Monday, 15 February 2016

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மொத்தம் 234,அதன் பெயர்களைப்பார்ப்போம்

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மொத்தம் 234,அதன் பெயர்களைப்பார்ப்போம்
1.கும்மிடிப்பூண்டி
2.பொன்னேரி
3.திருத்தனணி
4.திருவள்ளூர்
5.பூந்தமல்லி
6.மாதவரம்
7.அம்பத்தூர்
8.ஆவடி
9.மதுரவாயல்
10.திருவெற்றியூர்
11.டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்
12.பெரம்பூர்
13.கொளத்தூர்
14.வில்லிவாக்கம்
15.திரு.வி.க.நகர்
16.எழும்பூர்
17.ராயபுரம்
18.சேப்பாக்கம்
19.துறைமுகம்
20.ஆயிரம் விளக்கு
21.அண்ணா நகர்
22.விருகம்பாக்கம்
23.சைதாப்பேட்டை
24.தி.நகர்
25.மயிலாப்பூர்
26.வேளச்சேரி
27.சோளிங்கநல்லூர்
28.திருப்போரூர்
29.ஆலந்தூர்
30.பல்லாவரம்
31.தாம்பரம்
32.செங்கல்பட்டு
33.உத்திரமேரூர்
34.காஞ்சிபுரம்
35.ஸ்ரீபெரம்பத்தூர்
36.மதுராந்தகம்
37.செய்யூர்
38.அரக்கோணம்
39.சோளிங்கர்
40.காட்பாடி
41.ராணிப்பேட்டை
42.ஆற்காடு
43.வேலூர்
44.அணைக்கட்டு
45.கே.வி.குப்பம்
46.குடியாத்தம்
47.வாணியம்பாடி
48.ஆம்பூர்
49.ஜோலார்ப்பேட்டை
50.திருப்பத்தூர்
51.ஊத்தங்கரை
52.பர்கூர்
53.கிருஷ்ணகிரி
54.வேப்பனஹள்ளி
55.ஓசூர்
56.தளி
57.பாலக்கோடு
58.பென்னாகரம்
59.தருமபுரி
60.பாப்பிரெட்டிப்பட்டி
61.அரூர்
62.செங்கம்
63.திருவண்ணாமலை
64.கீழ்ப்பெண்ணாத்தூர்
65.கலசப்பாக்கம்
66.போளூர்
67.ஆரணி
68.செய்யார்
69.வந்தவாசி
70.செஞ்சி
71.மயிலம்
72.திண்டிவனம்
73.வாணூர்
74.விழுப்புரம்
75.விக்ரவாண்டி
76.திருக்கோயிலூர்
77.உளுந்தூர்ப்பேட்டை
78.ரிஷிவந்தியம்
79.சங்கராபுரம்
80.கள்ளக்குறிச்சி
81.கங்கவள்ளி
82.ஆத்தூர்
83.ஏற்காடு
84.ஓமலூர்
85.மேட்டூர்
86.எடப்பாடி
87.சங்ககிரி
88.சேலம் -மேற்கு
89.சேலம் -வடக்கு
90.சேலம் -தெற்கு
91.வீராபாண்டி்
92.ராசிபுரம்
93.சேந்தமங்கலம்
94.நாமக்கல்
95.பரமத்தி -வேலூர்
96.திருச்செங்கோடு
97.குமாரபாளயம்
98.ஈரோடு கிழக்கு
99.ஈரோடு மேற்கு
100.மொடக்கறிச்சி
101.பெருந்துறை
102.பவானி
103.அந்தியூர்
104.கோபிச்செட்டிப்பாளயம்
105.பாவனி சாகர்
106.தாராபுரம்
107.காங்கேயம்
108.அவினாசி
109.திருப்பூர் வடக்கு்
110.திருப்பூர் தெற்கு
111.பல்லடம்
112.உடுமலைப்பேட்டை
113.மடத்துக்குளம்
114.உதகமண்டலம்
115.கூடலூர்
116.குன்னூர்
117.மேட்டுப்பாளம்
118.சூலூர்
119.கவுண்டம்பாளம்
120.கோயம்பத்தூர
121.தொண்டாமுத்தூர்
122.கோயம்பத்தூர் தெற்கு
123.சிங்காநல்லூர்
124.கிணத்துக்கடவு
125.பொள்ளாச்சி
126.வால்பாறை
127.பழநி
128.ஓட்டன்சத்திரம்
129.ஆத்தூர்-திண்டுக்கல்
130.நிலக்கோட்டை
131.நத்தம்
132.திண்டுக்கல்
133.வேடசந்தூர்
134.அரவக்குறிச்சி
135.கரூர்
136.கிருஷ்ணராயபுரம்
137.குளித்தலை
138.மணப்பாறை
139.ஸ்ரீரங்கம்
140.திருச்சி-மேற்கு
141.திருச்சி-கழக்ககு
142.திருவெறும்பூர்
143.லால்குடி
144.மண்ணச்சநல்லூர்
145.முசிறி
146.துறையூர்
147.பெரம்பலூர்
148.குன்னம்
149.அரியலூர்
150.ஜெயங்கொண்டம்
151.திட்டக்குடி
152.விருத்தாச்சலம்
153.நெய்வேலி
154.பண்ருட்டி
155.கடலூர்
156.குறிஞ்சிப்பாடி
157.புவனகிரி
158.சிதம்பரம்
159.காட்டுமன்னார்க்கோயில்
160.சீர்காழி
161.மயிலாடுதுறை
162.பூம்புகார்
163.நாகப்பட்டினம்
164.கீழ்வேலூர்
165.வேதாரண்யம்
166.திருத்துறைப்பூண்டி
167.மன்னார்குடி
168.திருவாரூர்
169.நன்னிலம்
170.திருவிடைமருதூர்
171.கும்பகோணம்
172.பாபநாசம்
173.திருவையாறு
174.தஞ்சாவூர்
175.ஒரத்தநாடு
176.பேராவூரணி
177.கந்தர்வக்கோட்டை
178.விராலிமலை
179.புதுக்கோட்டை
180.திருமயம்
181.ஆலங்குடி
182.அறந்தாங்கி
183.காரைக்குடி
184.திருப்பத்தூர்-சிவகங்கை
185.சிவகங்கை
186.மானாமதுரை
187.மேலூர்
188.மதுரை கிழக்கு
189.சோழவந்தான
190.மதுரை -வடக்கு
191.மதுரை-தெற்கு
192.மதுரை-மத்தி
193.மதுரை-மேற்கு
194.திருப்பரங்குன்றம்
195.்திருமங்கலம்
196.உசிலம்பட்டி
197.ஆண்டிப்பட்டி
198.பெரியகுளம்
199.போடிநாயக்கனூர்
200.கம்பம்
201.ராஜபாளயம்
202.திருவில்லிப்புத்தூர்
203.சாத்தூர்
204.சிவகாசி
205.விருதுநகர்
206.அருப்புக்கோட்டை
207.திருச்சுழி
208.பரமக்குடி
209.திருவாடானண
210.ராமநாதபுரம்
211.முதுகளத்தூர்
212.விளாத்திக்குளம்
213.தூத்துக்குடி
214.திருச்செந்தூர்
215.ஸ்ரீவைகுண்டம்
216.ஒட்டப்பிடாரம்
217.கோவில்பட்டி
218.சங்கரன்கோவில்
219.வாசுதேவநல்லூர்
220.கடையநல்லூர்
221.தென்காசி
222.ஆலங்குளம்
223.திருநெல்வேலி
224.அம்பாசமுத்திரம்
225.பாளைங்கோட்டை
226.நாங்குநேரி
227.ராதாபுரம்
228.கண்ணியாகுமரி
229.நாகர்கோவில்
230.குளச்சல்
231.பத்மநாமபுரம்
232.விளவங்கோடு
233.கிள்ளியூர்
234.பட்டுக்கோட்டை

இதை அனைவரும் தெரிந்துகொள்ள பகிரவும்......

Sunday, 14 February 2016

ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்?

ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்?
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?
அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா?
சித்த வைத்தியத்தால் முடியும்..!
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.
பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...
"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில்
எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".
அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.
மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்.

Saturday, 13 February 2016

கொன்ச்ப்றேஷன்_கோட்பாடு_உசாமா_மரணம்‬

‪#‎கொன்ச்ப்றேஷன்_கோட்பாடு_உசாமா_மரணம்‬ ...
தீர்க்கப்படாத மர்மம் ..
இந்த கோட்பாடு பற்றி என்னவென்றே சொல்லாமல் உங்களை எனது பதிவின் வாயிலாக அழைத்து சென்று கொண்டு இருக்கிறேன் ..
காரணம் கடைசியில் புரியும் ...
நேற்று பாதியில் விட்ட பின்லேடின் விஷயத்தை இன்று பார்த்துவிடுவோம் ...
ஹிட்லரின் மரணம் எப்படி மர்மமானதோ அதே போன்று பின்லேடனின் மரணமும் மர்மமானது ,,
அமெரிக்கர்களின் கருத்து படி உலக மகா தீவிரவாதியான உசாமாவை பல வருடங்களாக நெருங்கவே முடியவில்லை திடீரென்று நாலு பேர் போய் அதுவும் வேறொரு நாட்டில் சுட்டு கொன்றது எப்படி ??
உலகத்தையே கலக்கிய உசாமாவை கொன்று விட்டு ஒரே ஒரு புகைப்படம் தான் எடுக்க முடிந்ததா ??
அந்த புகைப்படத்திலும் சர்ச்சை இருக்கிறது தெளிவாக தெரிகிறது இது ஏற்கனவே உள்ள உசாமாவின் புகைபடத்தை வைத்து கம்யூட்டரால் இரத்தம் துவைக்கபட்டது போன்று உருவாக்கியுள்ளனர் என்று .
பாகிஸ்தானின் எதிரி நாடு அமெரிக்காதான்
பாகிஸ்தானில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து
அமெரிக்காவின் தோழமையை பாகிஸ்தான் விட வேண்டும் என்றும் அதற்காக போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ததும்
இதை கண்டு நியாயவான் ஹிலாரி கிளிண்டன் வரை உங்கள் மக்களை அடக்குங்கள் என்றதெல்லாம் வரலாறு ..
அப்படி இருக்கையில் ஒரு நாட்டிற்குள் புகுந்து எப்படி தாக்குதல் செய்ய முடியும் ...
இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டது உலக அரசியல் வல்லுனர்கள் தான்
இதை கண்ட அமெரிக்க மக்களும் உணர்சியடைன்தனர..
...பிற்பாடு தான் உலக வரலாற்றை உங்கள் கண் முன் நிறுதக்கூடிய loos chenge டாகுமன்டரி குழு இதை பற்றி தெளிவான டாகுமன்டரி தயாரித்து ,,
அதன் முதல் பாகம் இதெற்கெல்லாம் காரணம்
இரட்டை கோபுர தாக்குதல் ,,
அதை பற்றி ஆராய்ந்து முதல் டாக்குமண்டரியை abc சேனல் வழியாக வெளியிட்டது
அப்புறம் தான் பிரச்சனையே வந்தது காரணம் அந்த டாக்குமண்டரி முடிவில் அமெரிக்கா தான் இந்த வேலையை செய்தது என்று ஆதாரத்துடன் முடித்தது ..
இதை கண்டு கடுப்பான அமெரிக்கா abc நிறுவனத்தை எச்சிரைகை செய்தது மட்டுமல்லாது அதன் மேலாளரை சிறையிலும் அடைத்தது ......
பிறகே இது மனித உரிமை மீறல் என்று எல்லா தொலைக்காட்சியும் கதறின
பிறகு செப்டெம்பர் 11 என்ற பெயரில் மற்றொரு குழு உருவாக்கியது இதே விஷயத்தை அவர்களின் கூற்றும் அதுவே ..
பின்னால் நிறைய டாக்குமண்டரி நிறுவனங்கள் இதே விஷயத்தை இதே ரீதியில் எடுத்து தள்ளின
அமைதியான அமெரிக்கா ...
ஆனால் ரஷ்யா விடவில்லை ..உசாம செய்ததற்கு ஆதாரம் கேட்டது இன்று வரை ஆதாரம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ..
இன்னினிலையில்இந்த கட்டுமான இன்ஜினியரான வில்லியம் லிவி இதற்க்கு சாத்தியமே இல்லை ...ஒரு பயங்கரமான விமானம் மரத்தின் மீது மோதினாலும் மரம் லேசாக கருகுமே தவிர பொல பொல வென்று மேலே இருந்து கீழே விழாது
.மற்றும் உலக டாலஸ்ட் கட்டிடம் என்பதால் சரியான பாதுகாப்பாக கட்டியது ,,,,,,
வெடிகுண்டை வைத்து தகர்க்காமல் இது சாத்தியமே இல்லை என்றார் ..
விளைவு ஜெயிலில் அடைக்கப்பட்டார் ...........
இப்படி பலரும் கேள்வி கேட்டதால் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தது அமேரிக்கா...
bbc cnn உட்பட அனைவரும் இதன் உண்மைத்தன்மை குறித்து விவாதம் டாக்குமண்டரி என்று எடுத்து தள்ளினார்கள் முடிவு
செப்டெம்பர் அட்டாக் அமெரிக்காவின் உள்வேலை ....
இதை நம்புவதற்கு யூ டியூபில் இன்றும் லூஸ் சேஞ் என்று ஆங்கிலத்தில் தேடினால் கிடைக்கும் எல்லாவற்றையும் பாருங்கள் வீடியோ ஆதாரத்துடன்
அம்பலபடுத்தி இருக்கிறார்கள் .....
சரி அப்போ உசாமா எங்கே அவரை கொன்றவுடன் அவர் உடல் எங்கே ??ஏன் வீடியோ எடுக்கவில்லை ??
அந்த கமாண்டோ டீம் போவது வருவது ஒபாமா அதை கண்ப்ரன்சில் பார்ப்பது எல்லாம் சரி
உஸாமாவின் வீடியோ எங்கே ???
இந்த இடத்தில கான்ச்ப்றேஷன் கோட்பாடு வருகிறது ...
அடுத்து நாம் அறிந்த தலைவரான பிரபாகரன் அவரின் மரணமும்
இதே கோட்பாடு தான் ,,,,,
நாளை பாப்போம் ...

கொன்ச்ப்றேஷன் கோட்பாடு பிரபாகரன் ..

கொன்ச்ப்றேஷன் கோட்பாடு பிரபாகரன் ..
பொதுவாகவே நாட்டில் உள்ள முக்கியாமனவர்கள் அதாவது கலகம் விளைவித்தவர்கள் [அரசாங்கத்தின் பார்வையில்] .....ஒரு முக்கியமான அரசியல் இல்லா அரசாங்கம் இல்லா இயக்கத்தின் தலைவர் ஒருவரின் மரணம் குறித்து மக்களிடம் வெளியிட போவதாக இருந்தால்
சில விதிமுறைகள் உண்டு அவரின் கோரமான புகைபடத்தை மக்கள் மத்தியில் வெளியிட கூடாது மற்றும் நடுநிசி இரவில் அரசாங்கத்தின் சார்பில் அதிகாரபூர்வாமாக வெளிடப்பட்ட வேண்டும் ...
மற்றும் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னமே எடுத்து இருக்க வேண்டும் ..
இதெல்லாம் விட முக்கியமாக ,,,,,இறந்தது இந்த தலைவர் த்தான் என்று அவரின் குடும்பத்தினர் மரபணு எடுத்து சோதித்து அந்த சான்றிதழை அதிகாரபூரவாமாக வெளியிட வேண்டும் ..
நான் மேலே சொன்ன இந்த தகவல் எதுவுமே நாம் பார்த்த தலைவர்கள் யாருக்குமே செய்யவில்லை ..
இதை எதிர்த்து எந்த ஐநா வும் கேள்வி கேட்கவில்லை ..
முக்கியமாக பிரபாகரன் அவர்கள் கொன்ற தலையில் குண்டுபாய்ந்த புகைப்படத்தை வெளியிட்டதே தவறு ??
அப்படி வெளியிட காரணம் அவ்ளோதான் எப்படி தலையிலையே சுட்டு விட்டார்கள் இனிமேல் அவர் வரமாட்டார் ,என்று நம்ப வைக்கும் முயற்சி ....
ஏனெனில் உலக நாடுகளுகென்று தனி சட்டம் இருக்கும் பொழுது அதை மீறுவதை எப்படி பார்ப்பது ..
அது மட்டுமின்றி பிரபாகரனின் தந்தையும் தாயும் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சொல்ல கூடிய நேரத்தில்
இலங்கை ராணுவத்தின் பிடியில் தான் இருந்தார்கள்
இறந்தது பிரபாகரனா இல்லையா என்பதை டி.என்.ஏ மூலம் உறுதி செய்திருக்கலாம்… ஆனால் அது செய்யப்படவில்லை… ஏன்..?
அதுபோல கிளிநொச்சி வீழ்வதற்கு முன்னரே பிரபாகரனின் குரல் மறைந்துவிட்டது..
இப்படியொரு பேரழிவு நடைபெறும்போது பொறுப்புள்ள தலைவர் உலகத்திற்கு ஏன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை..?
தன் மகன் இறந்தபோது மகள் இறந்தபோது ஏன் அவர் ஒரு குரல் கொடுக்கவில்லை..?
ஆயுதம் மௌனமாக்கப்படுகிறது என்பதைக்கூட ஏன் அவர் கூறவில்லை..
இன்னும் சந்தேகங்கள் இருகின்றது
பிரபாகரன் எங்கே ???
பிரபாகரன் ஹிட்லர் உசாமா பின்லேடின் ஏன் சதாம் ஹுசேன் சூட கொன்ச்ப்றேஷன் கோட்பாடு தான் .
இதையெல்லாம் பற்றி விவரிக்க நீண்ட புத்தகம் தான் எழுதவேண்டும் .
இருந்தும் நாம் பார்த்த தலைவகள் போதும் .......
கொன்ச்ப்றேஷன் கோட்பாடு ...
எல்லாவற்றுக்கும் விடை அடுத்த பதிவுகளில் ..
முதன் முதலில் போட்ட
புகைபடதிர்க்கும் விடை
அடுத்த பதிவுகளில் ..

Friday, 12 February 2016

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி

அந்தப் பொன்னுலகின் கனவு விதைக்கப் பட்டது 90களின் ஆரம்பத்தில். காட் என்றும் டன்கல் என்ற ஒப்பந்தங்கள் இந்தக் கனவின் விதைகள் ஆனது. எல்லைகள் இல்லா உலகம், உலகளாவிய வாய்ப்பு என்ற கோசங்கள் சுழன்று அடிக்க ஆரம்பித்தது. கணினித் துறை வேலை என்பதும், அமெரிக்க வாசம் என்பதும் மத்தியத் தரப் பெற்றோர்களின் ஆதங்கம் என ஆகிப் போனது. நியூ யார்க், வாஷிங்டன், கலிபோர்னியா, நியூ ஜெர்சி என்ற ஊர்கள் எல்லாம் எல்லார் வாயிலயும் விழுந்து புரள ஆரம்பித்தது.
உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் மாறிய குமாஸ்தா வர்க்கம், தன அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆனது. மாறிய சிந்தனை, மிகப் பெரிய மாற்றத்தைத் தன்னுடன் கொண்டு வந்தது. கல்வி, சுகாதாரம் இரண்டும் அரசாங்கம் தர வேண்டிய தேவை இல்லை என்ற மனப்பாங்கு வளர்ந்தது. தனியார்மயம் என்பதே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று பேசப் பட்டது.
அரசியல் அடியாள்களும், சாராய வியாபாரிகளும், கந்து வட்டி ஆசாமிகளும் கிடைக்கும் இடம் எங்கும் கல்வி வியாபாரத்தை ஆரம்பித்தனர். பெயர் பலகையும், இடமும் அவர்கள் முதலீடு, கட்டிடமும் மற்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் பொன்னுலகின் கனவில் இருந்த மக்கள் தங்கள் பங்களிப்பாகத் தர ஆரம்பித்தனர்.
விட்டது தொந்தரவு என்று அரசும் வெற்று அறிக்கைகளை அள்ளித் தெளித்து தனது கடமையை முடித்துக் கொள்கிறது.
எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து, முழுமையான ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டிய கல்விக் கூடங்கள், மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்சாலைகளாக மாறிப் போனது.
நன்றாகப் படி, அதாவது நன்றாக மனப்பாடம் செய், அதனைத் தேர்வு நாளில் எழுது, மதிப்பெண்களை அள்ளு, அதன் மூலமாக ஒரு பொறி இயல் கல்லூரியில் நுழை, அங்கே இருந்து கணினித் துறையில் சேர், நல்ல பணம் சம்பாதிக்கும் வேலையில் அமரு, நீ வெற்றி பெற்ற மனிதனாக விளங்கு என்ற மாயச் சுழட்சி வலையில் மாட்டிக் கொண்ட மக்கள் அதையே சரி என்று நம்ப ஆரம்பித்தது.
வெற்றி என்பது தன்னை உணர்தல் என்பது மாறி பணம் சம்பாதிப்பது மட்டுமே என்ற எண்ணம் எல்லா இடங்களிலும் ஆழமாகப் பரவ ஆரம்பித்தது.
நேரம் காலம் இல்லாத வேலை, அதனோடு இணைந்து வந்த மன அழுத்தம், தாங்க முடியாத போட்டி, தனி மனித உறவு என்பதே இல்லாமல், வெடித்துக் கிளம்பும் திருமணச் சிக்கல்கள், எல்லா இடங்களிலும் பெருகி வரும் முதியோர் இல்லங்கள் என்பதே இந்தப் பொன்னுலகம் காட்டும் வளர்ச்சி என்று ஆனது.
பொன்னுலகின் கனவில் சஞ்சரித்த மனிதன், தன நிலை அறிந்து பார்க்கும் போது தெரிந்து கொண்டது தான் கட்டி இருந்த ஒற்றை வேட்டியும் களவாடப் பட்டதைத்தான். எதையும் பார்க்க விரும்பாத, அல்லது பார்க்கத் தெரியாத மனிதர்கள் இன்னும் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், தாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்ற நினைப்போடு.
கல்விகழகு கசடற மொழிதல் – இது கல்வி என்றால் என்ன என்று தமிழ் கூறும் இலக்கணம். கசடறப் புரிந்தால் தான் கசடற மொழிய முடியும். கசடறப் புரிதலே நடக்காத ஒரு கல்வி முறையில் எப்படி கசடற மொழியும் மாணவர்களை நாம் எதிர் பார்க்க முடியும்.
கற்ப்பித்தல் என்பது வெறும் வேலை இல்லை, அடுத்த தலைமுறைகளை உருவாகும் ஒரு பணி என்ற எண்ணமும், அதனால் வரும் ஒரு ஞானச் செருக்கும் எந்த ஆசிரியர்களுக்கும் இல்லை
தாய் மொழியில் படிப்பதும், பேசுவதும் தேவை இல்லை, புரிகிறதோ இல்லையோ ஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி என்ற எண்ணப் பாங்கு தமிழ் நாட்டில் நிலவி வருகிறது. மொழி என்பது வெறும் எண்ணங்களைப் பகிரும் கருவி இல்லை. அது ஒரு வாழ்வியல், வாழும் முறை, கலாசாரம், வரலாறு என்ற புரிதல் இல்லவே இல்லை. இலக்கியமும் வரலாறும் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க இங்கே மக்கள் தயாராகவே இல்லை, இதிலும் வேதனை பல ஆசிரியர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை. .அறத்தைப் பற்றிய பேச்சே கல்விக் கூடங்களில் இல்லாமல் ஆகி விட்டது, ஒட்டு மொத்த சமுதாயம் முன்னேறாமல் தான் ஒருவன் மட்டும் முன்னேறினால் ( அதாவது பொருளாதார ரீதியில் முன்னேறினால் ) அதனால் வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒரு சமுதாயத்தைத் தான் உருவாக்கும் என்ற உண்மை போதிக்கப் படவே இல்லை. இன்று நாம் தினம் தினம் படிக்கும் திருட்டு, கொள்ளை என்ற செய்திகள் இதனைத் தான் நமக்கு கட்டியம் கூறுகிறது.
பலர் பேசத் தயங்கும் இந்தப் பின்புலத்தில், தன்னையும் தன குடும்ப உறுப்பினர்களையும் பாத்திரங்களாக மாற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய வலைப் பதிவுகளின் தொகுப்பே இந்த நூல். தனது வாழ்க்கைக் கதையை சொல்வது போல முக்கியமான பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பி உள்ளார் திரு ஜோதிஜி.
இந்தக் கேள்விகள் எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், சாலைகளிலும் கேட்கப் படட்டும். அந்தக் கேள்விகள் மூலம் ஒரு சிந்தனை மாற்றம் வரட்டும்
என்றும் மாறாத நம்பிக்கையுடன்,

Thursday, 11 February 2016

(மூலதனம், முதலாம் பாகம், புத்தகம் ஒன்று)

(மூலதனம், முதலாம் பாகம், புத்தகம் ஒன்று)

அத்தியாயம் ஒன்று : சரக்கு

பிரிவு 1 : பயன் மதிப்பும், மதிப்பும்

1. பயன் மதிப்பு

உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் பயன் மதிப்பு (use value) இருக்கும். ஒரு சடப் பொருளின் "உள்ளார்ந்த தன்மை" என்ற தத்துவத்தின் படியும் அதைக் கூறலாம். ஒரு பொருள் பயன்படுத்தப் படுவதால், அல்லது நுகரப் படுவதால் பயன்மதிப்பு உண்டாகின்றது.

ஒரு பொருள், மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால், அதற்கு பயன்மதிப்புக் கிடைக்கின்றது. உதாரணத்திற்கு, அரிசி உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றது. அதே போன்று, உடை காலநிலைக்கு ஏற்றவாறு உடலைப் பாதுகாப்பதற்கும், மானத்தை மறைப்பதற்கும் உதவுகின்றது.

அநேகமாக, எல்லாப் பொருட்களுக்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாம் சரக்கு ஆவதில்லை. பண்டமாற்றுக்கு அல்லது வர்த்தகப் பரிவர்த்தனைக்கு கொண்டு செல்லப்படும் பொருள் மட்டுமே சரக்கு (Commodity) ஆகின்றது.

உதாரணத்திற்கு, காட்டில் இருக்கும் மாமரத்தில் காய்க்கும் மாங்கனிகளுக்கும் பயன்மதிப்பு இருக்கிறது. (அவற்றை நுகர முடியும்.) ஆனால், அவை சரக்காக மாட்டாது. ஏனென்றால், யாரும் அவற்றை பறித்துச் சென்று விற்பதில்லை. ஆனால், வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் மாமரத்தில் இருந்து கிடைக்கும் பழங்களை சந்தையில் கொண்டு சென்று விற்கின்றனர். ஆகவே, அந்தப் பழங்கள் சரக்குகள் ஆகின்றன.

பயன்மதிப்பு கொண்ட பொருட்கள், பரிவர்த்தனைக்காக எடுத்துச் செல்லப் படுகின்றன. இன்றைய காலத்தில் பணத்தின் மூலம் பரிவர்த்தனையை இலகுவாக தீர்மானிக்க முடிகின்றது. ஆனால், பணம் புழக்கத்தில் இல்லாத பண்டைய காலங்களில் பண்டமாற்று மூலம் பொருட்கள் பரிவர்த்தனை செய்யப் பட்டன.

வித்தியாசமான பௌதிகத் தன்மை கொண்ட பொருட்களை, ஒன்றுக்கொன்று சமமாக பண்டமாற்று செய்வது எப்படி?

2. பரிவர்த்தனை மதிப்பு

ஒரு பொருளின் பயன் மதிப்பை அறிந்து கொள்வது இலகு. அதன் பௌதிக, இரசாயனத் தன்மை மாற்றங்களைக் கொண்டு விலை தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு, நமது தோட்டத்தில் பறித்த மாம்பழங்கள், அல்லது வளர்த்த கோழியை கொண்டு சென்று சந்தையில் விற்கும் பொழுது, வாங்குவோரின் நுகர்வுத் தேவையை பொறுத்து, அதன் பயன் மதிப்பை (அல்லது விற்கும் விலையை) முடிவு செய்கிறோம். ஆனால், நாணயப் புழக்கம் இல்லாத பண்டைய காலத்தில், அவற்றை வேறொரு பொருளுடன் பண்டமாற்று செய்ய வேண்டியிருந்திருக்கும்.

ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட அளவு அரிசித் தானியத்தினை, ஒரு குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடை அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளுடன் பண்டமாற்று செய்து கொள்கிறார். இவை யாவும் வெவ்வேறு பயன் மதிப்புக் கொண்டவை. அது மட்டுமல்லாது, ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற, வேறு பட்ட அளவீடுகளை கொண்டவையாக உள்ளன.

சந்தைக்கு வந்த விவசாயி ஒரு கிலோ அரிசிக்கு பதிலாக, குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடையை கைமாற்றிக் கொண்டு செல்கிறார். அப்படியானால், குறிப்பிட்ட பொருட்களுக்கு இடையில், ஒன்றுக்கொன்று சமமாக மாற்றிக் கொள்ளத்தக்க பரிவர்த்தனை மதிப்பு ஒன்று இருக்க வேண்டும்.

கணிதத்தில், ஒரு வடிவத்தின் பரப்பளவைக் கணக்கிடுவதற்கு, அதனை பல முக்கோணங்களாக பிரித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முக்கோணத்தையும் அளப்பதற்கு, அடிப் பாகத்தின் பாதியையும், செங்கோட்டின் உயரத்தையும் பெருக்கி விடையைத் தெரிந்து கொள்கிறோம். அந்தக் கணித சூத்திரம் கண்ணுக்குப் புலப் படாத ஏதோ ஒன்றால் பெறப் படுகின்றது.

அதே போன்று, பொருட்களுக்கு இடையிலான பரிவர்த்தனை மதிப்பையும், கண்ணுக்குப் புலப் படாத "ஏதோ ஒன்று" தீர்மானிக்கிறது. அது எது? ஒவ்வொரு சரக்கிற்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக வேறுபட்ட தன்மை கொண்டவை. அரிசியையும், இரும்பையும், சமப் படுத்துவது எப்படி? ஆகவே, ஒரு பொருளின் பயன் மதிப்பை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், ஒரு பொதுவான குணவியல்பு எஞ்சியுள்ளது.

ஆகவே, சரக்குகளை கைமாற்றிக் கொள்ளும் பொழுது வெளிப்படும், பொதுவான குணாம்சம் தான் உண்மையான மதிப்பு ஆகும். அந்தப் பொதுவான குணாம்சம், மனித உழைப்புத் தான். ஒரு தானியத்தை பயிரிடுவதற்கும், ஒரு தளபாடத்தை செய்வதற்கும், ஓர் ஆடையை நெசவு செய்வதற்கும் மனித உழைப்பு செலவிடப் படுகின்றது. அந்த மனித உழைப்பு தான், பரிவர்த்தனை மதிப்பை தீர்மானிக்கிறது.

இப்போது இன்னொரு பிரச்சினை எழுகின்றது. மனித உழைப்பின் விலையை தீர்மானிப்பது எப்படி? மணித்தியாலங்கள், நாட்கள், வாரங்கள் என்பன, ஒரு பொருளைத் தயாரிப்பதற்கு எந்தளவு மனித உழைப்பு செலவிடப் பட்டது என்பதை கணிக்க உதவுகின்றது.

அப்படியானால், ஒரு சோம்பேறி அதிக நேரம் எடுத்து ஆறுதலாக வேலை செய்து முடித்தால், குறிப்பிட்ட ஒரு பொருளின் விலை அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? அப்படி நினைத்துக் கொள்வது தவறு. மனித உழைப்பு எனும் பொழுது, அது ஒரு தனி மனிதனின் உழைப்பைக் குறிப்பதல்ல. ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பைக் குறிக்கின்றது.

அதாவது, ஒரு சோம்பேறி, ஒரு சுறுசுறுப்பானவன், இரண்டுக்கும் இடையிலான சராசரி தொழிலாளியின் சராசரி உழைப்புத் தான், ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பில் அடங்குகின்றது. ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கிறது. அதுவே, ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பு. அதாவது ஒரு பொருளின் உண்மையான மதிப்பு.

3. மனித உழைப்பும் உற்பத்தித் திறனும்

"கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்து, இன்றைய உலகம் எவ்வளவோ மாற்றத்தைக் கண்டு விட்டது. அதனால், அன்று மார்க்ஸ் கூறியவை இன்றைக்கு செல்லுபடியாகாது..." என்று வாதாடுவோர் பலருண்டு. அவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை வாசித்திருக்க மாட்டார்கள். விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவினால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, மூலதனம் நூலில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.

ஒரு காலத்தில், மடிக் கணணி, கைத் தொலைபேசி என்பன மிகவும் விலை அதிகமான ஆடம்பரப் பொருட்களாக இருந்துள்ளன. அதற்குக் காரணம், அவற்றைத் தயாரிக்கத் தேவையான கொல்த்தான் எனும் மூலப் பொருள், பூமியில் மிக அரிதாகக் கிடைத்து வந்தது. பிற்காலத்தில் கொங்கோ நாட்டில் நடந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக கொல்த்தான் உற்பத்தியை அதிகரித்தது. அதனால், மடிக் கணணி,கைத் தொலைபேசி என்பனவற்றின் விலைகளும் மட மடவென சரிந்தன.

மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் கிண்டலாக ஓர் உண்மையைக் கூறுகின்றார். "நிலக்கரியை வைரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தார்கள் என்றால், வைரத்தின் விலை செங்கல்லை விடக் குறைவாக இருக்கும்." வைரம், தங்கம் போன்ற கனிம வளங்கள், இயற்கையில் மிக அரிதாகக் கிடைப்பதால், அதைத் தேடுவதற்கான மனித உழைப்பும் அதிகரிக்கின்றது. அதனால் அதன் விலையும் அதிகமாக உள்ளது. இதிலே சுரங்கத் தொழிலாளரின் உடல் உழைப்பு மட்டுமல்ல, பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் மூளை உழைப்பும் சம்பந்தப் பட்டுள்ளது.

ஒரு சரக்கின் உற்பத்திக்கு தேவையான உழைப்பு மாறாது இருந்தால், அதன் மதிப்பும் மாறாமல் இருக்கும். ஒரு காலத்தில், கையால் நெசவு செய்பவரின் உழைப்பு, உடுக்கும் ஆடையில் மதிப்பாக இருந்தது. அதே உழைப்பு இன்றைக்கும் தொடருமானால், உடைகளின் விலையும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால்,நெசவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், உடைகளின் விலை பெருமளவு குறைந்தது.

முன்பு விசைத் தறியில் நெசவு செய்த தொழிலாளர்களின் அதே உழைப்பு நேரம், பின்னர் தொழிற்சாலைகளிலும் மாறவில்லை. ஆனால் உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்தது. ஆகவே மனித உழைப்பு மட்டுமல்லாது, உற்பத்தித் திறனும் ஒரு பொருளின் மதிப்பை தீர்மானிக்கிறது. உண்மையில் இங்கிலாந்தில் தொழிற்சாலைகளில் நெசவு இயந்திரங்கள் வந்த பின்னர், உழைப்பின் நேரம் அரைவாசியாகக் குறைந்தது.

அதாவது, அந்தந்த காலகட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்புத் தான், ஒரு பண்டத்தின் மதிப்பையும், பருமனையும் நிர்ணயிக்கின்றது. பொதுவாக, உற்பத்தித் திறன் (நவீன தொழில்நுட்பம்) உயர்வாக இருந்தால், ஒரு பண்டத்தின் உற்பத்திக்கு தேவைப் படும் உழைப்பின் நேரமும் குறையும். அதன் மதிப்பும் குறையும். கடந்த தசாப்த காலமாக, கணனித் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பொருள் உற்பத்திக்கான செலவும் வீழ்ச்சி அடைந்தது. அந்த நோக்கத்தோடு தான், வருங்காலத்தில் ரோபோக்கள் அறிமுகப் படுத்தப் படவுள்ளன.

எந்த இடத்தில் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கு பண்டத்திற்கு தேவைப்படும் மனித உழைப்பின் அளவும், மதிப்பும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, இந்தியாவில் பாரம்பரிய விவசாய முறைகளை பின்பற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தக்காளியின் விலை சந்தையில் அதிகமாக இருக்கும். ஏனென்றால், அதை உற்பத்தி செய்வதற்கான மனித உழைப்பு அதிகம்.

அதே இந்திய சந்தையில், மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மரபணு மாற்றம் செய்யப் பட்ட தக்காளிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. அவர்களது விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப அறிவு என்பன உற்பத்தித் திறனை உயர்த்தி உள்ளது. மனித உழைப்பை குறைத்துள்ளது. அதனால் விலையும் குறைந்துள்ளது.

ஒரு பயன்மதிப்பு கொண்ட பண்டத்தில், கண்ணுக்குப் புலப்படாத மனித உழைப்பு இறுகி இருப்பதாலேயே அது மதிப்பைப் பெற்றிருக்கிறது. (விற்பனைக்கான சரக்காக மாறுகிறது.) ஆயினும், பயன் மதிப்புக் கொண்ட எல்லாம், மதிப்புப் பெறுவதில்லை. காற்று, தரிசு நிலம், புல்வெளிகள் என்பன பயன் மதிப்புக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, இந்தியாவில் ஒரிசா மாநிலக் காடுகளில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக வேதாந்தா நிறுவனம் வரும் வரையில், அந்த இடத்தின் பயன்மதிப்புக் குறித்து யாரும் அக்கறைப் படவில்லை.

ஒரு பொருள் விற்பனைக்கான சரக்காக மாறாமலே, அது மனித உழைப்பைக் கொண்டதாகவும், மனிதர்களுக்கு பிரயோசனமானதாகவும் இருக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் தனது தேவைக்காக, தானாகவே ஒரு மேசையை உற்பத்தி செய்கிறார். அவர் அந்தப் பொருளில் பயன் மதிப்பை உருவாக்குகிறார். ஆனால், அது விற்பனைக்கான சரக்கு அல்ல.

ஒருவர் உற்பத்தி செய்யும் பொருள் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். அதாவது, அதற்கு ஒரு சமுதாயப் பயன் மதிப்பு கிடைக்க வேண்டும். ஆயினும், நிலப்பிரபுத்துவ காலத்தில் ஒரு குடியானவன் தனது தானிய உற்பத்தியில் ஒரு பகுதியை நிலவுடமையாளருக்கும், கோயிலுக்கு தானமாகவும் கொடுக்க வேண்டி இருந்தது.

ஆகவே, ஒரு பொருள் உறபத்தி செய்யப் பட்டு, மற்றவர்களுக்கு பயன்பட்டாலும் எப்போதுமே அது சரக்காகி விடுவதில்லை. அந்தப் பொருளின் பயன் மதிப்பை பயன்படுத்திக் கொள்ளும் இன்னொருவருக்கு, பரிவர்த்தனை மூலம் கைமாற வேண்டும். அதாவது பண்டமாற்று செய்யப் பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்குப் பயன் எதுவும் கிடையாது. அதில் அடங்கி இருக்கும் உழைப்பும் மதிக்கப் படுவதில்லை.

பெரும்பாலும் உழைப்பாளர்களாக இருக்கும் நாங்கள், எங்களது உழைப்பை முதலாளி கொடுக்கும் பணத்துக்காக பரிவர்த்தனை செய்து கொள்கிறோம். அவ்வாறு தான், முதலாளித்துவ உற்பத்தியில், எமது உழைப்பு கூட விற்பனைச் சரக்காக மாறுகின்றது.