Sunday, 27 December 2015

நலம் தரும் சிவப்பரிசி சிவப்பரிசி ஓர் அற்புதமான அரிய உணவு.

நலம் தரும் சிவப்பரிசி
சிவப்பரிசி ஓர் அற்புதமான அரிய உணவு.
இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கி.மு.400-லேயே நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது.
சீனாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது.
ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது.
கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது.
ஆகவே, இதை, ‘காட்டு அரிசி‘ என்றும் சொல்வார்கள்.
அதனால் தான் சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
நம் நாட்டில் கர்நாடகம், பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்.
இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் ‘மட்டை அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பது தான் உண்மை.
இமாசல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது.
ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு.
வெளியே இருக்கும் உமி, உள்ளே இருக்கும் தவிடு, கரு, கடைசியாக உள்ளே இருக்கும் மாவுப்பொருள்.
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன.
நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடுகிறோம்.
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் சிறப்பு மிக்கது.
இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதன் சக்தியை நாம் பெற முடியும்.
மேலும் வேறு எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி1, பி3, பி6 ஆகிய வைட்டமின்களும், இரும்புச் சத்து, ஜிங்க், மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும், மிகுதியான நார்ச்சத்தும் சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன.
இந்த அரிசியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால், இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது.
மேலும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன.
இவற்றைவிட, சிவப்பு அரிசியில் ‘மானோகோலின் கே’ என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது.
இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைக்க உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.
செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான், இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது.
அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.
‘சிவப்பு பூஞ்சண அரிசி’ என்று இதற்குப் பெயர்.
இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித அலர்ஜிகளுக்கு சிவப்பு அரிசி மிகவும் உகந்தது.

Saturday, 26 December 2015

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

ஆண்கள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த சிறிய பேரிச்சம் பழத்தில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது. பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றம் இதர பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

எனவே ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள். நிச்சயம் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். இங்கு பேரிச்சம் பழத்தை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்துக்கள் :-

பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.

செரிமானம் சீராகும் :-

பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

சிறந்த ஆற்றல் கிடைக்கும் :-

பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான நரம்பு மண்டலம் :-

பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பக்கவாதம் தடுக்கப்படும் :-

ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும் :-

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

இரத்த சோகை நீங்கும் :-

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.

மலச்சிக்கல் :-

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும் :-

பேரிச்சம் பழம் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும். அதற்கு இரவில் படுக்கும் போது ஆட்டுப் பாலில் ஒரு கையளவு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

எடையை அதிகரிக்கும் :-

ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது.

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )
2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!
.

Friday, 25 December 2015

The Friendly Attitude - Attracts

Being accepted by others make us feel kinda wow & special about ourself. In general having a pleasing personality is always appreciable.Our social behaviour is having a huge impact on our social attraction . The way we speak ,the way we react ,the way we handle everything matters most. You may have questions like ,why should i please people ? well,there is a huge difference between pleasing personality and people pleasing person . When you hold the right personality it reflects the positive energy from you . People pleasing is kinda unhealthy & hard thing which is quite difficult to carry out & out of our point . Let's discuss the pleasing personality ,carrying the right attitude at the right time is strength . For personal life,professional life or spiritual life the right attitude is the only thing which drives you on the right track. It's not difficult task to be generous ,or to be kind . It's not a challenging habit smiling is super easy this can make someone feel good . Greeting someone with a smile or saying kind warm words can be really appreciable .



Let me explain you with one simple example from my personal travelling experience. I have been to a trip near north sea,europe. I stayed there in a hotel ,there was a small shop .when i shopped there for some greeting cards to gift my parents ,the shop keeper listened it , he gave me a beautiful card told me give this to your parents & tell them to visit this place and we'll be happy to book your accomodation here . I was bit surprised , i learned a huge lesson there he was very friendly which insisted me to purchase stuffs from his shop ,i was very comfortable to shop there. Second his words were so kind & he was generous that is quite effective for creating an impact  . This is the clever strategy in business to develop customer relationship & build up strong goodwill. Also he was inviting ,as well as advertising his hotel indirectly . What was the base for all this? pleasing personality with pleasing attitude. Being amicable is good ,you can adopt yourself easily to the environment. However some people are naturally friendly ,it is not so easy for everyone still not a big deal to give a try ;) lets switch towards the friendly attitude .

If you find it is difficult for you,come on still you can give a try gradually you may increase it. Let me share with you another example like , the water current in running water shapes the pebbles like  rolling cask likewise ,your gradual development result you with an improvement.The biggest lesson i have learned in my life is we should be happy and we should make someone happy . When you are happy you feel good about your life ,when you make someone happy that time every smile gets you some kind of blessing . 

Healthy eating Do's and Don'ts

Are you aware of healthy eating ? Are you foodie ?You should know what kind of foods we need to focus on . There are plenty recipes like low-fat diets, heart-healthy diets, high-protein diets, and low-carb diets.This is can even confuse ,what kind of foods are really healthy ?Don't get confused understanding nutrition is really not hard ,guiding you quick with some informations below

 

What kind of food we should eat ?

Always try to focus on foods that protects your health ,which provides energy & supports immunity. Choose he best suitable food for yourself concentrate on your eating routine . Make sure you provide good and healthy supplemens . Eating food habits makes you strong .

Protein 

It helps your body to heal, gives you energy, Protein is an important building block of bones, muscles, cartilage, skin, and blood. Hair and nails are mostly made of protein. Your body uses protein to build and repair tissues.Choose a mix of  different protein foods. Good options include fish and other seafood, poultry without the skin, lean meats, beans and peas, eggs, soy products, and unsalted nuts and seeds. Eating fish /shellfish ,egg , milk are good kinds protein foods . When it comes to veggies make sure you opt organic stuffs . 

Benefits of grains 

Whole grains can contain a lot of fiber . Mainly Fiber is one big reason to eat whole grains. Adults need about 25 to 35 grams of fiber daily, and whole grains contain two types soluble and insoluble which are both beneficial to your health.Whole grains have other digestive benefits as well. The fiber content keeps bowel movements regular .Grains have lots of health benefits, whole grains lower the risk of heart disease. At least half your grains should be whole grains. This includes whole wheat, oatmeal, and brown rice. People who eat a lot of whole grains are more likely to keep their weight in check and less likely to gain weight over time than those who eat refined grains.

Fruits and vegetables 

Fruits and vegetables include a diverse group of plant foods that vary greatly in content of energy and nutrients. Additionally, fruits and vegetables supply dietary fiber, and fiber intake is linked to lower incidence of cardiovascular disease and obesity. Fruits and vegetables also supply vitamins and minerals to the diet and are sources of phytochemicals that function as antioxidants, phytoestrogens, and antiinflammatory agents and through other protective mechanisms.  Try to fill half your plate with a variety of fruits and veggies. 

Fat-free and low-fat products for health 

Milk and dairy products make up almost 10 to 12 percent of our total dietary fat. With nutrients such as calcium, phosphorus, magnesium and protein, dairy products are an essential part of our diet. Milk products are great. Look for fat-free or low-fat cheese, yogurt, and other dairy products.  Low fat diary consumption has been associated with lower risks of hypertension and type II diabetes.If you can't drink milk, try soy drinks fortified with calcium and vitamin D.

Now lets explore the Don'ts

Some foods are not good for your health , when you eat too much burger or pizza or eating too much non-veg or eating unhealthy foods can ruin your health .You can learn ,what to avoid 

Added sugars in your diet can lead you, getting extra calories they won't provide any extra nutrients. Added sugars are often hiding out in your soda, cookies, candy, and sugary cereals. Refined grains are grains that have had some of the nutrients removed,sometimes they are polished to give clean look those are not good,broken grains are also in market . Whole grains are good rather than picking something broken and processed. Choose whole grains because they have all the nutrients.Cholesterol can increase your risk of heart disease.Try to avoid too much meat items like beef//pork etc. . Try to eat less than 300 milligrams of cholesterol each day.Sodium is found in table salt and lots of prepared foods. Eating too much sodium can cause health problems such as high blood pressure. Get the lowdown on sodium.Solid fats, which are fats that are solid at room temperature. Solid fats usually are high in saturated fat and trans fat, and eating too much of them can cause problems like heart disease. Oils that have unsaturated fat are a much healthier choice.We are given with choice to choose the best for our routine ,lets take a decision to concentrate more on healthy eating 

Thursday, 24 December 2015

இயற்கை மருத்துவம் :-

இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் ""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் ""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் ""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் "" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

கோடிஸ்வரானாக ஆவது எப்படி??


கோடிஸ்வரானாக ஆவது எப்படி?? ரொம்ப சிம்பிள்.. தலைப்பை கேட்ட உடனே பார்த்திபன் - வடிவேலுவின் காமெடி ஞாபகம் வருகிறதா?? சரி தான். இந்த தலைப்பு சிலருக்கு சரிப்பு மூட்டுவதாகவும், சிலருக்கும் கடுப்பு எற்றுவதாகவும் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கோடி எல்லாம் வெறும் தெருக்கோடி தூரம் தான். 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.5,000 சம்பாதித்தாலே அது பெரிய விஷயம். இப்போதெல்லாம் 20 வயதுப் பசங்களுக்கு அந்தப் பணமெல்லாம் கால் தூசுக்கு சமம்.
இப்படி இருக்க, 30 வயதுக்குள் ஒருவர் கோடிஸ்வரான ஆக முடியுமா? சில இளைஞர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியச் சவால். அதே எண்ணத்திலேயே முழு மூச்சோடு செயல்பட்டு அந்தச் சவாலில் வெற்றி பெறவும் துடிப்பார்கள்.
இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத் தான் பற்றாக்குறை. லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து கல்லூரிகளில் படிக்கும் போதே, ரூ.10,000 வரை பகுதி நேர வேலையில் சம்பாதிக்க வழி உள்ள இந்தக் காலத்தில், 30 வயதுக்குள் எவரும் கோடிஸ்வரான் ஆவதும் நிச்சயம் சாத்தியமே!
அதற்கான சில வழிகளும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போமா?

பணத்துக்குப் பின்னால் போ
இந்தக் காலப் பொருளாதார உலகில் லட்சாதிபதி கோடிஸ்வரான் முதல் வழி, உங்கள் சம்பாத்தியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும். பணத்துக்குப் பின்னால் போகக் கூடாது என்று சிலர் சொல்வார்கள். அப்படிக் கிடையாது. கண்டிப்பாகப் போங்கள். கவனமாகப் பணம் சேர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். வெற்றி நிச்சயம்!

பகட்டு வேண்டாம்
சிறுகச் சிறுகக் கஷ்டப்பட்டு சேமித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆடம்பரத்தைக்கண்டிப்பாகத் தவிர்க வேண்டும். உங்கள் தொழில் மற்றும் முதலீடுகளில் பணம் நன்றாகக் கொழிக்கும் வரை ஆடம்பர வாட்ச், விலை உயர்ந்த கார் என்று எந்தப் பகட்டும் வேண்டாம். பொறுமையாக இருக்க சொல்கிறோம் அவலவுதான்..

முதலீட்டுக்காக சேமியுங்கள்
உங்கள் சேமிப்பெல்லாம் அடுத்த சேமிப்புகளுக்கான பாதுகாப்பான முதலீடுகளாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் பல வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். எந்த ஒரு அவசரக் காரியத்துக்கும் கூட அதை எடுத்துச் செலவு செய்துவிட வேண்டாம்.

எப்போதும் கடனுக்கு 'நோ'
உங்கள் வளர்ச்சியில் கடன் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை 'ரொட்டேட்' செய்வது வேறு விஷயம்.

'பொறாமை' பணம்
பணம் உங்களுக்கு ஒரு பொறாமைப்படும் காதலி தான். அதற்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வேண்டும் என்று நினைத்தால் அது உங்களுடன் ஒட்டிக் கொள்ளும். நீங்கள் உதறினால், அதுவும் உங்களை உதறிவிடும்.

பணம் உறங்குவதில்லை
பணத்திற்குக் காலமோ, நேரமோ, விடுமுறையோ கிடையாது. நீங்களும் அதுபோலத்தான் இருக்க வேண்டும். நல்ல உழைப்பு இருப்பவனை எப்போதுமே பணம் விரும்பும். சரியான வழியில் அல்லது துறையில் உழைப்பை போடுவது ரொம்ப முக்கியம்.

ஏழையாக இருக்க வேண்டாம்
எப்போதும் ஏழையாகவோ அல்லது போதும் என்ற மனத்துடனோ இருக்கக் கூடாது. விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும்.

ரோல் மாடல்
நீங்கள் லட்சாதிபதி ஆவதற்கு, உங்களுக்கென ஒரு ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி, செல்வந்தர்கள் ஆனார்கள் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

புத்திசாலித்தன முதலீடு
உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யுங்கள். அதையும் புத்திசாலித்தனமாகச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் கடின உழைப்பைவிட, புத்திசாலித்தனமான முதலீடுகள்தான் உங்களுக்குப் பணத்தைப் பெருக்கித் தரும்.

10/11
கோடீஸ்வரனாக ஆசைப்படு
எப்போதுமே பெரிய அளவில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த 30 வயதுக்குள் கோடீஸ்வரனாகிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுங்கள். அப்போதுதான், குறைந்த அளவு லட்சாதிபதியாகவாவது ஆக முடியும். வாழ்த்துக்கள் நண்பர்களே