*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*
*இதோ*
*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*
*2 - மூலிகை தேனீர்*
*3 - சுக்கு மல்லி காபி*
*4 - பனங்கருப்பட்டி*
*5 - பனங்கற்கண்டு*
*6 - வெல்லம்*
*7 - கரும்பு சர்க்கரை*
*8 - இதில் செய்த இனிப்புகள்*
*9 - நாட்டு பசும் பால்*
*10 - நாட்டு பசு தயிர்*
*11 - நாட்டு பசு நெய்*
*12 - நாட்டு பசும்பால் பொருட்கள்*
*13 - இந்துப்பு*
*14 - கல் உப்பு*
*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*
*16 - நாட்டு கோழி*
*17 - நாட்டு கோழி முட்டை*
*18 - பட்டை தீட்டப்படாத அரிசி*
*19 - வடித்த சோறு*
*20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*
*21 - பச்சை தண்ணீர்*
*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*
*23 - மழை நீர்*
*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*
*25 - இரும்பு பாத்திரங்கள்*
*26 - விறகு அடுப்பு*
*27 - பயோ கேஸ் அடுப்பு*
*28 - சத்துமாவு கலவை*
*29 - குளியல் பொடி*
*30 - சிகைக்காய் பொடி*
*31 - இயற்கை பற்பொடி*
*32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*
*33 - கோரைப்பாய்*
*34 - பழச்சாறுகள்*
*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*
*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*
*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*
*38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*
*39 - இயற்கை கொசு விரட்டி*
*40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்*
*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*
*42 - நம் நாட்டு சிப்ஸ்கள்*
*43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*
*44 - குளிர்ந்த நீரில் குளிப்பது*
*45 - இயற்கை ஹேர் டை*
*46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்*
*47 - மண் பானை குளிரூட்டி*
*48 - பச்சை கொட்டை பாக்கு*
*49 - மரபு மருத்துவங்கள்*
*50 - உடல் உழைப்பு*
*51 - பசித்து உண்பது*
*52 - மெதுவாக சுவைத்து உண்பது*
*53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*
*54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*
*55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*
*56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*
*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*
*58 - புத்திகூர்மை*
*59 - சுற்றுச்சூழல் தூய்மை*
*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*
*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*
*உங்களின் உணவுமுறைகளும்
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை
Saturday, 21 October 2017
*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*
Monday, 16 October 2017
தும்பி எனும் தட்டான் தும்பி எனும் தட்டான் தும்பி அல்லது தட்டான் ஓர் அறிமுகம்:-
தும்பி எனும் தட்டான்
தும்பி எனும் தட்டான்
தும்பி அல்லது தட்டான் ஓர் அறிமுகம்:-
தும்பி அல்லது தட்டான் என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் அழகிய ஒல்லியான பூச்சியாகும்.தட்டான் என்பது வழக்குச் சொல். சங்கஇலக்கியங்களில் இவை தும்பி என்றழைக்கப்பட்டுள்ளன. தட்டான்கள் இரண்டு வகைப்படும். அமரும்போது இறக்கையை பக்கவாட்டில் விரித்து வைத்திருப்பவை தட்டான்கள் ஏனெனில் இவற்றால் இறகுகளை மடக்க இயலாது. இவற்றின் கண்கள் அருகருகே அமைந்திருக்கும். மேலும் சற்று பருமனான உடலமைப்பை கொண்டிருக்கும்.
தட்டான்.
இறக்கையை மடக்கி முதுகின் மேல் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை தட்டான்களைவிட பெரும்பாலும் உருவத்தில் சிறியதாகவும், ஒல்லியான உடலையும் கொண்டிருக்கும். இவற்றின் இரண்டு கண்களும் இடைவெளி விட்டு அமைந்திருக்கும். தட்டான்கள்பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகிலும்,பொது வெளிகளிலும் காணப்படும் ஆனால் ஊசித்தட்டான்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலேயேதான்இருக்கும்.
அழகிய உடலமைப்பு:-
தட்டான் பூச்சிகள் சராசரியாக (Dragonfly) 4 அங்குல நீளம் இருக்கும்.அதிகபட்சமாக 6 அங்குல நீளம் இருக்கும். ஊசித் தட்டான்கள் (Damselfly)அதிகபட்சமாக 3 அங்குல நீளம் இருக்கும். தட்டான்கள் பறவையினமாக அறியப்பட்டாலும், பிரிவு பூச்சி வகையில் Anisoplera வகையில் அடங்கும்.
தட்டானின் உடலமைப்பு ஓர் விளக்கப்படம்.
தட்டான் பூச்சியின் உடலை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதலில் தலைப்பகுதி. அடுத்து நெஞ்சுப் பகுதி கடைசியாக ஒல்லியாக நீண்ட குச்சி போல் உள்ள பகுதி வயிறு.இப்பூச்சிகளின் உடல், பல வண்ணங்களில் கண்ணைக் கவரும் நிறத்தில் மெல்லிய கம்பி போல் நீண்டுஇருக்கும். தட்டாரப்பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன. இவை வலைபோலவும் மிகமிக மெல்லிய,கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் வகையில் இருக்கின்றன. தட்டான் பூச்சிகளுக்கு இரண்டு பெரியகூட்டடுக்குக் கண்களும் அதாவது ஒவ்வொரு கண்ணிலும்ஆயிரக்கணக்கான விழியாடிகள் (லென்ஸ்) உள்ளன. ஆறு கால்களும் உண்டு. கால்களில் மெல்லிய மயிர்போன்ற இழைகள் நெடுகிலும் உண்டு.நீண்ட ஒல்லியான கம்பி போன்ற வயிற்றுப்பகுதியில் பல முக்கியமான உறுப்புகள் உள்ளன. இப்பகுதியில், கழிவுவாய், முள் போன்ற கொடுக்கு, பெண்தும்பிக்கு முட்டையிடும் உறுப்பு, ஆண்தும்பிக்கு விந்துகளைச் சேமித்து வைக்கும் துணை இனப்பெருக்க உருப்பு போன்றவை அடங்கும். தட்டானுக்குக் கீழிறக்கை மேலிறக்கையை விட அகலமாகக் காணப்படும்.
பறக்கும் திறன்:-
தும்பிகள் பொதுவாக மணிக்கு 20-30 கி.மீ விரைவில் பறக்கும் வல்லமை கொண்டவை, ஆனால் மணிக்கு 80-100 கி.மீ விரைவில் பறப்பதைப் பற்றியும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தனக்கான உணவை பிடிக்கும் போது 40முதல் 50 கி.மீ. வேகத்தில் பறந்தடிக்கும் என்பது ஆச்சர்யமான உண்மை மிகத்திறமையாக பறக்கக்கூடிய பூச்சிகளில் இனங்களில் முதலிடத்தில் இருப்பது தட்டான்களே. பூச்சி இனங்களிலேயே முதன்முதலில் பறக்கும் திறனைப் பெற்றவை தட்டான்களாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின்யூகம். இவற்றின் பறக்கும் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். தட்டானுடையமுதுகின் மேற்புறம் நான்கு இறக்கைகள் தனித்தனியாக அசையும் வகையில் உறுதியான தசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும்.
| பல மில்லியன் ஆண்டுகள் பழமையான தட்டானின் படிமம். |
![]() |
| பல மில்லியன் ஆண்டுகள் பழமையான தட்டானின் படிமம். |
ஏன் இன்றைய ஊடகங்கள் எதிர்மறை எண்ணங்களை விதைக்கின்றது என்று யாராவது சிந்தித்ததுண்டா?
ஏன் இன்றைய ஊடகங்கள் எதிர்மறை எண்ணங்களை விதைக்கின்றது என்று யாராவது சிந்தித்ததுண்டா?
.
2012 இல் உலகம் அழிந்துவிடும் என்று திட்டமிட்டு தொடர்ச்சியாக வதந்திகள் பரப்பப்பட்டது. அதன் விளைவாக 2009 இல் வெளியான 2012 என்னும் திரைப்படம் உலகம் முழுக்க திரையிடப்பட்டு 770 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்து கொடுத்தது.
.
ஊடகங்கள் (தொலைகாட்சி, நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்கள்) தொடர்ச்சியாக எதிர்மறையான செய்திகளை வெளியிடுகின்றன. இதன் மூலம் நமது கவனத்தை எளிதில் ஈர்க்க முடியும் என்று அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். இதன் காரணமாகவே உயிர்கொல்லி வியாதிகள் மற்றும் வன்முறைகள் பெருகிவிட்டதாகவும், நாம் அசாதாரணமான சூழ்நிலையில் வாழ்வது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இவை அனைத்தும் விளம்பர வருவாய்க்காகவும் வியாபார விருதிக்காகவுமே நிகழ்த்தப்படுகின்றன. இது தெரியாமல் இவர்கள் கிளப்பும் வதந்திகளை நம்பி பலர் குழப்பத்திலே வாழ்ந்து வருகின்றனர்.
.
உதாரணமாக தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்படும் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்சிகளை எடுத்துக்கொள்ளலாம். மக்களை பயமுறுத்துவதே இவர்களது நோக்கமாக இருக்கும். இதன் உச்சமாக நேற்று 2.10.2017 ஒரு தாய் தன் குழந்தைக்கு மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறி இருக்கிறார்கள். வைத்திய செலவிற்கு பணமில்லாமல் பயத்துடன் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்த தாய் மனம் வருந்தி குழந்தையை கிணற்றுக்குள் வீசி கொன்றுவிட்டு தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
.
ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததாலே இத்தகைய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் என்பது நாம் பயப்படும் அளவிற்கு பெரிய வியாதியல்ல உடலின் நோயெதிர்ப்பாற்றலின் செயல்முறைதான் எனவும் அதைதான் ஊடகங்கள் மிகப்படுத்தி செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று அந்த தாய்க்கு தெரிந்திருந்தால் இப்படியொரு முடிவை எடுத்திருக்க மாட்டார்.
ஏன் நாம் எதிர்மறை சிந்தனைகளால் ஈர்க்கப்படுகிறோம் என்கிற காரணத்தை உளவியல் ரீதியாக விளக்குகிறார் பிரபல மனநல மருத்துவர் கார்த்திகேயன்.
"நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.
ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம்.
ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது.
“உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது” என்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? ” என்று எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.
அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.
.
ஏன் இப்படி?
நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.
அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.
“உங்கள் குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா?
உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா?”
என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில் அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம் நமக்குச் சுலபமாக வரும்.
மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது.
சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன. அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.
அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.
இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!
இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை உடனடியாகச் செயல்படும். முன் மூளை சற்று நேர மெடுக்கும்.
நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம் செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.
உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம் குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, “நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..!” என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.
ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள் மனைவியின் பின் மூளையைத் தாக்க, “எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?” என்று கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, “குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான் புதுசா என்ன?” என்று சமாதானமாகிறார்.
ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது. அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.
வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.
நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!
இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!"
தும்பி எனும் தட்டான் தும்பி எனும் தட்டான் தும்பி அல்லது தட்டான் ஓர் அறிமுகம்:-
தும்பி எனும் தட்டான்
தும்பி எனும் தட்டான்
தும்பி அல்லது தட்டான் ஓர் அறிமுகம்:-
தும்பி அல்லது தட்டான் என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் அழகிய ஒல்லியான பூச்சியாகும்.தட்டான் என்பது வழக்குச் சொல். சங்கஇலக்கியங்களில் இவை தும்பி என்றழைக்கப்பட்டுள்ளன. தட்டான்கள் இரண்டு வகைப்படும். அமரும்போது இறக்கையை பக்கவாட்டில் விரித்து வைத்திருப்பவை தட்டான்கள் ஏனெனில் இவற்றால் இறகுகளை மடக்க இயலாது. இவற்றின் கண்கள் அருகருகே அமைந்திருக்கும். மேலும் சற்று பருமனான உடலமைப்பை கொண்டிருக்கும்.
தட்டான்.
இறக்கையை மடக்கி முதுகின் மேல் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை தட்டான்களைவிட பெரும்பாலும் உருவத்தில் சிறியதாகவும், ஒல்லியான உடலையும் கொண்டிருக்கும். இவற்றின் இரண்டு கண்களும் இடைவெளி விட்டு அமைந்திருக்கும். தட்டான்கள்பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகிலும்,பொது வெளிகளிலும் காணப்படும் ஆனால் ஊசித்தட்டான்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலேயேதான்இருக்கும்.
அழகிய உடலமைப்பு:-
தட்டான் பூச்சிகள் சராசரியாக (Dragonfly) 4 அங்குல நீளம் இருக்கும்.அதிகபட்சமாக 6 அங்குல நீளம் இருக்கும். ஊசித் தட்டான்கள் (Damselfly)அதிகபட்சமாக 3 அங்குல நீளம் இருக்கும். தட்டான்கள் பறவையினமாக அறியப்பட்டாலும், பிரிவு பூச்சி வகையில் Anisoplera வகையில் அடங்கும்.
தட்டானின் உடலமைப்பு ஓர் விளக்கப்படம்.
தட்டான் பூச்சியின் உடலை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதலில் தலைப்பகுதி. அடுத்து நெஞ்சுப் பகுதி கடைசியாக ஒல்லியாக நீண்ட குச்சி போல் உள்ள பகுதி வயிறு.இப்பூச்சிகளின் உடல், பல வண்ணங்களில் கண்ணைக் கவரும் நிறத்தில் மெல்லிய கம்பி போல் நீண்டுஇருக்கும். தட்டாரப்பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன. இவை வலைபோலவும் மிகமிக மெல்லிய,கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் வகையில் இருக்கின்றன. தட்டான் பூச்சிகளுக்கு இரண்டு பெரியகூட்டடுக்குக் கண்களும் அதாவது ஒவ்வொரு கண்ணிலும்ஆயிரக்கணக்கான விழியாடிகள் (லென்ஸ்) உள்ளன. ஆறு கால்களும் உண்டு. கால்களில் மெல்லிய மயிர்போன்ற இழைகள் நெடுகிலும் உண்டு.நீண்ட ஒல்லியான கம்பி போன்ற வயிற்றுப்பகுதியில் பல முக்கியமான உறுப்புகள் உள்ளன. இப்பகுதியில், கழிவுவாய், முள் போன்ற கொடுக்கு, பெண்தும்பிக்கு முட்டையிடும் உறுப்பு, ஆண்தும்பிக்கு விந்துகளைச் சேமித்து வைக்கும் துணை இனப்பெருக்க உருப்பு போன்றவை அடங்கும். தட்டானுக்குக் கீழிறக்கை மேலிறக்கையை விட அகலமாகக் காணப்படும்.
பறக்கும் திறன்:-
தும்பிகள் பொதுவாக மணிக்கு 20-30 கி.மீ விரைவில் பறக்கும் வல்லமை கொண்டவை, ஆனால் மணிக்கு 80-100 கி.மீ விரைவில் பறப்பதைப் பற்றியும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தனக்கான உணவை பிடிக்கும் போது 40முதல் 50 கி.மீ. வேகத்தில் பறந்தடிக்கும் என்பது ஆச்சர்யமான உண்மை மிகத்திறமையாக பறக்கக்கூடிய பூச்சிகளில் இனங்களில் முதலிடத்தில் இருப்பது தட்டான்களே. பூச்சி இனங்களிலேயே முதன்முதலில் பறக்கும் திறனைப் பெற்றவை தட்டான்களாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின்யூகம். இவற்றின் பறக்கும் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். தட்டானுடையமுதுகின் மேற்புறம் நான்கு இறக்கைகள் தனித்தனியாக அசையும் வகையில் உறுதியான தசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும்.
| பல மில்லியன் ஆண்டுகள் பழமையான தட்டானின் படிமம். |
![]() |
| பல மில்லியன் ஆண்டுகள் பழமையான தட்டானின் படிமம். |
![]() | |||
| தும்பியின் வாழ்க்கை சுழற்ச்சி நீரின் அடியில் உள்ள முட்டைகள் பொரிந்தவுடன் மீன்களைப் போல் செவுள்களின் மூலம் மூச்சுவிடுகிறது. குஞ்சுத் தட்டான் (Nymph) 12முதல் 15முறை தோலுரிந்து முழு வளர்ச்சிடைந்து நீரிலிருந்து வெளியேறும் கண்டம்விட்டு கண்டம் வலசை சென்றுவரும் தட்டான்கள்:- தட்டான்களும் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கிறது 12 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறது நம் தமிழ் நாட்டு தட்டான்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட்டு மாதம் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டு அக்டோபர் மாதம் மாலத்தீவை அடைகிறது. பின்னர் அங்கிருந்து நவம்பரில் செகேல்ஸ் தீவை அடைகிறது. டிசம்பரில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசம்பிக் நகரை அடைகிறது. அங்கு இருந்து ஏப்ரல் மாதம் மாலத்தீவு வழியாக மீண்டும் இந்தியாதிரும்புகிறது. இதில் ஆச்சரியப்படவேண்டிய தகவல் என்னவெனில் அவை ஒவ்வொருஇடத்திலும் சில நாட்களே தங்குகின்றன. இடையே 600 மிதல் 800 கிலோமீட்டர்தூரம் கடலை கடக்கின்றன. இவை 3 ஆயிரத்து 200 அடி உயரத்தில்பறக்கின்றன. தாழ்வாக பறந்தால் காற்றிந் வேகம் தட்டான்களை தள்ளிவிட்டு திசை மாற்றிவிடக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் சுவராசியமான தகவல் என்னவென்றால் இப்படி நீண்டதூரம் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்கு அவற்றின்அடிப்படைத் தேவையான தூய்மையான தண்ணிர் கிடைக்காததுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இயற்கை மனிதனுக்கு தந்த கோடை தட்டான்:- பூச்சியினங்கள் அதிக அளவில் பெருகிவிடாமல் சமன் நிலையில் வைத்திட பறவைகளோடு தட்டான்களின் பங்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சுழற்சியில் தட்டான்கள் சுற்றுச் சுழலுக்கு பெரிய அளவில் நன்மை செய்கின்றன. பூச்சிகளை தொடந்துதான் உணவாக்கிட தாமே பல பறவை இனங்களுக்கு உணவாக அமைந்து சூழலியல் சமன்பாட்டில் தட்டான்கள் முக்கிய பங்காற்றுகிறது. இன்றைய மனித செயல்பாட்டால் பல வகை தட்டான்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. மேலும் வேளாண்மைக்கு தீங்கு செய்யும் பூச்சிகளும் பெருகத்துடங்கியுள்ளது. மனிதனுக்கும் உணவாக:- பாலித்தீவிலும், அந்தோனேசியாவிலும் தட்டான்களை மக்கள் உணவாக உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. கரிச்சான், நாகணவாய், பஞ்ருட்டான் போன்ற பறவை இனங்களுக்குதட்டான்களே முக்கிய உணவாகும். தட்டான்களை பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய புத்தகங்கள்:-
|





