Friday, 12 November 2021

மூட்டுவலி முற்றிலும் குணமாக உதவும் முடக்கத்தான் கீரை..! இயற்கை மருத்துவ குறிப்புகள்!

இன்றைய சூழ்நிலையில் பலரும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது வீடுகளிலேயே ஒருவர் அல்லது இரண்டு பேர் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இந்த மூட்டுவலிக்கு பல மருந்துகள், பல மருத்துவர்களை பார்த்து பலருக்கு மூட்டு வலி அதிகமானது தான் மிச்சமானதாக இருக்கும்.

வாய்ப்புண்களை குணப்படுத்தும் நெல்லிக்காய்! ஆயுர்வேத மருத்துவம்!

ஆனால் இந்த மூட்டு வலிக்கு இயற்கையிலே மிகச்சிறந்த மருந்து உள்ளது. இதனை பயன்படுத்திப்பாருங்கள். நிச்சயம், எந்த ஒரு பக்கவிளைவுகளும் இன்றி மூட்டுவலி குணமாகும்.

எவ்வாறு வருகிறது?
சிறுநீரை உடனடியாக கழித்துவிடாமல், நாம் அடக்கி வைத்துக்கொள்கிறோம். இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை நாம் அறிவதில்லை. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் இது உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுகிறது.

அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு, சிறு கற்கள், சினோரியல் மெம்கிரேம் என்ற, எனும் இடத்தில் தங்கிவிடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் (rheumatoid arthritis) ஆரம்ப நிலை.

முடக்கத்தான் கீரை :
இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை.

நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.
என்ன செய்கிறது :
முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும்.

உடல் சோர்வு இல்லை !
இது சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலில் விட்டு செல்கிறது. இது ஒரு மிக முக்கியமான மாற்றத்தை, நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான் தோசை :
முடக்கத்தான் கீரையை கொண்டு தோசை செய்யலாம். முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து உண்ணக் சாப்பிட கூடாது. கொதிக்க வைத்தால் மருத்துவ சத்துக்கள் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். தமிழக கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இக்கீரை படர்ந்து கிடக்கும்.

எண்ணெய் :
முடக்கத்தான் கீரையை எண்ணெய்யில் இட்டு காய்ச்சி மூட்டு வலிக்கு பூசினால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.

பிற பயன்கள் ;
முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீண்ட, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.

சட்னி அல்லது துவையல் :
முடக்கத்தான் இலைகளை நெய்யில் வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

Wednesday, 31 March 2021

*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*

*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*

1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
 
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.

3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.

4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.

5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.

6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.

7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.

8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.

9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.

10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.

11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.

12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.

13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.

14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. 

15.பழனி அருகே தென்னந்தோப்பு.

16.ஊட்டியில் எஸ்டேட் தொழில். 

இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. 

ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.

கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...

வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?

இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...

இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?

இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!

*சீமானின் அரசியல்*

1982- 1985 திமுக
1986- 1988 அதிமுக
1988 - 1991 காங்கிரஸ்
1992 - 1996 கம்யூனிஸ்ட்
1996 - 2004 திமுக
2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
2007 - 2009 மதிமுக ஆதரவு
2009 - 2011 அதிமுக ஆதரவு
2012 -  நாம் தமிழர் (பெரியார் வழி)
2014 -நாம் தமிழர்  (பிரபாகரன் வழி)
2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
2016 முதல்  முப்பாட்டன் முருகன் வழி

இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
விழிப்புணர்வு பதிவு...

அன்பு நண்பர்களே அருமை காவலர்களே

நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர்  அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
இரவல் இல் கட்சி நடத்திய
இவ்வளவு சொத்து சீமானுக்கு

இந்த பதிவினை அனைவரும் பகிருங்கள் காவலர்களே

Wednesday, 17 March 2021

https://www.google.co.in/url?q=https://www.dailythanthi.com/&sa=U&ved=2ahUKEwianbfFjrjvAhUPOisKHYPBC1QQFjAAegQIAxAB&usg=AOvVaw0gmiEYHlj92OQHjA28CjIb 

நாம் பாதுகாக்க மறந்த சொடக்கு தக்காளியின் சொக்க வைக்கும் மகிமைகள் | 90’ஸ் கிட்ஸ் ஃபேவரைட்

நமக்கு அருகில் இருக்கும்போது சில பொருட்களின் அருமையும் பெருமையும் தெரியாது. அப்படி நாம் கவனிக்கத்தவறிய ஒரு அரிய மூலிகை தாவரம் தான் இந்த சொடக்குத் தக்காளி. முன்பெல்லாம், கிராமப்புறங்களின் சாலையோரங்களிலோ அல்லது வீடுகளின் அருகாமையிலோ வயல்வெளிகளிலோ அதிகம் காய்த்து குலுங்கி கொண்டிருக்கும் இந்த  சொடக்குத்  தக்காளி. ஆனால், இன்றோ இதை காண்பதே அரிதாகிவிட்டது. 

நம் கிராமங்களில் இருந்த இந்த அரிய மூலிகையை நாம் பாதுகாக்க தவறவிட்டாலும் பல வெளிநாடுகளில் இந்த சொடக்குத் தக்காளியை ஆயிரங்களில் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அப்படி வெளிநாடுகள் வரை பிரபலம் ஆகும் அளவுக்கு இந்த சொடக்குத் தக்காளியில் என்னதான் நன்மைகள் இருக்கு என்று தானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி தான் இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம். 

நம்மில் பல பேருக்கு சொடக்கு தக்காளி என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியாது. இதில் அதனுடைய பயன்கள் அறிந்திருப்பதை பற்றி கேட்கவா வேண்டும். கிராமப்புறங்களில் அதிகம் வளர்ந்த 90’ஸ் கிட்ஸ் இந்த தக்காளிப்பழத்தை செடியில் இருந்து பறித்து, நெற்றியில் வைத்து உடைத்து விளையாடுவர். அதுவும் உடையும் போது கேட்கும் சொடக்கு சத்தம் கேட்கையில் தோன்றும் 90’ஸ் குழந்தைகளின் புன்னகைக்கு ஈடே இல்லை. இதனால்தான் இந்த மூலிகை பழத்திற்கு ‘சொடக்கு தக்காளி’ என்ற பெயரே வந்தது.

எந்தவிதமான பக்க விளைவுகளையும் உண்டாக்காத இந்த சொடக்கு தக்காளியில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இந்த சொடக்கு தக்காளி இலைகளையும், கனிகளையும் மஞ்சள் சேர்த்து அரைத்து சரும கட்டியின் மேல் பத்து போட்டு வந்தால், கட்டிகள் சுலபமாக கரையும். கட்டியினால் ஏற்படும் வலியும் சுலபமாக நீங்கிவிடும்.

இந்தச் சொடக்குத் தக்காளி செடியின் இலைகளையும், காய்களையும் நசுக்கி, ஒரு டம்ளர் அளவு நல்ல தண்ணீரில் போட்டு, நன்றாக கொதிக்க விட்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூட்டுவலியால் அவதிப்படும் வயதானவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும். இந்த மருந்தை புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வரலாம். புற்று நோயினால் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான பாதிப்புகளை குறைக்க வல்லது என்றும் சில மருத்துவ குறிப்புகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். நாம் சாப்பிடும் அதிக உணவுகள் கூட ஜீரணம் ஆகவேண்டுமென்றால் இந்தப் பழத்தைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்தானது செரிமானத்தை எளிதாக்குகிறது. 

இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த சொடக்குத் தக்காளியின் மகிமைகளை எல்லாம் நாம் தெரிந்துக்கொள்ள தவறவிட்டாலும், இதை தெரிந்துக்கொண்ட வெளிநாட்டினர் இதை பாக்கெட் செய்து 3,000 ரூபாய் வரை ஒரு கிலோவை விற்பனை செய்து வருகிறார்களாம். இனிமேலாவது, சொடக்குத் தக்காளியின் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை அறிந்துக்கொண்டு  எங்காவது கிடைத்தால் நாமும் வீட்டில் வளர்க்கலாம். இதை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.  அக்கறையுடன்

Tuesday, 16 March 2021

மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள்

நாம் சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் காணும் சில செடிகள், மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அவற்றின் அளப்பரிய நற்பலன்களின் மூலம், அறிந்திருப்போம். அந்த வகையில் களைச் செடி என விவசாயிகள் ஒதுக்கும் ஒரு செடிதான், மனிதர்களுக்கு, அரிய மூலிகையாக, அவர்களின் ஆயுளை காக்கும், காயகற்ப மூலிகையாக விளங்குகிறது என்பதை, அவர்களில் பலர் கூட அறிந்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு நகரங்களில் மூலிகைகளின் மேல் உள்ள ஈர்ப்பு, கிராமங்களில் இன்னும் பரவலாகவில்லை, என்பது ஆச்சரியம் என்றால், அதை விட மற்றுமொரு ஆச்சர்யம், பெரும்பாலான கிராம மக்கள் சில மூலிகைகளின் பெயர் மற்றும் அவற்றின் பயன்கள் கூட அறியாமல் இருப்பது தான்.

எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தன் தனித் தன்மையை நிரூபித்து வளரும் ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.

மருத்துவ குணங்கள்
மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.
மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும்.
புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.
மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.
மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கன்னி இலைகள் மற்றும் கீழாநெல்லி இலைகள் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை, தெளிவாகும்.
மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.
மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.
மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சரியாகும்.
மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது. மூக்கிரட்டை வேரை நீரில் இட்டு ஆற வைத்து பருகி வர, இரத்த சோகை, சளித் தொல்லை நீங்கும்.
மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணையில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம், உடலில் சேர்ந்து இருந்த நச்சு நீர், நச்சுக்கிருமிகள் யாவும் மலத்துடன் வெளியேறி விடும். இதுநாள் வரை இந்த நச்சுக்களால், உடலில் ஏற்பட்டிருந்த சரும வியாதிகள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த வியாதிகள் அனைத்தும் சரியாகி விடும்.
உணவாலோ வேறு பாதிப்பின் காரணமாகவோ, உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது, அதனால், உடலில் நமைச்சல் எனும் அரிப்பு உண்டாகும். இதனால், எப்போதும், கைகளால் அரிப்புள்ள பகுதியை சொரிய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதுவே, முக்கியமான அலுவல்களில் இருக்கும் போதும் நம்மை அறியாமல் சொரிய வைத்து, மற்றவர்கள் என்ன என்று கேட்கும் அளவுக்கு, மிக்க ஒரு மன வேதனையை அளிக்கும் செயலாக மாறிவிடும். இந்த பாதிப்பைப் போக்க, உலர்த்திய மூக்கிரட்டை வேரை சற்று, இடித்து, ஒரு தம்ளர் நீரில் காய்ச்சி, ஆற வைத்து, அந்த நீரில் சற்று விளக்கெண்ணை கலந்து தினமும் இரு வேளை பருகி வர, ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல் அரிப்பு விலகி, சருமத்தில் புதுப் பொலிவு ஏற்படும்.
உடலில் வியாதிகளால் ஏற்பட்ட நச்சு நீரால், சளியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, அவை தினசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதை சரி செய்ய, முன் சொன்ன முறையில் காய்ச்சிய மூக்கிரட்டை வேர் நீரில், சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.
சிறுநீரக பாதிப்புகளின் கடுமையான விளைவுகளால் இரத்தத்தில் நச்சுக்கள் அதிகரிப்பால், சிறுநீரகங்களின் இயக்கம் செயல் இழக்கும் அபாய நிலை ஏற்படும். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர, மூக்கிரட்டை வேரை சிறிது எடுத்து ஒரு தம்ளர் நீரில் இட்டு, அதில் சிறிது சோம்பு சேர்த்து, காய்ச்சி, ஆற வைத்து, தினமும் பருகி வர, பக்க விளைவுகள் ஏதுமின்றி, பாதிப்புகள் மெல்ல விலகும், சிறுநீர் அடைப்பை நீக்கி, சிறுநீரகத்தைக் காத்து, சிறுநீரகக் கற்களையும் கரைத்து வெளியேற்றும் தன்மை மிக்கது.
இந்த மருந்தை எடுக்கும் போது, மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை வேரின் தன்மையால் மலம் இளகி, வயிற்றுப்போக்கு ஏற்படும், இதனால் பாதிப்பில்லை, உடலுக்கு நன்மைதான் உண்டாகும்.
மூக்கிரட்டை வேரைத் தூளாக்கி, அதை தினமும் இருவேளை தேனில் கலந்து சிறிதளவு சாப்பிட்டு வர, மங்கலாகத் தெரியும் கண் பார்வைக் குறைபாடு மற்றும் மாலைக்கண் பாதிப்புகள் போன்ற கண் வியாதிகள் யாவும் விலகி விடும்.

Thursday, 11 March 2021

🔱ஓம் சிவ சிவ ஓம் 🔱

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள் அதற்காக விளக்கம்.

இந்து சமயத்தில் பெருமாள்,சிவன்,என இரு பெரும்தெய்வங்கள் உண்டு . இதில் பெருமாள் பார்ப்பதற்கு பொன்பொருள் ஆடைஆபரணங்கள்,
நைவேத்தியங்கள் என கண்களை கவரும் வகையில் இருப்பார்.

ஆனால் ஈசன் ஜடாமுடியுடன் இடுப்பில் புலித்தோல் தறித்து.உடலில்சுடுகாட்டுச்சாம்பல் பூசிக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி பார்ப்பதற்குபரதேசிக்கோ
லத்தில் இருப்பார்.

பெருமாளிடம் உலகியலுக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் அவர்மீது பக்திகொண்டு மக்கள் வழிபட்டுஅவரிடம்கோரிக்கை வைப்பது இயல்பான விசயம்.

ஆனால் ஈசன் அப்படி அல்ல.. அவர்மீது பக்தியை காட்டிலும் பயம் வருவது தான் நிதர்சனம்.அவருடைய அலங்காரம்அப்படி.பெருமாளை யார் வேண்டுமானாலும் வணங்கலாம்.ஆனால் ஈசனை வணங்க ஈசனே
தேர்தெடுத்தால் மட்டுமே அவர்மீதுபக்திகொள்ள
முடியும்.

பெருமாளை வணங்குவது தகப்பனின் கையை மகன் பிடித்துச்செல்வதுபோலாகும்
தகப்பனின் கையை பிடித்துச்செல்லும் குழந்தை வழியில் ஏதாவது பள்ளம் வந்தால்.கிழே விழுவதற்கு வாய்ப்பு அதிகம்.

ஈசனை வணங்குவது தகப்பன் குழந்தையின் கையை பிடிப்பதுபோலாகும்.
தகப்பனால் கரம்பற்றி அழைத்துச்செல்லப்படும் குழந்தை கீழேவிழுவதற்கோ.
வழி

Tuesday, 9 March 2021

ஏலக்காய் மருத்துவ பயன்கள்

ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன.  நன்மைகளை பற்றி இங்கு காண்போம்...

1 ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
2 வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
3 ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
4 சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது.
5 ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.
6 ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.
7 அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
8 ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
9 நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

Thursday, 25 February 2021

குட்கா... பான்மசாலா... புகையிலை... மீள என்னதான் வழி?

குட்கா... பான்மசாலா... புகையிலை... மீள என்னதான் வழி?

குட்கா, பான்மசாலா போன்ற வாயில் போட்டு மெல்லும் வகை புகையிலைப் பொருள்களுக்குத் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே, இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும், பெரும்பாலானோரால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. அதனால், இன்னமும் அவை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, அப்படி மறைத்து வைத்து விற்கப்படும் புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். 

 
உண்மையில், இத்தகைய போதை வஸ்துகளை கைவிடுவதால் உடல்நலனில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? அந்தப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதற்கான வழிமுறைகள் என்ன? 

மன நல மருத்துவர் ரேஷ்மாவிடம் கேட்டோம்.

"மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய பொருள்கள் (Psychoactive Substances) என சில பொருள்களை உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நிகோடின் (Nicotine), ஆல்கஹால் (Alcohol), கஃபைன், பாக்கு (Betel nut) போன்றவை வருகின்றன. இந்தப் பாக்கு வகைகளில்தான் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருள்கள் வருகின்றன. 

தொன்மைவாய்ந்த நமது கலாசாரத்தில் வெற்றிலை, பாக்குடன் புகையிலை போடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சாதாரணமாக புகையிலை இலை பதப்படுத்தப்பட்டாலும் அதனுடன் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது, சுண்ணாம்பைக் கொதிக்கவைத்து அதில் பேகிங் பவுடர், மண்எண்ணெய், பாக்குத் தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் கலப்பார்கள். இது லேகியப் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் போட்டு விற்று விடுகிறார்கள். ஆக, புகையிலையினால் மட்டுமல்லாமல், அதனுடன் சேர்க்கப்படும் மற்ற வேதிப்பொருள்களும் சேர்வதால் வாய்ப்புண் முதல் வாய்ப்புற்று நோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல உடல், மன ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. 

முக்கியமான பாதிப்புகள்

அடிமையாதல்

புகையிலைப் பொருள்களைச் சாப்பிட்டதும் ஆற்றல் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். அந்த வகை போதைப் பழக்கத்தை ஆரம்பத்தில் குறைவான அளவில் தொடங்கினாலும், நாளடைவில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். பின்னர் அதைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி காணப்படும். இதனால், பணிபுரியும் இடங்களில் எரிச்சல், மற்றவர்கள் மீது கோபம், பணியில் கவனமின்மை ஏற்படும்.   

புற்று நோய்

புகையிலைப் பழக்கத்தால் வாயில் Oral Submucous Fibrosis எனப்படும் ஒருவகைக் கட்டி ஏற்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் வாயில் நீர் வறட்சி ஏற்படும். தாடைகள் இறுக்கமடைந்து வாயின் இயல்பான அசைவுகள் தடைபடும். இதனால் ஒருகட்டத்தில் வாயைத் திறக்க சிரமப்படுவார்கள். மேலும் பற்கள், ஈறுகள் பாதிக்கப்படும் அல்லது அழுகிப்போக நேரிடும். இது வாய்ப்புற்று நோயின் ஆரம்ப நிலையாகும். இதன் தொடர்ச்சியாக வாய்ப்புற்று நோய்  (Oral Cancer or Mouth Cancer) ஏற்படும்.

மலட்டுத்தன்மை

குட்கா, பான்மசாலா போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும். பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும்.

எப்படி மீள்வது?

எந்தவொரு போதைப்பழக்கத்தையும் கைவிட வேண்டும் என்றால், அந்த முடிவை அந்த நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். எனவே, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று முதலில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அடிக்கடி முகம், வாய்,  உதடுகள் மற்றும் பற்களைக் கண்ணாடியின் முன் நின்று கொண்டு பார்க்க வேண்டும். அப்போது எவ்வாறெல்லாம் அவை முகத்தோற்றத்தை எப்படிக் குலைக்கிறது என்பதை உணர வேண்டும். 

போதைப் பொருள்களைப் பயன்படுத்தி கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற ஒழுங்கீனமான செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை துப்பும் போதும், கடைகளில் வாங்கும்போதும் மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உணரவேண்டும். இவர் பாக்கு போடுபவர், புகையிலை போடுபவர் எனக் குறைத்து மதிப்பிட்டு ஒருவிதமான கண்ணோட்டத்துடனேயே பார்க்க வைக்கிறது. அது நம் சுய மதிப்பீட்டை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 

நம்மைவிட வயது குறைவானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் செலவாகிறது? பொருளாதாரரீதியாக எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் ராசி காலண்டர்
NEW
செய்திகள்
விகடன் ஸ்பெஷல்
சினிமா
ஆன்மிகம்
விளையாட்டு
Published:26 Jul 2017 6 PMUpdated:26 Jul 2017 7 PM
குட்கா... பான்மசாலா... புகையிலை... மீள என்னதான் வழி?
லட்சுமணன்.ஜி
குட்கா... பான்மசாலா... புகையிலை... மீள என்னதான் வழி?
குட்கா... பான்மசாலா... புகையிலை... மீள என்னதான் வழி?

குட்கா, பான்மசாலா போன்ற வாயில் போட்டு மெல்லும் வகை புகையிலைப் பொருள்களுக்குத் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே, இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும், பெரும்பாலானோரால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. அதனால், இன்னமும் அவை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, அப்படி மறைத்து வைத்து விற்கப்படும் புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். 

 
உண்மையில், இத்தகைய போதை வஸ்துகளை கைவிடுவதால் உடல்நலனில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? அந்தப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதற்கான வழிமுறைகள் என்ன? 

மன நல மருத்துவர் ரேஷ்மாவிடம் கேட்டோம்.

"மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய பொருள்கள் (Psychoactive Substances) என சில பொருள்களை உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நிகோடின் (Nicotine), ஆல்கஹால் (Alcohol), கஃபைன், பாக்கு (Betel nut) போன்றவை வருகின்றன. இந்தப் பாக்கு வகைகளில்தான் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருள்கள் வருகின்றன. 

தொன்மைவாய்ந்த நமது கலாசாரத்தில் வெற்றிலை, பாக்குடன் புகையிலை போடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சாதாரணமாக புகையிலை இலை பதப்படுத்தப்பட்டாலும் அதனுடன் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது, சுண்ணாம்பைக் கொதிக்கவைத்து அதில் பேகிங் பவுடர், மண்எண்ணெய், பாக்குத் தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் கலப்பார்கள். இது லேகியப் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் போட்டு விற்று விடுகிறார்கள். ஆக, புகையிலையினால் மட்டுமல்லாமல், அதனுடன் சேர்க்கப்படும் மற்ற வேதிப்பொருள்களும் சேர்வதால் வாய்ப்புண் முதல் வாய்ப்புற்று நோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல உடல், மன ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. 

முக்கியமான பாதிப்புகள்

அடிமையாதல்

புகையிலைப் பொருள்களைச் சாப்பிட்டதும் ஆற்றல் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். அந்த வகை போதைப் பழக்கத்தை ஆரம்பத்தில் குறைவான அளவில் தொடங்கினாலும், நாளடைவில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். பின்னர் அதைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி காணப்படும். இதனால், பணிபுரியும் இடங்களில் எரிச்சல், மற்றவர்கள் மீது கோபம், பணியில் கவனமின்மை ஏற்படும்.   

புற்று நோய்

புகையிலைப் பழக்கத்தால் வாயில் Oral Submucous Fibrosis எனப்படும் ஒருவகைக் கட்டி ஏற்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் வாயில் நீர் வறட்சி ஏற்படும். தாடைகள் இறுக்கமடைந்து வாயின் இயல்பான அசைவுகள் தடைபடும். இதனால் ஒருகட்டத்தில் வாயைத் திறக்க சிரமப்படுவார்கள். மேலும் பற்கள், ஈறுகள் பாதிக்கப்படும் அல்லது அழுகிப்போக நேரிடும். இது வாய்ப்புற்று நோயின் ஆரம்ப நிலையாகும். இதன் தொடர்ச்சியாக வாய்ப்புற்று நோய்  (Oral Cancer or Mouth Cancer) ஏற்படும்.

மலட்டுத்தன்மை

குட்கா, பான்மசாலா போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும். பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும்.

எப்படி மீள்வது?

எந்தவொரு போதைப்பழக்கத்தையும் கைவிட வேண்டும் என்றால், அந்த முடிவை அந்த நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். எனவே, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று முதலில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அடிக்கடி முகம், வாய்,  உதடுகள் மற்றும் பற்களைக் கண்ணாடியின் முன் நின்று கொண்டு பார்க்க வேண்டும். அப்போது எவ்வாறெல்லாம் அவை முகத்தோற்றத்தை எப்படிக் குலைக்கிறது என்பதை உணர வேண்டும். 

போதைப் பொருள்களைப் பயன்படுத்தி கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற ஒழுங்கீனமான செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை துப்பும் போதும், கடைகளில் வாங்கும்போதும் மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உணரவேண்டும். இவர் பாக்கு போடுபவர், புகையிலை போடுபவர் எனக் குறைத்து மதிப்பிட்டு ஒருவிதமான கண்ணோட்டத்துடனேயே பார்க்க வைக்கிறது. அது நம் சுய மதிப்பீட்டை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 

நம்மைவிட வயது குறைவானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் செலவாகிறது? பொருளாதாரரீதியாக எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்க்கிறேன். உடல் நிலையை கெடுத்துக்கொள்கிறேன் என்று தெரியவந்தால் அதற்காக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் தொடர்ச்சியாக பின்பற்றி வந்த பழக்கத்தை திடீரென கைவிடும்போது, அந்த மாற்றத்தை உடலும் மனதும் ஏற்றுக்கொள்ள சில நாள்கள் தேவைப்படும். குறிப்பாக, தூக்கமின்மை, எரிச்சல், சோர்வாக உணர்வது போன்றவை வெளிப்படும். இவையெல்லாம் மனரீதியான பாதிப்புகள் மட்டுமே, மற்றபடி உடலுக்கோ, உயிருக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இருக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் இளநீர், மோர் போன்ற இயற்கையான நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் ஏற்கெனவே சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும். 

பெரும்பாலானோருக்கு உணவு உண்டதும் போதை மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்போது கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சாப்பிடச் சொல்வார்கள். இவை அந்தப் பழக்கத்துக்கு மாற்றாக அமைவதுடன், உடலுக்கும் சத்துக் கிடைக்க உதவும். மற்ற நேரங்களில் இந்த எண்ணம் ஏற்படும்போது, சூயிங்கம், வேர்க்கடலை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக ஒருவருக்கு நீண்ட நாள்களாக இந்தப் பழக்கம் இருந்தால் அந்தப் பழக்கத்தை கைவிடுவதற்கு முன்பு, பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புற்றுநோய் நிலைக்குச் சென்றுள்ளதா? என்பதை அறிந்துகொள்ளவும் அவர் தற்போது எந்த நிலையில் உள்ளார் என்பதையும் அறிந்து கொள்ளவும் இது உதவும். பாதிப்பைக் கண்டறியும்பட்சத்தில் அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பழக்கத்தைக் கைவிட மனநல மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். 

போதைப்பழக்கத்திலிருந்து விடுபட சென்னை கிண்டியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பல்வேறு போதை மறுவாழ்வு மையங்களிலும் மனோதத்துவ ஆலோசனை மற்றும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு Replacement therpy என்னும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. 

Friday, 19 February 2021

Zero-வும் infinity-யும் ஒன்றே! | Guru Mithreshiva | அடடா ஆன்மீகம் EP 213 | Aadhan Aanmeegam


 

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...!

சளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.
பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
Playvolume00:07/01:20TruvidfullScreen

 
கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று  நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.
கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர  வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
 
கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்.
 
சளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்.

Tuesday, 16 February 2021

வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!

இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது.

பிரண்டை... சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை... என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.

இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.

மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.

எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.

துவையல்
பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

இலைத் துவையல்
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.
இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகு - 5, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.

வற்றல்
நன்கு முற்றிய  இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.

பிரண்டை உப்பு
பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.

பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.

2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். வீரியம் பெருகும்; உடல் வலிமை பெறும்.

வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.

Sunday, 14 February 2021

பரோட்டா – மெல்லக் கொல்லும் விஷம்!

விருதுநகர் பரோட்டாவும், பொறிச்ச பரோட்டாவும் சுவையாக இருக்கலாம். ஆனால், நீங்கள் உண்பது மெல்லக் கொல்லும் விஷத்தை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தின் நகர, புறநகரப் பகுதிகளில் பரோட்டாக் கடை இல்லாத தெருவைப் பார்க்க முடியாது.  கிராமங்களிலும் பரோட்டா பிரியர்கள் அதிகம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பரோட்டா. ஒரு சாதாரண மனிதன் ஒரு வாரத்தில் பரோட்டா சாப்பிடாமல் கடந்துவிட முடியாது. குறிப்பாக, பேச்சுலர்கள்.

பரோட்டா, வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, கைமா பரோட்டா, முட்டை லாப்பா என பரோட்டாவிலேயே ஏராளமான வகைகள்.

விதவிதமான கிரேவிகளுடன் நினைத்தாலே எச்சிலூறும் சுவை. பரோட்டா உடலுக்குக் கெடுதல் என சில ஆண்டுகளாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் மீதான மோகம் குறையவில்லை.

எளிதில் கிடைக்கும் உணவு. மலிவான விலை. அதன் சுவை எனப் பல காரணங்கள்.

ஆனாலும், பரோட்டா ஏன், எந்த அளவுக்குத் தீமையானது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

பரோட்டாவின் மூலப்பொருள் மைதா. இது வெள்ளை எமன். மைதா கோதுமையில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

மைதாவை மூன்று பெரும் பாகங்களாகப் பிரிக்கலாம்.

தவிடு (Bran)
முளை (Germ)
வித்தக விழையம் (Endosperm).
இதில், மற்ற இரண்டையும் நீக்கிவிட்டு வித்தக விழையத்தில் இருந்து மட்டும் மைதா தயாரிக்கின்றனர்.  இதில், மாவுச்சத்தும், செரிக்க அதிக நேரம் எடுக்கும் குளூட்டனும், புரோட்டினும் உள்ளன.

மைதாவில் உள்ள குளூட்டன் சிக்கலான வடிவம் கொண்டது. எனவே, செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். எனவே, இதை உண்பவர்களுக்குச் செரிமானச் சிக்கல் வரும்.

வித்தக விழையம் நன்றாக அரைக்கப்பட்டால், அது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மாவை பென்சாயில் பெராக்ஸைடு  (benzoyl peroxide )எனும் ரசாயனத்தால் வெள்ளை ஆக்குகிறார்கள். இதுதான் மைதா.

இந்த பென்சாயில் பெராக்ஸைடு முடிக்கு டை அடிக்க பயன்படுத்தும் ரசாயனம். இது, புரதத்துடன் சேர்ந்து, சர்க்கரை நோயை (Diabetes) உருவாக்குகிறது.

 மாவை மிருதுவாக்க, அலோக்ஸான் (Alloxan) எனும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, செயற்கை நிறமூட்டிகள், மினரல் எண்ணெய், சுவையூட்டிகள், சர்க்கரை, சாக்கரின், அஜினோ மோட்டோ போன்றவையும் மைதா மாவில் சேர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் சேர்ந்ததுதான் மைதா மாவு.

அலெக்ஸான் ரசாயனம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். சோதனைக் கூடங்களில், எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதற்காக, இந்த வேதிப் பொருளைத்தான் பயன்படுத்துவார்கள். அப்போதுதானே அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியும். ஆக, பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் நிச்சயம்.

மைதா மாவில் நார்ச்சத்தே இல்லை. இதனால், நம் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, செரிமான சக்தி குறைந்து விடும்.

மைதாவில் செய்யப்படும் பரோட்டா மட்டுமல்லாமல், வேறு எந்த தின்பண்டமாக இருந்தாலும் அது ஆரோக்கியக் கேடுதான். எனவே, நீங்களும் உண்ணாதீர்கள், குழந்தைகளுக்கும் உண்ணக் கொடுக்காதீர்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் மைதா பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் மட்டுமல்ல, சிறுநீரகக் கல், இதய நோயும் வர வாய்ப்புள்ளது.

மக்களே உஷார். விருதுநகர் பரோட்டாவும், பொறிச்ச பரோட்டாவும் சுவையாக இருக்கலாம். ஆனால், நீங்கள் உண்பது மெல்லக் கொல்லும் விஷத்தை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Friday, 12 February 2021

குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றதாக மூலிகை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அரிமஞ்சிரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில் எங்கும் காணப்படுகிறது. இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர்.

மருத்துவ குணங்கள்:

நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும். வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும். குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும். குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.

Thursday, 11 February 2021

நில அளவைகள்(சர்வே பற்றி) தெரிந்து கொள்ளுங்கள்!!

நில அளவைகள்(சர்வே பற்றி) தெரிந்து கொள்ளுங்கள்!!

சர்வே” பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:

1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.
1. நில அளவை துறை
2. நில வரிதிட்ட துறை

2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.

3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.

4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.

5. 1. கிராம வரைபடம்,
2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)
3. புலப்படம்
4.சர்வே கற்கள் பதிவேடு
5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட
உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.

6. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.

7. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.

எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்?

1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது.

2. பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது.

3. சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.

4. கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்

5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும்.

6. நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.

7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது.

8. பராமரிப்பு பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும்.

9. இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும்.

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி …

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

பாரம்பரிய வழக்கம், நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை ஆண்டபோது நில நிர்வாகத்தை 90% அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.

உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றோம்.

• இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது.

• கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது.

• நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன.

• ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

வேலி
• 1வேலி – 2௦ மா
• 1வேலி – 6.17 ஏக்கர்
• 1வேலி – 5காணி

மா
• 1மா – 1௦௦ குழி
• 2௦மா – 1வேலி
• 3மா – 1ஏக்கர்
• 3மா – 1௦௦ சென்ட்
• 7மா – 1ஹெக்டேர்

சதுமீட்டர்
• 1௦,௦௦௦ சதுர மீட்டர் – 1ஹெக்டேர்
• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்
• 4௦.5 சதுர மீட்டர் – 1சென்ட்
• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்
• 1சதுர மீட்டர் – 1௦.76391 சதுர அடி
• ௦.௦929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
• 1௦௦ சதுர மீட்டர் – 1ஏர்ஸ்
• ௦.8361 சதுர மீட்டர் – 1குழி
• 1௦1.17 சதுர மீட்டர் – 121 குழி

செயின்
• 1செயின் – 66அடி
• 1செயின் – 1௦௦ லிங்க்
• 1௦செயின் – 1 பர்லாங்கு
• 1செயின் – 22 கெஜம்

ஏக்கர்
• 1ஏக்கர் – 43,56௦ சதுர அடிகள்
• 1ஏக்கர் – 1௦௦ சென்ட்
• 1ஏக்கர் – 16௦ square Roads
• 1ஏக்கர் – 1.1834 Square Arpents
• 1ஏக்கர் – 1௦ Square Chains
• 1ஏக்கர் – 16௦ Perches
• 1ஏக்கர் – 16௦ Poles
• 1ஏக்கர் – 4௦46.82 சதுர மீட்டர்
• 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர்
• 1ஏக்கர் – ௦. 4௦469 ஹெக்டேர்
• 1.32ஏக்கர் – 1 காணி
• 64௦ஏக்கர் – 1 சதுர மைல்
• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
• 6.17ஏக்கர் – 1 வேலி
• 1ஏக்கர் – 3 மா
• 1ஏக்கர் – ௦. 4௦4694 ஹெக்டேர்
• 1ஏக்கர் – 4௦.5ஏர்ஸ்
• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்
• 64௦ ஏக்கர் – 1 சதுர மைல்
• 8.64ஏக்கர் – 1வள்ளம்

கெஜம்
• 1கெஜம் – 3அடி
• 22கெஜம் – 1 செயின்
• 22கெஜம் – 66 அடி
• 1கெஜம் – ௦.9144 மீட்டர்
• 1.௦93613 – 1மீட்டர்

ஏர்ஸ்
• 1௦ ஏர்ஸ் – ௦2471 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦76 சதுர அடி
• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦௦ ச.மீ
• 1௦௦ ஏர்ஸ் – 1ஹெக்டேர்
• ௦. 4௦5 ஏர்ஸ் – 1 சென்ட்

ஹெக்டேர்
• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦,௦௦௦ ச.மீ
• 1ஹெக்டேர் – 1௦௦ ஏர்ஸ்
• ௦௦4௦ ஹெக்டேர் – 1சென்ட்
• 1ஹெக்டேர் – 247 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦7637.8 சதுர அடிகள்
• ௦. 4௦5 ஹெக்டேர் – 1ஏக்கர்

சென்ட்
• 1சென்ட் – 435.சதுரஅடிகள்
• 1சென்ட் – 4௦.5 சதுர மீட்டர்
• 1சென்ட் – 3குழி
• 1சென்ட் – 48.4 சதுர குழி
• 1௦௦ சென்ட் – 484௦ சதுர குழி
• 1 சென்ட் – ௦௦4௦ ஹெக்டேர்
• 1 சென்ட் – ௦. 4௦5 ஏர்ஸ்
• 1சென்ட் – 4௦. 46 சதுர மீட்டர்
• 2. 47 சென்ட் – 1ஏர்ஸ்
• 1 சென்ட் – 1௦௦௦ சதுர லிங்ஸ்
• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்
• 1.5 சென்ட் – டிசிமல்
• 1சென்ட் – ௦.௦௦4௦47 ஹெக்டேர்
• 1௦ சென்ட் – ௦.௦4௦47 ஹெக்டேர்
• ௦.௦2471சென்ட் – 1 ஏர்ஸ்
• ௦.௦2471சென்ட் – 1௦ ஏர்ஸ்
• 5.5 சென்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 5.5 சென்ட் – 1 மனை
• 33.௦6சென்ட் – 1 மா
• 6.61 சென்ட் – 1 வேலி
• ௦.7 சென்ட் – 1 குழி – 3௦௦ சதுர அடி ( மதுரை)
• ௦.7. சென்ட் – 3௦௦ சதுர அடிகள் ( மதுரை )

சென்ட்
• 11.௦ சென்ட் – 4800 சதுர அடிகள்
• 11.௦ சென்ட் – 2மனை
• 56 சென்ட் – 1குருக்கம்
• 56 சென்ட் – 24,௦௦௦ சதுர அடிகள்
• 2. 47 சென்ட் – 1௦76 சதுர அடிகள்
• 4.7 சென்ட் – 1வீசம்

கிரவுண்ட்
• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
• 1கிரவுண்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்

மீட்டர்
• 1 மீட்டர் – 3.281 அடிகள்
• 161௦ மீட்டர் – 1 மைல்
• 1௦௦௦ மீட்டர் – 1கி.மீ
• 1௦௦௦ மீட்டர் – ௦.62 மைல்
• ௦.9144 மீட்டர் – 1 கெஜம்
• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்
• 2௦1.16 மீ – 8 பர்லாங்கு
• 1 மீட்டர் – 1.௦93613 கெஜம்
• ௦.3௦48 – 1அடி
• 1௦ மீட்டர் – 32. 8௦84 அடிகள்

அடி சதுர அடிகள்
• 435.6 சதுர அடிகள் 1சென்ட்
• 24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட்
• 57,6௦௦ சதுர அடிகள் 1காணி
• 3.28 அடி 1மீட்டர்
• 1அடி 12 இன்ச்
• 1அடி 3௦. 48 செ. மீ
• 528௦ அடி 1 மைல்
• 328௦ அடி 1கி. மீ
• 1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
• 1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்
• 1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர்
• 24௦௦ சதுர அடிகள் 1 மனை
• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்
• 43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர்
• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்
• 1௦89 சதுர அடிகள் 33 அடி
• 1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
• 33 அடி 1 குந்தா
• 66௦ அடி 1 பர்லாங்கு
• 66௦ அடி 22௦ கெஜம்
• 66 அடி 1 செயின்
• 66 அடி 1௦௦ லிங்க்
• ௦.66 அடி 1 லிங்க்
• ௦.66 அடி 7.92 அங்குலம்
• 3 அடி 1 கெஜம்
• 1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட்
• 66 அடி 22 கெஜம்
• 3.28 அடி 1.௦93613 கெஜம்
• 1 அடி ௦.3048 மீட்டர்
• 3.28௦84 அடி 1 மீட்டர்
• 32. 8௦84 1௦ மீட்டர்
• 1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர்
• 1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர்
• 1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர்
• 2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர்
• 5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
• 1௦7.6939 சதுர அடிகள் 1௦ ச. மீ
• 215.278 2௦சதுர மீட்டர்
• 538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர்
• 4,356 சதுர அடிகள் 1௦ சென்ட்
• 48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி
• 24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும்
• 144 சதுர அடிகள் 1குழி

வெங்காயம் - மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.


1. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

2. குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம் கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

3. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

4. முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

5. செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

6. சீதோஷ்ண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

7. புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

8. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

9. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

10. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.

11. அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

Wednesday, 10 February 2021

ஆண்மைக் குறைவைப் போக்கி உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஜாதிக்காய்!

ஆண்மைக் குறைவைப் போக்கி உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஜாதிக்காய்!
விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய்.  தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.

 
* ஜாதிக்காய் இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
 
* ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
 
* ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில்  மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.
 
* ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும். முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
* அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Tuesday, 9 February 2021

கண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்

கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.
பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணம் கிடைக்கும்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கவும். இந்த பொடியை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் தீரும். வறட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து சுரங்களும் நீங்கும். இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வர வேர்வை நாற்றம் அகலும்.

பாதவெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும். உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் பாதையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகலாம். கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து நைத்து சாறு எடுத்து, அதில் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு நீங்கும்.குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும். கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி காலை, மாலை குடித்து வர கபம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

கண்டங்கத்திரி பழத்தை மண்பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் ஊற்றி மெழுகு பதம் வர காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இந்த கலவையை வெண் குஷ்டத்திற்கு தடவி வர குணம் கிடைக்கும் என சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. எதுவாக இருந்தாலும் சித்த மருத்துவர்களை அணுகி மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

Wednesday, 3 February 2021

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு
மிளகின் சிறப்பு
மிளகு கொடி வகையை சார்ந்தது. கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை தருகிறது. அதனால் மசாலாக்களில் தலைசிறந்த நறுமணப் பொருளாகிறது. உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது. பழங்காலத்தில் வணிகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருந்தது, மிளகு.

அதனால் இது கறுப்பு தங்கம் என்றழைக்கப்பட்டது. மிளகிற்கு பின்பு பல சுவாரசியமான வரலாற்று தகவல்கள் இருக்கின்றன. கேரளாவில் இருந்து அரபி கடல் வழியாக மிளகு அரேபியாவிற்கு ஏற்றுமதியானது. அங்கிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஐரோப்பியர்கள் நம் நாட்டின் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் மீது அதிக நாட்டம் கொண்டனர். அதனால்தான் கடல் வழியாக இந்தியாவை தேடிக் கண்டு பிடித்தனர். மிளகை வாங்க வந்தவர்கள் படிப்படியாக வியாபாரத்தை விரிவுபடுத்தி நம் நாட்டையே பிடித்து கொண்டனர்.

முற்காலத்தில் இருந்து நம் நாட்டில் கார சுவைக்கு நாம் மிளகைதான் பயன்படுத்தி வந்தோம். அதனால் சங்க இலக்கியங்களில் மிளகை பற்றிய குறிப்புகள் உள்ளன. சித்த மருத்துவத்திலும் மிளகிற்கு சிறப்பிடம் இருக்கிறது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்!’ என்பது பழமொழி. ஒவ்வாமைக்கு சிறந்த மருந்து மிளகு. சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைகளுக்கும் இது மருந்தாகின்றது. ஒவ்வாமையால் ஏற்படும் தொடர் தும்மலுக்கும் மிளகை பயன்படுத்தலாம்.

மருத்துவ குணங்கள்
1 தேக்கரண்டி மிளகை இடித்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து பனவெல்லம் அல்லது தேன் கலந்து குடிப்பது பலவித நோய்களை கட்டுப்படுத்தும். ஒவ்வாமை மற்றும் பூச்சி கடி காரணமாக தோலில் தடிப்பு, அரிப்பு உண்டாகும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகை பொடி செய்து, அருகம்புல் ஒரு கைபிடி அளவு சேர்த்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து குடிக்கவேண்டும். பூச்சி கடி மற்றும் ஒவ்வாமையால் அவதிப்படும்போது முதல் வேலையாக ஒரு தேக்கரண்டி மிளகை நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து பருகிவிடவேண்டும்.

மழைக்காலத்தில் அடுக்கடுக்காக தும்மல், கண்களை சுற்றிய அரிப்பு, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகையும், ஒரு வெற்றிலையையும் நீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். தொண்டை கட்டு, குரல் கம்மல், தொண்டை வலி போன்றவை இருந்தால், ஒரு தேக்கரண்டி மிளகை நெய்யில் கருக வைத்து பொடித்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கும் மிளகு கஷாயம் சிறந்தது.

ஜீரண சக்தியையும் மேம்படுத்தும். மிளகின் காரத்தன்மைக்கு ‘காப்சாய்சின்’ என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது. மிளகின் காரம் கொழுப்பையும் ஜீரணிக்கவைக்கும். இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு படியாது. ரத்த குழாய் தடிமனாவதும் தவிர்க்கப்படும். உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் ‘ஆன்டி ஆக்ஸிடண்ட்’ தன்மையும் மிளகிற்கு உள்ளது. பசி குறைவாக உள்ள சமயங்களில், ஒரு தேக்கரண்டி மிளகு பொடியை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

மூல நோய்களுக்கு ஒரு தேக்கரண்டி மிளகு பொடியுடன், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். மிளகின் காரத்தன்மை மலத்தை வெளியேற்றும் சக்தி கொண்டது. பல் சொத்தை, பல் கூச்சம் ஏற்படும்போது, மிளகு பொடியுடன் உப்பு கலந்து பல் தேய்க்கவேண்டும். தலையில் சிலருக்கு புழு வெட்டு ஏற்படும்.

அவர்கள் மிளகுதூள், உப்பு, வெங்காயத்தை சேர்த்து அரைத்து பாதித்த இடத்தில் பூசினால், மீண்டும் முடி வளரும். தலையில் பொடுகு ஏற்படும்போது மிளகை அரைத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, ஆறவைக்கவேண்டும். பின்பு அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு நீங்கும்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

Sunday, 31 January 2021

பாம்பு பஞ்சாங்கம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும்... இது bio-dynamic farming பற்றியது

பாம்பு பஞ்சாங்கம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும்... இது bio-dynamic farming பற்றியது

———

உயிராற்றல்_விவசாய_பஞ்சாங்கம் 

#உயிராற்றல்_விவசாய_பஞ்சாங்கம்

இந்த நாட்க்குறிப்பு உயிராற்றல் வேளாண்மை (BIO DYNAMIC FARMING) வழி முறைகளில் ஒரு குறிப்பிட்டு கூறக் கூடிய அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் ஒவ்வொன்றிலும் அதாவது அந்த குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் விவசாய வேலைகள் என்ன செய்தால் நமக்கு ஆரோக்கியமான தாவரங்கள் வளர்ந்து அதிக விளைச்சலையும், தரமான மற்றும் சுவை கூடிய விளைச்சலையும் பெறலாம் என அறிந்து கொள்ள உதவும்.

அவ்வாறு ஒவ்வொரு நாளும் நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் மற்றும் இராசிகள் அவற்றின் அடிப்படை சுற்றுப்பாதையில் குறிப்பாக சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏற்படும் நிகழ்வுகளை கணித்து அதனால் தாவரங்களிலும் மற்றும் மண்ணிலும் ஏற்படும் மாறுதல்களை கணக்கிட்டு அதற்க்கேற்றவாறுநாம் செய்ய வேண்டிய வேலைகளை பிரித்து கூறப்பட்டுள்ளது.

இந்த நாட்குறிப்பால் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள்

-மேல் நோக்கு நாட்கள்
-கீழ் நோக்கு நாட்கள்
-தவிர்க்க வேண்டிய நாள்
-அபோஜி (தொலைவு நிலா)
-பெரிஜி (அண்மை நிலா)
-அமாவாசை
-பெளர்ணமி
-சந்திரன் எதிர் சனி
-இராசி மண்டலத்தில் சந்திரன் பயணம் 
செய்யும் நாட்கள்

#மேல்_நோக்கு_நாட்கள்
இந்த நாட்களில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் தொடர்ந்து 13.6 நாட்கள் (சுமாராக) அதிகரித்துக் கொண்டிருக்கும். இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்கு மேலுள்ள பகுதிகள் வளர்ச்சி வேகம் அதிகரிக்கின்றது.
ஆகவே இந்த நாட்களில் 
1. விதைகளை நேரடியாக நடவு செய்தல் 
2.நாற்றுகளுக்காக விதைத் தெளிப்பு – கத்தரி, தக்காளி, நெல் மற்றும் மரங்களின் விதைகள் தேங்காய் போன்றவை 
3. இலை வழி ஊட்டமாக தெளித்தல். 
போன்றவற்றை செய்யலாம்.

#கீழ்_நோக்கு_நாள
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 13.6 நாட்கள் (சுமாராக) தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் எனப்படுகின்றது. 
இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்குள் உள்ள பகுதிகள் வளர்ச்சி அதிகரிக்கின்றது. மண்ணில் நுண்ணுயிர் பெருக்கும் அதிகரிக்கின்றது.
ஆகவே இந்த நாட்களில்
1.நாற்றுகள் மாற்றி நடவு செய்தல்
மரவள்ளி குச்சிகள், கரும்பு கரணைகள் க்ளைரிசிடியோ போன்ற குச்சிகளை நடவு செய்தல், 
2.பதியன்கள் போடுதல் போன்ற வேலைகள்
3.கம்போஸ்ட் தயாரிப்பு
4.கம்போஸ்ட் மற்றும் திரவ உரங்களை நிலத்தில் இடுதல்
5.உழவு செய்தல் போன்ற வேலைகள் செய்யலாம்.

#தவிர்க்க_வேண்டிய_நாட்கள்
#Node_day
(தவிர்க்கவும் நேரத்திலிருந்து#6_மணி_நேரம்_முன்னும்_பின்னும் முக்கிய விவசாய வேலைக்களைத் தவிர்க்கவும்)
-சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் சுமார் 13.5 நாட்களில் ஒரு முறை சூரியனின் சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட இடத்தில் கடக்கிறது. 
இந்த நாள் தவிர்க்க வேண்டிய நாள் என் குறிப்பிடப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட கிரகணம் என்றே கூறலாம்.(ராகு,கேது)
-இந்த நாட்காட்டியில் தவிர்க்கவும் என்று குறிப்பிட்ட நாளில் அந்த குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்பு ஆறு மணி நேரமும் பின்பு ஆறு மணி நேரமும் 
-விதைத்தல், 
-நாற்று நடுதல், 
-இலைவழி உரத்தெளிப்பு போன்ற முக்கியமான வேலைகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.

#அபோஜி_APOJEE– தொலைவில் உள்ள சந்திரன்
-இந்த நாளில் பூமியில் இருந்து சந்திரன் அதிகபட்ச தொலைவில் இருக்கும். இந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நாளில் குறிப்பிட்டுள்ளமணியில் 6 நேரமும் பின்பு 6 மணிநேரமும் முக்கியமாக #விதைப்பது_மட்டும்_தவிர்க்கவும்
ஆனால் உருளைக்கிழங்கு மட்டும் நடவு செய்யலாம். அவ்வாறு உருளைக்கிழங்கு நடவு செய்தால் விளைச்சல் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லாவிட்டாலும் கிழங்கு சற்று பெரியதாகவும் சுவை கூடுதலாகவும் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

#பெரிஜி_PERIJEE– அண்மை சந்திரன்
-இந்த நாளில் சந்திரன் தனது சுற்று வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கும். 
-இந்த நாளில் விதைத்தல், நாற்று நடுதல் போன்றவை தவிர்க்க வேண்டும். -அண்மையில் இரண்டு மூன்று வருடங்களில் கிடைத்த தகவல்கள் இந்த நாளில் (நெல், தர்பூசணி, மஞ்சள், தட்டைப்பயறு போன்றவை) வெவ்வேறு பகுதிகளில் விதைத்த விவசாயிகள் அனுபவித்த உண்மை. 
-ஓரளவிற்கு விளைந்த விளைப் பொருட்கள் கூட அவற்றின் சுவை மாறுபட்டு (சுமார் 75% வரை குறைந்து) காணப்பட்டது.

#அமாவசை_No_Moon_day
இந்த நாள் அனைவரும் அறிந்த ஒன்று. 
-இந்த நாளில் சேமித்து வைக்க வேண்டிய விதைகள், வைக்கோல் போன்ற கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தட்டைகள் இவற்றை அறுவடை செய்து பக்குவப்படுத்தி வைக்கலாம். 
-மர வேலைகளுக்கு தேவையான மரங்கள், மூங்கில் போன்றவற்றை அறுவடை செய்யலாம். 
-கம்போஸ்ட் படுக்கையை புரட்டிவிடுதல்
-உழவு செய்த வயலில் கம்போஸ்ட் இடுதல் போன்றவையும் செய்யலாம்.

#பௌர்ணமி_Full_moon_day
-இந்த நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு #48_மணி_நேரம்_முன்பு விதைகளை விதைத்தால் செடிகள் வேகமாக வளர்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியே அந்த செடிகள் தாங்கும் சக்தியை ஓரளவு இழக்க காரணமாகிறது. ஆதலால் ஓரளவு நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விதைகள் விரைவில் முளைப்பதால், நாற்றுகள் ஓரளவு முதிர்ச்சி அடையும் வரை பாதுகாப்பு மிகவும் அவசியம்.
-பஞ்சகாவ்யம் போன்றவை தெளிக்க மிகவும் உகந்த நாள்

#சந்திரன்_எதிர்_சனி (Moon opposite saturn)
இந்த நாள் சந்திரன், பூமி, சனி கிரகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்ற நாள்.
இந்த நாளில் விதைத்த விதைகள் மிகமிக ஆரோக்கியமான நாற்றுகளாக வளர்கின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனும் பூச்சிகள் தாக்குதல்களைக் கூட எதிர்த்து வளரும் திறனும் அதிகரிக்கிறது.
சந்திரன் எதிர் சனி அமையும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு உள்ள 48 மணி நேரத்திற்குள் விதைத்தால் நலம்
இந்த நாளில் அனைத்து விவசாய வேலைகளையும் செய்யலாம்.

#இராசிகளில்_சந்திரன்_பயணிக்கும்_நாட்கள்

ஒவ்வொரு இராசியும் ஒவ்வொரு மூலக்கூறுகள் அடிப்படையில் சக்திகளை வெளிப்படுத்துகிறது. 
அவை

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் நெருப்பு சக்தியை வெளிப்படுத்தும். விதைகள், பழங்கள் போன்றவற்றிற்காக விதைப்பு செய்யலாம்.

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் மண் சக்தியை வெளிப்படுத்தும். மண்ணில் விளையும் கிழங்குகள், வேர்களை அறுவடை செய்யும் விதைகளை விதைக்கலாம்.

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் காற்று சக்தியை வெளிப்படுத்தும். பூக்களுக்காக விதைக்கும் விதைகளை விதைக்கலாம்.

கடகம், விருச்சகம், மீனம் ஆகிய ராசிகள் நீரின் சக்தியை வெளிப்படுத்தும். இலைகள், தண்டுகளுக்கான விதைகளை விதைக்கலாம்.

(புரியவில்லை என்றால் வருத்தம் வேண்டாம், அடுத்த பதிவில் விளக்குகிறோம். அதே சமயம் காலண்டரில் பூ, பழம், வேர், இலை என குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் அதற்கான விதைகளை விதைப்பு செய்யலாம்.)

இவ்வாறு வெளிப்படும் சக்திகள் சந்திரன் மூலம் பூமியில் உள்ள தாவரங்களில் அந்தந்த குறிப்பிட்ட பாகங்களில் ஏற்படும் மாறுதல்களிலும், வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடுகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த ராசிகளில் சந்திரன் பயணிக்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தாவரங்களை பிரித்து விதைப்பு, நாற்றுநடவு, அறுவடை போன்ற வேலைகள் செய்வது மிகுந்த பலனை அளிக்கிறது. இவ்வாறு அந்த மூலக்கூறுகளின் அடிப்படையில் தாவரங்களைப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

#நெருப்பு – விதைகள், பழங்கள் – நெல், கோதுமை, பயறு வகைகள், தக்காளி, கத்தரி, பீன்ஸ், மா, பலா, நிலக்கடலை, பருத்தி போன்றவை

#மண் – கிழங்குகள், வேர்கள் – நன்னாரி, வெட்டிவேர், மரவள்ளி, உருளைக்கிழங்கு, சேனை, மஞ்சள், இஞ்சி, காரட், பீட்ரூட் போன்றவை

#காற்று பூக்கள் – காலிபிளவர், ரோஜா, மல்லி போன்றவை

#நீர் – இலைகள், தண்டுகள் கறிவேப்பிலை, முட்டைக்கோசு, வெங்காயம், கீரை வகைகள், இலைக்காக வாழை நடுதல், மர வேலைக்கான மரங்கள் போன்றவை
இவ்வாறு பிரித்து அந்தந்த மூலக்கூறுகளாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் குறிப்பிட்ட தாவரங்களுக்குண்டான வேலைகளை செய்வது மிகவும் நன்மைத் தரும்.

நன்றி: 
ஆதாரம்: BDAI
காலண்டர் படம்: கரிம வேளாண் கட்டமைப்பு

சிங்கம்_புலி

சிங்கம்_புலி"

(சிங்கம் மற்றும் புலி இவைகளை பற்றி சில இயல்பான விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.. )

காட்டின் இரண்டு பெரும் தலைகள்.. தேர்ந்த வேட்டைகாரர்கள்... கொடூர கொலையாளிகள் சிங்கம் மற்றும் புலி.
இவைகள் இரண்டிற்கும் இடையிலான சில சுவாரஷ்யமான ஒற்றுமை வேற்றுமை பற்றி பார்க்கலாம்.

முதலில் ஒரு சுவாரஷ்யமான கேள்வி சிங்கம் புலி இவை இரண்டுமே பெரும் கொலையாளிகள் சிறந்த வேட்டை விலங்குகள். ஒரு வேளை இவை இரண்டுமே மோதி கொண்டால் இவற்றில் எது வெற்றி பெறும் ?
இந்த கேள்விக்கு பதில் அந்த விலங்கின் வயது அனுபவம் உடல் ஆரோக்கியம் எல்லாம் சார்ந்த விஷயம் தான் என்றாலும் பொதுவாக இவை இரண்டும் மோதி கொள்வதாக வைத்து கொண்டால் இவற்றில் வெற்றி பெறுவது எதுவாக இருக்கும் தெரியுமா ?

உங்களில் பல பேர் சிங்கம் என்று நினைத்திருந்தால் மன்னிக்கவும் அது தவறான விடை .இவை இரண்டும் மோதிக் கொண்டால் அதில் வெற்றி பெறுவது பெரும்பாலும் புலியாக தான் இருக்கும். அதற்கான காரணத்தை பார்க்கும் முன் அதற்க்கான ஆதார சம்பவம் சிலதை பார்க்கலாம்.

இதற்க்கு பண்டைய காலத்தில் இருந்தே ஆதாரங்கள் இருக்கின்றன..பழைய ரோம் நகரத்து பேரரசர்கள் மக்கள் சூழ பெரும் விளையாட்டு மைதானங்களில் சிங்கம் மற்றும் புலிகளுக்கு இடையில் சண்டை வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். அதில் பெரும்பாலும் புலியே வெற்றி பெற்றிருக்கின்றன. அதிகம் பணம் புலியின் மேல் தான் கட்ட பட்டு இருக்கின்றன. அதை பல ஓவியங்களில் கூட அவர்கள் வரைந்து வைத்து இருக்கிறார்கள். புலி வெற்றி பெறுவதை போன்ற பல பழங்காலத்து பெயிண்டிங்குகள் இன்றும் அங்கே காணலாம்.

1800 களில் baroda gaekwad ஒருவர்.. (பரோடா பகுதியை ஆளும் மன்னர்களை குறிக்கும் சொல்.. ) புலி சிங்கம் சண்டை ஒன்றில் கலந்து கொண்டார். அந்த சண்டையை நடத்தியவர் தனது புலி தான் ஜெயிக்கும் என புலியின் மேல் 37000 ரூபாய் பெட் கட்டி இருந்தார் அதை எதிர்த்து மன்னர் பணம் கட்டினார். இறுதியில் சிங்கத்தை புலி அடித்து வீழ்த்தி மன்னருக்கு பெரும் தொகையை (அந்த காலத்தில் 37000 ரூபாய் ) நஷ்டத்தை உண்டு பண்ணியது.

2011 இல் துருக்கியில் உள்ள ankara எனும் zoo வில் ஒரு முறை ஒரு புலி ஓரு சிங்கதை கொன்றது. அதை பார்த்தவர்கள் அது அதனை ஒரே ஒரு அடியில் அடித்து கொன்றதாக சொன்னார்கள்.
மேலும் அங்கே இருந்த ஆய்வாளர்கள் சிலர் புலிகள் அடிக்கடி தங்கள் கூண்டை விட்டு சிங்கத்தின் கூண்டில் சென்று இறையை தேடுவதாகவும் அப்போது சிங்கதை அடித்து கொல்வதாகவும் தெரிவித்து இருந்தனர்.

ஒரு முறை கிர் காடுகளின் சிங்கத்தை புலிகள் அதிகம் வாழும் பகுதியான kuno paplur எனும் இடத்திற்கு மாற்றுவதாக ஒரு திட்டம் வைத்து இருந்தார்கள். ஆனால் அந்த திட்டம் கைவிட பட்டது.
"The University of Minessota’s Lion Research Center " அதற்க்கு சொன்ன காரணம் 'அங்கே காலம் காலமாக வாழ்ந்து வரும் "பழங்குடி "புலிகள் இந்த புதிதாக வந்து சேரும் சிங்கங்களை அடித்துக் கொன்று விடும் என்று தாங்கள் பயந்துதான்' என்றார்கள்.

புலிகள் சிங்கத்தை வெல்ல முடிவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அடிப்படையில் அவைகள் சிங்கங்களை விட பல விஷயத்தில் தலை சிறந்தவை.
சரி சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான சில நடுநிலைமையான ஒப்பீட்டை பார்க்கலாம்.

முதலில் ஒரு சிங்கதை விட ஒரு புலி அளவில் பெரியது.. அதிக எடை கொண்டது.
உலகத்தில் உள்ள சிங்கங்களில் அதிக ஆக்ரோஷமான வலிமையான சிங்கம் என்றால் அது ஆப்ரிக்க சிங்கம் தான்.
ஒரு ஆப்ரிக்க சிங்கத்தின் எடை சராசரியாக 250 கிலோ.
அதே போல உலக புலிகளில் அதிக வலிமை கொண்ட பெரிய புலி என்றால் அது சைபிரியன் புலிகள் தான். அதன் சராசரி எடை 360 கிலோ.

ஒரு சிங்கத்தின் பல் 3. 2 அங்குல நீளம் கொண்டது ஆனால் ஒரு புலியின் பல் 3.6 அங்குலம்.. முதல் 4 அங்குலம் வரை.

சிங்கத்தின் கூர் நகங்கள் 3 அங்குல நீளம் கொண்டது. ஆனால் புலியின் நகங்கள் 4 அங்குலம்.
அப்படியே அகலத்தை பார்த்தால் சிங்கத்துக்கு 5 அங்குல அகலம். புலிக்கு 6.5 அங்குலம் அகலம்.

கால்களால் அறைவதில் சிங்கதால் சண்டையின் போது ஒரு நேரத்தில் ஒரு காலால் மட்டும் தான் அடிக்க முடியும் ஆனால் புலிகள் சண்டையில் இரண்டு காலில் நின்று இரண்டு காலால் சில சமயம் 3 கால்களால் தாக்கும்.

உடல் நீளம் சிங்கம் கிட்ட தட்ட 8..9 அடி என்றால் புலி 9 ..10 அடி

நீந்தும் திறமையில் புலி கில்லாடி சிங்கம் சோம்பேறி.

அதிக வெய்யிலில் மற்றும் மிக குறைவான வெளிச்சத்தில் நல்ல பார்வை திறனில் கிட்ட தட்ட இரண்டுமே ஒரே மாதிரி திறமை கொண்டவை.

Athletic ..body.. மற்றும் flexibility யில் புலிகள் சிறப்பானவை.

வேகம் என்று வரும் போது ஆன் புலியை விட பெண் சிங்கம் வேகமானது ஆனால் அதை விட பெண் புலி வேகமானது.

கடிக்கும் போது கொடுக்கும் அழுத்தம் (biting force ) சிங்கம் 600 psi (pounds per inch ) புலி 1000 psi
(ஒரு தொடர்பில்லாத தகவல் இங்கே சொல்கிறேன் உப்பு நீர் முதலை 3700 psi அழுத்தத்தில் கடிக்க முடியும் )

அடுத்து இரண்டில் யார் அதிக புத்தி சாலி ?? சந்தேகம் இல்லாமல் புலி தான்.
அதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்றால்... Cranial Volume ஐ கொண்டு..
அதிக Cranial Volume என்றால் அதிக புத்திசாலித்தனம் என்று அர்த்தம்..
மேலும் செயல்திறன் சோதனையில் புலிகளின் புத்திசாலிதனம் தெரிகிறது.

கர்ஜனையில் பார்க்கும் போது நிச்சயம் சிங்கத்தை புலி மட்டும் அல்ல வேறு எந்த விலங்கும் அடித்து கொள்ள முடியாது. சிங்கத்தின் கர்ஜனை 8 லிருந்து 10 கிலோ மீட்டர் வரை கேட்கும் புலியின் கர்ஜனை 3 யிலிருந்து 5 கிலோ மீட்டர்.

இது தவிர முக்கியமான ஒரு சிறப்பான குணம் சிங்கத்திடம் உண்டு அது புலியிடம் இல்லை.
அது தான் கூட்டு முயற்சி . team work இல் சிங்கங்கள் கில்லாடிகள். அவைகள் இனைந்து வேட்டை ஆடுகின்றன். கடினமான வேட்டையில் மானசிக வியூகம் திட்டம் அமைத்து வேட்டை ஆடுகின்றன . பெண் சிங்கம் மற்றும் குட்டி சிங்கங்கள் கடினமான வேட்டையில் திணற நேர்ந்தால் அதை வளர்ந்த ஆன் சிங்கம் எதிர்கொண்டு முடித்து கொடுக்கின்றன.

ஒரு நன்கு வேட்டை பயிற்சி அடைந்த சிங்க கூட்டணியை எந்த விலங்குகளும் வீழ்த்துவது மிக அரிது.
சிங்கம் ஒரு சமூக விலங்கு. ஆனால் புலி எப்போதும் தனி ஒருவன். அவைகளுக்கு கூட்டு முயற்சி என்றால் என்ன என்றே தெரியாது. புலி தனித்து மட்டுமே வேட்டை ஆடுகின்றன்.
எனவே 'சிங்கம் சிங்கிலா தான் வரும்' என்ற சினிமா வசனத்தை விட நமது பேச்சு வழக்கில் உள்ள "ஒற்றை புலி, ஒண்டி புலி " போன்ற வாசகம் உண்மையானது.

சிங்கத்திடம் இருக்கும் இன்னோரு தனி தன்மை என்ன வென்றால் அவைகள் தங்கள் ராஜ்யங்களை ஆளும் குணம் கொண்டவை. தங்கள் எல்லையை பராமரிப்பது அதற்குள் யாரையும் அனுமதிக்காமல் போராடி காப்பது எல்லையை விரிவு செய்வது தங்கள் ராஜ்யத்திற்கு ஆபத்து என்றால் உயிரை கொடுத்து போராடுவது.. எதிரி பகுதியை ஆக்கிரமிக்க முயல்வது போன்ற குணாதிசயங்கள் மற்ற விலங்குகளிடமும் இருக்கிறது என்றாலும் சிங்கத்திடம் அது மிக அதிகம்.

எல்லாவற்றிற்கும் மேல் வேட்டை நுட்பத்தில் சண்டை நுட்பத்தில் சிங்கங்கள் கைதேர்ந்தவைகள். சமயத்துக்கு சூழ்நிலைக்கு ஏற்றார் போல புதிய நுட்பங்களை உண்டாக்க கூடியது.

கூட்டமாக உள்ள சிங்கத்திடம் புலி ஜெயிக்க முடியாது ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் புலியை சிங்கம் ஜெயிக்க முடியாது.
ஒரு அடிபட்ட புலியை விட ஆபத்தான விலங்கு வேறு எதுவும் இல்லை என்பார்கள். ஆம் அடி வாங்கி விட்டால் அவைகள் இன்னும் ஆபத்தானவை.

காட்டு விலங்குகள் என்றைக்குமே வியப்பானவை.. அதில் இவை இரண்டுமே மிக சுவாரஷ்யமான காட்டுத்தனமான முரட்டு படைப்புகள் தான்.
ஆனால் அதில் சிங்கம் தானே அரசன் என்கிறார்கள்.

ஆம்...சிங்கம் தான் காட்டின் அரசன். அவைகள் தான் காட்டை ஆளுகின்றன.
ஆனால்.....
அதற்கு காரணம் புலிக்கு ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லாமல் இருப்பது தான்.

(உலகை ஆள நினைப்பவர்கள் தங்கள் சின்னமாக சிங்கத்தை தேர்ந்தெடுத்ததும் ... அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடியவர்கள் தங்கள் சின்னமாக புலியை தேர்ந்தெடுத்ததும் தற்செயலானது தானா ??? )