Wednesday, 11 May 2016

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் பிச்சை எடுக்கிறான்.

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.

அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. அப்பொழுது அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், பாக்கெட்டில் இருந்து சில சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான். பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.

அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.

சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.

இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.

காரணம் என்னவெனில், இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.

நீதி : உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.

எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் செய்வோம் !!!

Tuesday, 10 May 2016

தூங்குறப்போ அடிக்கடி என்னைய பேய் அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்ல கேட்டுருப்போம்..

தூங்குறப்போ அடிக்கடி என்னைய பேய் அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்ல கேட்டுருப்போம்.. அவ்வளவு ஏன் நம்மில் பலருக்கு அந்த அனுபவம் இருக்கும்.. அது ஏன்? உண்மையிலயே பேய் தான் அமுக்குதா? பாப்போம்....

உறக்கத்தில் இரண்டு நிலை இருக்கு. ஒன்று விரைவான கண் இயக்கம் அல்லது RAPID EYE MOVEMENT(REM) மற்றொன்று அதற்கு எதிர்பதம் NonREM (NREM).

நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM. அடுத்து REM நிகழும். இப்படி இரண்டும் மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம். ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும். சுயநினைவும் முழுசா மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள் இன்னும் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.

REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது அந்த சுழற்சி முடிவதற்குள் உங்களுக்கு சுயநினைவு தோன்றினால் உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது. மூளை விழித்திருக்கும். ஆனா மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்கும் நிலையில் இருக்காது(இரண்டாவது படம் பார்க்க). அப்போ தான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகால அசைக்க ட்ரை பண்றேன் என்னால முடியல. பேய் அமுக்குது போல".

SLEEP PARALYSIS - இது தான் உங்களை அமுக்கிய பேய். உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை. உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழுது. பயப்பட தேவை இல்ல.

Monday, 9 May 2016

தேங்காய் எண்ணெய் அதிர்ச்சி ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

தேங்காய் எண்ணெய் அதிர்ச்சி ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!
பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே...
சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..
பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும்போது தான் விலை கூடுகிறது ..
கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும்...
கச்சா எண்ணையிலிருந்து அதீதகடைசி பொருளே இந்த மினரல் ஆயில்ஆகும் .
கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள்எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “ஆயில்’.
இதற்கு நிறமோ,மணமோ இருக்காது.
இதன் அடர்த்தி அதிகம் .எந்தவகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..
பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை
ஜான்சன்பேபி ஆயில் முதல்சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில்என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.
தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல்ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் .
johnson baby oil, amla hair oil,clinic plus, ervamartin hair oil, etc..பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...
மினரல் ஆயில் சேர்த்தல் பக்கவிளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும்முடி தனது ஜீவன்
இழந்து வறண்டு போகும்.
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த
தடை விதிக்கிறது .
தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால்
பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில்
இருந்து வாங்குங்கள்
டப்பாக்கள அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து
விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள்.
குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளரவைக்கும் ..
கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

கூகுளில் பொறியாளராக வேண்டுமா, உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை இவை தான்

யாருக்கு எப்பொழுது எதில் சந்தேகம் வந்தாலும் முதலில் தேடுவது கூகுளில் தான், அந்தளவு உலக பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற பலரும் வரிசையில் நிற்கின்றனர்.

நீங்களும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா, கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

கோடு

C++, Java, Python, Consult MIT அல்லது Udacity போன்ற கோடிங் மொழிகளை கற்றிருக்க வேண்டும்

தேர்வு

உங்களுக்கு கோடிங் தெரிந்திருப்பதோடு அவைகளில் இருக்கும் பக்ஸ்களை எடுக்கவும், சாப்ட்வேரை ப்ரேக் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்

சுருக்க கணிதம்

சுருக்க கணிதம் குறித்த தகவல்களும் அதோடு தொடர்புடைய சில பாடங்களிலும் தேர்ந்திருக்க வேண்டும்

இயங்கு தளம்

இயங்கு தளங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்

வரைவியல் தரவுக் கட்டமைப்பு

வரைவியல் தரவுக் கட்டமைப்புகளான stacks, queues மற்றும் bags போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்

குறியாக்க

குறியாக்கம் குறித்து அறிந்திருக்க வேண்டும்

தொகுப்பிகள்

கம்பைலர் குறித்து நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் இதன் மூலம் பெரியளவு கணிணி மொழிகளையும் எளிதாக மொழியாக்கம் செய்ய முடியும் என்று ஸ்டான்போர்டு தெரிவிக்கின்றது.

இணைக் கணிப்பணி

இணைக் கணிப்பணி குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்

நிரலாக்க மொழி

Java Script, CSS, Ruby மற்றும் HTML போன்ற மொழிகளை அறிந்திருக்க வேண்டும்

Sunday, 8 May 2016

புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்!

நம்மில் பலருக்கு வாழ்க்கையில் முதல்முறையாக தொழில் தொடங்கி ஜெயிக்க ஆசை. இன்னும் சிலர், ஏற்கெனவே ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்துகொண்டு இருப்பார்கள். ஆனாலும், அதிக லாபம் தரக்கூடிய புதிய தொழில் ஏதேனும் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்த்துவிடத் துடிப்பார்கள். இந்த இரண்டு வகையினருக்கும், அதிக ரிஸ்க் இருந்தாலும் அதிக லாபம் தரக்கூடிய புதிய பொருளாதாரத் தொழில்கள் ஏற்றவை. அது என்ன புதிய பொருளாதாரத் தொழில்கள் என்று கேட்கிறீர்களா..?

1990-ல் நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது பல துறைகளிலும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. தொலைபேசித் துறையில் பார்தி ஏர்டெல், ஐ.டி. துறையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, வங்கித் துறையில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., யெஸ் பேங்க், மருந்துத் துறையில் பயோகான், டாக்டர் ரெட்டீஸ் என பல நிறுவனங்கள் உருவாகி, இந்தியாவின் புதிய தொழில் முகத்தை உலகுக்கு காட்டியது. கன்ஸ்யூமர் துறையில் ஐ.டி.சி., கவின்கேர், மாரிகோ என பல நிறுவனங்கள் உருவாகி, இன்றும் சக்கைப்போடு போட்டு வருகின்றன.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பொருளாதார மாற்றங்களினால் இன்றும் புதிது புதிதாக பல தொழில் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றில், இன்டர்நெட், மொபைல் டெக்னாலஜி, டெலிகாம் போன்ற துறைகளில் உருவாகிவரும் வாய்ப்புகளை புதிய பொருளாதாரத் தொழில்களாக நாம் கருதலாம்.

உதாரணத்திற்கு, உணவகங்கள் (ரெஸ்டாரன்ட்ஸ்) முன்பெல்லாம் ஒரு வகைதான். ஆனால், இன்றோ துரித உணவகம், தோசை ஹட், பிட்ஸா ஹட், சைனீஸ், அமெரிக்கன், இத்தாலியன், அரேபிக் என்று பல வகை - ஒவ்வொருநாளும் பெருகிக்கொண்டே போகின்றன.

கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் ஒரு சின்ன அப்ளிகேஷனை கஷ்டப்பட்டு உருவாக்கி, அதனைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதைச் சொல்லி பிரபலப்படுத்துகிறார்கள். அது ஓரளவுக்கு பிரபலமாகி, பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பல நூறு கோடி ரூபாய்க்கு அந்த சாஃப்ட்வேரை விற்றுவிட்டு, சென்றுவிடுகிறார்கள்.

இவை மட்டுமல்ல, இன்னும் பல புதிய தொழில் வாய்ப்புகளைச் சொல்லலாம். உதாரணமாக, கால் டாக்ஸி ஏற்கெனவே இருக்கிறது. இப்போது கால் டாக்ஸிக்குப் பதிலாக கால் ஆட்டோவும் வந்துவிட்டது! வாடகைக்கு சைக்கிள் விட்டோம் முன்பு. இனி வாடகைக்கு கார்/பைக் விட்டால் எப்படி இருக்கும்?

நாம் எல்லோரும் கடைகள் வைத்து ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் சேவை செய்கிறோம். ஆன்லைன் கடை வைத்து உலகம் முழுவதும் தொழில் செய்தால் எப்படி இருக்கும்? டாக்டர்களை பல வியாதிகளுக்கும் நேரிலேயே சென்று பார்த்து உரிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு வருகிறோம். போன் அல்லது இ-மெயில் மூலம் டாக்டர் கன்சல்டிங் செய்தால் எப்படி இருக்கும்? மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கி வருகிறோம். ஆன்லைன் அல்லது போன் மூலம் மருந்து விற்பனை செய்தால்?

இதுபோல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு என்னென்ன தேவை என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். புதிய ஒயினை புதிய கோப்பையில் தர முடியுமா என்று பாருங்கள். அல்லது பழைய ஒயினை புதிய கோப்பையில் தரமுடியுமா என்று யோசியுங்கள்.

அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், அமெரிக்கர்கள் குறைந்த மார்ஜின் உள்ள பிசினஸைத் தூக்கி எறிந்து கொண்டே இருப்பார்கள். அதேசமயம், புதிய ஹை மார்ஜின் தொழில்கள் உலையில் வெந்துகொண்டே இருக்கும். இதுவே அந்நாட்டை எப்போதும் உலகளவில் தலைமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதுமாதிரியான தொழில்களைத் தேர்வு செய்யும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அனுபவம் இல்லாத புதிய தொழில், ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்காது என்பதால் முதலீடு கிடைப்பது கடினம், அரசின் சட்டதிட்டங்கள் திடீர் பாதகங்களை உருவாக்கலாம்... என நெகட்டிவ் அம்சங்கள் இத்தொழிலில் இருந்தாலும், பாசிட்டிவ் விஷயங்களும் நிறைய இருக்கவே செய்கின்றன.

புதிய தொழில்கள் மூலம் நம் நாட்டில் தோண்டி எடுக்கவேண்டிய பணம் இன்னும் ஏராளமாக உள்ளது. அதைத் தோண்டுபவராக ஏன் நீங்கள் இருக்கக் கூடாது? அப்படி நீங்கள் தோண்ட நினைத்தால், ஹை மார்ஜின் பிசினஸாக யோசியுங்கள். உங்கள் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். வெளியில் சென்று உங்கள் எண்ணங்களை உங்களுக்கு நம்பகமானவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிசினஸ் ப்ளானை பட்டை தீட்டுங்கள்! தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் உழைப்பு இன்னும் சில ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதித்துத் தரும் என்பதற்கு மூன்று நிஜ உதாரணங்களை இனி சொல்கிறேன்.

ரெட்பஸ்:

2006-ல் www.redbus.in என்ற வெப்சைட் பனிந்த்ர சமா மற்றும் இரண்டு நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் பிட்ஸ் பிலானியில் படித்தவர்கள். தீபாவளியின்போது தாங்கள் வேலை பார்த்த இடமான பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டிற்கு பஸ்ஸுக்கு டிக்கெட் கிடைக்காமல் தவித்தபோது உருவான ஐடியாதான் ரெட்பஸ்.இன்

இந்த வெப்சைட் மூலம் இந்தியாவில் அனைத்து இடங்களிலிருந்தும் தொலைதூர பஸ்ஸிற்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சமீபத்தில் இந்த நிறுவனத்தினை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நேஸ்ப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் இந்திய அங்கமான இபிபோ ரூ.500-600 கோடிக்கு வாங்கியுள்ளது.  மூன்று பேர் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்ததற்கு கிடைத்தப் பரிசுதானே இது!

ஜஸ்ட்டயல்:

ஒரு தொழிலின் டெலிபோன் எண் அல்லது முகவரியை அறிந்துகொள்ள ஜஸ்ட்டயல் என்ற நிறுவனத்தின் சேவையை உங்களில் பலர் பயன்படுத்தி இருப்பீர்கள். இத்தொழிலை ஆரம்பித்தவர் மும்பையைச் சேர்ந்த வி.எஸ்.எஸ். மணி. இதற்குமுன் பல தொழில்களில் தனது கையை நனைத்தார். ஆனால், இத்தொழில்தான் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது. வெறும் ரூ.50,000-த்தைக்கொண்டு 1996-ல் தனது 29-வது வயதில் ஜஸ்ட்டயலை ஆரம்பித்தார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு வந்த ஐ.பி.ஓ-வில் பல நூறு கோடிக்கு அதிபதியாக மாறியிருக்கிறார்.

மேக்மைடிரிப்:

தீப் கார்லா மேக்மைடிரிப் என்ற ஆன்லைன் டிராவல் வெப்சைட்டை 2000-த்தில் புதுடெல்லியில் ஆரம்பித்து 2010-ல் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் வெற்றிகரமாக லிஸ்ட் செய்தார். ஒரு பங்கு அமெரிக்க டாலர் 14 என விற்று 70 மில்லியன் டாலர்களை நிறுவனம் திரட்டியது. கூடிய சீக்கிரம் இந்திய சந்தையில் இவரது நிறுவனத்தின் பங்கு பட்டியலிடப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

இதுமாதிரி நீங்களும் ஏன் ஒரு புதிய தொழிலைத் தொடங்கக்கூடாது?

படித்த வேலையில்லாதவர்கள் சிறு தொழில் கடன் பெற - விபரங்கள் Small Business Loan Details For Educated Unemployed

யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தில் கடன் பெற கல்வித் தகுதி, வயது நீங்கலாக குடும்ப ஆண்டு வருமானம் போன்ற நிபந்தனைகள் எதுவும் உண்டா?

ஆம். நிபந்தனைகள் உண்டு. படித்து வேலை இல்லாதவருக்குத்தான் கடனுதவி வழங்கப்படுகிறது என்றாலும், அவரது குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணியும் கடன் பெற முக்கியமான தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில், ஏழை இளைஞர்களுக்கான கடனுதவியை வசதி படைத்தவர்கள் பெற்றுவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது.

அதன்படி விண்ணப்பதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மானியத் திட்டங்களின் கீழ் எந்தவொரு வங்கிக் கடனும் பெற்றிருக்கக் கூடாது. வங்கிக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவராகவும் இருக்கக் கூடாது.


வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த கால வரையறை உள்ளதா?

மானியத் தொகை நீங்கலாக மீதம் உள்ள தொகையை, கடன் பெற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு திருப்பிச் செலுத்தவேண்டும்.

இந்த திட்டத்துக்காக எந்த வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன?

அனைத்து வணிக வங்கிகள், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் ஆகியன கடனுதவி வழங்குகின்றன.

யுஒய்இஜிபி திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க விண்ணப்பம் எங்கே பெறுவது?
அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும்?

பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல், சுய தொழில் தொடங்குவதற்காக வாங்கப்படும் இயந்திரங்கள், தளவாடங்களுக்கான விலை மதிப்பீடு (கொட்டேஷன்), சாதிச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போர்ட்), குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை இல்லையென்றால் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்று, முன்னாள் ராணுவத்தினர் அல்லது மாற்றுத் திறனாளி என்றால் அதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்கள், உறுதிமொழிப் பத்திரம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டியது அவசியம்.

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
07. பித்த மயக்கம் தீர புளியாரை!
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!