Showing posts with label தீபாவளிபண்டிகை. Show all posts
Showing posts with label தீபாவளிபண்டிகை. Show all posts

Tuesday, 17 October 2017

தீபாவளி

ஐப்பசி என்பது தமிழர்களின்; தமிழ் இனத்திற்கு  மழைக்கால தொடக்கம் என்பது தொன்மம். அக்காலத்தில் நோய்களின் தாக்கத்தை குறைக்க தமிழர்கள் பல ஒளி வடிவிலான சம்பிரதாயங்களை மேற்கொண்டனர். அப்பண்டிகை அனைத்தும் தீபாவளியுடன் சம்பந்தப்பட்டதல்ல ..
ஆனால் தீபாவளி என்பது தமிழ் இனத்திற்கு இடைச்சொருகளே.     

சோழர் காலத்தின் தமிழகத்தில் மிகப்பெரிய பண்டிகை என்பது திருவோணம்தான். இன்றும் சோழநாட்டுக் கோயில்களில் அது கொண்டாடப்படுகிறது. இன்று அது கேரளத்தில் மட்டும் எஞ்சியுள்ளது. பின்னர் நாயக்கர்களின் காலகட்டத்தில் தீபாவளி அரச ஆதரவு பெற்றது. இன்றைய வடிவில் நாம் தீபாவளியைக் கொண்டாட   மன்னர் தெலுங்கின திருமலைநாயக்கர்தான் முக்கிய காரணம்.

இது ஆரிய கள்ள தொடர்பில் வளர்ந்த திராவிடர் பண்டிகையே தீபாவளி.  தமிழர் பண்டிகையாக தீபாவளி ஒருபோதும் இருந்ததில்லை ..எல்லாம் இடைச் சொறுகளே ..

நரகாசுரன் தமிழனா வடநாட்டவனா என்றே இங்க நிறைய பேர் குழம்பிப் போய் இருக்காங்க.

நரகாசுரன் தமிழனா வடநாட்டவனா என்றே இங்க நிறைய பேர் குழம்பிப் போய் இருக்காங்க. இதுல நாம ஏதாவது சொல்ல போய்.. நமக்கு எதுக்கு வம்பு?

நரகாசுரன் அழிந்த நாள்னு சொல்லி நாங்க தீபாவளி கொண்டாடாம இருக்க போறதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதுக்கு பேரு தீபாவளியே இல்ல. சரியான பெயர் கடைசி வரியில் உள்ளது. அதை நாம் செய்து தான் ஆகணும்.

ஒரு பக்கம் என்னனா ஹிந்துகள் தீபாவளி கொண்டாடி வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டுள்ளனர். இன்னொரு பக்கம் என்னனா நரகாசுரன் ஒரு தமிழன், அவன் அழிந்த நாளை நாங்க கொண்டாட மாட்டோம்னு பேசிக்கொண்டு உள்ளனர்.

இந்த விடயத்தில் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. ஆரியன் ஒருபுறம் தீபாவளி பண்டிகையைப் பிரபலப்படுத்தி அதுக்கு விரதம் இருக்கணும்னு ஒன்றைப் பரப்பி (தமிழகத்தில் பெரும்பாலும்) தமிழர்களின் உண்மையான வழிபாட்டு முறையைச் செய்யவிடாமல் தடுத்தான்.

திராவிடன் ஒருபுறம், நரகாசுரன் என்பவன் தமிழன். அவன் அழிந்த நாள் தான் தீபாவளி. இதை நாம் கொண்டாட கூடாதுன்னு பரப்புரை செய்து தீபாவளி நாளில் தமிழர்களின் உண்மையான வழிபாட்டு முறையை செய்யவிடாமல் தடுத்தான். (இப்படி திராவிடம் பரப்பிய ஒரு பொய்யை தான் பல தமிழர்கள் இன்று பெருமையோடு பேசிக்கொண்டு உள்ளனர்)

ரெண்டுமே ஒரே காரணத்துக்காக தான் செயல்ப்பட்டதுன்னு இதுல இருந்து புரியுது. சுருக்கமாக சொல்லணும்னா "ஆரியமும் திராவிடமும் ஒன்னு, இத அறியாதவன் வாயில மண்ணு."

மேலே சொன்ன தமிழர்களின் உண்மையான வழிபாட்டு முறை வேறு ஏதும் இல்லை. ஐப்பசி அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களுக்குக் கறி சமைத்து படையல் இடுவது தான் அது.

அதுக்காகவே தீபாவளி நாளை அமாவாசை அன்று வராதபடி ஒரு நாள் முன்னரே மாற்றி வைத்தனர் நாள்காட்டியில். ஐப்பசி அமாவாசை தான் நம் முன்னோர் நினைவலைகளுக்குப் படையல் இட மிக உகந்த நாள்.

தீபாவளி அன்றே படையல் போட்டு விட்டால் மறுநாளான (உண்மையான படையல் திருநாள்) அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்குப் படையல் போட மாட்டோம். இது தான் எதிரி நமக்கு சொருகிய ஆப்பு.

ஆனால் இது என்னவோ இப்போ பெரிதளவில் நடக்குற மாதிரி தெரில. இன்னும் நம் முன்னோர்களுக்கு நாம் அசைவ படையல் போட்டுக்கிட்டு தான் வர்றோம்! சிறப்பு!

இனியும் தொடர்வோம். சிம்பிளா சொல்ல வேண்டியதை சற்று நீளமாக சொல்லிட்டேன். இறுதியாக என்ன சொல்ல வர்றேன்னா, தீபாவளி என்று அழைக்கப்படும் படையல் திருநாளை நாம் செய்தே ஆகணும். ஆனால் நாள்காட்டியில் காட்டப்படும் தீபாவளி நாளில் அல்ல. அதுக்கு மறுநாளான ஐப்பசி அமாவாசை அன்று. அது தான் நமது சரியான வழிபாட்டு நாளும் கூட.

இன்றும் நம்மிடையே இருக்கும் தீபாவளி அன்று கறி சமைக்கும் வழக்கம், அக்காலத்தில் இருந்து நம் முன்னோர்கள் படையல் திருநாளைக் கொண்டாடியதின் தொடர்ச்சியே ஆகும்.

படையல் போடுவோம். முன்னோர் ஆசியைப் பெறுவோம். செம்மையாக வாழ்வோம்!

தமிழர்கள் அனைவருக்கும் முன்னோர் படையல் திருநாள் வாழ்த்துகள்! 😊🙏