Thursday, 31 March 2016

முகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்

முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனலாம். வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும்.

முகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்

* வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.

* பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.

* சுடுதண்ணீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.

* எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து அதை முகப்பருக்கள் மீது தடவவும். எலுமிச்சையும் கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும்.
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

Saturday, 26 March 2016

பணம் என்றால் என்ன...? -கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!

பணம் என்றால் என்ன...? -கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!

அப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்க ளால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த் தாக நிர்வகிக்க முடிவதில்லை.
மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும்,பல இளம் தம்பதிகளுக்கு 30ம் தேதி அக்கவுண்ட் பேலன்ஸ் ‘நில்’(nil) என்பதே இன்றைய நிலைமை. காரணம் சிக்கனம்,சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!
உங்கள் வீட்டு குழந்தைகளும், நாளை மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலை வரலாம். அப்போதும் அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் 30ம் தேதி ‘நில்’ என்றில்லாமல் இருக்க, இப்போதிலிருந்தே அவர்களுக்குப் பணம் பற்றிய பாடங்களை புரிய வைப்பது அவசியம்.
அதை முன்னெடுப்பதற்கான முக்கிய ஐந்து ஆலோசனைகள் இங்கே...
பொறுமை... பணம்!
குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதி உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஒரு பொருளை வேண்டும் எனக் கேட்கும்போது, ‘நிச்சயம் அடுத்த வாரம் வாங்கலாம்’, ‘எக்ஸாம் லீவ்ல அதை உனக்கு வாங்கித் தர்றேன்’ என்று அந்தப் பொருளுக்காக அவர்களை காத்திருக்க வைத்து, பின் வாங்கிக் கொடுங்கள்.
அப்போதுதான் அந்தப் பொருளின் மதிப்பும்,பணத்தின் மதிப்பும் அவர்களுக்குப் புரியும். இன்றிரவு கேட்கும் ஸ்கேட்டிங் ஸ்கூட்டி,இரண்டு நாட்களில் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்தவிளையாட்டுப் பொருள் அவர்களுக்கு மலிவாகவே தோன்றும். அதை பத்திரமாகவைத்துக்கொள்ளும் பொறுப்பும் வராது.
அத்தியாவசியமா, ஆடம்பரமா..?
அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வையுங்கள். வேக்ஸ் கிரையான்ஸ் வாங்கித் தரச்சொல்லி உங்களை கடைக்குச் கூட்டிச் சென்று, ‘அப்படியே வாட்டர் கலரும், கார் பொம்மையும் வாங்கிக்கறேன்’ என்று கேட்டால், தலையாட்டாதீர்கள். ஒரே சமயத்தில் பல பொருட்களின் மேல் ஆசை கொள்வது குழந்தைகளின் இயல்பு. இருந்தாலும், அந்தப்பொருட்களில் முதன்மைத் தேவை எது என்பதை அவர்களைப் பரிசீலிக்கச் சொல்லி,ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.
பின்நாளிலும், பார்ப்பதை எல்லாம் வாங்கும் மனோபாவத்திற்கு இந்தப் பழக்கம் அணை போடும். பல பொருட்களுக்கு மத்தியில் சிறந்தது மற்றும் தேவையானதைத் தேர்ந்தெடுத்து வாங்கும் திறனையும் அவர்களுக்கு வளர்க்கும்.
பட்ஜெட் கற்றுக் கொடுங்கள்!
வீட்டுக்கான மாத பட்ஜெட் போடும்போதும்,அது தொடர்பான விஷயங்களைப்பேசும்போதும் குழந்தை களையும் அங்கு இருக்கச் செய்யுங்கள். செலவைக் குறைக்க அவர்களை ஐடியா சொல்லச் சொல்லுங்கள். அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் ‘பிரைஸ் டாக்’ஐயும் அவர்களுக்குக் காட்டுங் கள்.
அவர்களுக்கு வாங்கிய புது ஸ்போர்ட்ஸ் ஷூவின் விலையானது, ஒரு மூடை அரிசி/இரண்டு பெட் ஸ்ப்ரெட்கள்/ஐந்து லன்ச் பாக்ஸ்கள்/ஆயிரம் சாக்லெட்டுகள் வாங்கும் விலைக்குச் சமமானது என, ஒரு பொருளின் விலையோடு, மற்றொரு பொருளின்விலையை ஒப்பிடக் கற்றுக்கொடுங்கள். இது,பொருட்களின்விலை பற்றிய தெளிவானபுரிதலை உண்டு பண்ணும்.
குடும்பத்தின் பொருளாதார நிலைமையை குழந்தைகள் அறிய வேண்டும்! தன் நண்பன்,தோழி வைத்திருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளைக் குறிப்பிட்டு, அது தனக் கும்வேண்டும் என்று உங்கள் குழந்தைகள் கேட்கலாம். ‘என் புள்ளை கேட்டதைஎப்பாடுபட்டாவது வாங்கிக் கொ டுப்பேன்’என்று எமோஷனலாக இருக்கத் தேவையில்லை. அது உங்கள் பட்ஜெட்டிற்கு அடக்கமானது இல்லை எனில், அதை வெளிப்படையாக அவர்களிடம் கூறிவிடுங் கள். அப்போதுதான், குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உட்பட்டு நடக்கும் பொறுப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.
நாளடைவில், ‘அம்மா என் ஃப்ரெண்ட் வீட்டுல ஹோம் தியேட்டர் இருக்காம். நம்ம வீட்டுல அதெல்லாம் முடி யாதுனு எனக்குத் தெரியும். இந்தப் பழைய டிவியை மாத்தும் போது எல்சிடி டிவியா வாங்கிக்கலாமா ப்ளீஸ்..?’என்று பிராக்டிக்கலாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் பாசிட்டிவ் ஆட்டிட்யூட்அவர்களுக்கு வளரும்.
பாக்கெட் மணி கொடுங்கள்!
குழந்தைகளுக்குப் பாக்கெட் மணி கொடுப்பது தவறு என்று சிலர்நினைக்கக்கூடும். உண்மையில் அது மிகச் சிறந்த சிக்கனப் பாடம். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அந்த மாதம் முழுவதற்குமான பாக்கெட் மணியை அவர்களிடம்மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். 30ம் தேதி வரை அது தவிர்த்து ஒரு ரூபாய் கூடகொடுக்காதீர்கள். வரவுக்குள் செலவழிக்கப் பழக்க, அது சிறந்த வாய்ப்பாக அமையும்; ‘மாதக் கடைசி வரை இந்தக் காசுதான் நமக்கு’என்ற கடிவாளம், அவர்களைஅனாவசியமாகச் செலவழிக்க விடாது.
சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!
குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். உண்டியல் முதல்,போஸ்ட் ஆஃபீஸ் ஆர்.டி அக்கவுண்ட்,வங்கிகளில் ஜூனியர் அக்கவுண்ட் எனஅவர்கள் சேமிப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின்சேமிப்புத் தொகையில், அவர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருளைவாங்கிக் கொடுங்கள்.
மீண்டும் சேமிப்பைத் தொடர வைத்து, அந்த சேமிப்புப் பணத்தில், அடுத்து அவர்களுக்காக அவர்களே வாங்கிக்கொள்ளப் போகும் பொருள் பற்றி அவ்வப்போது பேசிஆர்வத்தை அதிகப்படுத்துங்கள். சேமிப்பின் ருசியை அவர்களை அறியவைத்துவிட்டால்,அது ஆயுளுக்கும் தொடரும்.
சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் அமெரிக்காஉட்பட பல நாடுகளும் ஆட்டம் கண்டபோதும் இந்தியா தலை தப்பிக்கக் காரணம், நம்மக்களின் சேமிப்புப் பழக்கமே! அதைப் பரிசளிப்போம் அடுத்த தலைமுறைக்கும்!

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!

1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.

2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.

3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.

4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.

5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.

6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி..

8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.

9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.

10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.

11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.

12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.

13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.

14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவித்தது.

15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.

16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.

17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.

18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.

19. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.

20. பை (PI) 3.14 "க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருபவாக்கத்திற்கு முன்பு 6"ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உருவாக்கியவர்.

21. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும் 3500 வார மற்றும் மாத இதழ்களும் 1 கொடியே 20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.

22. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறிநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதா (SUSRUDHA) ஒரு இந்தியர்.

23. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டை இங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.

24. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா.

25. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு.

26. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியபவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர்
#
தெரியாததை
தெரிந்து கொள்வோம். தெரிந்ததை
தெரிய வைப்போம்.

கருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் scan செய்து சோதிப்பது என்பது தாய் சேயின் உடல் நலம் குறித்த அக்கறை என்பது பொய

கருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் scan செய்து சோதிப்பது என்பது தாய் சேயின் உடல் நலம் குறித்த அக்கறை என்பது பொய், இதன் மூலம்  குழந்தையின் எடையை பெருக்க வைத்து அதன் மூலம் சிசேரியன் செய்து சம்பாதிக்க தான்

கருவுற்ற உடனேயே போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் இரும்பு கால்சியம் மாத்திரைகளை திணித்தும்  புரதம் தேவை என் புழுகி சோயாபீன்ஸ்லிருந்து எடுக்கப்பட்ட புரதங்களோடு கரு வளர்ப்பு நடைபெருகிறது

பண்ணை கோழிக்கு எடையை கூட்ட என்னவெல்லாம் செய்கிறார்ககளோ அதை அனைத்தும் செய்கிறார்கள் மருத்துவமனையில், ஏதோ சில நிறுவனங்களின்  நன்மைக்காக  35 வாரங்கள் கடப்பதற்கு முன்பாக நான்கு கிலோ வரை எடை கூடியிருக்க வேண்டும் என்பது பன்னாட்டு கம்பெனிககளின் திட்டம்   அப்போது தான் குழந்தையின் எடை கூடி விட்டது அதனால் சுக பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை சிசேரியன் செய்தால் தான் இல்லையென்றால்  ......ஒரு மரண பீதியை உருவாக்கி, நம்முடைய அறியாமையையும் பயத்தையும்  பணமாக்குகின்றனர் மருத்துவமனைகள் .

அதுசரி பிரசவ தேதி குறிப்பதே மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஏனெனில் மாதவிலக்கு ஏற்பட்ட தேதியில் இருந்து 285நாளை கணக்கிட்டு நாள் குறிக்கிறார்கள்  இது தவறு என்பது உலகமறிந்த உண்மை  ஆண் பெண் உறவுக்கு பின் கருவுறுதல் நடக்கும்  ஒரு மாதவிலக்கிற்கும் அடுத்த மாதவிலக்கும் இடைப்பட்ட 25 நாளில் எப்போது வேண்டுமானாலும் கருத்தரித்தல் நடக்கும்  எதை வைத்து மாதவிடாய் நாளை கணக்கில் கொண்டு சிசேரியன் செய்கிறார்கள்

சில கம்பெனிகளின் நன்மைக்காக தாய் சேயின் ஆரோகியம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் கெடுத்து,குட்டிசுவராக்குகிறார்கள் சிசேரியன் எனும் பயங்கரவாதத்தின் மூலம்

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் மரபணுக்கள் சார்ந்த நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் , இது நவீன அறிவியல் ஒப்புகொண்ட முக்கியமான விடயமாகும்  உலகின் அதிபயங்கர கிரிமினல் குற்றவாளிகள்  சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொண்டு மரபுவழி சுக பிரசவத்திற்கு முயலுங்கள்

Happy news, Our national anthem "Jana Gana Mana... "is declared as the "BEST ANTHEM OF THE WORLD"by UNESCO.

Happy news, Our national anthem "Jana Gana Mana... "is declared as the "BEST ANTHEM OF THE WORLD"by UNESCO. J

Very proud to be an INDIAN.
👏👏👏👏👏👏👏😊😊😊😊😊😊😊🚩🌹🌹🌹
✨✨ Meaning of our National Anthem ✨✨
💎💎💎💎💎💎💎💎
 Please try to understand the meaning and pronounce it clearly.

Word by word meaning..

🎵Jana            = People
🎵Gana            = Group
🎵Mana           = Mind
🎵Adhinayaka= Leader
🎵Jaya He      = Victory
🎵Bharata       = India
🎵Bhagya       = Destiny
🎵Vidhata      = Disposer
🎵Punjaba     = Punjab
🎵Sindhu       = Indus
🎵Gujarata    = Gujarat
🎵Maratha    = Marathi Maharashtra
🎵Dravida      = South
🎵Utkala        = Orissa
🎵Banga        = Bengal
🎵Vindhya     =Vindhyas
🎵Himachal   =Himalay
🎵Yamuna     = Yamuna
🎵Ganga        = Ganges
🎵Uchchhala = Moving
🎵Jaladhi      = Ocean
🎵Taranga    = Waves
🎵Tava          = Your
🎵Shubh    =Auspicious
🎵Naame = name
🎵Jage     = Awaken
🎵Tava     = Your
🎵Shubha      = Auspicious
🎵Aashisha = Blessings
🎵Maage     = Ask
🎵Gaahe      = Sing
🎵Tava        = Your
🎵Jaya        = Victory
🎵Gatha      = Song
🎵Jana       = People
🎵Gana      = Group
🎵Mangala = Fortune
🎵Dayaka   = Giver
🎵Jay He    = Victory Be
🎵Bharata  = India
🎵Bhagya  = Destiny
🎵Vidhata = Dispenser
🌸Jay He, Jay He, Jay He, Jay Jay Jay Jay He = Victory, Victory, Victory, Victory Forever...

JAI HIND🙏🙏

Wednesday, 16 March 2016

எலுமிச்சை - இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.

எலுமிச்சை - இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.
எலி
மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.
எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.
எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.
இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.
100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.
எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.
வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.
கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.
பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.
சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.
பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.
தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.
பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.
இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.
மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.
இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.
காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.
சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.
தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.
சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.
இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.
தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.
தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.
நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.
மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.
எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.
அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.
சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.
எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.
சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.
ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.
முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.
🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.
🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.
🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.
🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.
🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.
🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.
🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.
🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.
🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.