Wednesday, 10 February 2021

ஆண்மைக் குறைவைப் போக்கி உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஜாதிக்காய்!

ஆண்மைக் குறைவைப் போக்கி உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஜாதிக்காய்!
விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய்.  தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.

 
* ஜாதிக்காய் இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
 
* ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
 
* ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில்  மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.
 
* ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும். முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
* அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Tuesday, 9 February 2021

கண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்

கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.
பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணம் கிடைக்கும்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கவும். இந்த பொடியை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் தீரும். வறட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து சுரங்களும் நீங்கும். இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வர வேர்வை நாற்றம் அகலும்.

பாதவெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும். உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் பாதையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகலாம். கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து நைத்து சாறு எடுத்து, அதில் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு நீங்கும்.குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும். கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி காலை, மாலை குடித்து வர கபம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

கண்டங்கத்திரி பழத்தை மண்பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் ஊற்றி மெழுகு பதம் வர காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இந்த கலவையை வெண் குஷ்டத்திற்கு தடவி வர குணம் கிடைக்கும் என சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. எதுவாக இருந்தாலும் சித்த மருத்துவர்களை அணுகி மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

Wednesday, 3 February 2021

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு
மிளகின் சிறப்பு
மிளகு கொடி வகையை சார்ந்தது. கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை தருகிறது. அதனால் மசாலாக்களில் தலைசிறந்த நறுமணப் பொருளாகிறது. உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது. பழங்காலத்தில் வணிகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருந்தது, மிளகு.

அதனால் இது கறுப்பு தங்கம் என்றழைக்கப்பட்டது. மிளகிற்கு பின்பு பல சுவாரசியமான வரலாற்று தகவல்கள் இருக்கின்றன. கேரளாவில் இருந்து அரபி கடல் வழியாக மிளகு அரேபியாவிற்கு ஏற்றுமதியானது. அங்கிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஐரோப்பியர்கள் நம் நாட்டின் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் மீது அதிக நாட்டம் கொண்டனர். அதனால்தான் கடல் வழியாக இந்தியாவை தேடிக் கண்டு பிடித்தனர். மிளகை வாங்க வந்தவர்கள் படிப்படியாக வியாபாரத்தை விரிவுபடுத்தி நம் நாட்டையே பிடித்து கொண்டனர்.

முற்காலத்தில் இருந்து நம் நாட்டில் கார சுவைக்கு நாம் மிளகைதான் பயன்படுத்தி வந்தோம். அதனால் சங்க இலக்கியங்களில் மிளகை பற்றிய குறிப்புகள் உள்ளன. சித்த மருத்துவத்திலும் மிளகிற்கு சிறப்பிடம் இருக்கிறது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்!’ என்பது பழமொழி. ஒவ்வாமைக்கு சிறந்த மருந்து மிளகு. சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைகளுக்கும் இது மருந்தாகின்றது. ஒவ்வாமையால் ஏற்படும் தொடர் தும்மலுக்கும் மிளகை பயன்படுத்தலாம்.

மருத்துவ குணங்கள்
1 தேக்கரண்டி மிளகை இடித்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து பனவெல்லம் அல்லது தேன் கலந்து குடிப்பது பலவித நோய்களை கட்டுப்படுத்தும். ஒவ்வாமை மற்றும் பூச்சி கடி காரணமாக தோலில் தடிப்பு, அரிப்பு உண்டாகும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகை பொடி செய்து, அருகம்புல் ஒரு கைபிடி அளவு சேர்த்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து குடிக்கவேண்டும். பூச்சி கடி மற்றும் ஒவ்வாமையால் அவதிப்படும்போது முதல் வேலையாக ஒரு தேக்கரண்டி மிளகை நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து பருகிவிடவேண்டும்.

மழைக்காலத்தில் அடுக்கடுக்காக தும்மல், கண்களை சுற்றிய அரிப்பு, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகையும், ஒரு வெற்றிலையையும் நீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். தொண்டை கட்டு, குரல் கம்மல், தொண்டை வலி போன்றவை இருந்தால், ஒரு தேக்கரண்டி மிளகை நெய்யில் கருக வைத்து பொடித்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கும் மிளகு கஷாயம் சிறந்தது.

ஜீரண சக்தியையும் மேம்படுத்தும். மிளகின் காரத்தன்மைக்கு ‘காப்சாய்சின்’ என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது. மிளகின் காரம் கொழுப்பையும் ஜீரணிக்கவைக்கும். இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு படியாது. ரத்த குழாய் தடிமனாவதும் தவிர்க்கப்படும். உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் ‘ஆன்டி ஆக்ஸிடண்ட்’ தன்மையும் மிளகிற்கு உள்ளது. பசி குறைவாக உள்ள சமயங்களில், ஒரு தேக்கரண்டி மிளகு பொடியை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

மூல நோய்களுக்கு ஒரு தேக்கரண்டி மிளகு பொடியுடன், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். மிளகின் காரத்தன்மை மலத்தை வெளியேற்றும் சக்தி கொண்டது. பல் சொத்தை, பல் கூச்சம் ஏற்படும்போது, மிளகு பொடியுடன் உப்பு கலந்து பல் தேய்க்கவேண்டும். தலையில் சிலருக்கு புழு வெட்டு ஏற்படும்.

அவர்கள் மிளகுதூள், உப்பு, வெங்காயத்தை சேர்த்து அரைத்து பாதித்த இடத்தில் பூசினால், மீண்டும் முடி வளரும். தலையில் பொடுகு ஏற்படும்போது மிளகை அரைத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, ஆறவைக்கவேண்டும். பின்பு அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு நீங்கும்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

Sunday, 31 January 2021

பாம்பு பஞ்சாங்கம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும்... இது bio-dynamic farming பற்றியது

பாம்பு பஞ்சாங்கம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும்... இது bio-dynamic farming பற்றியது

———

உயிராற்றல்_விவசாய_பஞ்சாங்கம் 

#உயிராற்றல்_விவசாய_பஞ்சாங்கம்

இந்த நாட்க்குறிப்பு உயிராற்றல் வேளாண்மை (BIO DYNAMIC FARMING) வழி முறைகளில் ஒரு குறிப்பிட்டு கூறக் கூடிய அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் ஒவ்வொன்றிலும் அதாவது அந்த குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் விவசாய வேலைகள் என்ன செய்தால் நமக்கு ஆரோக்கியமான தாவரங்கள் வளர்ந்து அதிக விளைச்சலையும், தரமான மற்றும் சுவை கூடிய விளைச்சலையும் பெறலாம் என அறிந்து கொள்ள உதவும்.

அவ்வாறு ஒவ்வொரு நாளும் நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் மற்றும் இராசிகள் அவற்றின் அடிப்படை சுற்றுப்பாதையில் குறிப்பாக சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏற்படும் நிகழ்வுகளை கணித்து அதனால் தாவரங்களிலும் மற்றும் மண்ணிலும் ஏற்படும் மாறுதல்களை கணக்கிட்டு அதற்க்கேற்றவாறுநாம் செய்ய வேண்டிய வேலைகளை பிரித்து கூறப்பட்டுள்ளது.

இந்த நாட்குறிப்பால் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள்

-மேல் நோக்கு நாட்கள்
-கீழ் நோக்கு நாட்கள்
-தவிர்க்க வேண்டிய நாள்
-அபோஜி (தொலைவு நிலா)
-பெரிஜி (அண்மை நிலா)
-அமாவாசை
-பெளர்ணமி
-சந்திரன் எதிர் சனி
-இராசி மண்டலத்தில் சந்திரன் பயணம் 
செய்யும் நாட்கள்

#மேல்_நோக்கு_நாட்கள்
இந்த நாட்களில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் தொடர்ந்து 13.6 நாட்கள் (சுமாராக) அதிகரித்துக் கொண்டிருக்கும். இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்கு மேலுள்ள பகுதிகள் வளர்ச்சி வேகம் அதிகரிக்கின்றது.
ஆகவே இந்த நாட்களில் 
1. விதைகளை நேரடியாக நடவு செய்தல் 
2.நாற்றுகளுக்காக விதைத் தெளிப்பு – கத்தரி, தக்காளி, நெல் மற்றும் மரங்களின் விதைகள் தேங்காய் போன்றவை 
3. இலை வழி ஊட்டமாக தெளித்தல். 
போன்றவற்றை செய்யலாம்.

#கீழ்_நோக்கு_நாள
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 13.6 நாட்கள் (சுமாராக) தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் எனப்படுகின்றது. 
இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்குள் உள்ள பகுதிகள் வளர்ச்சி அதிகரிக்கின்றது. மண்ணில் நுண்ணுயிர் பெருக்கும் அதிகரிக்கின்றது.
ஆகவே இந்த நாட்களில்
1.நாற்றுகள் மாற்றி நடவு செய்தல்
மரவள்ளி குச்சிகள், கரும்பு கரணைகள் க்ளைரிசிடியோ போன்ற குச்சிகளை நடவு செய்தல், 
2.பதியன்கள் போடுதல் போன்ற வேலைகள்
3.கம்போஸ்ட் தயாரிப்பு
4.கம்போஸ்ட் மற்றும் திரவ உரங்களை நிலத்தில் இடுதல்
5.உழவு செய்தல் போன்ற வேலைகள் செய்யலாம்.

#தவிர்க்க_வேண்டிய_நாட்கள்
#Node_day
(தவிர்க்கவும் நேரத்திலிருந்து#6_மணி_நேரம்_முன்னும்_பின்னும் முக்கிய விவசாய வேலைக்களைத் தவிர்க்கவும்)
-சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் சுமார் 13.5 நாட்களில் ஒரு முறை சூரியனின் சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட இடத்தில் கடக்கிறது. 
இந்த நாள் தவிர்க்க வேண்டிய நாள் என் குறிப்பிடப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட கிரகணம் என்றே கூறலாம்.(ராகு,கேது)
-இந்த நாட்காட்டியில் தவிர்க்கவும் என்று குறிப்பிட்ட நாளில் அந்த குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்பு ஆறு மணி நேரமும் பின்பு ஆறு மணி நேரமும் 
-விதைத்தல், 
-நாற்று நடுதல், 
-இலைவழி உரத்தெளிப்பு போன்ற முக்கியமான வேலைகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.

#அபோஜி_APOJEE– தொலைவில் உள்ள சந்திரன்
-இந்த நாளில் பூமியில் இருந்து சந்திரன் அதிகபட்ச தொலைவில் இருக்கும். இந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நாளில் குறிப்பிட்டுள்ளமணியில் 6 நேரமும் பின்பு 6 மணிநேரமும் முக்கியமாக #விதைப்பது_மட்டும்_தவிர்க்கவும்
ஆனால் உருளைக்கிழங்கு மட்டும் நடவு செய்யலாம். அவ்வாறு உருளைக்கிழங்கு நடவு செய்தால் விளைச்சல் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லாவிட்டாலும் கிழங்கு சற்று பெரியதாகவும் சுவை கூடுதலாகவும் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

#பெரிஜி_PERIJEE– அண்மை சந்திரன்
-இந்த நாளில் சந்திரன் தனது சுற்று வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கும். 
-இந்த நாளில் விதைத்தல், நாற்று நடுதல் போன்றவை தவிர்க்க வேண்டும். -அண்மையில் இரண்டு மூன்று வருடங்களில் கிடைத்த தகவல்கள் இந்த நாளில் (நெல், தர்பூசணி, மஞ்சள், தட்டைப்பயறு போன்றவை) வெவ்வேறு பகுதிகளில் விதைத்த விவசாயிகள் அனுபவித்த உண்மை. 
-ஓரளவிற்கு விளைந்த விளைப் பொருட்கள் கூட அவற்றின் சுவை மாறுபட்டு (சுமார் 75% வரை குறைந்து) காணப்பட்டது.

#அமாவசை_No_Moon_day
இந்த நாள் அனைவரும் அறிந்த ஒன்று. 
-இந்த நாளில் சேமித்து வைக்க வேண்டிய விதைகள், வைக்கோல் போன்ற கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தட்டைகள் இவற்றை அறுவடை செய்து பக்குவப்படுத்தி வைக்கலாம். 
-மர வேலைகளுக்கு தேவையான மரங்கள், மூங்கில் போன்றவற்றை அறுவடை செய்யலாம். 
-கம்போஸ்ட் படுக்கையை புரட்டிவிடுதல்
-உழவு செய்த வயலில் கம்போஸ்ட் இடுதல் போன்றவையும் செய்யலாம்.

#பௌர்ணமி_Full_moon_day
-இந்த நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு #48_மணி_நேரம்_முன்பு விதைகளை விதைத்தால் செடிகள் வேகமாக வளர்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியே அந்த செடிகள் தாங்கும் சக்தியை ஓரளவு இழக்க காரணமாகிறது. ஆதலால் ஓரளவு நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விதைகள் விரைவில் முளைப்பதால், நாற்றுகள் ஓரளவு முதிர்ச்சி அடையும் வரை பாதுகாப்பு மிகவும் அவசியம்.
-பஞ்சகாவ்யம் போன்றவை தெளிக்க மிகவும் உகந்த நாள்

#சந்திரன்_எதிர்_சனி (Moon opposite saturn)
இந்த நாள் சந்திரன், பூமி, சனி கிரகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்ற நாள்.
இந்த நாளில் விதைத்த விதைகள் மிகமிக ஆரோக்கியமான நாற்றுகளாக வளர்கின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனும் பூச்சிகள் தாக்குதல்களைக் கூட எதிர்த்து வளரும் திறனும் அதிகரிக்கிறது.
சந்திரன் எதிர் சனி அமையும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு உள்ள 48 மணி நேரத்திற்குள் விதைத்தால் நலம்
இந்த நாளில் அனைத்து விவசாய வேலைகளையும் செய்யலாம்.

#இராசிகளில்_சந்திரன்_பயணிக்கும்_நாட்கள்

ஒவ்வொரு இராசியும் ஒவ்வொரு மூலக்கூறுகள் அடிப்படையில் சக்திகளை வெளிப்படுத்துகிறது. 
அவை

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் நெருப்பு சக்தியை வெளிப்படுத்தும். விதைகள், பழங்கள் போன்றவற்றிற்காக விதைப்பு செய்யலாம்.

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் மண் சக்தியை வெளிப்படுத்தும். மண்ணில் விளையும் கிழங்குகள், வேர்களை அறுவடை செய்யும் விதைகளை விதைக்கலாம்.

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் காற்று சக்தியை வெளிப்படுத்தும். பூக்களுக்காக விதைக்கும் விதைகளை விதைக்கலாம்.

கடகம், விருச்சகம், மீனம் ஆகிய ராசிகள் நீரின் சக்தியை வெளிப்படுத்தும். இலைகள், தண்டுகளுக்கான விதைகளை விதைக்கலாம்.

(புரியவில்லை என்றால் வருத்தம் வேண்டாம், அடுத்த பதிவில் விளக்குகிறோம். அதே சமயம் காலண்டரில் பூ, பழம், வேர், இலை என குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் அதற்கான விதைகளை விதைப்பு செய்யலாம்.)

இவ்வாறு வெளிப்படும் சக்திகள் சந்திரன் மூலம் பூமியில் உள்ள தாவரங்களில் அந்தந்த குறிப்பிட்ட பாகங்களில் ஏற்படும் மாறுதல்களிலும், வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடுகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த ராசிகளில் சந்திரன் பயணிக்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தாவரங்களை பிரித்து விதைப்பு, நாற்றுநடவு, அறுவடை போன்ற வேலைகள் செய்வது மிகுந்த பலனை அளிக்கிறது. இவ்வாறு அந்த மூலக்கூறுகளின் அடிப்படையில் தாவரங்களைப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

#நெருப்பு – விதைகள், பழங்கள் – நெல், கோதுமை, பயறு வகைகள், தக்காளி, கத்தரி, பீன்ஸ், மா, பலா, நிலக்கடலை, பருத்தி போன்றவை

#மண் – கிழங்குகள், வேர்கள் – நன்னாரி, வெட்டிவேர், மரவள்ளி, உருளைக்கிழங்கு, சேனை, மஞ்சள், இஞ்சி, காரட், பீட்ரூட் போன்றவை

#காற்று பூக்கள் – காலிபிளவர், ரோஜா, மல்லி போன்றவை

#நீர் – இலைகள், தண்டுகள் கறிவேப்பிலை, முட்டைக்கோசு, வெங்காயம், கீரை வகைகள், இலைக்காக வாழை நடுதல், மர வேலைக்கான மரங்கள் போன்றவை
இவ்வாறு பிரித்து அந்தந்த மூலக்கூறுகளாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் குறிப்பிட்ட தாவரங்களுக்குண்டான வேலைகளை செய்வது மிகவும் நன்மைத் தரும்.

நன்றி: 
ஆதாரம்: BDAI
காலண்டர் படம்: கரிம வேளாண் கட்டமைப்பு

சிங்கம்_புலி

சிங்கம்_புலி"

(சிங்கம் மற்றும் புலி இவைகளை பற்றி சில இயல்பான விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.. )

காட்டின் இரண்டு பெரும் தலைகள்.. தேர்ந்த வேட்டைகாரர்கள்... கொடூர கொலையாளிகள் சிங்கம் மற்றும் புலி.
இவைகள் இரண்டிற்கும் இடையிலான சில சுவாரஷ்யமான ஒற்றுமை வேற்றுமை பற்றி பார்க்கலாம்.

முதலில் ஒரு சுவாரஷ்யமான கேள்வி சிங்கம் புலி இவை இரண்டுமே பெரும் கொலையாளிகள் சிறந்த வேட்டை விலங்குகள். ஒரு வேளை இவை இரண்டுமே மோதி கொண்டால் இவற்றில் எது வெற்றி பெறும் ?
இந்த கேள்விக்கு பதில் அந்த விலங்கின் வயது அனுபவம் உடல் ஆரோக்கியம் எல்லாம் சார்ந்த விஷயம் தான் என்றாலும் பொதுவாக இவை இரண்டும் மோதி கொள்வதாக வைத்து கொண்டால் இவற்றில் வெற்றி பெறுவது எதுவாக இருக்கும் தெரியுமா ?

உங்களில் பல பேர் சிங்கம் என்று நினைத்திருந்தால் மன்னிக்கவும் அது தவறான விடை .இவை இரண்டும் மோதிக் கொண்டால் அதில் வெற்றி பெறுவது பெரும்பாலும் புலியாக தான் இருக்கும். அதற்கான காரணத்தை பார்க்கும் முன் அதற்க்கான ஆதார சம்பவம் சிலதை பார்க்கலாம்.

இதற்க்கு பண்டைய காலத்தில் இருந்தே ஆதாரங்கள் இருக்கின்றன..பழைய ரோம் நகரத்து பேரரசர்கள் மக்கள் சூழ பெரும் விளையாட்டு மைதானங்களில் சிங்கம் மற்றும் புலிகளுக்கு இடையில் சண்டை வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். அதில் பெரும்பாலும் புலியே வெற்றி பெற்றிருக்கின்றன. அதிகம் பணம் புலியின் மேல் தான் கட்ட பட்டு இருக்கின்றன. அதை பல ஓவியங்களில் கூட அவர்கள் வரைந்து வைத்து இருக்கிறார்கள். புலி வெற்றி பெறுவதை போன்ற பல பழங்காலத்து பெயிண்டிங்குகள் இன்றும் அங்கே காணலாம்.

1800 களில் baroda gaekwad ஒருவர்.. (பரோடா பகுதியை ஆளும் மன்னர்களை குறிக்கும் சொல்.. ) புலி சிங்கம் சண்டை ஒன்றில் கலந்து கொண்டார். அந்த சண்டையை நடத்தியவர் தனது புலி தான் ஜெயிக்கும் என புலியின் மேல் 37000 ரூபாய் பெட் கட்டி இருந்தார் அதை எதிர்த்து மன்னர் பணம் கட்டினார். இறுதியில் சிங்கத்தை புலி அடித்து வீழ்த்தி மன்னருக்கு பெரும் தொகையை (அந்த காலத்தில் 37000 ரூபாய் ) நஷ்டத்தை உண்டு பண்ணியது.

2011 இல் துருக்கியில் உள்ள ankara எனும் zoo வில் ஒரு முறை ஒரு புலி ஓரு சிங்கதை கொன்றது. அதை பார்த்தவர்கள் அது அதனை ஒரே ஒரு அடியில் அடித்து கொன்றதாக சொன்னார்கள்.
மேலும் அங்கே இருந்த ஆய்வாளர்கள் சிலர் புலிகள் அடிக்கடி தங்கள் கூண்டை விட்டு சிங்கத்தின் கூண்டில் சென்று இறையை தேடுவதாகவும் அப்போது சிங்கதை அடித்து கொல்வதாகவும் தெரிவித்து இருந்தனர்.

ஒரு முறை கிர் காடுகளின் சிங்கத்தை புலிகள் அதிகம் வாழும் பகுதியான kuno paplur எனும் இடத்திற்கு மாற்றுவதாக ஒரு திட்டம் வைத்து இருந்தார்கள். ஆனால் அந்த திட்டம் கைவிட பட்டது.
"The University of Minessota’s Lion Research Center " அதற்க்கு சொன்ன காரணம் 'அங்கே காலம் காலமாக வாழ்ந்து வரும் "பழங்குடி "புலிகள் இந்த புதிதாக வந்து சேரும் சிங்கங்களை அடித்துக் கொன்று விடும் என்று தாங்கள் பயந்துதான்' என்றார்கள்.

புலிகள் சிங்கத்தை வெல்ல முடிவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அடிப்படையில் அவைகள் சிங்கங்களை விட பல விஷயத்தில் தலை சிறந்தவை.
சரி சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான சில நடுநிலைமையான ஒப்பீட்டை பார்க்கலாம்.

முதலில் ஒரு சிங்கதை விட ஒரு புலி அளவில் பெரியது.. அதிக எடை கொண்டது.
உலகத்தில் உள்ள சிங்கங்களில் அதிக ஆக்ரோஷமான வலிமையான சிங்கம் என்றால் அது ஆப்ரிக்க சிங்கம் தான்.
ஒரு ஆப்ரிக்க சிங்கத்தின் எடை சராசரியாக 250 கிலோ.
அதே போல உலக புலிகளில் அதிக வலிமை கொண்ட பெரிய புலி என்றால் அது சைபிரியன் புலிகள் தான். அதன் சராசரி எடை 360 கிலோ.

ஒரு சிங்கத்தின் பல் 3. 2 அங்குல நீளம் கொண்டது ஆனால் ஒரு புலியின் பல் 3.6 அங்குலம்.. முதல் 4 அங்குலம் வரை.

சிங்கத்தின் கூர் நகங்கள் 3 அங்குல நீளம் கொண்டது. ஆனால் புலியின் நகங்கள் 4 அங்குலம்.
அப்படியே அகலத்தை பார்த்தால் சிங்கத்துக்கு 5 அங்குல அகலம். புலிக்கு 6.5 அங்குலம் அகலம்.

கால்களால் அறைவதில் சிங்கதால் சண்டையின் போது ஒரு நேரத்தில் ஒரு காலால் மட்டும் தான் அடிக்க முடியும் ஆனால் புலிகள் சண்டையில் இரண்டு காலில் நின்று இரண்டு காலால் சில சமயம் 3 கால்களால் தாக்கும்.

உடல் நீளம் சிங்கம் கிட்ட தட்ட 8..9 அடி என்றால் புலி 9 ..10 அடி

நீந்தும் திறமையில் புலி கில்லாடி சிங்கம் சோம்பேறி.

அதிக வெய்யிலில் மற்றும் மிக குறைவான வெளிச்சத்தில் நல்ல பார்வை திறனில் கிட்ட தட்ட இரண்டுமே ஒரே மாதிரி திறமை கொண்டவை.

Athletic ..body.. மற்றும் flexibility யில் புலிகள் சிறப்பானவை.

வேகம் என்று வரும் போது ஆன் புலியை விட பெண் சிங்கம் வேகமானது ஆனால் அதை விட பெண் புலி வேகமானது.

கடிக்கும் போது கொடுக்கும் அழுத்தம் (biting force ) சிங்கம் 600 psi (pounds per inch ) புலி 1000 psi
(ஒரு தொடர்பில்லாத தகவல் இங்கே சொல்கிறேன் உப்பு நீர் முதலை 3700 psi அழுத்தத்தில் கடிக்க முடியும் )

அடுத்து இரண்டில் யார் அதிக புத்தி சாலி ?? சந்தேகம் இல்லாமல் புலி தான்.
அதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்றால்... Cranial Volume ஐ கொண்டு..
அதிக Cranial Volume என்றால் அதிக புத்திசாலித்தனம் என்று அர்த்தம்..
மேலும் செயல்திறன் சோதனையில் புலிகளின் புத்திசாலிதனம் தெரிகிறது.

கர்ஜனையில் பார்க்கும் போது நிச்சயம் சிங்கத்தை புலி மட்டும் அல்ல வேறு எந்த விலங்கும் அடித்து கொள்ள முடியாது. சிங்கத்தின் கர்ஜனை 8 லிருந்து 10 கிலோ மீட்டர் வரை கேட்கும் புலியின் கர்ஜனை 3 யிலிருந்து 5 கிலோ மீட்டர்.

இது தவிர முக்கியமான ஒரு சிறப்பான குணம் சிங்கத்திடம் உண்டு அது புலியிடம் இல்லை.
அது தான் கூட்டு முயற்சி . team work இல் சிங்கங்கள் கில்லாடிகள். அவைகள் இனைந்து வேட்டை ஆடுகின்றன். கடினமான வேட்டையில் மானசிக வியூகம் திட்டம் அமைத்து வேட்டை ஆடுகின்றன . பெண் சிங்கம் மற்றும் குட்டி சிங்கங்கள் கடினமான வேட்டையில் திணற நேர்ந்தால் அதை வளர்ந்த ஆன் சிங்கம் எதிர்கொண்டு முடித்து கொடுக்கின்றன.

ஒரு நன்கு வேட்டை பயிற்சி அடைந்த சிங்க கூட்டணியை எந்த விலங்குகளும் வீழ்த்துவது மிக அரிது.
சிங்கம் ஒரு சமூக விலங்கு. ஆனால் புலி எப்போதும் தனி ஒருவன். அவைகளுக்கு கூட்டு முயற்சி என்றால் என்ன என்றே தெரியாது. புலி தனித்து மட்டுமே வேட்டை ஆடுகின்றன்.
எனவே 'சிங்கம் சிங்கிலா தான் வரும்' என்ற சினிமா வசனத்தை விட நமது பேச்சு வழக்கில் உள்ள "ஒற்றை புலி, ஒண்டி புலி " போன்ற வாசகம் உண்மையானது.

சிங்கத்திடம் இருக்கும் இன்னோரு தனி தன்மை என்ன வென்றால் அவைகள் தங்கள் ராஜ்யங்களை ஆளும் குணம் கொண்டவை. தங்கள் எல்லையை பராமரிப்பது அதற்குள் யாரையும் அனுமதிக்காமல் போராடி காப்பது எல்லையை விரிவு செய்வது தங்கள் ராஜ்யத்திற்கு ஆபத்து என்றால் உயிரை கொடுத்து போராடுவது.. எதிரி பகுதியை ஆக்கிரமிக்க முயல்வது போன்ற குணாதிசயங்கள் மற்ற விலங்குகளிடமும் இருக்கிறது என்றாலும் சிங்கத்திடம் அது மிக அதிகம்.

எல்லாவற்றிற்கும் மேல் வேட்டை நுட்பத்தில் சண்டை நுட்பத்தில் சிங்கங்கள் கைதேர்ந்தவைகள். சமயத்துக்கு சூழ்நிலைக்கு ஏற்றார் போல புதிய நுட்பங்களை உண்டாக்க கூடியது.

கூட்டமாக உள்ள சிங்கத்திடம் புலி ஜெயிக்க முடியாது ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் புலியை சிங்கம் ஜெயிக்க முடியாது.
ஒரு அடிபட்ட புலியை விட ஆபத்தான விலங்கு வேறு எதுவும் இல்லை என்பார்கள். ஆம் அடி வாங்கி விட்டால் அவைகள் இன்னும் ஆபத்தானவை.

காட்டு விலங்குகள் என்றைக்குமே வியப்பானவை.. அதில் இவை இரண்டுமே மிக சுவாரஷ்யமான காட்டுத்தனமான முரட்டு படைப்புகள் தான்.
ஆனால் அதில் சிங்கம் தானே அரசன் என்கிறார்கள்.

ஆம்...சிங்கம் தான் காட்டின் அரசன். அவைகள் தான் காட்டை ஆளுகின்றன.
ஆனால்.....
அதற்கு காரணம் புலிக்கு ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லாமல் இருப்பது தான்.

(உலகை ஆள நினைப்பவர்கள் தங்கள் சின்னமாக சிங்கத்தை தேர்ந்தெடுத்ததும் ... அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடியவர்கள் தங்கள் சின்னமாக புலியை தேர்ந்தெடுத்ததும் தற்செயலானது தானா ??? )

Saturday, 30 May 2020

வெட்டுகிளியை இவ்வளவு நாளாக grasshopers னு தானே சொல்லி கொடுத்தாங்க

வெட்டுகிளியை இவ்வளவு நாளாக grasshopers னு தானே சொல்லி கொடுத்தாங்க.. இப்ப ஏதோ locusts னு சொல்றோமே ஏன் என்று சிலருக்கு தோன்றியிருக்கலாம். சிலர் 'அட ரெண்டும் ஒன்னு தான் பா இப்படியும் சொல்லலாம் அப்படியும் சொல்லலாம் 'என்று சொல்லலாம்.. இந்த கும்பலாக வரும் மஞ்சள் வெட்டுகிளிகள் திடீரென வருகின்றனவே இவ்வளவு நாள் இவைகள் எங்கே இருந்தன என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். வெட்டுகிளிகள் படையெடுப்பு என்பது வரலாற்றில் புதிது அல்ல கி.மு வில் இருந்தே பல வரலாற்று சம்பவங்கள் உள்ளன.
Grasshopers.. locusts.. இவை இரண்டும் ஒன்றா..? 
ஆம் இவை இரண்டும் ஒன்னு தான். ஆனால் ஒன்னு இல்லை. Grasshopers களின் உருமாறிய சூப்பர் வில்லன் வடிவம் தான் locust. பொதுவாக நாம் கூறும் கிராஸ் ஹோபார்ஸ்களை நாம் அவ்வபோது வயவெளிகளில் பார்த்து இருக்கலாம் அவைகள் பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்து இருப்போம். மேலும் அவைகள் கூட்டம் சேராமல் தனி தனியாக இருப்பதை தான் பார்த்து இருப்போம். பெரும்பாலும் அவைகளை நாம் பறந்து சென்றே பார்த்திருக்க மாட்டோம் குதித்து குதித்து சென்று தான் பார்த்திருப்போம் ஆனால் வயல்வெளிகள் மீது கும்பலாக படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருப்பதை காணலாம். அசால்டாக பல நூறு கிலோமீட்டருக்கு பறந்து செல்வதையும் பார்க்கலாம்.
இவைகள் க்ராஸ்ஹோபார்ஸ் கள் இல்லையா ? என்றால் இவைகள் ஒரு காலத்தில் க்ராஸ் ஹோபராய் இருந்து பின் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இந்த வில்லன் வடிவில் மாறி விட்டவைகள் . (பரிணாம வளர்ச்சியுடன் குழப்பி கொள்ள வேண்டாம். இது பரிணாம வளர்ச்சி அல்ல ) அவை ஏன் அப்படி மாறுகின்றன ? எப்போதும் அனைத்து க்ராஸ்ஹோபர்ஸ்ர்ஸ்களும் இப்படி லோகஸ்ட் ஆக மாறுமா? என்றால் இல்லை. மிக சில தருணங்களில் மட்டுமே இந்த க்ராஸ் ஹோபார்ஸ்களில் வில்லன் மாற்றம் நடக்கிறது. அது ஏன் எப்படி எதனால் நடகிறது என்று பார்த்தால்....
பொதுவாக வெட்டுக்கிளிகள் தனித்து வாழக்கூடியவை. முட்டைகள் இட்டு அவற்றில் இருந்து வரும் குட்டி வெட்டு கிளிகள் இதே போல தனித்து பச்சை நிறத்தில் இருக்கும் வெட்டுக்கிளி ஆக வளர்பவை. ஆனால் மிகச் சில தருணங்களில் இது நடக்கிறது. தனியாக இருக்க வேண்டிய வெட்டுக்கிளிகள் கும்பலாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. உணவு தேவை அதிகம் மக்கள் தொகையோ அதிகம் என்கிற சூழலை வெட்டுக்கிளிகள் எதிர்கொள்ள நேர்கிறது. சில நேரங்களில் இவைகள் உணவு தேவை ,வறட்சியை எதிர்கொள்கின்றன. அப்போது கும்பலாக வாழும் வெட்டுகிளிக்கு உடம்பில் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது. அது ஒரு உயிர்காக்கும் உள்ளுணர்வு என்று சொல்லலாம். ' நாம இப்படியே இருந்தா செத்துப் போய் விடுவோம் நாம உயிர் வாழனும்னா நாம வேற மாறி மாறி ஆகணும் ' என்று அவைகளுக்குள் உள்ளுணர்வு கட்டளையிடுகிறது.
கும்பலாக வாழும் போது ஒரு வெட்டு கிளி அடுத்த வெட்டு கிளியை பார்க்கிறது .. முகர்கிறது மேலும் பின் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொட நேருகிறது. இந்த செயல்களால் அவைகள் உடலில் உள்ள சில ஹார்மோன்கள் சுரக்க வைக்க படுகிறது.அந்த ஹார்மோன் சுரக்க சுரக்க படி படியாக வெட்டுகிளிகள் உருமாறுகிறது.
பச்சையாக இருந்த உடல் இப்போ மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. ரக்கைகள் முன்பை விட வேறு மாதிரி பலமாக .. நீண்டதூரம் பறப்பதற்கு ஏற்றமாதிரி மாறுகிறது. க்ராஸ் ஹோபர் ரக்கைகள் இரண்டடுக்கு மெல்லிய ரக்கைகள் கொண்டிருக்கும் ஆனால் locust ரக்கைகள் நீண்டு வலிமையான வடிவாக மாறுகிறது.அவைகளின் பார்க்கும் திறன் முகரும் திறன் எல்லாமே அப்பாவி to சூப்பர் வில்லன் நிலைக்கு நிலைமாற்றம் அடைகிறது. சொல்ல போனால் இவைகளின் மூளை கூட அளவில் பெரிதாக மாறுகிறது. இந்த மாற்றம் இரண்டு மூன்று கட்டமாக நடக்கிறது..உடல் உருவ அளவில் கொஞ்சம் முன்பை விட தன்னை சுருக்கி கொள்கின்றது.
ஒரு grass hoppers தனித்து மட்டுமே இருக்கும் ஆனால் ஒரு locust கும்பலாக சமூக விலங்காகவும் வாழ முடியும். இப்போது இவைகள் கும்பலாக ஒற்றுமையாக வலிமை மிக்கவையாக நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கின்றன. அவைகள் செல்லும் பாதைகளில் உள்ள பயிர்கள் அனைத்தையும் தின்று தீர்த்து போகும் வழி பூராவும் அழிவை தடயமாக விட்டு செல்கின்றன.
பொதுவாக இந்த மாதிரி வெட்டுக்கிளிகளின் இடமாற்றம் என்பது பருவ மாறுதல் மழை பொழிவு.. காற்று திசை இவைகளை பொறுத்து உண்டாகிறது. குறிப்பாக பாலைவனப் பகுதியில் வரட்சிகள் மிகுந்து உணவு குறைவாக பற்றாக்குறையாக இருக்கும் தருணங்களில் வெட்டுக்கிளிகள் முட்டையிட நேர்ந்து இருக்கும் சமயங்களில் இந்த உருமாறும் வில்லன்கள் உருவாகின்றன. இவைகள் காற்றை பின் தொடர்ந்து தனது பாதையை அமைக்கின்றன என்பதால். ஓரளவு இவைகள் செல்ல போகும் பாதையை நம்மால் கணிக்க முடியும். இயல்பாக வாழ சூழல் இல்லாத போது காலத்துக்கு ஏற்றார் போல தன்னை மாற்றி கொண்டு உயிர்வாழும் சக்தி பொதுவாகவே விலங்குகளுக்கு பூச்சிகளுக்கு அதிகம் இருக்கின்றன. இந்த வெட்டுகிளிகள் அதை தான் செய்கின்றன.
இவைகள் கடந்து செல்லும் இடங்களில் பயிர்கள் பெரிய அளவில் நாசம் செய்து விவசாயிகளை கதற விடுகின்றன.உணவு உற்பத்தி குறைவதால் உண்டாகும் chain reaction களுக்கு காரணமாகின்றன. இவைகளை அடக்க சிறந்த வழி பறவைகள் .
பறவைகள் தான் இந்த வில்லன்களை தட்டி கேட்கும் சூப்பர் ஹீரோஸ்கள். இவைகளை தின்று தீர்க்கும் பறவைகள் எண்ணிக்கை குறைந்து போனால் இவைகள் தட்டி கேட்க ஆள் இல்லாமல் அட்டகாசம் செயகின்றன.. (குருவிகள் சாகும் போது குருவி செத்தா நமக்கு என்ன என்று இருந்த மனிதர்கள் இப்போது கொஞ்சம் சங்கிலி தொடர் விளைவு பற்றி உணரலாம் )
இதை தவிர தகுந்த ராசயணங்கள் மூலம் இவைகளை கட்டு படுத்தலாம். மற்றும் இவைகள் உடலில் சுரக்கும் சேரடோனியம் தான் இவைகளின் வில்லன் நடத்தைக்கு காரணம் என்பதால் அதற்கு எதிரான கெமிக்கல் தெளிப்பது மூலமாகவும் இவைகளை கட்டு படுத்தலாம்.
சரி இந்த வெட்டுகிளிகளை காப்பான் படத்தில் வருவது போல மனிதர்களே உருவாக்க முடியுமா ? என்றால் விடை ஆம் நிச்சயம் முடியும்.
Paul Driessen இவர் the Committee for a Constructive Tomorrow (CFACT) and the Center for the Defense of Free Enterprise இல்
சீனியர் பாலிசி அட்வைசராக இருப்பவர்... கிழக்கு ஆப்ரிக்காவில் Kenya, Ethiopia, Eritrea, Djibouti மற்றும் Somalia வில் வெட்டுகிளிகள் 70 ஆண்டுகள் இல்லாத அளவு பாதிப்பை உண்டு பண்ணிய போது. இது ஒரு man made என்று அவர் அறிவித்தார்.
அவர் கூறுகிறார்..". Economic development organizations and activist nongovernmental organizations have foisted "agroecology" on the poorest nations — an organic-style agriculture.
இது மனித உருவாக்கமோ அல்லது இயற்கையின் உருவாக்கமோ ஆனால் ஒன்று நிச்சயம் மனிதன் தன்னை மிகப்பெரிய மாற்றத்திற்கு தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. இல்லையேல் டார்வின் சொன்ன 'தகுதியுள்ளவை' லிஸ்டில் மனிதன் பெயர் இருப்பது சந்தேகம்தான்.

Wednesday, 20 May 2020

தற்சார்பு பொருளாதாரம்

தற்சார்பு பொருளாதாரத்தைப பற்றி பேசுவதற்கு முன்னால் நிறைய அடிப்படை உண்மைகளை நாம் திரும்ப ஞாபகப் படுத்திக்கொள்ளல் வேண்டும். நான் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நாம் மறந்த வாழ்வியலை வழிமுறையை கோடிட்டு காட்டப்போகிறேன். அவ்வளவே. முதலில் ஆசைக்கும் அத்தியாவசிய தேவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் யோசிக்க வேண்டும். பிறகுதான் தேவையானவை மட்டும் எவை என்ற புரிதல் கிடைக்கும்.

பணப்பரிமாற்றம் முறையை முதலில் மெல்ல மெல்ல தவிற்க வேண்டும். குறைந்தபட்சம் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள்.



1.வங்கியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு குறைந்த வட்டியே தருவார்கள். உங்கள் பணத்தை ஊராருக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி பெருவார்கள்‌. இந்த வட்டி வித்தியாசம்தான் வங்கிக்கு லாபம். வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் கடனை திருப்பித் தரவேண்டுமானால் அவர்களின் தொழிலில் லாபத்தைக் கூட்ட வேண்டும், அதாவது அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் (காய்கறிகள், இறைச்சி, பழவகைகள், போன்றவை) விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு விலைவாசி உயர்வதற்கு பிள்ளையார் சுழியும் நீங்களே போடுகிறீர்கள்‌. இடையில் நோகாமல் நொங்கு தின்பது வங்கி. நீங்கள் மாதந்தோறும் வங்கியில் வாங்கும் வட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு சரியாக போய்விடும். நீங்களும் வங்கியில் பணம் டெபாசிட் பண்ணாமல் இருந்திருந்தால் இந்த விலைவாசி ஏற்றத்தை தாக்குபிடித்திருக்க முடியாது என்று நம்பிவிடுவீர்கள். பாவம் அந்த விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணமே வங்கிதான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

2.வங்கி முறை முதலில் சரியானதா ? நிச்சயம் இல்லை. உதாரணமாக ரிசர்வ் வங்கி 100 கோடி ரூபாய் அச்சடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். 10 தேசிய வங்கிகளுக்கு தலா 10 கோடி கடனாக தருகிறது. அந்த பத்து வங்கிகளும் இரண்டு ஆண்டுகள் கழித்து வட்டியுடன் 11 கோடியாக தரவேண்டும். பத்து வங்கிகளும் 11 கோடி தந்தால் மொத்தம் 110 கோடி. அச்சடிக்கப்பட்ட மொத்த தொகையே 100 கோடிதான். எப்படி 110 கோடி வரும்? என்ன நடக்குமென்றால், ஒன்பது வங்கிகள் பதினொரு கோடியை மக்களிடம் பெற்று தரும். மீதி ஒரு வங்கி ஒரு கோடி ரூபாய் வட்டியை மட்டும் கட்டிவிட்டு தனது கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மக்களின் தலையில் சுமையை வைத்துவிடும். அந்த இல்லாத பத்து கோடிக்குதான் ஊரே அடித்துக் கொள்ளும். இதன் பக்க விளைவுகளே சொத்துக்களை ஏலத்தில் விடுவது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகள். குழப்பமாக இருக்கிறதா? எளிதில் புரிந்துவிட்டால் வங்கியை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்களா? அதற்குத்தான் இந்த தெளிவற்ற தன்மையை வங்கிகள் பின்பறறுகின்றன.

3.பணத்தை என்னதான் செய்வது ? வங்கியில் போடுவதே பாதுகாப்பானது என்று உங்களை நம்ப வைத்திருப்பார்கள். அம்பானியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது வங்கிக் கணக்கில் கடன்தான் இருக்கும். ஏனெனில் லாபத்தை பண வடிவில் சேத்து வைப்பது முட்டாள்தனம். தொழில் வடிவத்தில் சேத்து வைப்பதே நலம். ஏனென்றால் பணத்தை மூட்டைகட்டி வைப்பதால் அது வளராது. திட்டமிட்டு ஒரு தொழில் தொடங்குங்கள். முதலீடு செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ ஒரு தொழிலில் வெற்றிபெருவதற்கான யுக்தி உங்களின் கைகளில் இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சுற்றத்தார் சிலரிடம் நல்ல தொழில் சிந்தனைகள் யோசனைகள் இருக்கும் அவரிடம் மூதலீடு செய்யுங்கள், கடன் வழங்குங்கள். ஏனென்றால் 501 என கலாய் வாங்கின ரிலயன்ஸ்சின் பாடமே ஜியோவின் வெற்றிக்கு வித்திட்டது. வங்கியில் கட்டுக்கட்டாக பணம் டெப்பாசிட் செய்வது உங்கள் வாழ்க்கை சக்கரத்தில் நீங்களே காற்றை இறக்கிக்கொள்வதற்கு சமம். தனிநபர் வளர்ச்சியை மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியையும் இது தடுக்கும்.

இப்படி மெல்ல மெல்ல உங்களின் சொத்துக்களை, பொருளாதார சுதந்திரத்தை உங்களிடம் இருந்து பறித்து ஏலத்தில் விட்டும், விலைவாசியை உயர்த்தியும், வளர்ச்சியை தடுத்தும் ஊளை சதைப்போட்டு வளரும் வங்கிகளின் துரித திருட்டு இதுதான்.

உணவு உடை இருப்பிடம் இது மூன்றும் அத்தியாவசியம் தான். ஆனால் நம் வாழ்க்கையை உற்று பார்த்தால் தெரியும், அதில் ஆடம்பர பொருட்களே அதிகம் என்று.

இன்னொரு முக்கியமான குறிப்பு, கீழே சொல்லியிருக்கும் ஒவ்வொரு செயலையும் முயற்சிக்க சில குறிப்பிட்ட நேரம் செலவாகும். (யோசித்துப் புரிந்து கொள்ளவே நிறைய நேரம் ஆகலாம்). எனக்கு time இல்ல. Office வேல பாக்கவும், வீட்ட கவனிக்கவுமே time சரியா இருக்குன்னு நொண்டி சாக்கு சொல்பவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புறேன். இதில்தான் தற்சார்பு பொருளாதாரத்திற்கான தேவை என்ன என்பதும் அடங்கியிருக்கு.

வேலைக்கு செல்வதற்கு நாம் பிறக்கவில்லை, வாழ்வதற்கு பிறந்திருக்கோம். வாழ்வது என்றால் உலகில் உள்ள அற்புதங்களை ஐம்புலன்களால் அனுபவிப்பது. (அதைப்பற்றி விரிவாக இன்னொரு 
பதிவில் எழுதுகிறேன்.)



வேலைக்கு செல்வதே வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குதான். அதாவது வாங்குற சம்பளத்தில் என்ன வாங்குவீர்கள் ? வீட்டில் வாழ தேவையான பொருட்களைத்தானே வாங்குவீர்கள். அதில் பல உள்ளரசியல் இருக்கின்றன. அதை கவனியுங்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு உங்கள் மூலமாக கிடைக்கும் லாபம் கண்டிப்பாக உங்களின் சம்பளத்தைவிட சிலபல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். இல்லாவிடில் உங்களை வேலையில் வைத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக உங்கள் சம்பளம் பத்தாயிரம் என்று வைத்துக் கொள்வோம். உங்களால் உங்களின் கம்பெனிக்கு குறைந்தது முப்பதாயிரம் லாபம் இருக்கும். இல்லை முப்பதாயிரம் மிச்சப்படும். நீங்கள் எட்டு மணி நேரம் உழைப்பதில் உங்களுக்கு ஊதியமாக ஒரு நறுக்கு மட்டும் தரப்படும். மீதி முதலாளிக்கு லாபம். இப்போது அந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எதை வாங்கினாலும் அதில் பொருளின் மதிப்புடன் கூடுதலாக லாபம் வரி பேக்கிங் என மொத்தமும் உங்கள் தலையிலே விடியும். பத்தாயிரத்தில் நீங்கள் வாங்கிய பொருட்களின் மதிப்பும் பெற்ற சேவையின் மதிப்பும் கூட்டினால் தோராயமாக நாலாயிரத்தில் அடங்கிவிடும். மீதி ஆறாயிரமும் மற்றவர்களின் லாபத்திற்கும் அரசாங்க லாபத்திற்கும் சென்றுவிடும். எனவேதான், வேலைக்கு போய் சம்பாரித்து செட்டில் ஆனவர்கள் யாரும் இலர். மேலும் அன்பளிப்பாக உடல்நலக் குறைவு, மன அழுத்தம், டாக்டர் செலவு, பணப்பற்றாகுறை, கடன் தொல்லை என அத்தனை உயிர் கொல்லிகளும் வாரி வழங்கப்படும்.

இப்போது இப்படி வைத்துக் கொள்வோம், 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் சொந்த மற்றும் இதர வேலைகள் என்க. இந்த 8 மணி நேரம் வேலை பார்ப்பதை தவிர்த்து, உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்ய உழைத்தீர்களானால் ? உங்கள் உழைப்பின் பலன் உங்களுக்கே கிடைக்கும். ஏதோ பௌர்ணமி பிதற்றல் போல் தோன்றும்.

சற்று நிதானமாக நம் தாத்தா பாட்டி காலத்தை ஞாபகப் படுத்திப் பாருங்கள். அவர்கள் வேலை விவசாயமாக இருக்கும். சொந்த நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து விற்றும் உண்டும் வாழ்ந்தார்கள். அவர்களின் இதர தேவைகளுக்காக மட்டும் நெல் விற்ற பணத்தைப் பயன்படுத்துவார்கள். உழைப்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். லாபமும் கிடைக்கும். மருத்துவ செலவு என்பதே இருந்திருக்காது. “விவசாயிகளே தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுறாங்க, இதுல நம்மல போய் விவசாயம் பண்ண சொல்லுறானே”னு பயப்படாதீர்கள். எல்லோரையும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்க சொல்லவில்லை. சிலர் உணவு பொருட்கள் சிலவற்றை உற்பத்தி செய்யுங்கள். சிலர் உடைகளை உற்பத்தி செய்யுங்கள். சிலர் இருப்பிடம் கட்டிக் கொடுங்கள். இப்படி ஒரு ஊர் மக்கள் தங்கள் தேவைகளை தங்கள் ஊர் மக்களைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்.மேலும் இதை நடைமுறைப்படுத்துவதில் உளவியல் பிரச்சினைகளும் உண்டு. என்னவென்றால், மக்களுக்கு சுகமான வாழ்க்கை என்றால் பீச்சோர பங்களாவில், swimming poolக்கு பக்கத்தில் நீட்டமான மரப்படுக்கையில் படுத்துக் கொண்டு நான்கைந்து வேலையாட்களை அடிமைகளைப் போல் ஏவியேவி வேலை வாங்குவதும், தேவையோ இல்லையோ மனதை வசீகரிக்கும் எல்லா டி.நகர் குப்பைகளையும் வாரந்தோரும் தன் வீட்டில் குவித்துக் கொள்வதும், பார்ப்பவரை பொறாமைப் பட வைக்கும் அளவிற்கு மிடுக்காய் உடையணிந்து கொள்வதுமாக எல்லாமுமே TV விளம்பரங்களில் வரும் காட்சிகள்தான். அந்த தவறான சித்தரிப்புகளை உங்கள் கற்பனையில் இருந்து நீக்குங்கள். அதில் வரும் முதலாளியாக நீங்கள் உங்களை நினைப்பீர்கள். ஆனால், சமூகத்தைக் கட்டுபடுத்தக் கூடியவர்கள் உங்களை அந்த வேலை ஆட்களாகவே வைத்திருப்பார்கள்.

பிறகு ஏன் அந்த ஆசையை காட்டுகிறார்கள் என்றால், அதன் விளைவாகவே உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு வந்தே தீருவீர்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சொகுசான வாழ்வை அனுபவிக்கலாம் என்று உங்களை நம்பவைத்து ஆசைப்பட வைப்பார்கள். “நீ நிம்மதியாய் இல்லை, மோசமான கஷ்டமான வாழ்வை அனுபவித்து வருகிறாய்” என்று மூளைச் சலவை செய்வார்கள். இப்படி மந்தை போன்ற சமூகத்தை பாத்திக்கட்டி திசைதிருப்பும் யுக்தி சில multi millionaireகளின் அதிகார மேசைக்கு மட்டுமே தெரியும். இந்த அதிபயங்கர அதிபுத்திசாலிகளின் சிலந்தி வலையில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான, நல்ல அனுபவகரமான வாழ்வை மேற் கொள்ளவே இந்த தற்சார்பு பொருளாதாரம்.தோற்றம் அல்லது Image. இந்த சமூகத்தில் ஒரு தனிநபரின் தோற்றமே அவரை யாரென நிர்ணயிக்கிறது. இதன் விரிவான விளக்கங்களை புரிந்து கொள்ள Halo Effect மற்றும் Horn Effect  பற்றி படியுங்கள். கருத்தவன்லாம் கலீஜு, செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்டி ஜீவா ஓடும் ? போன்ற எண்ணங்களுக்கு உளவியல் ரீதியாக பின்னாலிருக்கும் உண்மையை உணருங்கள்.

சமூகம் எதிர்பார்க்கும் அல்லது அங்கீகரிக்கும் image ஐ தூக்கி எறியுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தாற்போல் நீங்கள் மாற்றலாம். ஆனால் அனைவரும் ஒன்று திரள வேண்டும். குறைந்தது நூறு குடும்பங்கள் பண்ட மாற்று முறையையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் புரிந்து செயல்பட்டால் போதும், அவர்களின் வளர்ச்சி, வாழ்க்கை தரத்தை பார்க்கும் அனைவரும் தற்சார்பு பொருளாதாரத்தை பின்பற்றுவார்கள்.

வீட்டில் சமைப்பதற்குத் தேவையான மூலப் பொருட்கள் தோராயமா நூறு இருக்கு என்று கொள்வோம். இதில் எவையெல்லாம் localல் கிடைக்கும் என்று பாருங்கள். ஏறத்தாழ எண்பது பொருட்கள் இருக்கும். பல பொருட்கள் plastic packet ல் அடைத்து பெரிய brandன் பெயர் போட்டு ஜிகுஜிகுவென்று இருக்கும். அவற்றை வாங்காதீர்கள். அதே பொருட்கள் localல் அதைவிடவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதையே வாங்குங்கள். மீதி இருக்கும் இருபது பொருட்களும் நீங்களே உற்பத்தி செய்ய முடியும்.



உதாரணமாக மிளகாய்த்தூள் வேண்டும் என்றால் நீங்களே வரமிளகாய் மல்லி எல்லாம் வாங்கி வீட்டில் காயவைத்து அருகில் இருக்கும் மாவு அரைக்கும் கடைகளில் அரைத்து மிளகாய் தூள் தயாரிக்கலாம். இதைப் போலவே ஒவ்வொரு பொருளையும் trial and error முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். முயற்சியுங்கள் பிறகு உங்களுக்கே அது எளிதாகி விடும். ஒரே நாளில் இருந்து எல்லாவற்றையும் தயாரிக்க முயற்சிக்க வேண்டாம். ஒவ்வொரு பொருளாக தயாரிக்க தொடங்குங்கள். ஒரே வருடத்தில் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களில் எதுவும் பெரிய brandன் பொருட்களாக இருக்காது. அப்போது மாத budgetல் ஆயிரம் ரூபாய் மிச்சப் பட்டிருக்கும். மருத்துவ செலவு எதிர்காலத்தில் அறவே தவிர்க்கப்படும்.

இவை அனைத்தும் மூலப் பொருட்கள் அல்ல, உப பொருட்களே. நிலம் இருப்பவர்களின் அடுத்த நகர்வு விளைச்சலை நோக்கி இருக்க வேண்டும். சொந்த விவசாய நிலம் அற்றவர்கள் மற்ற அத்தியாவசிய தேவைகளான உடை மற்றும் இருப்பிடத்தின் கூறுகளை கவனியுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு jeans ஒரு சட்டை கூட நல்லதாக வாங்கிவிட முடியாது. ஆனால் அதே ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் எத்தனை மணி நேரம் உழைக்க வேணடும் என்பதை கணக்கிடுங்கள். ஏறத்தாழ பதினாறு மணி நேரம் உழைப்பீர்கள். இப்போது ஒரு வேட்டி ஒரு சட்டையின் மெட்டீரியல் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்களே சட்டையை தையுங்கள். அதிக பட்சம் நான்கு மணி நேர உழைப்பில் உங்களுக்கான சட்டையை நீங்களே தயாரித்துவிடலாம். முதலில் கோனல் மானலாகத்தான் வரும், பத்து சட்டை தைத்த பிறகு, கடைகடையாக தேடி வாங்கும் சட்டையை கடகடவென்று நீங்களே தைக்கலாம். சிரிப்பாக வரலாம். ஏனென்றால் பல வருடம் அறியாமையோடே இச்சமூகத்தில் வாழ்ந்துவிட்டு ஒரே நாளில் நன்மை தரும் சிந்தனைகளை உங்களுக்கு உள்ளில் இருந்து வெளிப்படுத்தினாலே சிரிப்பாகத்தான் இருக்கும். இந்த தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறையில் உள்ள நன்மைகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.இப்படி ஒவ்வொரு பொருளாக தயாரித்து, உங்கள் சமூகத்திற்கான தேவையை நீங்களே கட்டமைப்பீர்களானால், ஐந்து முதல் பத்து வருடங்களில் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியில் உங்களுக்கு தயாரிக்க ஏதுவான பொருள் எது என்பதை கண்டறிந்து, அதை சிறந்த முறையில் தயாரித்து சந்தைபடுத்தக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பீர்கள். சமூக வளர்ச்சியில் உங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதிருக்கும்.

தெளிந்த நல்லறிவு பெற தடையாக இருக்கும் போதை என்ன என்பதை அறியுங்கள்.

“வெளிநாடு போய் சம்பாரிசசிட்டு ஊருல வந்து செட்டில் ஆகலாம்.”

“நல்ல ஐ.டி. கம்பெனில சேந்து லட்ச லட்சமா சம்பாரிச்சு தண்ணியிருக்க காடா பாத்து வளைச்சுபோட்டு இயற்கை விவசாயம் பண்ணலாம்” போன்ற அதிமேதாவித்தனமான யோசனை கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு,

சந்தன மரம், செம்மரக் கட்டை, ஐம்பொன் சிலைகள் மட்டும் மதிப்புள்ளவை அல்ல. உங்களது மூலையும் தான். பிற நாட்டின் வளர்ச்சிக்காக உன்னுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு விட்டு வருடங்கள் கழித்து திரும்பிப்பார்க்கையில் உன் நாடு அங்கேயே நின்றிருக்கும். நீ வாழப் போகும் சமூகத்திற்காக நீ பாடுபடு. உன் குடும்பம் வம்சம் சமூகம் என எல்லாமும் செழிக்கும். அயல் நாட்டுக்கு மனித வளத்தை கடத்துவதும் தார்மீக ரீதியில் குற்றமே. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏன் இதை கண்டுக்கொள்ளவில்லையெனில் வரி வருவாய் அதிகம். அதாவது லஞ்சம் பெற்றுக் கொண்டு உன் திறனை நாடு கடத்துவதாகும். மேலும் பல லட்சங்களோ சில கோடிகளோ சேமித்து சிட்டிக்கு தூரத்தில் அமைதியான சூழலில் காடு வீடு பங்களா என செட்டில் ஆகும்போது நீங்கள் வீனடித்த மறைநீரை, வளத்தை சமன் செய்வதற்கு உங்களின் மீதி காலம் போதாது. உங்களின் அடுத்தடுத்த சந்ததிக்கு எதுவும் மிஞ்சாது.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.