Thursday, 28 November 2019

*மிளகில் இருக்கு சூட்சுமம்*

*மிளகில் இருக்கு சூட்சுமம்*

* ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.

* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.

* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.

* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.

* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.

* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.

* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.*

* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.* *வாழ்கவளமுடன்*

Tuesday, 26 November 2019

*நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்*

*நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்*

நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக
மக்களுக்கு நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ்நாடு அரசின் எந்தெந்த துறைகளின்கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை.
நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
புல எண் :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk ),வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக் கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.
நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பரா மரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
1.பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் நீங்கள் வாங்கவிருக்கும் நிலம், விற்பவரின் அனுபவத்தில் இருக்கும் போது அந்த நிலதின் உரிமை யாளர் யார்? எத்தனை பேர் மற்றும் அந்த நிலம் அட மானத்தில் உள்ளதா? அல்லது அந்த நிலத்தின் மீது வழக்கு எதாவது நடந்து வுருகிறதா?  என்பன போன்ற கேள்விகளுக்கு பத்திர பதிவு அலுவலகத்தில் வில்ல ங்க சான்று (EC-Encumbrance Certificate) கேட்டு மனு செய்து அதில் வில்லங்கங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்
2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க் கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ’ பதிவேடு (‘A’ Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை, நமக்குத்தான் இருக்கிறது என்பதற் கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை, யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Sub division)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட் டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன் பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணு க்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவர ங்கள் இதில் இருக்கும்.
அ’ பதிவேடு (‘A’ Register) :
இப்பதிவேட்டில் . . .
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை,போன்ற விவரங்க ள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிற து .

கிரையப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்த க் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரை யப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட் டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.
கிரையப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவா ளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவர ங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2.சொத்த

ு எழுதிக்கொடுப்பவரின்புகைப்படம், கைரே கை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம், சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

ஆவணங்கள்:
01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்ப வர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டு ம்முறை அரசால்நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவ ரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங் கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப் படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால்போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால்  குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொ ரு தாளின் பின்புறமும் இந்தக்கிரயப்பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவா ளர் கையொப்பம் இருக்கும்.
நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந் து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அத னால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யும்போது பதிவி ன் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக் கப்பட்டிருக்கும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமா க கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரா ர்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:
நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட் ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறு த்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ண யம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதி வாளர்அலுவலகத்தில் தாக்கல்செய்யவேண்டும்.முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியா த நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.
இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதி ப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்ப திவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலு வலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.
பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்ய ப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமா கவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.
முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப்செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார் பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய் வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.
சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரி ன் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைக ளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப் பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவ ரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின் புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முக வரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்பட ங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டண

ம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண் டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத் தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீ தைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவ து சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.
பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத் திரைதாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ண யிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப் பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத் தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செ ய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடு வார்.மாவட்டஆட்சியர் அலுவலகத்தில்(Collectoroffice ) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வை யிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடி வு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகை யில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர் ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதி ப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பண மாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத் திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத் தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.

சில முக்கிய குறிப்புகள்:-

1.முதலில் நீங்கள் வாங்கவேண்டிய சொத்தில் ஏதாவ து வில்லங்கம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள் ளவேண்டும். இதற்கு, நீங்கள் வாங்கஇருக்கும் இடத்தி ற்கான பத்திரத்தின் ஒரு நகலை எடுத்து சம்மந்தப்பட் ட சர் பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான கட்டணத்
 தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

2. மிக முக்கியமான விஷயம்: முன்பணம் (அட்வான் ஸ்) மிகக்குறைந்த அதாவது 5000 முதல் 10000 வரை மட்டுமே முன்பணமாக கொடுக்க வேண்டும். ஒரு வே லை அதிகமாக முன்பணம் செலுத்த வேண்டி வந்தால் செக் அல்லது டிடி கொடுப்பத்டு சால சிறந்தது. உடன் விற்பனை
 உடன்படிக்கையையும் பெற்றுகொள்வது முக்கியம்.

3 .சொத்தை பதிவு செய்யும் பொழுது மட்டுமே முழு தொகையையும் கொடுக்க வேண்டும்.
 அதுவும் செக் அல்லது டிடி கொடுப்பது உசிதம்.

4 .பதிவு செய்யும் முதல் நாள் கூட வில்லங்கம் எடுத்து பார்ப்பது
 நல்லது.

5 .சொத்தை வாங்கி *பிறகு பட்டா மாற்றிக்* *கொள்வது மிகவும் அவசியமாகிறது. பட்டா உங்கள் பெயரில் இரு ந்தால் வேறு யாரும் சொந்தம்* *கொண்டாடவோ வேறு பிரச்சனைகளோ வருவதற்கு வாப்பு கிடையாது*

இயற்கை மரபணுவை மாற்றி மரபணுவிலேயே விஷத்தை கலக்கும் மான்சான்டோவின் மற்றொரு கொடூர தயாரிப்பு "ரவுண்ட் அப்"...

இயற்கை மரபணுவை மாற்றி மரபணுவிலேயே விஷத்தை கலக்கும்  மான்சான்டோவின் மற்றொரு கொடூர தயாரிப்பு "ரவுண்ட் அப்"...

இயற்கை விவசாயியாக ஆன பிறகு நம் விவசாயிகளை படுத்தும் பாடுகளையும்,நம் மக்கள் படும் பாடுகளையும் அறிகிறேன்.
திக்கு தெரியாமல் திகைக்கிறேன்.
Round Up பற்றிய ஓர் பார்வை.

"ரவுண்ட் அப்" களைக் கொல்லி கேன்சர் உருவாக்க தயாரிப்பு!!

நாம் அனைவரும் விவசாயத்தில் களைச் செடிகளைக் கொல்ல பயன் படுத்தப்படும்    ரசாயன களைக் கொல்லியின் தீமைகளைப் பற்றி அறிந்து இருப்போம்.

ஆனால் களைக் கொல்லிகளிலேயே கொடூரமானது  மான்சான்டோவின் "ரவுண்ட் அப்" தான்.

நம் பட்டி தொட்டிகளில் கூட "ரவுண்ட் அப்" என்று விவசாயிகளிடம் கேட்டால் சாதரணமாக அதன் விளைவை பற்றி தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள். 

இந்த ரவுண்ட் அப் பில் கிளைபோசேட் Glydhosate எனும் கேன்சரை உற்பத்தி செய்யும் மிகக்  கொடூரமான ரசாயனம் சேர்க்கப்படுகிறது என்பதை அறிவீர்களா என் விவசாய நண்பர்களே!!.

ரஙுண்ட் அப் பை அமெரிக்க நீதி மன்றமே "இது கேன்சர் ஊக்கிகளால் நிரம்பியது" என்று தீர்ப்பை வழங்கி உள்ளது உங்குக்கு தெரியுமா என் அப்பாவி நண்பர்களே?!.

உங்களுக்கு ஒன்றுமே தெரியாது.
.இது மட்டும் அல்ல.

ரவுண்ட் அப் பை ஒரு மைக்ரோ மில்லி உட்கொண்டாலும் தேனீக்களின் இருதயத் துடிப்பு 80% குறைந்தே போய் விடுகிறது.

ரவுண்ட் அப் க்கு விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் பலியாவதும் இது போலதான்.

இளைஞர்களே உங்களுக்கு திடீர் ஹார்ட் அட்டாக் வந்து உங்கள் குடும்பத்தை தவிக்க விட்டு மறைந்து போவது ஏன் என்று புரிகிறதா?.

உணவில் விஷம் கலக்கும் இந்த  திட்டத்தை ஏதோ வெறும் விவசாயிகளின் பிரச்சனைதான் என்று எண்ணி விடாதீர்கள்.

இதையும் மீறி நம் நாட்டு சிறு விவசாயிகள் ரவுண்ட் அப் பை வாங்குவது இல்லை. தங்கள் குடும்பதோடு களைகளை பிடுங்கி விடுகிறார்கள்.

இதை தடுத்து களை பறிப்பதற்கு கூட ஆள் இல்லாமல் செய்வதற்காகதான் உங்களுக்காக சேவை எனும் பெயரில் உங்களை வதைக்க கடந்த அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்.

இந்த திட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த மூளை Jean Treze கிரீன் டிரீஸ் எனும் அழிப்பின் தொடர்ச்சிதான் இந்த அனைத்து மனித அழிப்பு செயல்.

இந்த ரவுண்ட் அப் பை மீறி ஒருவேளை நீங்கள் உயிர் தப்பித்தால் பயிர்களின் மரபணுவிலேயே விஷ மரபணுவை கலக்கும் மரபணு மாற்றப் பயிர்கள் மான்சான்டோவின் பிற தயாரிப்புகளில் இப்போதே நடைமுறையில் உள்ளது.

அதைதான் பெசில்லஸ் துரிஞ்சென்சிஸ் Bacillus Thuringensis என்ற பாக்டீரியா கிருமியின் விஷ மரபணு பயிர்களின் மரபணுவிலேயே கலக்கப்படுகிறது.

இப்போது இந்தியாவில் பருத்தி 100% மரபியல் மாற்ற பருத்திதான். பருத்தி என்றால் உடுத்தும் துணிதானே. அது உணவு இல்லையே என்று வெகுளியாக நினைக்கும் குட்டீஸ்களாகவே உங்களை பழக்கி விட்டார்கள்.

1. மாடு எருமைகளுக்கு பால் அதிகம் சுரப்பதற்காக பாரம்பரியமாக நாம் பயன் படுத்துவது பருத்திக் கொட்டைதான்.

2. தற்போது வரும் பருத்தி எல்லாமே நம் பாரம்பரிய பருத்தி அல்ல. BT மரபியல் மாற்ற விதைதான்.

3. பாலிலும்,மாமிசத்திலும் இந்த BT மரபணு மாற்ற பருத்தி கலந்து விடுகிறது.

4. BT மரபியல் மாற்ற ரசாயன பருத்தி இலை தழைகளை ஆடு மாடுகளுக்கு உணவாக போடுகின்றனர்.

5. நாம் கடந்த 10 வருடங்களாக குடிக்கும்
பருத்திப் பால் மரபியல் மாற்ற BT பருத்தி விதை மட்டுமே!!.

இவற்றுக்கெல்லாம் மாற்று நெடுங்கால பயிராக மரம் போல் வளரும் நம் பாரத நாட்டின் பூர்வீக பருத்தியான பூனூல் பருத்தி எனப்படும் நாட்டு மரபணு பருத்திதான். 
இதன் பெயர் Gossypium arporeyum.

பருத்திக்கு அடுத்தபடியாக கத்திரி,கடுகு,அமெரிக்க வந்தேறி மக்கா சோளம்,நெல் என அனைத்திலும் BT யை நுழைத்து சட்ட விரோத சோதனைகள் நமது வரிப் பணத்திலேயே நம்மை வேரறுக்க கோவை மற்றும் கர்நாடகா தார்வாடு வேளாண் பல்கலைகழகங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

உங்களை அங்கும் இங்கும் ஓட விடாமல் தடுக்கவே மான்சான்டோவின் ரவுண்ட் அப்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

உழவே தலை.

உங்கள் விவசாய நண்பன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.

பகிர்வது உங்கள் கைக் குழந்தைக்காக.

பிரபாகரன் எப்படி?கேப்டன் பிரபாகரன் ஆனார்..


         பிரபாகரன் எப்படி?கேப்டன் பிரபாகரன் ஆனார்..
       *இலங்கை அங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்ததிலிருந்து தமிழர்களுக்கும்,சிங்களர்களுக்கும் இடையே இன பிரச்சனை தோன்றியது.வரலாற்றில் மூத்த இனமான தமிழ் இனத்தை அடக்கி ஆள வேண்டும் என சிங்களர்கள் முடிவு செய்தனர்.இதனால் தமிழர்கள் சிங்கள இன வெறிக்கு எதிராக போராட ஆரம்பித்தனர். இந்த போராட்டம் தனி தமிழ் ஈழ போராட்டமாக மாறியது.இதனால் ஈழத்தில் பல விடுதலை இயக்கங்கள் தோன்றின.1974ம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது.இதற்கு யாழ்பண மேயர் ஆல்பர்ட் துரையப்பா அனுமதி அளிக்கவில்லை.காரணம் இவர் சிங்கள அரசுக்கு ஆதரவாகவும்,தமிழர்களுக்கும் எதிராகவும் செயல் பட்டார். தமிழரின் போராட்டங்களுக்கு இவர் செவிசாய்க்கவில்லை.இருந்தாலும் இவர் யாழ்ப்பாணத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தார்.இப்பொழுதுதான் 1974 ஜனவரி மாதத்தில் உலக தமிழர் ஆராய்ச்சி மாநாடு நடக்க இருந்தது.அதற்கு இவர் அனுமதி அளிக்கவில்லை காரணம்,மாநாடு நடந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிடும் என்ற பயம் இருந்தது.தடையையும் மீறி மாநாடு நடந்தது.இதனால் மேயர் ஆல்பட் துரையப்பா சந்திரசேகர் தலைமையில் காவலர்களை அனுப்பி மாநாட்டில் கலவரம் செய்ய வைத்தார்.இந்த கலவரத்தில் 9தமிழர்கள் கொல்லப்பட்டனர்.இதனால் தமிழ் ஈழ மாணவர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. பின்னர் விரிசல் அவரை கொலைசெய்ய வேண்டும் என்ற வெறியாக மாறியது.
இதனால் தமிழ் ஈழ இளைஞர் சிவகுமாரன் ஆல்பட் துரையப்பாவையும்,காவல் ஆணையர் சந்திரசேகரையும் கொள்ள திட்டம் போட்டார்.இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிவகுமாரன்,சந்திரசேகரை கொலை செய்ய முயர்ச்சி செய்தார்.ஆனால் அப்பொழுது கைதுப்பாக்கி பழுது அடைந்த காரணத்தால் அவரால் சந்திரசேகரை கொலைசெய்ய முடியவில்லை.பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னம்பாளை எனும் இடத்தில் ஆல்பர்ட் துரையப்பனை கொலை செய்ய முயர்ச்சி செய்தார்.அந்த முயற்சியும் தோல்வி அடைந்து. இதனால் அவர் தமிழகம் செல்ல முயர்ச்சி செய்தார்.ஆனால் அவரிடம் தமிழகம் செல்ல பணம் இல்லை.இதனால் ஒரு வங்கியில் திருடி மாட்டி கொண்டார். பிறகு அவர் சயனைடு சாப்பிட்டு1974 ஜூலை 27 அன்று தற்கொலை செய்து கொண்டார்.இதன் பிறகு தமிழ் ஈழ போராட்டம் ஆனது ஆயுத போராட்டமாக மாறியது.சிவகுமாரன் தான் ஆயுத போராட்டத்திற்கு அடித்தளம் போட்டார். இதற்கிடையே தமிழ் புலிகள் ஆல்பட் துரையப்பாவை கொலை செய்ய திட்டம் போட்டனர்.இந்த திட்டத்தில் 4 பேர் பங்கு எடுத்துகொண்டனர்.அவர்கள் கலாபதி,கிருபாகரன்,பற்குணராஜ மற்றும் பிரபாகரன் ஆகியோர் பங்கு எடுத்தது கொண்டனர்.சிவகுமாரன் இறந்து முதலாம் ஆண்டு நினைவுநாள் 1974,ஜூலை 27 ம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு ஆல்பர்ட் துரையப்பா பாதுகாப்பு இன்றி வந்தார்.அவருக்கும கிருபாகரன் அவர்கள் வணக்கம் செலுத்தி விட்டு சென்றார்.பிறகு பிரபாகரன் துப்பாக்கியால் ஆல்பர்ட் துரையப்பாவை சுட்டார்.பிரபாகரன் சுட்ட குண்டு ஆல்பர்ட்டின் உயிரை பறித்தது.இதன் பிறகு இந்த செய்தி இலங்கை முழுவதும் காட்டு தீ போல் பரவியது.பிரபாகரனின் பெயர் இலங்கை முழுவதும் பரவியது. பிறகு 1976ம் ஆண்டு புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மாறியது. விடுதலை புலிகளின் கேப்டன் பிரபாகரன் ஆனார்....அதன் பிறகு புலிகளின் வேட்டை தொடர்ந்தது..........