Friday, 20 January 2023

புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்

*சென்னையில்... மரணம்  துரத்துகிறது, உஷார்!*

சென்னையில் கடந்த நான்கு மாதமாக இறந்தவர்களின் *வயது 33/31/34/35/37/39/41/43/46* இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர்... காரணம் :- தயவு செய்து யாரும் புரோட்டாவும் முட்டையும் அதிக அளவில் தினமும் உட்கொள்ள வேண்டாம்... கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிடும் எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்! திங்கள் அன்று இறந்தவர் வயது 37 இந்த (மாரடைப்பு) புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள்  முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு,  புரோட்டா தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள் இதில் தான் எத்தனை வகைகள்? *விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா சில்லி புரோட்டா*  இப்படியாக இளைஞர்களை  கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்து  வருகிறது ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள் *கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்* ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் *கொடிய மைதாவால்* செய்யப்படுகிறது  இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால் மைதாமாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின.  புரோட்டாவும் பிரபலமடைந்தது. *மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது*  குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்  அதுமட்டுமல்ல,  மைதாமாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் *பெண்சாயில் பெராக்ஸைடு என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது* இந்த ரசாயனம் தான் நாம் *தலையில் நரைத்த முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம்*  இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அது மட்டுமல்ல,  *அலோக்கான்* என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல்கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினா மோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில் தான் அதிகம். உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். *பாலக்காடு மாவட்டம்* முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும் அங்கு பிரச்சாரம் தொடர்கிறது. இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான *கேழ்வரகு, கம்பு, சோளம்* உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்தபுரோட்டாவை புறம் தள்ளுவோம்.  நாமும் விழித்துக் கொள்வோம்  நம் தலைமுறையையும் காப்போம்!நண்பர்களே...

*தயவு செய்து இதை பகிருங்கள்*
       இப்போ தெரிந்திருக்கும்
ஏன்' டயாபிட்டீஸ்'  வேகமாக
பரவுகிறது என்று!!

Friday, 13 January 2023

இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. போகி என்றால் மகிழ்ச்சியானவன் என்று பொருள்.

 "#காப்புக்கட்டுதல்"

என்பது வெறும் சடங்கல்ல...

நமது முன்னோர்களின் மருத்துவ அறிவு!

#போகிபண்டிகை, மார்கழி மாதத்தின் கடைசி தினத்தில் பழையன கழிந்து புதியன புகும் நாளான அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும்.

பொங்கலிடுவதற்கு முன்னர் "#காப்புகட்டுதல்" என்ற பெயரில் வீட்டின் வாசலில்  வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும், விளைநிலங்களின் நான்கு திசைகளிலும் "#காப்பு_வளைத்தல்" என்ற பெயரில் எல்லைப் பகுதிகளை கண்டறிவார்கள்.

#வயல்விழா :- வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றழைக்கப்படுகிறது. மருதநிலத்தின் கடவுள் இந்திரன், இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. போகி என்றால் மகிழ்ச்சியானவன் என்று பொருள்.


விளைநிலங்களின் கடவுளான இந்திரனை வணங்கும்போது "பசி, பிணி, பகை" நீக்கி, "சம்பா, குறுவை, தாளடி" என்ற முப்போகத்திலும் நல்ல விளைச்சலைக் கண்டு முன்னேற்றம் அடைய #வயல்விழாவாக முற்காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த போகிப் பண்டிகை, காலப்போக்கில் தற்பொழுது #வாசல்பொங்கலாக கொண்டாடப்படுகிறது.

"#காப்புக்கட்டு" பற்றி சிறு விளக்கம்.

1. ஆவாரம் பூ,

2. பீளைப்பூ,

3. வேப்பிலை,

4. தும்பை செடி, அல்லது துளசி,

5. நாயுறுவி செடி,

என ஐந்து வகையான செடிகளை காப்புகட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் காலப்போக்கில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை, என்று மூன்றுவகை மட்டுமே பயன்படுத்திவருகிறார்கள். அதுவும் நகரங்களில் முற்றிலும் மறந்துவிட்டனர்.

மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள். தைமாதம் முதல் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும். எனவே முன்னெச்சரிக்கையாக தங்களைப் பாதுகாத்துக்கொள்ள போகி பண்டிகை அன்று வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களின் நான்கு மூலைகள் மற்றும் வாசற்படிகளில் ஆவாரம்பூ, வேப்பிலை, சிறுபீளை, தும்பை இலை, இவைகளை ஒவ்வொரு கொத்தாத மாவிலை தோரணத்துடன் சேர்த்து காப்புகட்டும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலையாகவும் கட்டி வணங்குவார்கள்.

#ஆவாரம்பூ உடல் வெப்பமாவதை தடுக்கும். #வேப்பிலை காற்றில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் கிருமி நாசினி. #மாஇலை உடல் களைப்பை நீக்கும். #சிறுபீளை நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். #தும்பை வாசம் தலைவலியை போக்க கூடியது. #துளசியின் மகிமை பற்றி நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான் அந்த மகாலட்சுமியின் அம்சம். அதுமட்டுமில்லாமல் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது.எனவே இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வீட்டு வாசலில் கட்டி வந்தார்கள் நம் முன்னோர்கள்.

எனவே அனைவரும் தங்களது இல்லங்களிலும் தொழிற்கூடங்களிலும் மேலே குறிப்பிட்டபடியோ அல்லது தங்களுக்கு தெரிந்த மூலிகைச் செடிகளை ஒன்றாக சேர்த்து நாகரீகம் கருதாமல் காப்புக்கட்டுங்கள். தங்களின் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் நமது முன்னோர்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்க விளக்கமாகச் சொல்லிகொடுத்து, போகிபண்டிகையில் கடந்த காலத்தில் நடந்த நல்ல நிகழ்வுகளுக்கு நன்றி சொல்லி வணங்குவோம்.

அனைவருக்கும் எனது 

#இனிய_பொங்கல்_நல்வாழ்த்துக்கள்.🙏🙏