Friday, 3 November 2017

பன்றிக் கொழுப்புக் கலவை கட்டாயம் பார்க்கவும்*

*பன்றிக் கொழுப்புக் கலவை கட்டாயம் பார்க்கவும்*

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்பிள்ளைக்கு கூட ஆசையாக கொடுக்கிறோம்?
_______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!

*இதணை மற்ற குழுமங்களிலும் பகிறவும் உங்களால் ஒருவரேனும் பயண் பெறட்டும்*.

Thursday, 2 November 2017

மருத்துவம்

மருத்துவம்:

ஆங்கில மருத்துவத்தில் நோய்வாய்பட்ட நபர் இருக்கும் இடத்திற்கு மருத்துவர் வரமாட்டார். மருத்துவர் இருக்கும் இடத்திற்குத்தான் நோயாளி செல்லவேண்டும். ஆனால் நாட்டு மருத்துவரோ நோய்வாய்ப்பட்டவரின் வீட்டிற்கே சென்று நாடி பார்த்து ஒருசில நிமிடங்களில் நோயைக் கண்டறிந்து விடுவார். அதற்கான மருந்தையும் நோயாளியின் வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் மூலிகைகளை வைத்தே தயாரித்துக்கொள்வார். இதுமாதிரியான நாட்டு மருத்துவ முறைகள் வணிகத்திற்கு உகந்ததாக இல்லாத காரணத்தால் அம்மருத்துவத்தை முழுவணிகமாக மாற்றுவதற்கு கண்டறியப்பட்ட ஒரு உத்தியே ஆங்கில மருத்துவம் ஆகும். இம்முறையில் நாட்டு மருந்துகளைப் போல அல்லாமல் எளிதில் வீணாகாதவாறு மருந்துகளைத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் அதை வெகுநாட்களுக்கு வைத்திருந்து வணிகம் செய்யமுடியும். மூலிகைகளை காய்ச்சி வடித்து அதிலிருந்து எடுக்கப்படும் சாரத்தை மாத்திரைகளாகவோ (அ) ஊசித்திரவங்களாகவோ வைத்திருப்பதன் மூலம் அவை நெடுநாட்களுக்கு கெட்டுப்போவதில்லை. இருப்பினும் இதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகப் பயங்கரமானது.

ஆங்கில மருத்துவம் தனித்து இயங்குவதில்லை. மூன்று வெவ்வேறு பிரிவுகளாக இயங்குகிறது. 1) நோயைக் கண்டறிதல் 2) நோய்க்கான மருந்தை தயாரித்தல் 3) நோய்க்கான மருந்தை சிபாரிசு செய்தல். இவற்றுள் 3-வது பிரிவில் மட்டுமே மருத்துவர்கள் பணியாற்றுவார்கள். மற்ற பிரிவுகளில் மருத்துவத்தை சாராதவர்கள் பணியாற்றுவார்கள். ஒரு நோயாளி ஆங்கில மருத்துவரிடம் சென்றால் அவரை நோயைக் கண்டறியும் துறைக்கு முதலில் சிபாரிசு செய்து அனுப்புவார். அங்கு Blood Test, Urine Test, Ultrasonic Sound Test, CT, MRI போன்ற டெஸ்டுகள் எடுக்கப்பட்டு நோயாளியிடம் மிகப்பெரிய வியாபாரத்தை நடத்துவார்கள். நோயாளி ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்த பின்னரே அவரது நோய் கண்டறியப்பட்டிருக்கும்.

அதன் பின்பு அந்த ரிப்போர்டை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவரிடம் செல்வார். அதற்கு மருத்துவர் கார்ப்பரேட் கம்பெனிகளால் தயாரிக்கப்படும் மருந்துகளை சிபாரிசு செய்யும் வெற்றுப்பணியை மட்டுமே செய்வார். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட நோயாளி மருந்துகளை விற்கும் விற்பனையகத்திற்கு சென்று மருந்துகளை வாங்குவார். அங்கும் நோயாளியிடம் மிகப்பெரிய வியாபாரம் நடந்திருக்கும். ஆக மொத்தத்தில் ஒரு ஆங்கில மருத்துவரால் கார்ப்பரேட் கம்பெனிகளின் விற்பனை பிரநிதியாக மட்டுமே செயல்படமுடியும். அவரால் தனித்து எந்தவொரு முடிவும் எடுக்க இயலாது. ஒருவேளை ஆங்கில மருத்துவத்தின் தவறால் உயிரிழப்பு ஏற்படுமானால் சம்மந்தப்பட்ட மருத்துவர் மருந்து கம்பெனிகளை குறைகூறியோ அல்லது ஸ்கேன் சென்டர்களைக் குறை கூறியோ தப்பித்துக்கொள்வார். பாதிக்கப்பட்டவருக்கு பட்டை நாமமே சாத்தப்படும்.

ஆனால் ஒரு திறமையான நாட்டு மருத்துவரோ 1) நோயைக் கண்டறிதல், 2) நோய்க்கான மருந்தை முடிவு செய்தல், 3) அம்மருந்தை தயாரித்தல் என இம்மூன்றையும் ஒருவரே செய்துவிடுகிறார். இதன் மூலம் ஏதாவது சிறிய தவறு நடந்தால் கூட அவரை எளிதாக சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடியும். நாட்டு மருத்துவ முறைகள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பது வணிக இயங்கியலுக்கு ஒத்தே வராது என்பதால்தான் அதனை அழிக்க முழுமூச்சாக களம் இறங்கியிருக்கிறார்கள்.

- N. Ezhilan

#தற்சார்பு_வாழ்வியல்

வாகை"

"வாகை"

வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள்

ஆடு, மாடுகளுக்குத் தீவனம்;
நிலத்துக்குத் தழையுரம்;
வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல்; மண்ணரிப்பைத் தடுக்கிறது;

முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும்.

மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைப்பது நலம்.

வாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம் என அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.

அல்பிஸியா லெபெக் (Albizia lebbeck) என்கிற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் வாகை; வாகையில்  காட்டு வாகை, தூங்குமூஞ்சி வாகை என இரண்டு வகைகள் உண்டு.

இதில் தூங்குமூஞ்சி வாகை, நிழலுக்கு மட்டும்தான் பயன்படும். எனவே, . சாலையோரங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நிழல் கொடுக்க, தூங்குமூஞ்சி வாகையை நடவு செய்யலாம்.

காட்டு வாகை:
================
காட்டுவாகை, இந்தியத் துணைக் கண்டம், வடகிழக்குத் தாய்லாந்து, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள தீவுகள் உட்பட்ட தென்கிழக்காசியாவின் சில பகுதிகள், வடக்கு ஆஸ்திரேலியப் பகுதிகள் என்பவற்றைத் தாயகமாகக் கொண்டது.

வெப்ப வலயப் பகுதிகளில் இது பரவலாகக் காணப்படுகின்றது. 600 தொடக்கம் 2500 மிமீ வரையான மழை வீழ்ச்சி கொண்ட பகுதிகளில் இது சிறப்பாக வளரக்கூடியது.

தூங்குமூஞ்சி மரம்:
====================
பண்ணி வாகை அல்லது தூங்குமூஞ்சி மரம் என அழைக்கப்படுவது தெற்காசியாவை பூர்வீகமாக கொண்ட மரமாகும்.

பண்ணி வாகை மரம் மற்ற மரங்களை போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும். இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாக கூறுகிறது. இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.

நடவு:
======
ஒரு கன அடி குழியெடுத்து, எரு போட்டு, 15 அடி - 20  அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்யலாம். விரைவாக வளரும். ஆடு, மாடுகளுக்கு எட்டாத உயரத்துக்கு மரம் வளரும் வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

சாதாரண நிலங்களில் ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வளமான நிலங்களில் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். நடவு செய்த ஐந்து ஆண்டுகள் வரை வாகையில் கிடைக்கும் தழைகளைக் கால்நடைகளுக்கும், உரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்

நடவு செய்த 10-ம் வருடத்தில் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மரம் 80 சென்டி மீட்டர் பருமனும் 18 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும்.

மருத்துவ பயன்கள் :
=====================
வாகை மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து, பாலில் கலந்து குடித்து வந்தால் பசி எடுக்காத பிரச்னை தீரும், வாய்ப்புண் குணமாகும்.

இதன் பூக்களை நீர் விட்டு பாதியாகச் சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால், வாதநோய் குணமாகும். விஷத்தையும் முறிக்கும்.

தீவனம்:
========
இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது.

தழையுரம்:
============
உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.

Ref:
http://www.plantekey.com/plants/fabaceae/albizia-lebbeck

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88

Wednesday, 1 November 2017

"பத்தாயம்" "குதிர்"

"பத்தாயம்" "குதிர்"

25 ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புறங்களில் மட்டுமிலலாது டெல்டா மாவட்ட நகரங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்தன.

பெரும் செல்வந்தர்கள் மட்டுமல்ல நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும், ஓரளவுக்கு வசதி படைத்தவர்களுமே கூட,  கடைகளில் அரிசி வாங்குவதையே கவுர குறைவாக கருதிய கால கட்டம் அது.

நெல்லை வாங்கி பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகளில் கொட்டி வைத்து, அவ்வப்போது தேவைக்கேற்ப, ஆலைகளில் அரிசியாக அரைத்து பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

பத்தாயம், குதிர் இல்லாத விவசாயிகள்,  தங்களுடைய நெல்லை சாக்கு மூட்டைகளில் வைப்பதால் பனி மற்றும் மழைக்காலங்களில் ஈரப்பதம் ஊடுருவி நெல்லின் தரத்தை சீர்குலைக்கிறது.

கடுமையான கோடைகாலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் கட்டு விடுதல் என்ற பிரச்னை உருவெடுத்து, நெல்லில் கோடுகள் உருவாகும். இதுபோன்ற நெல்லை அரைக்கும் போது குருணை அதிகரித்து, அரிசியின் அளவு குறையும். இதையெல்லாம் விட உச்சக்கட்ட பிரச்னை எலி தொந்தரவு. சாக்கு மூடடைகளை ஓட்டைப் போட்டு, ருசி பார்த்து வேட்டையாடிவிடுகிறது.

சாக்கு மூட்டைகளில் உள்ள நெல்மணிகள், அந்துப்பூச்சி களின் தாக்குதலுக்கும் ஆளாகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி நெல்லை இருப்பு வைத்துக் கொள்ள முடியாமல், அவசர கதியில் விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலை, வியாபாரிகள் குறுக்கு வழியில் பயன்படுத்தி, விவசாயிகளை சுரண்டுகிறார்கள்.  நெல் மணிகளை சேமித்து வைக்க முடியாததால், விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைநெல்லை, பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வெளியில் வாங்குகிறார்கள்.

பத்தாயம், குதிர் இந்த இரண்டுமே பல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான காரணம், பல அடி உயரம் கொண்ட பத்தாயம் அல்லது குதிரின் உச்சத்திற்கு சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லை கொட்டுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஒவ்வொரு அடுக்காக வைத்து நெல்லை நிரப்பிக் கொண்டே வந்தால் மிக எளிதாக வேலை முடியும்.

பத்தாயம்:
===========
மரத்தால் செய்யப்பட்டவை பத்தாயம். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப, குறைந்தபட்சம் 10, 20 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 100, 200 மூட்டைகளுக்கு மேல் கொள்ளளவு கொண்ட பத்தாயம் வைத்திருந்தார்கள்.

குதிர்:
======
மண்ணால் ஆன உறைகளை (உருளை) கொண்டு செய்யப்பட்டவை  குதிர். ஒரு உருளைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உருளைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உருளை களும் அமைக்கப்பட்ட பிறகு இதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். இதனால் எலி கடிக்காது. அவ்வபோது தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக நெல்லை வெளியில் எடுக்க, குதிரின் கீழ் பகுதியில் திறந்து மூடும் அமைப்பு இருக்கும்.

முழுமையாக நெல் வெளியில் எடுக்கப்பட்ட பிறகு, உறைகளை லேசாக அசைத்தாலே தனிதனியாக பிரித்து எடுத்து விட்டு, நெல்லை நிரப்பி மறுபடியும் அமைத்துக் கொள்ளலாம்.

மஞ்சணத்தி

"மஞ்சணத்தி"

"மஞ்சோனா, மஞ்சள் நீராட்டி, நுணா, என்று பல பெயர்களால் அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Morinda Tinctoria.

மாவிலையைப் போன்ற இலைகளைக் கொண்டிருந்தாலும் எதிரடுக்கு வடிவில் இலைகள் காணப்படும். வெள்ளை வெளேர் என்று பூக்கள் பூத்திருக்கும். காய்கள் முடிச்சு போட்ட மாதிரி இருக்கும். பச்சை நிறக் காய்கள் பழமானதும் கறுப்பு நிறமாகி விடும்.

சுமார் 15 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த மரத்தின் உள்புறம் மஞ்சள் நிறமாக இருக்கும். அதனால்தான் இதை 'மஞ்சணத்தி' என்று சொல்கிறார்கள். இதில் செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புகள் இயற்கையாகவே இருக்கின்றன. இந்த மரத்தின் பழத்தைச் சாப்பிடலாம். ஆனால்  நாக்கு கறுத்து விடும்.

மஞ்சணத்தி  மரம் மிகவும் லேசானது; ஆனால் நார்ப்பகுதி மிகவும் வலிமையானது. அந்தக் காலத்தில் நீர் இறைக்கும் கமலையில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்பட்டிருப்பது  இந்த மரத்தால் செய்யப்பட்டதே.

உழவுக்கு, வண்டி இழுக்கறதுக்குனு பயன்படுற மாடுகளுக்கு நுகத்தடி பூட்டினாதான், அதுங்க வேலையை சீரா செய்யும்னு சொல்லுவாங்க. இதுல நுகத்தடினு சொல்லப்படறதோட உண்மையான பேரு, 'நுணாதடி'. அதாவது, நுணா மரத்துல இருந்து தயாரிச்ச தடி.

இதை மாடுகளோட கழுத்துல வெச்சுக் கட்டினா, கழுத்துல காயம் எதுவும் வராது. இதுவே வேற மரத்துல செய்த நுகத்தடியா இருந்தா அதோட அழுத்தத்தால நிச்சயமா கழுத்துல புண்ணு வந்துடும். அதனாலதான் ஏர், வண்டினு மாடுகளுக்கு நுணா மரத்த தேர்ந்தெடுத்திருக்காங்க முன்னோருங்க.

கடுமையா வேலை செய்ற மாடுகளுக்கு, உடம்புல வலி இருக்கும். பாவம், இதையெல்லாம் வாயில்லாத அந்த ஜீவனுங்களால வெளியில சொல்ல முடியாது. மாடுகள்கிட்ட வழக்கத்தவிட கடுமையா வேலை வாங்கற சமயத்துலயோ இல்லனா, மாடுங்க முடியாம தவிக்கற சமயத்துலயோ... நுணா இலையைப் பறிச்சு, வெதுவெதுப்பான தண்ணியில போட்டு, மாடுகளைக் குளிப்பாட்டி விடலாம். இப்படி செஞ்சா மறுநாளுலேருந்து, மாடுங்க உற்சாகமா வேலை பார்க்கும்.

நமக்கும் உடம்பு வலினா, இப்படி நுணா இலைல கொதிச்ச தண்ணியில குளிச்சா கட்டாயம் நல்ல பலன் கிடைக்குமுங்கோ!

இம்மரத்தில் செய்யப்படும் கட்டில்களில் படுத்தால் நிம்மதியான உறக்கம் வரும் என்று இயற்கை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த மரத்துப் பலகையில கட்டில் செய்து படுத்தா, உழைச்ச களைப்பு எல்லாம் பறந்துடும்கறதலாதான் அப்படி சொல்லி வெச்சுருக்காங்க!

குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள்கள் இந்த மரத்தில்தான் செதுக்கப்படும்.

மஞ்சணத்தி, வெப்பம் தணிக்கும்; வீக்கம் கரைக்கும்; மாந்தம் போக்கும்; கல்லீரல் - மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கும்; பசியைத் தூண்டும்; தோல் நோய் போக்கும்.

இன்றைக்கும் கிராமங்களில் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், பேதியை நிறுத்த மஞ்சணத்தி இலையில் கஷாயம் செய்து கொடுக்கிறார்கள். மஞ்சணத்தி இலையின் நடு நரம்புகளை எடுத்துவிட்டு அதனுடன் துளசி, கரிசலாங்கண்ணி, மிளகு, சுக்கு சேர்த்துக் கஷாயம் செய்து வடிகட்டி குழந்தைகளின் வயதுக்கேற்றபடி கால் சங்கோ(பாலாடை), அரை சங்கோ கொடுத்து வந்தால் மாந்தம், பேதி குணமாகும்.

இதேபோல் மஞ்சணத்தி இலையை மையாக அரைத்துப் புண், ரணம், சிரங்குகளில் வைத்துக் கட்டினால் குணமாகும்.

இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இடுப்புவலி உள்ள இடங்களில் பூசினால் பலன் கிடைக்கும்.

காயை அரைத்துச் சாறு எடுத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டை நோய்கள் நீங்கும்.

ஒரு பங்கு மஞ்சணத்தி இலைச்சாற்றுடன் நொச்சி, உத்தாமணி, பொடுதலை ஆகிய மூன்று இலைகளின் சாறுகளையும் தலா ஒரு பங்கு சேர்த்து மூன்று முதல் நான்குவேளை கொடுத்து வந்தால் எல்லாவிதமான மாந்தமும் நீங்கும்.

குளிர் காய்ச்சலுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது இது. மஞ்சணத்தியின் பட்டை சிறிதளவு எடுத்துக் கொண்டு அரை ஸ்பூன் சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். அதை வடிகட்டி சுமார் 50 மி.லி அளவு காலை மற்றும் இரவு உணவுக்கு முன்  அருந்தி வந்தால் காய்ச்சலைத் தடுப்பதுடன் வயிற்றுக் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

மஞ்சணத்தியின் காயும், இலையும் மாதவிடாய்க் கோளாறுகளைக் குணப்படுத்தக்கூடியவை. மஞ்சணத்தி இலையை பசையாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, அதே அளவு அதன் காயையும் அரைத்துச் சேர்த்து சிறிது மிளகுத்தூள், கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். அதில் 50 முதல் 100 மி.லி வரை எடுத்து 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கிவிடும். இதைச் சர்க்கரை நோயாளிகள் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுக்குள் வரும்.

காயுடன் சம அளவு கல் உப்பு சேர்த்து அரைத்து அடையாகத் தட்டி காய வைத்து அரைத்தால் பல்பொடி தயார். இதைக் கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும். அத்துடன் பல் வலி, பல் அரணை, வீக்கம், ரத்தக்கசிவு போன்றவை சரியாகும்.

இதன் வேரைக் கஷாயம் செய்து குடித்து வந்தால் சுகபேதியாகும். இது எந்தவிதச் சிரமத்தையும் ஏற்படுத்தாமல் மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்யும்.

ஒரு கிலோ மஞ்சணத்திப் பட்டையை இடித்து அதைவிட நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி 8-ல் ஒரு பங்காக வற்றும் அளவு காய்ச்ச வேண்டும். அதனுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து தைலப் பதமாகும் வரை காய்ச்ச வேண்டும். இந்தத் தைலத்தை வாரம் ஒருநாள் தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இது கழலைக் கட்டிகள், முறைக் காய்ச்சல், படை நோய்கள் போன்றவற்றைக் குணமாகும்".