Wednesday, 15 January 2020

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள்.

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது
போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடு மற்றும் பன்றிக்கும் பொருந்துகிறது.
இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.
படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள "பகீர்' தகவல்கள் வருமாறு:
மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர்.
அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் (இந்திய ரூபாய்) வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது.
மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர்.
அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.
பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் "சிரப்'களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
எலும்பு பவுடர் உரம்: வெளிநாடுகளில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.
மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகியவற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும் என்பதால், அவற்றை தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.

Thursday, 9 January 2020

Communication gap!

இணைப்பில் உள்ள காணொளி தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு விடயத்தை கடத்தும்போது அது. எப்படி உருமாறுகிறது.. அதுவும் சமகாலத்தில் வாழும் ஒரே சுற்றத்தைக்கொண்டவர்களுக்கே இந்த நிலையென்றால்...
ஒருவர் ஒருகாலத்தில் சொன்ன கருத்துகள் அன்றைய சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்ப இருக்கும் அதை பலகாலம் கடத்தி ஆவணப்படுத்தப்படும்போது அந்த கருத்துகளின் சிதைவு எப்படியாகியிருக்கும் என்பதை உங்கள் (Abuasia) முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.. குறிப்பு : நபிகள் வாழ்ந்த காலமும் ஆவணப்படுத்தப்பட்ட காலத்திற்கும் உள்ள இடைவெளியில் என்ன நடந்திருக்கலாம் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்..
100-150 வருடங்களுக்கு முன்னர் எத்தனைபேருக்கு எழுத படிக்கத்தெரியும் .. இது தேவையில்லாமலே மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.. அப்ப இந்த எழுத்தாக்கம் செய்யப்பட்ட நூல்களின் (இலக்கியங்கள்) பயண்பாடு யாருக்கானது? இதன் மூலம் பயண் ஈட்டக்கூடியவர்களுக்கே இந்த எழுத்துகள் பயண்பட்டிருக்கும்.. எழுத்துருவாக்கம் என்பது வணிகத்தின் தேவை அதனாலேயே எதெயெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டதோ அத்தனையும் வென்றவர்களாலும் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ப எழுதப்பட்டிருக்கும் … அதாவது யாரோ யாருக்காகவோ யாருடைய கருத்தையோ எழுத்துருவாக்கம் செய்யவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது உற்று நோக்கினால் புரியும்… ஆனாலும் சில விடயங்களை சமூக அமைப்பாக கடைபிடித்து வந்தவைகளுக்கான காரணம் தெரியாவிட்டாலும் அதை பற்றிய உண்மையை அந்த செயல்களின் மூலம் உணரமுடியும்.. சந்திரனின் பிறையை / மறைநிலவு / முழுநிலவு பார்தது சில விடயங்களை முடிவு செய்வது.. இவற்றை ஆவணப்படுத்தத்தேவையில்லை அவை வாழையடி வாழையாக மரபாக கடத்தப்படும் மரபறிவாகவும், நினைவலைகளாகவும் கடத்தப்படும்… இவற்றை எழுத்தில் விவரித்தால் அதனின் கருத்து எப்படி வேண்டுமானாலும் சிதையும்...
75 வருடத்திற்கு முன் என் மீது இந்து என்று அடையாளம் திணிக்கபடாதவரை எனக்கு எந்த மத அடையாளமும் இல்லை.. அதே மாதிரிதான் 300-700 வருடங்களுக்குள் இசுலாம் / கிருத்துவத்திற்கு மாறியவர்களின் நிலை.. அதற்கு முன்னர் இந்த மதம்/சமயம் நகரத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அவர்களுக்கும் கிராமங்களிலும் காடுகளிலும் வாழ்ந்த வர்களுக்கு சம்பந்தமில்லை.. இவர்களைதான் பழங்குடிகள் என்கிறேன்.. பழங்குடி / தற்சார்பு வாழ்வியல் என்றால் இலைதலையை கட்டிக்கொண்டு காடுகளில் மட்டும்தான் வாழ்பவர்கள் என்கிற உங்கள் நினைபிற்கு நான் பொறுப்பாகமுடியாது.. இன்னும் சொல்லப்போனால் இசுலாம் / கிருத்துவம் / இந்து என்று அடையாளப்படுத்துமுன் உங்களையும் சேர்த்தே அனைவரும் பழங்குடிகள்தான்.. மதம்மாறியவர்களின் குலங்களை பார்ததிருக்கிறீர்களா, நகரத்தில் வாழும் பிராமண மற்றும் உயர்ந்த குலங்களிலிருந்து எவ்வளவு பேர் மதமாறியிருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்தை உற்று நோக்கினால் புரியும்… என் பழங்குடி மரபு நான் நினைத்தாலும் அழிந்துபோகாது.. அதை அழிக்க காலமும் அதற்கெதிராக மரபு திணித்தலும் தொடர்ந்து என்மீது ஏவப்பட்டாலே சாத்தியம்...
எனக்கு எது தேவை என்பதை உணர்கிறேனோ அதைமட்டுமே படிப்பேன்.. இயற்கையை பற்றிய தேடுதலும், புரிதலும் மற்றும் உணர்தலும் இப்போதைய தேவையாக உணர்கிறேன் .. இதற்கே எனக்கு நேரமில்லை.. இதில் அதைப்படி,இதைப்படி என்று சொன்னால் எப்படி?
ஒருவருக்கு மீனைக்கொடுப்பதைவிட மீனைப்பிடிக்க கற்றுக்கொடுத்தால் மிகச்சிறப்பு.. அதேமாதிரிதான் ஒருவருக்கு கருத்தை சொல்லுவதைவிட்டுவிட்டு அவரை சிந்திக்கவைத்துவிட்டால் அவரே அவருக்கு தேவையான கருத்துகளை காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப உருவாக்கிக் கொள்வார் இதற்கு நூல்களைப்படித்தால் பற்றாது அதனின் அடிப்படையை புரிந்து கொண்டு இயற்கையோடு ஒன்றிணைத்து பார்ககவேண்டும் அப்போது புலப்படும்.. எந்த நூல்களின் உதவியின்றி இயற்கை நமக்கு பாடம் எடுத்ததுக்கொண்டேயிருக்கிறது நாம் கவனிப்பதேயில்லை.. நாமும் இயற்கையை கவனிக்க ஆரம்பித்தாலே போதும்…
இங்கே இவற்றை பதிவிட்டது சிந்திக்க மட்டுமே.. அந்த நூலில் இது இருக்கிறது.. இந்த மார்ககத்தில் இப்படியிருக்கிறது.. வணிகம்னா என்ன.. தற்சார்புன்னா என்னா.. இல்லுமினாட்டினா என்ன.. ஜீன் / கருப்புன்னா என்ன.. என்ற கேள்விகளை வைப்பது வேறு.. அதை தேடி உணருவது வேறு… நீங்கள் தேடப்போவதில்லை என்பது எனக்கு தெரியும்.. விவாதிக்க தயாராகியிருப்பீர்கள்.. நான் தயாராகவில்லை..
எனக்கு தேடலையும், ஒரு விடயத்தின் அடிப்ப்டையும், இயற்கையையும், வணிக இயங்கியலையும், தற்சார்பையும் பற்றியும் சிந்திக்கவைத்த இந்த முகநூல் மூலமாக விதைத்த அந்த மூன்றுபெருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்… அவர்களுக்கும் செய்யும் கைமாறு நான் இதே தேடலை மற்றவர்களுக்கு விதைக்கவேண்டும்… கருத்துகளை அல்ல..

Wednesday, 8 January 2020

இந்த பதிவை படிக்கும் போது, உங்கள் மனதில் தோன்றும் சாதிய படத்தை இன்னும் பார்க்கவில்லை..

இந்த பதிவை படிக்கும் போது, உங்கள் மனதில் தோன்றும் சாதிய படத்தை இன்னும் பார்க்கவில்லை.. 

சாதி இங்கு திணிக்கப்பட்டதா..?
உருவாக்கப்பட்டதா..?
பிறந்ததா..?

பிறந்தது எனில் யார் பெற்றெடுத்தார்....?
உருவாக்கப்பட்டது எனில் யார் உருவாக்கினார்..?
திணிக்கப்பட்டது எனில் யாரால் திணிக்கப்பட்டது..?

இந்த மூன்றுக்கும் ஒரே பதில் தான், சிலர் சொகுசாக வாழ்வதற்காக பலரை அடிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட வார்த்தையை சாதி.. 

எனது வலியை ஒருத்தன் பேசிவிட்டான் என்று தானே இங்கு பெரும்பாலோர் சாதிய ஒழிப்பு ( அ ) தீண்டாமை 😂😂😂 படங்களை கொண்டாடுகிறீர்கள்..

ஆனால் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும்எதிர்வினை உண்டாக்கும் என்பதை மறந்து விடுகிறீர்கள்..

எதிர்வினை எது..? 

இந்த பதிவில் முதலில் கேட்ட கேள்வியை மறுபடியும் படியுங்கள்.. அதற்கான பதிலை தேடுங்கள்..

இங்கு சாதிய படங்கள் ஒருபோதும் சாதி என்னும் சொல்லை உருவாக்கியவர்களை பற்றி ஒருபோதும் பேசுவதில்லை..

அதற்கான காரணம் இதுவரை தென்படவும் இல்லை..

ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே உங்களை மறுபடி மறுபடியும் கட்டமைக்கின்றனர்..

முதலில் இங்கு சாதி இருந்ததா..? என தேடுங்கள்..

குல வரலாறு பேசியவர்கள், திடீரென சாதிய தீண்டாமையை பேசுகிறார்கள்..

ஏன்..? இந்த முரண்..

சாதியை இல்லாத ஒரு இனத்திடம் எப்படி எந்த சாதி..?
உயர்ந்தது..? 
தாழ்ந்தது.? என பிரிவினை வந்தது என பேசுங்கள்..

இங்கு எல்லோரும் செய்கின்ற தவறு “என் வலிகளை ஒருத்தன் பேசிவிட்டான், அதனால் அந்த படத்தை கொண்டாடுகிறேன், அந்த படத்தின் கருத்துகள் அருமை” என புகழ்ந்து பேசாதீர்கள்..

இங்கு அவரவர் அவரவர் வேலைகளை எந்தவித பாகுபாடு இல்லாமல் செய்து கொண்டிருந்த போது, கடவுள் *** வந்தவன் என கூறுபவர்கள் தான், முதலில் இங்கு பிரிவினையை உருவாக்குகிறார்கள்..

ஏனெனில் அவர்கள் சொகுசாக வாழ வேண்டும் அல்லவா..!!!!!

இங்கு உங்களின் வலிகள் திரையில் புரட்சியாக பேசப்பட வில்லை,

அதற்கு மாறாக அது வணிகம் செய்யப்படுகிறது..

உடனே கேள்வி எழும் நீயும் தான் இந்த முகநூலில் புரட்சி செய்கிறேன் என கூறுகிறாய் என்று..

ஆம், ஆனால் நான் அதை வணிகமாக்க வில்லை..

இங்கு அவர்களின் மூலதனம் உன் உணர்ச்சிகளும், வலிகளும் தான்..

உன் வலிகளை திரையில் பேசி விட்டதால், எதையும் ஆதரவளிக்காதே..

காரணம் அதற்கான எதிர்வினையையும் நீ சந்திக்க வேண்டி வரும்..

இங்கு சாதிய, புரட்சி சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன..