Showing posts with label பொது அரிவு. Show all posts
Showing posts with label பொது அரிவு. Show all posts

Wednesday, 7 June 2017

( 🌺 *வெயிலை வெறுக்காதீர்கள்*🌺


( 🌺 *வெயிலை வெறுக்காதீர்கள்*🌺

🌞வெயில் என்பது  இறைவனின் பெரும்  அருட்கொடையாகும்

🌞வெயிலின் உஷ்னசக்தியை கொன்டே உலகம் இயங்குகின்றது.

🌞பனிக்காலம்
மழைக்காலம்
குளிர்காலம்  இவைகளைவிட வெயில்காலமே மிகவும்  சிறந்ததாகும் ,

🌞வெயில் நம் மீது படும்போதுதான்  அதன்  சக்த்தியை  கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது.

🌞மூட்டுவலி  உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும் , தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுபடுத்த படுகின்றது ,

🌞பல காய்கள் வெயிலினாலேயே பழமாகின்றது

🌞நமது உடலின் ரத்த ஓட்டம் வெயில்காலத்திலேயே  அதிகளவு உடலை சுற்றிவருகின்றது ,

🌞வெயிலின் சக்தியை கிரகித்தே மரங்கள் வளருகின்றன.. மழைகாலங்களில் குறைவான வளர்ச்சியையே மரங்கள் பெறுகின்றது...

🌞நீர் எந்தளவுக்கு  விவசாயத்துக்கு  முக்கியமோ அதே  அளவு வெயிலின் உஷ்ன சக்தியும் மிகவும்  அவசியமானதாகும்.

🌞வியர்வை எனும்  அற்புதமான உடல் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வு வெயில் காலத்திலேயே அதிகம்  நிகழ்ந்து நமது ஆரோக்கியத்தை உயர்த்துகின்றது,

🌞இந்த வியர்வையின் மூலமாக  சிறுநீரகங்களின் வேலை பளுவும்...குறைந்து  சிறுநீரகங்கள் பலம் பெறுவதும் வெயிலினால்தான் நடைபெறுகின்றது...
இதை அனுபவிக்காமல்
ஏசி  ரூம்களில்  முடங்கி  கிடக்கலாமா?

*வெயிலை அனுபவியுங்கள்* *அத்துடன்  உங்களது  ஆரோக்கியத்தையும் அதிகரித்து கொள்ளுங்கள்*)

( *அப்பாடா கிடைச்சாச்சு.. சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம்.. வறட்சியைத் தாங்கி, வளத்தை அளிக்க கூடியது.. அனைவரும் தவறாமல் படிக்கவும் பயனுள்ள தகவல்.*

தமிழகத்தின் வறட்சிக்கு காரணம் என்று கூறப்படும் *சீமை கருவேல மரத்தை* அழிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுக்க சீமை கருவேல மரத்தை அழிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சீமை கருவேல மரங்களை அழித்த இடம் தற்போது கட்டாந்தரையாக மாறி உள்ளது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் அந்த இடத்தில் என்ன மரத்தை வைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சீமை கருவேல மரம் வறட்சியையும் தாங்க கூடியது.

அதோடு பொதுமக்களுக்கு விறகு, எரிகரி போன்றவற்றுக்கும் பயன்பட கூடியது. சீமை கருவேல மரத்திற்கு மாற்று என்ற பட்டிமன்றமே நடந்து வருகிறது. மேலும் மாற்றாக ஒரு மரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

சீமைக் கருவேலமரங்களுக்கு இணையாக வறட்சியைத்தாங்கி வளரக்கூடியதும், பல நன்மைகளைக் கொடுக்கக்கூடிய *மூலிகைத்தாவரமுமான ” மஞ்சநெத்தி” எனப்படும் நுணா   என்னும் வகை மரத்தை பெரும்பாலானோர் பரிந்துரைக்கின்றனர்.*

இது அடுப்பெரிக்க மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது.
சீமை கருவேல மரத்தை போலவே மஞ்சநெத்தி மரமும் மனிதர்கள் விதையிட்டு வளர்க்கப்படுவதில்லை. தானாக முளைத்து பசுமையாக இருக்கக்கூடியது.
இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை அனைத்தும் சிறந்த மருந்தாகும். வேள் நிறுவனம் விற்கும் அகத்தியர் மூட்டுவலி மருந்தின் இரகசியம் இம்மரத்தின் பாகங்கள்தான்.

இன்னும் ஒன்றை கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். ஒருநேரத்தில் படுவிற்பனையில் இருந்த “நோணி” எனும் மருத்துவ குடிப்பு இம்மரத்தின் பழச்சாறுதான்.  ஆனால் அவை வணிகத்திற்காக செயற்கை முறையில் வளர்த்து,  இராசயனம் மூலம் கெடாமல் பாதுகாக்கபடுவதால் மட்டுமே நோணி மருந்தினை பரிந்துரை செய்ய முடியவில்லை.

இம்மரத்தினைப் பயன்படுத்தி அடுப்பெரித்தால் வெளிப்படும் புகை உங்கள் இல்லத்தில் கிருமிநாசினியாக செயல்படும்.  அதன் இலைகளை ஆடுகள் உண்டால் நோயின்றி வாழும். காற்றைக் குளிர்வித்து மழைவளத்தை பெருக்கும்.

பறவைகள் கூடுகட்டி நிம்மதியாக வாழும்.  பழங்கள் பறவைகள், மனிதர்கள் விரும்பி உண்ணும் சுவையுடையது. மருத்துவக் குணம்வாய்ந்தது.  இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து மூட்டு, முழங்காலில் ஒத்தனம் கொடுத்தால் வலி சரியாகும்.  இதன் வேர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை தொடும்போது நீரின் தன்மை மருத்துவ குணமுள்ளதாக மாறுகிறது.

சீமைக் கருவேலமரம் ஒரு பாலைவன தாவரம். அதன் இயற்கையான குணங்கள் நம்மண்ணுக்கு ஏற்றதல்ல. விரைவில் சீமைக் கருவேலமரங்களை அழித்துவிட்டு அந்த இடங்களை  5 வருடங்களுக்கு பராமரிப்பது நமது கடமை. சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் மேற்கொண்ட இடங்களில் மீண்டும் முளைக்காமலிருப்பதற்கு காரணம், முறையான பராமரிப்புதான்.

சீமைக் கருவேலமரம் இல்லாவிட்டால் எப்படி அடுப்பெரியும் என்று கூப்பாடு போட்டவர்கள் வரிசையாக வாருங்கள்… நுணா மரத்தை பாதுகாப்போம், நடுவோம், விதையிடுவோம்.

மனிதரை கட்டுப்படுத்தி உருவாக்கப்படும் புது உலகம்?

மனிதரை கட்டுப்படுத்தி உருவாக்கப்படும் புது உலகம்? அபாயகரமான சதித் திட்டம் அம்பலமானது!!
.
.
காட்சிகள் மூலம் ஒரு மனிதனை கட்டுப்படுத்தி ஆள முடியும் எனவும், அதன் அடிப்படையிலேயே இந்த உலக மனிதர்கள் இயக்கப்படுகின்றார்கள் என்பதனை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.

மேலும் புது உலகத்தை உருவாக்கவும், அனைத்து மனிதர்களையும் கட்டுப்படுத்தவும், இந்த அபாயகரமான சதித் திட்டம் தற்போதும் மறைமுகமாக நடைமுறையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் தொலைக்காட்சி, சினிமா போன்றவை மூலமாகவே மனிதர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றார்கள். மின்காந்த அலைகள் மூலமாக இவை சாத்தியம் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது காட்சிகள் எனப்படும் மின்காந்த அலைகள் மூலமாக மனிதரது நரம்பு மண்டலத்தினை கட்டுப்படுத்தி, அதன் மூலமாக அவனது எண்ணத்தை மாற்றியமைக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு ஒரு வகையில் மிகவும் அபாயகரமானதாக கருதப்படுகின்றது. மனித மூளைகள் கட்டுப்படுத்தல் செயற்பாடு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தொடக்கம் செயற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் எவரும் இதனை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்காத காரணத்தினால் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் தற்போது நீண்ட கால ஆய்வின் பின்னர் இது உண்மை என விஞ்ஞானிகள் ஆணித்தரமாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு இந்தக் கண்டுபிடிப்புக்கு காப்புரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. US6506148 இது அதன் காப்புறுதி இலக்கமாகும்.

Nervous system manipulation by electromagnetic fields from monitors என்பதே அந்தக் கண்டுபிடிப்பு. https://www.google.com/patents/US6506148 இந்த தளத்தில் இது குறித்து அறிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும்.

காட்சிகள் வடிவமைப்பு ஊடாக மனிதர்களின் உணர்ச்சிகளை தூண்டவும், அவர்களது எண்ணங்களை மாற்றியமைக்கவும் முடியும் என்பதே இந்தக் கண்டுப்பிடிப்பு.

இதேவேளை இந்த கண்டுபிடிப்பானது தற்போது மறைமுகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் அதிர்ச்சி மிக்க தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

உதாரணமாக சிறுவர்கள் விரும்பும் கார்ட்டூன் படங்கள்

ஒரு காலத்தில் கார்ட்டூன்கள் என்பன வண்ணமயமிக்கதாகவும், அறிவுசார் வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நகைச்சுவை மற்றும் மகிழ்வினை ஏற்படுத்துவதாகவுமே உருவாக்கப்பட்டன.

ஆயினும் தற்போது கொடூர எண்ணங்களை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக, அவனை விடவும் ஒருவன் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவுமே (அதிகமாக) அமைக்கப்படுகின்றன.

ஒருவன் குழந்தையாக இருக்கும் போதே அவன் மனதில் அழிப்பு எனும் கொடூர எண்ணம் உருவாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. இவை காலப்போக்கில் சிந்திக்கும் திறனற்ற மனிதர்களை உருவாக்கும் திட்டம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத்திட்டம் “ஓர் உலகக்கோட்பாடு” என்ற மர்மக் குழு ஒன்றின் மூலமாக செயற்படுத்தப்பட்டுக் கொண்டு வருவதாகவும் ஆய்வுமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஆனால் உத்தியோக பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.)

அந்தவகையில் மேற்குறிப்பிடப்பட்ட (N.s.m.e..m) தொழில் நுட்பம் வெளிப்படையாக, நேரடியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் உலகம் கட்டுப்பாடற்ற வகையில் இயங்கத் தொடங்கும் என்பது ஆய்வாளர்களின் தகவல்.

ஆரம்ப காலம் முதலாகவே இந்த மனித மூளைச்சலவைப் பற்றி செய்திகள் வெளிவந்தன. 1950 களில் CIA மற்றும், அமெரிக்க பாதுகாப்புத்துறை Project MKUltra எனும் ஓர் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. இது மூளையைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டமாகும்.

அதன் பின்னர் இதுவோர் சதிக் கோட்பாடு எனக் கூறப்பட்டு வந்த நிலையிலேயே இந்தக் கண்டுபிடிப்பு உண்மை எனவும் அது, பயன்பாட்டில் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்தக் கண்டுபிடிப்பு மூலம் மனித மூளையை வேறு ஓர் இடத்தில் இருந்து ஹேக் செய்ய (ஊடுருவ) முடியும் என்பதே உண்மை. இந்த சதி மறைமுகமாக தற்போது உலகில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பல ஆய்வுக்கட்டுரைகளும், செய்திகளும் வெளிவந்தபோதும் உயர்மட்ட அதிகாரங்கள் இதனை மறைத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆபத்து மிக்க கண்டுபிடிப்பு நேரடியாக பிரயோகிக்கப்பட்டால் உலகம் பாரிய அழிவைச் சந்திக்க நேரிடும் என்பதே இதன் உண்மைத் தன்மை எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Saturday, 30 July 2016

பயனுள்ள இணையதளங்கள்...!

பயனுள்ள இணையதளங்கள்...!

சான்றிதழ்கள் :-
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic....chitta_ta.html…
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic...._ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet...n/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in...forms/birth.pdf
http://www.tn.gov.in...forms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in...t-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in...cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketc...in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.i...iles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.redi...ping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm…
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofind.../eduloans1.aspx
http://www.bankofbar...fs/eduloans.asp
http://www.axisbank....cation-Loan.asp
http://www.hdfcbank....n/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.tnpsctamil.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
http://www.tettnpsc.com/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/...c-computer-tra…
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/...ter-training-c…
3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ

Saturday, 2 July 2016

பச்சை பயரில் இவ்ளோ சத்து உள்ளதா….?

முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் – பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.

என்ன பலன்கள்?

எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு.

மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.

மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன.

இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

மூளைக்கு யோகாசனம் “தோப்புக் கரணம்” தெர்யுமா ..?

மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது, மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் என்று தான் சொல்வது வழமை.

ஆனால், முன்னாளில் நமது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் நமக்கு வழங்கிய தண்டனை “தோப்புக்கரணம்” தான் மூளைக்கு சிறந்த யோகாசனம்.

தோப்புக்கரணம் போடுவதால் மூளை புத்துணர்ச்சி அடைகிறதாம், Autism எனப்படும் மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் கூட இந்தத் தோப்புக்கரணத்தால் நலன் பெறுகிறார்களாம்.

அதுமட்டுமின்றி உடலில்இரத்த ஓட்டம் சீராவதால் நினைவாற்றல் அதிகரிக்கிறதாம்.

யாராவது ஒரு குழந்தை அடங்காமல அடம்பிடித்தால் அல்லது கோபத்தால் கிடைப்பதை எல்லாம் எறிந்து உடைத்தால், “Go to yourroom and think what you did…” என்பதில்லையே…செய்த பிழைக்கேற்ப பத்து, பதினைந்து அல்லது இருபது முறை தோப்புக் கரணம் போடு! என்பதுதான் வழமை…

குழந்தைகளுக்கு மன இறுக்கம் இருந்ததோ இல்லையோ, மன இறுக்கம் இருந்தால், அது உடனேயே நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.

அந்த நாட்களில் பாடசாலை மாணவர்கள் அவமானம் என நினைத்த தண்டனையான இந்தத் தோப்புக்கரணத்திற்கு அமெரிக்கர்கள் காப்புரிமை கூடப் பெற்றிருக்கிறார்கள்.

எழுபதுகளில் ஒரு ஜேர்மானிய மருத்துவர் இந்தியா சென்ற போது, இந்தியர் பிள்ளையாரைப் பார்த்து தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்து விசித்திரமாக எண்ணவில்லை.

அவர் இந்த விசித்திரமான செய்கையை ஆராய்ந்து அந்த நாட்டு மருத்துவ இதழில் இந்தத் தோப்புக் கரணம் உடலில் என்ன நன்மையைச் செய்யும் என விளக்கியிருந்தார்.

அதாவது, இடது காதுச் சோணையில் வலது கண் நரம்பின் முடிவிடமும்,வலது காதுச் சோணையில் இடது கண் நரம்பின் முடிவிடமும் இருப்பதால் இவற்றைச் சீரான அழுத்தத்துடன் அமுக்கி விடுவதால் கண்களிரண்டும் நல்ல பயிற்சி பெறும், இதனால் பார்வைக் கோளாறுகள் வராது என கூறியுள்ளார்.

இப்போது தெரிகிறதா தோப்புக் கரணத்தின் அருமை!

இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி?

ஆதார் அட்டை இந்திய அரசால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுகிறது. ஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செய்து கொண்டால் போதுமானது. இந்த பதிவு இலவசமாகும். இப்போது, எளிதாக இணையத்தில் ஆதார் அட்டை பதிவிறக்க முடியும் மற்றும் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. இருப்பினும், இ ஆதார் அட்டையை பதிவிறக்க ஆதார் அட்டை விண்ணப்பம் ஒப்புதல் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆதார் அட்டையை பதிவிறக்க தேவையானவை

1. பதிவு ஐடி / ஆதார் எண்

2. ஏற்றுகொள்ளல் ரசீதில் (acknowledgement slip) உள்ள படி

3. முழுப் பெயர்

4. அஞ்சல் குறியீடு எண்

5. பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்

ஆதார் கடிதம் மற்றும் கடிதம்

மேலும் ஆதார் கடிதம் மற்றும் ஆதார் அட்டை கூட ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதற்கு தேவையானவை ஆதார் அட்டை பதிவு செய்த பதிவு எண், தேதி மற்றும் நேரம் அல்லது ஆதார் அட்டை எண். இ-ஆதார் அட்டை பதிவிறக்குவது எப்படி என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்

செயல்பாடு 1

முதலில் ஆதார் அமைப்பின் இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். இதை கிளிக் செய்யவேண்டும். https://eaadhaar.uidai.gov.in/ பின்பு 14 இலக்க ஆதார் பதிவு எண்ணை உள்ளிடவும், ஆதார் ஏற்றுகொள்ளல் ரசீதில் உள்ள 14இலக்க தேதி, நேரம் குறித்த எண்ணை உள்ளிடவும். ஆதார் அட்டைக்கு தேவையான விவரங்கள் அதாவது பதிவு எண், தேதி, நேரம், பெயர், பின்கோடு மற்றும் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்ச்சா(captcha)வை பூர்த்தி செய்யவும்.

செயல்பாடு 2

கொடுக்கபட்ட தரவுகள் சரியாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு OTP(ஒரு முறை கடவுச்சொல்) கிடைக்கப்படும்.அதை உரைபெட்டியில் உள்ளிடவும்.

செயல்பாடு 3

OTP (ஒரு முறை கடவுச்சொல்) உள்ளிடப்பட்டதும் ஆதார் அட்டையை பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டை அல்லது ஆதார் அட்டைக்கு பதிலாக பயன்படுத்தும் கடிதத்தை கொண்ட PDF கோப்பை பதிவிறக்க கேட்கும். பின்கோடு கடவுச்சொல் ஆகும். ஆதார் அட்டையை பதிவிட்டு அத்தாட்சியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டு நிமிடம் செலவு செய்து படியுங்கள் பயனுள்ள தகவல்

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு
சுழன்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.