Sunday, 31 January 2021

பாம்பு பஞ்சாங்கம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும்... இது bio-dynamic farming பற்றியது

பாம்பு பஞ்சாங்கம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும்... இது bio-dynamic farming பற்றியது

———

உயிராற்றல்_விவசாய_பஞ்சாங்கம் 

#உயிராற்றல்_விவசாய_பஞ்சாங்கம்

இந்த நாட்க்குறிப்பு உயிராற்றல் வேளாண்மை (BIO DYNAMIC FARMING) வழி முறைகளில் ஒரு குறிப்பிட்டு கூறக் கூடிய அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் ஒவ்வொன்றிலும் அதாவது அந்த குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் விவசாய வேலைகள் என்ன செய்தால் நமக்கு ஆரோக்கியமான தாவரங்கள் வளர்ந்து அதிக விளைச்சலையும், தரமான மற்றும் சுவை கூடிய விளைச்சலையும் பெறலாம் என அறிந்து கொள்ள உதவும்.

அவ்வாறு ஒவ்வொரு நாளும் நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் மற்றும் இராசிகள் அவற்றின் அடிப்படை சுற்றுப்பாதையில் குறிப்பாக சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏற்படும் நிகழ்வுகளை கணித்து அதனால் தாவரங்களிலும் மற்றும் மண்ணிலும் ஏற்படும் மாறுதல்களை கணக்கிட்டு அதற்க்கேற்றவாறுநாம் செய்ய வேண்டிய வேலைகளை பிரித்து கூறப்பட்டுள்ளது.

இந்த நாட்குறிப்பால் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள்

-மேல் நோக்கு நாட்கள்
-கீழ் நோக்கு நாட்கள்
-தவிர்க்க வேண்டிய நாள்
-அபோஜி (தொலைவு நிலா)
-பெரிஜி (அண்மை நிலா)
-அமாவாசை
-பெளர்ணமி
-சந்திரன் எதிர் சனி
-இராசி மண்டலத்தில் சந்திரன் பயணம் 
செய்யும் நாட்கள்

#மேல்_நோக்கு_நாட்கள்
இந்த நாட்களில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் தொடர்ந்து 13.6 நாட்கள் (சுமாராக) அதிகரித்துக் கொண்டிருக்கும். இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்கு மேலுள்ள பகுதிகள் வளர்ச்சி வேகம் அதிகரிக்கின்றது.
ஆகவே இந்த நாட்களில் 
1. விதைகளை நேரடியாக நடவு செய்தல் 
2.நாற்றுகளுக்காக விதைத் தெளிப்பு – கத்தரி, தக்காளி, நெல் மற்றும் மரங்களின் விதைகள் தேங்காய் போன்றவை 
3. இலை வழி ஊட்டமாக தெளித்தல். 
போன்றவற்றை செய்யலாம்.

#கீழ்_நோக்கு_நாள
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 13.6 நாட்கள் (சுமாராக) தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் எனப்படுகின்றது. 
இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்குள் உள்ள பகுதிகள் வளர்ச்சி அதிகரிக்கின்றது. மண்ணில் நுண்ணுயிர் பெருக்கும் அதிகரிக்கின்றது.
ஆகவே இந்த நாட்களில்
1.நாற்றுகள் மாற்றி நடவு செய்தல்
மரவள்ளி குச்சிகள், கரும்பு கரணைகள் க்ளைரிசிடியோ போன்ற குச்சிகளை நடவு செய்தல், 
2.பதியன்கள் போடுதல் போன்ற வேலைகள்
3.கம்போஸ்ட் தயாரிப்பு
4.கம்போஸ்ட் மற்றும் திரவ உரங்களை நிலத்தில் இடுதல்
5.உழவு செய்தல் போன்ற வேலைகள் செய்யலாம்.

#தவிர்க்க_வேண்டிய_நாட்கள்
#Node_day
(தவிர்க்கவும் நேரத்திலிருந்து#6_மணி_நேரம்_முன்னும்_பின்னும் முக்கிய விவசாய வேலைக்களைத் தவிர்க்கவும்)
-சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் சுமார் 13.5 நாட்களில் ஒரு முறை சூரியனின் சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட இடத்தில் கடக்கிறது. 
இந்த நாள் தவிர்க்க வேண்டிய நாள் என் குறிப்பிடப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட கிரகணம் என்றே கூறலாம்.(ராகு,கேது)
-இந்த நாட்காட்டியில் தவிர்க்கவும் என்று குறிப்பிட்ட நாளில் அந்த குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்பு ஆறு மணி நேரமும் பின்பு ஆறு மணி நேரமும் 
-விதைத்தல், 
-நாற்று நடுதல், 
-இலைவழி உரத்தெளிப்பு போன்ற முக்கியமான வேலைகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.

#அபோஜி_APOJEE– தொலைவில் உள்ள சந்திரன்
-இந்த நாளில் பூமியில் இருந்து சந்திரன் அதிகபட்ச தொலைவில் இருக்கும். இந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நாளில் குறிப்பிட்டுள்ளமணியில் 6 நேரமும் பின்பு 6 மணிநேரமும் முக்கியமாக #விதைப்பது_மட்டும்_தவிர்க்கவும்
ஆனால் உருளைக்கிழங்கு மட்டும் நடவு செய்யலாம். அவ்வாறு உருளைக்கிழங்கு நடவு செய்தால் விளைச்சல் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லாவிட்டாலும் கிழங்கு சற்று பெரியதாகவும் சுவை கூடுதலாகவும் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

#பெரிஜி_PERIJEE– அண்மை சந்திரன்
-இந்த நாளில் சந்திரன் தனது சுற்று வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கும். 
-இந்த நாளில் விதைத்தல், நாற்று நடுதல் போன்றவை தவிர்க்க வேண்டும். -அண்மையில் இரண்டு மூன்று வருடங்களில் கிடைத்த தகவல்கள் இந்த நாளில் (நெல், தர்பூசணி, மஞ்சள், தட்டைப்பயறு போன்றவை) வெவ்வேறு பகுதிகளில் விதைத்த விவசாயிகள் அனுபவித்த உண்மை. 
-ஓரளவிற்கு விளைந்த விளைப் பொருட்கள் கூட அவற்றின் சுவை மாறுபட்டு (சுமார் 75% வரை குறைந்து) காணப்பட்டது.

#அமாவசை_No_Moon_day
இந்த நாள் அனைவரும் அறிந்த ஒன்று. 
-இந்த நாளில் சேமித்து வைக்க வேண்டிய விதைகள், வைக்கோல் போன்ற கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தட்டைகள் இவற்றை அறுவடை செய்து பக்குவப்படுத்தி வைக்கலாம். 
-மர வேலைகளுக்கு தேவையான மரங்கள், மூங்கில் போன்றவற்றை அறுவடை செய்யலாம். 
-கம்போஸ்ட் படுக்கையை புரட்டிவிடுதல்
-உழவு செய்த வயலில் கம்போஸ்ட் இடுதல் போன்றவையும் செய்யலாம்.

#பௌர்ணமி_Full_moon_day
-இந்த நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு #48_மணி_நேரம்_முன்பு விதைகளை விதைத்தால் செடிகள் வேகமாக வளர்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியே அந்த செடிகள் தாங்கும் சக்தியை ஓரளவு இழக்க காரணமாகிறது. ஆதலால் ஓரளவு நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விதைகள் விரைவில் முளைப்பதால், நாற்றுகள் ஓரளவு முதிர்ச்சி அடையும் வரை பாதுகாப்பு மிகவும் அவசியம்.
-பஞ்சகாவ்யம் போன்றவை தெளிக்க மிகவும் உகந்த நாள்

#சந்திரன்_எதிர்_சனி (Moon opposite saturn)
இந்த நாள் சந்திரன், பூமி, சனி கிரகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்ற நாள்.
இந்த நாளில் விதைத்த விதைகள் மிகமிக ஆரோக்கியமான நாற்றுகளாக வளர்கின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனும் பூச்சிகள் தாக்குதல்களைக் கூட எதிர்த்து வளரும் திறனும் அதிகரிக்கிறது.
சந்திரன் எதிர் சனி அமையும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு உள்ள 48 மணி நேரத்திற்குள் விதைத்தால் நலம்
இந்த நாளில் அனைத்து விவசாய வேலைகளையும் செய்யலாம்.

#இராசிகளில்_சந்திரன்_பயணிக்கும்_நாட்கள்

ஒவ்வொரு இராசியும் ஒவ்வொரு மூலக்கூறுகள் அடிப்படையில் சக்திகளை வெளிப்படுத்துகிறது. 
அவை

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் நெருப்பு சக்தியை வெளிப்படுத்தும். விதைகள், பழங்கள் போன்றவற்றிற்காக விதைப்பு செய்யலாம்.

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் மண் சக்தியை வெளிப்படுத்தும். மண்ணில் விளையும் கிழங்குகள், வேர்களை அறுவடை செய்யும் விதைகளை விதைக்கலாம்.

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் காற்று சக்தியை வெளிப்படுத்தும். பூக்களுக்காக விதைக்கும் விதைகளை விதைக்கலாம்.

கடகம், விருச்சகம், மீனம் ஆகிய ராசிகள் நீரின் சக்தியை வெளிப்படுத்தும். இலைகள், தண்டுகளுக்கான விதைகளை விதைக்கலாம்.

(புரியவில்லை என்றால் வருத்தம் வேண்டாம், அடுத்த பதிவில் விளக்குகிறோம். அதே சமயம் காலண்டரில் பூ, பழம், வேர், இலை என குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் அதற்கான விதைகளை விதைப்பு செய்யலாம்.)

இவ்வாறு வெளிப்படும் சக்திகள் சந்திரன் மூலம் பூமியில் உள்ள தாவரங்களில் அந்தந்த குறிப்பிட்ட பாகங்களில் ஏற்படும் மாறுதல்களிலும், வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடுகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த ராசிகளில் சந்திரன் பயணிக்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தாவரங்களை பிரித்து விதைப்பு, நாற்றுநடவு, அறுவடை போன்ற வேலைகள் செய்வது மிகுந்த பலனை அளிக்கிறது. இவ்வாறு அந்த மூலக்கூறுகளின் அடிப்படையில் தாவரங்களைப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

#நெருப்பு – விதைகள், பழங்கள் – நெல், கோதுமை, பயறு வகைகள், தக்காளி, கத்தரி, பீன்ஸ், மா, பலா, நிலக்கடலை, பருத்தி போன்றவை

#மண் – கிழங்குகள், வேர்கள் – நன்னாரி, வெட்டிவேர், மரவள்ளி, உருளைக்கிழங்கு, சேனை, மஞ்சள், இஞ்சி, காரட், பீட்ரூட் போன்றவை

#காற்று பூக்கள் – காலிபிளவர், ரோஜா, மல்லி போன்றவை

#நீர் – இலைகள், தண்டுகள் கறிவேப்பிலை, முட்டைக்கோசு, வெங்காயம், கீரை வகைகள், இலைக்காக வாழை நடுதல், மர வேலைக்கான மரங்கள் போன்றவை
இவ்வாறு பிரித்து அந்தந்த மூலக்கூறுகளாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் குறிப்பிட்ட தாவரங்களுக்குண்டான வேலைகளை செய்வது மிகவும் நன்மைத் தரும்.

நன்றி: 
ஆதாரம்: BDAI
காலண்டர் படம்: கரிம வேளாண் கட்டமைப்பு

சிங்கம்_புலி

சிங்கம்_புலி"

(சிங்கம் மற்றும் புலி இவைகளை பற்றி சில இயல்பான விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.. )

காட்டின் இரண்டு பெரும் தலைகள்.. தேர்ந்த வேட்டைகாரர்கள்... கொடூர கொலையாளிகள் சிங்கம் மற்றும் புலி.
இவைகள் இரண்டிற்கும் இடையிலான சில சுவாரஷ்யமான ஒற்றுமை வேற்றுமை பற்றி பார்க்கலாம்.

முதலில் ஒரு சுவாரஷ்யமான கேள்வி சிங்கம் புலி இவை இரண்டுமே பெரும் கொலையாளிகள் சிறந்த வேட்டை விலங்குகள். ஒரு வேளை இவை இரண்டுமே மோதி கொண்டால் இவற்றில் எது வெற்றி பெறும் ?
இந்த கேள்விக்கு பதில் அந்த விலங்கின் வயது அனுபவம் உடல் ஆரோக்கியம் எல்லாம் சார்ந்த விஷயம் தான் என்றாலும் பொதுவாக இவை இரண்டும் மோதி கொள்வதாக வைத்து கொண்டால் இவற்றில் வெற்றி பெறுவது எதுவாக இருக்கும் தெரியுமா ?

உங்களில் பல பேர் சிங்கம் என்று நினைத்திருந்தால் மன்னிக்கவும் அது தவறான விடை .இவை இரண்டும் மோதிக் கொண்டால் அதில் வெற்றி பெறுவது பெரும்பாலும் புலியாக தான் இருக்கும். அதற்கான காரணத்தை பார்க்கும் முன் அதற்க்கான ஆதார சம்பவம் சிலதை பார்க்கலாம்.

இதற்க்கு பண்டைய காலத்தில் இருந்தே ஆதாரங்கள் இருக்கின்றன..பழைய ரோம் நகரத்து பேரரசர்கள் மக்கள் சூழ பெரும் விளையாட்டு மைதானங்களில் சிங்கம் மற்றும் புலிகளுக்கு இடையில் சண்டை வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். அதில் பெரும்பாலும் புலியே வெற்றி பெற்றிருக்கின்றன. அதிகம் பணம் புலியின் மேல் தான் கட்ட பட்டு இருக்கின்றன. அதை பல ஓவியங்களில் கூட அவர்கள் வரைந்து வைத்து இருக்கிறார்கள். புலி வெற்றி பெறுவதை போன்ற பல பழங்காலத்து பெயிண்டிங்குகள் இன்றும் அங்கே காணலாம்.

1800 களில் baroda gaekwad ஒருவர்.. (பரோடா பகுதியை ஆளும் மன்னர்களை குறிக்கும் சொல்.. ) புலி சிங்கம் சண்டை ஒன்றில் கலந்து கொண்டார். அந்த சண்டையை நடத்தியவர் தனது புலி தான் ஜெயிக்கும் என புலியின் மேல் 37000 ரூபாய் பெட் கட்டி இருந்தார் அதை எதிர்த்து மன்னர் பணம் கட்டினார். இறுதியில் சிங்கத்தை புலி அடித்து வீழ்த்தி மன்னருக்கு பெரும் தொகையை (அந்த காலத்தில் 37000 ரூபாய் ) நஷ்டத்தை உண்டு பண்ணியது.

2011 இல் துருக்கியில் உள்ள ankara எனும் zoo வில் ஒரு முறை ஒரு புலி ஓரு சிங்கதை கொன்றது. அதை பார்த்தவர்கள் அது அதனை ஒரே ஒரு அடியில் அடித்து கொன்றதாக சொன்னார்கள்.
மேலும் அங்கே இருந்த ஆய்வாளர்கள் சிலர் புலிகள் அடிக்கடி தங்கள் கூண்டை விட்டு சிங்கத்தின் கூண்டில் சென்று இறையை தேடுவதாகவும் அப்போது சிங்கதை அடித்து கொல்வதாகவும் தெரிவித்து இருந்தனர்.

ஒரு முறை கிர் காடுகளின் சிங்கத்தை புலிகள் அதிகம் வாழும் பகுதியான kuno paplur எனும் இடத்திற்கு மாற்றுவதாக ஒரு திட்டம் வைத்து இருந்தார்கள். ஆனால் அந்த திட்டம் கைவிட பட்டது.
"The University of Minessota’s Lion Research Center " அதற்க்கு சொன்ன காரணம் 'அங்கே காலம் காலமாக வாழ்ந்து வரும் "பழங்குடி "புலிகள் இந்த புதிதாக வந்து சேரும் சிங்கங்களை அடித்துக் கொன்று விடும் என்று தாங்கள் பயந்துதான்' என்றார்கள்.

புலிகள் சிங்கத்தை வெல்ல முடிவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அடிப்படையில் அவைகள் சிங்கங்களை விட பல விஷயத்தில் தலை சிறந்தவை.
சரி சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான சில நடுநிலைமையான ஒப்பீட்டை பார்க்கலாம்.

முதலில் ஒரு சிங்கதை விட ஒரு புலி அளவில் பெரியது.. அதிக எடை கொண்டது.
உலகத்தில் உள்ள சிங்கங்களில் அதிக ஆக்ரோஷமான வலிமையான சிங்கம் என்றால் அது ஆப்ரிக்க சிங்கம் தான்.
ஒரு ஆப்ரிக்க சிங்கத்தின் எடை சராசரியாக 250 கிலோ.
அதே போல உலக புலிகளில் அதிக வலிமை கொண்ட பெரிய புலி என்றால் அது சைபிரியன் புலிகள் தான். அதன் சராசரி எடை 360 கிலோ.

ஒரு சிங்கத்தின் பல் 3. 2 அங்குல நீளம் கொண்டது ஆனால் ஒரு புலியின் பல் 3.6 அங்குலம்.. முதல் 4 அங்குலம் வரை.

சிங்கத்தின் கூர் நகங்கள் 3 அங்குல நீளம் கொண்டது. ஆனால் புலியின் நகங்கள் 4 அங்குலம்.
அப்படியே அகலத்தை பார்த்தால் சிங்கத்துக்கு 5 அங்குல அகலம். புலிக்கு 6.5 அங்குலம் அகலம்.

கால்களால் அறைவதில் சிங்கதால் சண்டையின் போது ஒரு நேரத்தில் ஒரு காலால் மட்டும் தான் அடிக்க முடியும் ஆனால் புலிகள் சண்டையில் இரண்டு காலில் நின்று இரண்டு காலால் சில சமயம் 3 கால்களால் தாக்கும்.

உடல் நீளம் சிங்கம் கிட்ட தட்ட 8..9 அடி என்றால் புலி 9 ..10 அடி

நீந்தும் திறமையில் புலி கில்லாடி சிங்கம் சோம்பேறி.

அதிக வெய்யிலில் மற்றும் மிக குறைவான வெளிச்சத்தில் நல்ல பார்வை திறனில் கிட்ட தட்ட இரண்டுமே ஒரே மாதிரி திறமை கொண்டவை.

Athletic ..body.. மற்றும் flexibility யில் புலிகள் சிறப்பானவை.

வேகம் என்று வரும் போது ஆன் புலியை விட பெண் சிங்கம் வேகமானது ஆனால் அதை விட பெண் புலி வேகமானது.

கடிக்கும் போது கொடுக்கும் அழுத்தம் (biting force ) சிங்கம் 600 psi (pounds per inch ) புலி 1000 psi
(ஒரு தொடர்பில்லாத தகவல் இங்கே சொல்கிறேன் உப்பு நீர் முதலை 3700 psi அழுத்தத்தில் கடிக்க முடியும் )

அடுத்து இரண்டில் யார் அதிக புத்தி சாலி ?? சந்தேகம் இல்லாமல் புலி தான்.
அதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்றால்... Cranial Volume ஐ கொண்டு..
அதிக Cranial Volume என்றால் அதிக புத்திசாலித்தனம் என்று அர்த்தம்..
மேலும் செயல்திறன் சோதனையில் புலிகளின் புத்திசாலிதனம் தெரிகிறது.

கர்ஜனையில் பார்க்கும் போது நிச்சயம் சிங்கத்தை புலி மட்டும் அல்ல வேறு எந்த விலங்கும் அடித்து கொள்ள முடியாது. சிங்கத்தின் கர்ஜனை 8 லிருந்து 10 கிலோ மீட்டர் வரை கேட்கும் புலியின் கர்ஜனை 3 யிலிருந்து 5 கிலோ மீட்டர்.

இது தவிர முக்கியமான ஒரு சிறப்பான குணம் சிங்கத்திடம் உண்டு அது புலியிடம் இல்லை.
அது தான் கூட்டு முயற்சி . team work இல் சிங்கங்கள் கில்லாடிகள். அவைகள் இனைந்து வேட்டை ஆடுகின்றன். கடினமான வேட்டையில் மானசிக வியூகம் திட்டம் அமைத்து வேட்டை ஆடுகின்றன . பெண் சிங்கம் மற்றும் குட்டி சிங்கங்கள் கடினமான வேட்டையில் திணற நேர்ந்தால் அதை வளர்ந்த ஆன் சிங்கம் எதிர்கொண்டு முடித்து கொடுக்கின்றன.

ஒரு நன்கு வேட்டை பயிற்சி அடைந்த சிங்க கூட்டணியை எந்த விலங்குகளும் வீழ்த்துவது மிக அரிது.
சிங்கம் ஒரு சமூக விலங்கு. ஆனால் புலி எப்போதும் தனி ஒருவன். அவைகளுக்கு கூட்டு முயற்சி என்றால் என்ன என்றே தெரியாது. புலி தனித்து மட்டுமே வேட்டை ஆடுகின்றன்.
எனவே 'சிங்கம் சிங்கிலா தான் வரும்' என்ற சினிமா வசனத்தை விட நமது பேச்சு வழக்கில் உள்ள "ஒற்றை புலி, ஒண்டி புலி " போன்ற வாசகம் உண்மையானது.

சிங்கத்திடம் இருக்கும் இன்னோரு தனி தன்மை என்ன வென்றால் அவைகள் தங்கள் ராஜ்யங்களை ஆளும் குணம் கொண்டவை. தங்கள் எல்லையை பராமரிப்பது அதற்குள் யாரையும் அனுமதிக்காமல் போராடி காப்பது எல்லையை விரிவு செய்வது தங்கள் ராஜ்யத்திற்கு ஆபத்து என்றால் உயிரை கொடுத்து போராடுவது.. எதிரி பகுதியை ஆக்கிரமிக்க முயல்வது போன்ற குணாதிசயங்கள் மற்ற விலங்குகளிடமும் இருக்கிறது என்றாலும் சிங்கத்திடம் அது மிக அதிகம்.

எல்லாவற்றிற்கும் மேல் வேட்டை நுட்பத்தில் சண்டை நுட்பத்தில் சிங்கங்கள் கைதேர்ந்தவைகள். சமயத்துக்கு சூழ்நிலைக்கு ஏற்றார் போல புதிய நுட்பங்களை உண்டாக்க கூடியது.

கூட்டமாக உள்ள சிங்கத்திடம் புலி ஜெயிக்க முடியாது ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் புலியை சிங்கம் ஜெயிக்க முடியாது.
ஒரு அடிபட்ட புலியை விட ஆபத்தான விலங்கு வேறு எதுவும் இல்லை என்பார்கள். ஆம் அடி வாங்கி விட்டால் அவைகள் இன்னும் ஆபத்தானவை.

காட்டு விலங்குகள் என்றைக்குமே வியப்பானவை.. அதில் இவை இரண்டுமே மிக சுவாரஷ்யமான காட்டுத்தனமான முரட்டு படைப்புகள் தான்.
ஆனால் அதில் சிங்கம் தானே அரசன் என்கிறார்கள்.

ஆம்...சிங்கம் தான் காட்டின் அரசன். அவைகள் தான் காட்டை ஆளுகின்றன.
ஆனால்.....
அதற்கு காரணம் புலிக்கு ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லாமல் இருப்பது தான்.

(உலகை ஆள நினைப்பவர்கள் தங்கள் சின்னமாக சிங்கத்தை தேர்ந்தெடுத்ததும் ... அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடியவர்கள் தங்கள் சின்னமாக புலியை தேர்ந்தெடுத்ததும் தற்செயலானது தானா ??? )