்துறை சம்பந்தமான கிராம நிர்வாக அதிகாரியின் பணிகள்
(ஆ) பிறப்பு இறப்பு சான்று சம்பந்தமான பணிகள்
(இ) அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது பற்றிய விவரங்கள்
(ஈ) பட்டா சாதிச்சான்று ஆதரவற்ற விதவை சம்பந்தமான விவரங்கள்
2.கிராம நிர்வாக அலுவலர் கையாளும் ‘அ’ பதிவேடு பட்டா
    மற்றும் சிட்டா அடங்கல் பற்றிய விவரங்கள்.
3.ஒவ்வொரு பசலி ஆண்டு முடிவிலும் கிராம நிர்வாக அலுவலர்  
    பராமரிக்கும் கணக்குகள் பற்றிய விவரங்கள்.
4.நில வகைப்பாடு பற்றிய அடிப்படை விவரங்கள்
5.நிலங்களுக்கான ஆண்டுத் தீர்வை நிர்ணயம் பற்றிய விவரங்கள்.
6.நீர்ப்பாசன வகைகள் பற்றிய அடிப்படை விவரங்கள்
7.ஜமாபந்தி பற்றி முழுமையான விவரங்கள்
8.இயற்கை இடர்பாடுகளின் போது கிராமநிர்வாக அலுவலரின் பொறுப்புகள் மற்றும் பணிகள்.
9.கிராமம் மற்றும் நகரத்தில் நில ஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை சம்பந்தமான அடிப்படை விவரங்கள்.
10.கால்நடை மற்றும் கோழிப் பண்ணைகளுக்கு நில ஒப்படைப்பு சம்பந்தமான அடிப்படை விவரங்கள்.
11.நில வாடகை வசூலிப்பு சம்பந்தமான விவரங்கள்
12.நில வருவாயிலிருந்து கழிவு இனம்.
13.அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரம்பு சம்பந்தமாக நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ன் படி A மெமோரண்டம், B மெமோரண்டம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
14.R.S.O.27-ன் படி நிலங்களில் ஏற்படும் நில உரிமை மாற்றம் கூட்டுப்பட்டா வழங்குதல்.
15.நில உடைமையாளர்களின் உரிமைகளும் வேண்டுதலும்.
16.வயது திருமண நிலை வருமானம் இருப்பிடம் ஆகிய சான்றுகள் வழங்க மேற்கொள்ள வேண்டிய விசாரணை குறித்த செயல்முறைகள்.
17.பட்டா சிட்டா முதலான பதிவேடுகளைப் பதிவு செய்தல் மற்றும் பராமரித்தல் குறித்த செயல்முறைகள்.
18.அளவை எண் அளவை உட்பிரிவு எண் அளவை புலம் மற்றும் பல அளவுப் புத்தகம் ஆகியவை குறித்த அடிப்படை விரவங்கள்.
19.இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்.
20.கிராம நிர்வாக அலுவலரால் வசூல் செய்யப்படும் பல தரப்பட்ட அரசு வருவாய்.
21.கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் சம்பந்தமான கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்.
22.வருவாய் வசூல் சட்டத்தின் அடிப்படை விவரங்கள்.
23.வனத்துறை நிலம் சம்பந்தமான அடிப்படை விவரங்கள்.
24.சந்தனமரம் மற்றும் விலை மதிப்புடைய மரங்களை விற்பனை செய்வது சம்பந்தமான விவரம்.
25.ஆதிவாசி / பழங்குடியினருக்கு அரசு வழங்கும் பாதுகாப்பு மற்றும் உதவிகள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் கடமை.

மேற்கண்ட வழிகாட்டுதலை பயன்படுத்தி கிராம நிர்வாக தேர்வில் நீங்கள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்

நீங்கள் வெற்றி பெறும் வரை உங்களுக்காக எங்கள் பணி தொடரும்.

மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், தத்தனூர் அரியலூர் மாவட்டம்.