ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மனித இதயம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!!!
மனித உடலிலேயே இதயம் தான் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு. சொல்லப்போனால் இது தான் உடலிலேயே மிகுந்த ஆற்றல் கொண்ட கடுமையாக உழைக்கும் உறுப்பு.
இதயத்தின் முக்கிய பணி, உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த நாளங்களின் வழியே இரத்தத்தை அனுப்புவது. உடலிலேயே சற்றும் ஓய்வு எடுக்காமல் எப்போதும் வேலை செய்யும் உறுப்பும்
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.
1 உண்மை #1
ஒரு வளரும் குழந்தையின் இதயத்தின் அளவு ஒரு கைப்பிடி அளவு இருக்கும். அதுவே ஒரு வளர்ந்த மனிதனின் இதயத்தின் அளவானது இரண்டு கைப்பிடி அளவு இருக்கும்.
2 உண்மை #2
மனித இதயத்தின் எடை 1/2 கிலோவிற்கு குறைவாகத் தான் இருக்கும்.
3 உண்மை #3
இதய இரத்த குழாய்களின் நீளமானது நமது நாட்டில் உள்ள மொத்த ரயில் பாதையின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளமானது என்று பாருங்கள்.
4 உண்மை #4
ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளின் இதயத்துடிப்பு சற்று வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70 முறையும், பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 78 முறையும் துடிக்கும்.
5 உண்மை #5
இதயம் ஒவ்வொரு முறை சுருங்கும் போதும், உடலில் உள்ள சுமார் பத்தாயிரம் மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்களில் இரத்தத்தை அனுப்புகிறது.
6 உண்மை #6
இதயமானது ஒரு நாளில் சுமார் 7200 லிட்டர் இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. ஆனால் உடலிலேயே விழிவெண்படலத்தில் மட்டும் இரத்தம் இல்லை.
7 உண்மை #7
இதயமானது ஒருவரின் வாழ்நாளில் சுமார் 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்ப் செய்கிறது. (1 மில்லியன் பேரல் இரத்தம் என்பது 3-க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர்களை நிரப்பும் அளவு)
8 உண்மை #8
இதயத்தில் இருந்து வரும் 'லப்-டப்' என்னும் சப்தம் வருவதற்கு காரணம், இதயத்தில் உள்ள நான்கு வால்வுகள் திறந்து மூடுவது தான்.
9 உண்மை #9
நம் உடலில் உள்ள நுண்ணிய இரத்தநாளங்களின் நீளம் சுமார் 1 மி.மீ ஆகும்.
10 உண்மை #10
கருவில் வளரும் குழந்தைக்கு முதலில் வரும் உறுப்பே இதயம் தான்.
11 உண்மை #11
கருத்தரித்து நான்கு வாரம் கழித்து தான் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.
12 உண்மை #12
ஒருவருக்கு பல் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
13 உண்மை #13
ஒரு நாளைக்கு இதயமானது 1 லட்சம் வரை சுருங்கி விரிகிறது.
14 உண்மை #14
இதயத்துடிப்பானது ஒரு நாளைக்கு 1,00,000 தடவையும், ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவையும், வாழ்நாளில் 2.5 பில்லியன் தடவையும் துடிக்கின்றன.
15 உண்மை #15
பெரும்பாலான மக்களுக்கு மாரடைப்பானது காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தான் ஏற்படுகிறது.
16 உண்மை #16
ஒருவரின் மோதிர விரல் நீளமாக இருந்தால், அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வாழ்கவளமுடன் & நலமுடன்
Wednesday, 23 December 2015
கொள்ள வேண்டிய மனித இதயம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!!!
வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!
வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!
பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீரழிவு நோயைத் தடுக்கும் :
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப்பைக் கல்லைக் கரைக்கும் :
நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும் :
நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகத் திகழ்கிறது.
இளமையைப் பராமரிக்கும் :
இது இளமையைப் பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையால் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும் :
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும் :
நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.
கொழுப்பைக் குறைக்கும் :
ஆம், உண்மைதான். நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கருப்பைக் கோளாறுக்கு முற்றுப்புள்ளி :
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்குப் பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாகப் பெண்களுக்குக் கருப்பைக்கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
Monday, 21 December 2015
[இயற்கை வைத்தியம் ]
இயற்கை வைத்தியம் ]
இயற்கை முறைக்கு மாறுவோம்!# ஆரோக்கியமாக வாழ்வோம்
இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக
்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் ப பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாற சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
சின்ன தகவல் தொரிந்துகொல்லுவம்
கட்டாயம் படித்துவிட்டு பகிரவும்..!!
ஒரு விமானம் தாங்கி கப்பலை தயாரிக்க, பாரமரிக்க, எரிபொருள் நிரப்ப ஆகும் செலவு என்னவென்று தெரியுமா.?
இதோ உங்களுக்காக.!!
ஒரு விமானம் தாங்கி கப்பல் தயாரிக்க 12,500 கோடி ஆகிறது. அதில் ஆயதங்கள், ராடார்கள், முதல் உதவி சாதனங்கள் ஆகியவற்றிற்கு 1,700 கோடி ஆகிறது.
ஒரு விமானம் தாங்கி கப்பல் சுமார் 35 போர் விமானங்களை சுமந்து செல்லும். அவை விமானம் தாங்கி கப்பலுக்கென பிரத்திகமாகட தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆதலால் 35 போர் விமானங்களுக்கு 15,600 கோடி ஆகிறது.
கப்பல் தயார், விமானங்கள் தயார். அனால் அதை இயக்க வேண்டும்.
விமானம் தாங்கி கப்பலை இயக்க 4 ராட்ச்சச என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒரு வருடத்திற்கு எரிபொருள் நிரப்ப 7,800 கோடி ஆகிறது.
இக்கப்பலை இயக்க சுமார் 1500 மாலுமிகள் தேவைப் படுகிறார்கள். அவர்கள் ஊதியம், உணவு வருடத்திற்கு 80 கோடி ஆகிறது. இதர பாரமரிப்புகள், பழுது நீக்கம். துரு அகற்றம் இவை அனைத்திற்கும் 3,600 கோடி ஆகிறது.
ஆக, தயாரிக்க 12,500 கோடி, ஆயுதங்கள், ராடார்களுக்கு 1,700 கோடி, விமானங்களை சேர்க்க 15,600 கோடி, எரியூட்ட 7,800 கோடி, பராமரிப்பு செலவு 3,600 கோடி ஆகிறது.
மொத்தம் 41,280 கோடி.
இந்தியா இதை போல் 2 விமானம் தாங்கி கப்பல்களை இயக்குகிறது.
ஆதலால் 82,560 கோடி.
இப்பொழுது தெரிகிறதா ஏன் உலகில் குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே விமானம் தாங்கி கப்பலை இயக்குகிறது என்று.?
உலகில் மொத்தம் 12 பிரமாண்ட விமானம் தாங்கி கப்பல்கள் மட்டுமே செயலில் உள்ளன.
அதில் 8 அமெரிகாவசம் உள்ளது. 2 இந்தியா வசம் உள்ளது. ரஷ்யா மற்றும் சீனா தலா ஒன்று வைத்துள்ளன.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானின் மொத்த ராணுவ நிதி 78,900 கோடி தான்.
-இந்திய இராணுவம்
அடுத்த பதிவு: இந்தியாவிற்கு ஏன் 2 விமானம் தாங்கி கப்பல்கள்..?
(படம்: விராட் (INS Viraat) மற்றும் விக்ரமாதித்யா (INS Vikramaditya)
Sunday, 20 December 2015
சிறு தொழில் தகவல்
சுய தொழில் தொடங்க, சிறு ... - Ssivf www.ssivf.com › ssivf_cms
சில பயனுள்ள இணைய தகவல் !/ சான்றிதழ்
1) பட்டா / சிட்டா அடங்கல்http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிடhttp://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டுhttp://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டுhttp://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதிhttp://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதிhttps://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதிhttp://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதிhttp://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதிhttp://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதிhttp://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்யhttp://www.tn.gov.in/dge
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதிhttp://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்யhttp://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதிhttp://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதிhttp://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
8) .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறியhttp://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறியhttp://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதிhttp://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சிhttp://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html