Blood pressure, garlic is good medicine for phlegm!
Ginger, garlic and even camaiyale not have my house to say how many people heard. That's all right. But the ginger-line vellaippuntaiyum eaten unique look. Makes a big atuk the glory.
Good medicine for high blood pressure that can not haipirasarnu the garlic. Everyday vellaippuntai speed vacco, tiyila cutto haipirasar kuraiyuratota may taste good for the heart. According rattakkulayla veliyettirum that fat. Some cappituvanka paccaiya. Nallatilla it. Get the most benefit if you eat paccaiya think. The problem of acid producing Athula directly.Ask vayittuk vayittula the Yamato. What has to be a protocol eppiti cappitanumnu.
Puntuccarota eaten along with the drinks. Cholera, pneumonia, mix milk and water comes puntuccarota going to get better relief.
Stomach bloat, stroke, heart disease, garlic is good medicine for many diseases vayittuvali model.
Slow phlegm 50 ml milk, 50 ml tanniyila 10, 12 puntuppallai uriccippottu cook. Well cooked with a pinch of turmeric, 2 pinch peppers, along with the required quantity of sugar atuppila die from panankalkantu Else. Heating arinatum chopped fine katainci kataiyura do with so many colds going to eat the night before tunkapporat valiyaipparttu who were disturbed.
Vayvukkolaru ullavanka ate the whole shot vellaippuntai tiyila definitely going to get results.
Friday, 24 June 2016
Blood pressure, garlic is good medicine for phlegm!
ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து!
ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து!
இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் சரிதான். ஆனா அதே இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில சாப்பிட்டு பாருங்க. அதுக்குள்ள மகிமையே தனிதான்.
ஹைபிரஷர்னு சொல்லக்கூடிய உயர் ரத்த அழுத்தத்துக்கு இந்த பூண்டு நல்ல மருந்து. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வச்சோ, தீயில சுட்டோ சாப்பிட்டு வரலாம் ஹைபிரஷர் குறையுறதோட இதயத்துக்கு நல்லது. ரத்தக்குழாய்ல படியக்கூடிய கொழுப்பையும் வெளியேத்திரும். சிலபேர் பச்சையா சாப்பிடுவாங்க. அது நல்லதில்ல. பச்சையா சாப்பிட்டா அதிக பலன் கிடைக்கும்னு நினைக்காதீங்க. அதுல உள்ள ஆசிட் நேரடியா வயித்துக்குள்ள போனா வயித்துல பிரச்சினையை உண்டுபண்ணும். எதை எப்பிடி சாப்பிடணும்னு ஒரு வரைமுறை இருக்கு.
பூண்டுச்சாறோட தண்ணி சேர்த்து சாப்பிடலாம். காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தா பூண்டுச்சாறோட தண்ணி கலந்து குடிச்சிட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய், வயித்துவலி மாதிரி பல நோய்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல மருந்தாகும்.
நெஞ்சு சளி பிடிச்சா 50 மில்லி பால், 50 மில்லி தண்ணியில 10, 12 பூண்டுப்பல்லை உரிச்சிப்போட்டு வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கல்கண்டு இல்லைனா சர்க்கரை சேர்த்து அடுப்பில இருந்து இறக்கணும். சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்தை வச்சி நல்லா கடைஞ்சி ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டு வந்தா சளி தொந்தரவு வந்த வழியைப்பார்த்து போயிரும்.
வாய்வுக்கோளாறு உள்ளவங்க முழு வெள்ளைப்பூண்டை தீயில சுட்டு சாப்பிட்டுட்டு வந்தா நிச்சயமா பலன் கிடைக்கும்.
Multi-level marketing
Sunday, 12 June 2016
ரத்தம் தேவையா கால் பனுங்க இல்ல ஷேர் பன்னுங்க
ரத்தம் தேவையா கால் பனுங்க இல்ல ஷேர் பன்னுங்க
Satham O+,8870706594.
1.Saffi O+ ,9176418321.
2.Mani O+ ,7401535415
3.munishwaran 9940257153
3.Sriram B+ ,8056051072
4.Ramesh B+ , 9884727286
5.Suresh B+, 8148916988
6.Murali A+. 7299399392
7.PRABHU. O+ 9884641396
8.Vijay. AB-ve. 9790954376
9.Jai. B- 99623610622
10.Raja A1+ 9789865312
11.Perumal O+
12.KALIDASS A+ 13.9943948951
14.Abbas A1- 9551414146
15.Rajalingam B+ 9626696882
Sundar O+ 9941418736
16.Yuvaraj AB+ 8124291412
17.jagir B+. ,9042670928
18.suresh Kumar O+. 9840939939
19.aravind O+, 9176980878.
20.Manikandan A+ 9566420317.
21.Senthilkumar B+,9962688252.
22.praveen kumar B +
9094314313
23.mohanraj B positive
9444464789
24.manikandan O+
9791097653
25.C.prathap O +ve 9940521093
26.Isaianand o+. 7845548466
27. S THILAK O+ ve , 861810723.
28. Anbumani O+ (9566001676)
29.Syed A+ 9551457239
30.M.jagadeesanvb A➕(7845662500)
31.Karthikeyan o+(9884400371)
32.Daniel
B+ (9003148805)
33.Sridhar o+ (9500119761)
34.V.Mohan 0+ (9940639557) 35, jawahar b+ve 9600162581
36.v.karthick A1+ (9578828854)
37.C.Rajkumar B+ve
9790844373
38. Ashok Kumar B+
9791142469
39.M.KARUKKUVEL Raj B positve -9087425095
40.NARENDRAN A1B+(9500148984)
41.edwin. O- 9791150119 42. Selvaganesh A+ (9940187708)
43.siddiq O+. 9094666918
44.a.inba kumar o+ ve 9840301747
45.vignesh B+ 9884556995
46.vogneshgiri B+ 9043677660
47.anbarasan O+ 9840862846
48.M.Vimal kumar o+ 9677279760
49.Jeeva AB- (ph-8056292339)
50.sarath A+ 9551113240
51.vazir o+(8754034986)
52.Dinesh A1+(8122288878)
53.Irfan A+ 9940980181
53. Balakrish O+ (9047904837)
54. Abrar A+ve (9043651613)
55.Mohamed halidh A1+(8807980583)
56. Akbar A1B+ve 9446479122
57.ASIK O+VE
8015698773
58. Prabha - 9655555446
59. uvais o+pas~9698917403
60.Akash B-ve—7092741996
61. Elangovan. G -- O +ve 7358434366
62.Janarthan - A+ ve (9940096675)
63.Deepak raj O+ve (
64. Harish Rajendran A+ve - (9790800054)
65. Vignesh O+ve
66.Niveditha O+ve
67.Shameer AB+ve
68. Muthu O+ve (8220439217)
69. Sriramakrishna O-ve
70. Ishu A1B+ve (9962852021)
71. Keerthana O+ve +9962915416)
72. Prashanth O+ve (9790755700)
73. Rinuvadhan O -ve (9962393500)
74.N.R.Pravin Raja
B+(8015601612) 75.ragu a1+ve 7639529991
பகிருங்களேன் தோழமைகளே
யாருக்கேனும் பயன் படட்டும்...
Thursday, 9 June 2016
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
கரப்பான் பூச்சிகள் ஆபத்தானவை!- அறிந்து கொள்ளுங்கள்
கரப்பான் பூச்சிகள் ஆபத்தானவை!- அறிந்து கொள்ளுங்கள்
கரப்பான் பூச்சியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால் இந்த கரப்பான் பூச்சியானது மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றாதா என்பது சிலருக்கே தெரிகின்றது.
கரப்பான் பூச்சியானது தனது மலக்கழிவு உமிழ் நீரினூடாக உணவு, நீர் என்பவற்றினை மாசடையச் செய்கின்றது. இக்கழிவுகளால் வயிற்றோட்டம், உணவினை பழுதடையைச் செய்கின்ற பக்றீரியாக்கள் செறிந்து காணப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் மலக்கழிவு, உடற்பாகம் காற்றிலே பரம்பலடைகின்றது. இக்காற்றினை சுவாசிப்பதினால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏற்படுகின்றது. இதனால் சிறுவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.
உணவு, நீர், என்பவற்றை தகுந்த சுகாதார முறைப்படி கையாள்வது மிகவும் முக்கியமானது. மேலும் உணவுப்பொருட்களை இறுக்கமாக மூடிவைத்தல், வீட்டிலுள்ள கழிவுப்பொருட்களை (முக்கியமாக சமையலறைக் கழிவுகள்) உடனுக்குடன் அகற்றுதல், மற்றும் களஞ்சிய அறை, குளிர்சாதனப்பெட்டி, பாவனையற்ற வீட்டுப்பாகங்களை அடிக்கடி தூய்மைப்படுத்தல் மூலம் கரப்பான் பூச்சிகளின் தாக்கத்தை தடுத்துக் கொள்ளலாம்.
சித்தர்கள் அருளியுள்ள மூச்சுக் கணக்கு!
சித்தர்கள் அருளியுள்ள மூச்சுக் கணக்கு! நீளாயுள் பெற்றுய்ய!
தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்.
இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.
கல் தோனறி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி.
இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:-
உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில்,
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்,
நாழிகை ஒன்றுக்கு 360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது
ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.
இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.
இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன.
மூச்சை இப்படி 21,600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.
மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும்.
மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!
1 நிமிடத்திற்கு 15 மூச்சும்,
1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்;
1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.
உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.
ஆனால், உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.
இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது… இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம்…
கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது… இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம்…
ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கோபத்துடனே இருப்பார்கள். சிடு சிடு முகமும் சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வார்கள் கூறுயுள்னர். கோபத்தினால் பள்ளி மாணவர்களுக்கும் கூட இதய நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நோயை தடுக்க சினத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
சிறு குழந்தைகளோ இளைஞர்களோ இன்றைய இளம் தலைமுறையினருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது.
கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்லலாம். அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160 – 80 என எகிறுகிறது.
கோபப்படும் நேரத்தில் செயற்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. அதுவே உடலின் இரத்தக் குழாயை சுருக்கி விடுகிறது. உடலில் இரத்தம் செல்வது குறைவதால் முகத்தில் அதிக இரத்தம் தேங்கி முகம் சிவப்பாகிறது. அதிக கோபம் வரும்போது அதிகமான அளவு இரத்தத்தை இருதயம் பம்ப்செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போய் திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றன. அமெரிக்காவில் இருதய நலத் துறை தலைவரும் மியாமி மில்லர் ஸ்கூல் நரம்பியல் துறை தலைவருமான ரால்க் சாக்கோ, மனிதர்களின் கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம் என்று கூறியுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு ஏற்படும் கோபத்தினால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் பள்ளி மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக இந்தியாவில் ஒரு பள்ளியில் 1500 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இவர்களில் 8 பேருக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மாணவர்களிடையே கோபம் ஏற்படுவதை தவிர்க்க அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இருதயம் நன்றாக இருந்தால் தான் ஒரு மனிதன் நன்றாக இருக்க முடியும். எனவே கோபத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தாலே மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
Tuesday, 7 June 2016
இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?
இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?
ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?
நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க.
ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க.
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!
பப்பாளி பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 1\2 மணி நேரம் ஊறவைத்து பின்முகம் கழுவ முக அழகு கூடும்.
பாட்டி வைத்தியம்:-
பப்பாளி பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 1\2 மணி நேரம் ஊறவைத்து பின்முகம் கழுவ முக அழகு கூடும்.
கண்ணாடி துண்டால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள், ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
கைகால்களில் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணை, தேங்காய் எண்ணை சரிசமமாக கலந்த தடவ குணமாகும்.
அரைக்கீரை இலை 10 கிராம், 2 கிராம் மிளகுடன் மைய அரைத்து, மோரில் கலந்து தினம் இருவேளை சாப்பிட சிறுநீர் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போவது குணமாகும். தூக்கத்தில் சிறுநீர் செல்வது கட்டுப்படுத்தும்.
உத்தாமணி இலை 10 கிராமை 100 மில்லி நீரில் சிறிது வசம்பு சேர்த்துக் காய்ச்சி காலை, மாலை 10 மில்லி சாப்பிட, மந்தம், வயிற்று உப்புசம், ஜீரண சக்தியின்மை குணமாகும்.
ஊமத்தை இலை சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி இரண்டையும் நன்கு கலந்து, நீர் வற்றும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளலாம். அழுகிய புண்கள், குழிப்புண், தீ புண், புரையோடிய புண்ணிற்கு மேல் உபயோகம் பயன்படுத்த குணமாகும்.
எருக்கன் பழுத்த இலையை அனலில் வதக்கி எடுத்த சாறுடன் தேன், சுண்ணாம்பு சேர்த்து குழைத்து, உடலில் தோன்றும் சிறு சிறு அனல் கட்டிகளுக்கு தடவிட உடையும். குளவி தேனீ, தேள் கடித்த இடத்தில் தடவிட விஷம் இறங்கும்.