Wednesday, 22 March 2023

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!


 · 
எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!

ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் வைத்தியர் ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்

வாழைக்காயின் ரகசியம்;- இதயம் சீராக செயல்பட பொட்டாசியம்(துவர்ப்புச்சத்து மிக அத்தியாவசியமாகிறது.இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத்தேவையான பொட்டாசியம் வாழைக்காயின் மூலமே கிடைக்கிறது.வாழைக்காயில் நார்ச்சத்திகம் என்பதாலும் சி வைட்டமின்நிறைந்துள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத்வையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எழும்புக்கும் நல்லது.சி விட்டமினிருப்பதால் நுரையீரலும் வழுப்பெற்று சுத்திசெய்யப்படுகிறது.இதில் 913மிகி பொட்டாசியம் அதீததமென்பதால் கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள்B6,B12உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது.
மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது.தொப்பையிருந்தாலும் கரைந்துவிடும். உடல் பருமன் குறையும். சோர்வாகயிருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும்வாழைக்காய் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்.

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

தன் காயம் காக்க வெங்காயம் போதும்

வாழை வாழ வைக்கும்

அவசர சோறு ஆபத்து

ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

இருமலை போக்கும் வெந்தயக் கீரை

உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

சித்தம் தெளிய வில்வம்

சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

சூட்டை தணிக்க கருணை கிழங்கு

ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

வாத நோய் தடுக்க அரைக் கீரை

வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

பருமன் குறைய முட்டைக்கோஸ்

பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”

Saturday, 11 March 2023

இன்று இருக்கும் பல பிரச்சனைகள்.! ஒரே தீர்வு சப்போட்டாதான்

இன்று இருக்கும் பல பிரச்சனைகள்.! ஒரே தீர்வு சப்போட்டாதான்., காரணத்தை தெரிந்து கொள்வீர்களா நீங்கள்.!!

சப்போட்டா பழத்தில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சப்போட்டா பழமானது அதிகளவு கொழுப்புகளினால் வரும் பிரச்சனைகள் உள்ள நபர்களுக்கு இயற்கையான மருந்து என்றும் கூறப்படுகிறது. 

தினமும் இரண்டு சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான கோளாறுகளை சரி செய்து., இதயத்தை பாதுகாக்கும். 

சப்போட்டா பழத்தின் சாறுடன் சிறிதளவு தேயிலை சாறு சேர்ந்து சாப்பிட்டு வந்தால்., இரத்த பேதி உள்ள நபர்களுக்கு இரத்த பேதியானது குணமாகும். 

சப்போட்டா பழத்தின் சாறை பருகி வந்தால் கோடை காலம் மட்டுமல்லாது பிற காலத்திலும் ஏற்படும் உடல் சூடு மற்றும் தாகத்தை தனித்து நமது உடலை பாதுகாக்கிறது. 

சப்போட்டா பழத்தின் சாற்றை பருகி வந்தால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதியுறும் நபர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். தினமும் தூங்குவதற்கு முன்னர் சப்போட்டா பழத்தின் சாறை அருந்த வேண்டும்.

சப்போட்டா பழத்தின் சாற்றை அருந்துவதன் மூலமாக ஆரம்பகால காசநோய் பிரச்சனைகள் குணப்படுத்தப்படும் மற்றும் மூல நோய் உள்ளவர்களுக்கு இந்த பழச்சாறு சிறந்த மருந்தாகும். 

சப்போட்டா பழத்தின் சாற்றை அருந்துவதன் மூலமாக பித்தமானது குணமாகும். மேலும்., ஒரு தே.கரண்டி சீரகத்தை மென்று விழுங்கி., சப்போட்டா பழத்தின் சாற்றை பருகி வர பித்தம் மற்றும் பித்த மயக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும். 

சப்போட்டா பழத்தின் சாறுடன் சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து பொடியாக்கி காய்ச்சி குடித்து வர காய்ச்சலானது குணமாகும். இதனை அடிக்கடி சாப்பிட்டு வருவதற்கு குடல் புற்றுநோய் பிரச்சனைகள் குணமாகும். 

சப்போட்டா பழத்தில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களின் காரணமாக எலும்புகளானது வலுப்பெறும். இந்த பழச்சாறுடன் எலுமிச்சம்பழத்தை சாறை சேர்த்து பருகி வர சளி பிரச்சனை குணமாகும். 

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலின் அழகானது மெருகேறும்.

Saturday, 18 February 2023

மகா சிவராத்திரி நாளில் வரும் இன்னொரு விசேஷம்

மகா சிவராத்திரி நாளில் வரும் இன்னொரு விசேஷம்.. விரதம் இருந்தால் இருமடங்கு நன்மை..!
மகா சிவராத்திரி 2023

சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி
சக்திக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி
மாசி மாதம் வரும் மகா சிவாராத்திரி

சக்திக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி என்பது போல சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்பது பழமையான ஐதீகம். மாதம் ஒரு முறை சிவராத்திரி கொண்டாடப்பட்டாலும் மாசி மாதம் வரும் மகா சிவாராத்திரிக்கு தனி சிறப்பு உண்டு.

இந்த நாளுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான சிவராத்திரி வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத ஒரு விசேஷமாக, மகா சிவராத்திரியன்றே சனி பிரதோஷமும் நடைபெறுகிறது. எனவே இந்த ஆண்டு மகா சிவராத்திரி மிக மிக சக்தி வாய்ந்தது மற்றும் சிறப்பானதாக கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு வரக்கூடிய மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷத்தின் மகிமைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தமிழ் மாதங்களின் அடிப்படையில் மாசி மாதத்தின் அமாவாசைக்கு முந்தைய திதியான சதுர்த்தசி திதியில் அனுஷ்டிக்கப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அதாவது மாசி மாதம் ஆறாம் தேதி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. அதே சனிக்கிழமைதான் சனி பிரதோஷ விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

பிப்ரவரி 18ஆம் தேதி பகலில் திரயோதசி திதியும், இரவில் சதுர்த்தசி திதியும் சேர்ந்து ஒரே நாளில் வருவதால் இந்த சிவராத்திரி விசேஷமான சிவராத்திரியாக அமைந்துள்ளது. இந்த நாளில் பக்தர்கள் விரதமிருக்க இரு மடங்கு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகா சிவராத்திரியன்று விரதம் இருந்தால் மூன்று பிறவியில் செய்த பாவங்கள் முழுவதுமாக நீங்கும் என்பது ஐதீகம். மனக் கவலைகள், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள், வறுமை நிலை ஆகியவை நீங்கி வாழ்வில் எல்லா நிலைகளையும் மேன்மை பெறுவதற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்தால் போதும்.

ஆனால், எல்லாராலும் மகா சிவராத்திரியன்று முழுமையாக விரதம் இருக்க முடியாது. சிவபெருமானின் ஆசி இருந்தால் மட்டுமே மகா சிவராத்திரியன்று விரதம் இருக்க முடியும் என கூறுவார்கள்.

மகா சிவராத்திரி அன்று பல யுகங்களில் நடந்த அற்புதங்கள்:

பண்டைய கால புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் மகா சிவராத்திரி பற்றி பல கதைகள் இருக்கின்றன.

கண்ணப்ப நாயனார் கதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் குருதி வழிய தன்னுடைய கண்களை எடுத்து ஈசனுக்கு பொருத்திய அந்த நாளும் சிவராத்திரி தான்.
அதுமட்டுமில்லாமல் மும்மூர்த்திகளில் விஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு யார் பெரியவர் என்று சண்டை ஏற்பட்ட போது லிங்க வடிவமாக சிவபெருமான் இவர்களுக்கும் மகா விஸ்வரூபமாக காட்சியளித்ததும் மகா சிவராத்திரி அன்றுதான்.
மேலும், பிரம்மா மற்றும் விஷ்ணுவை விட, சிவபெருமான் சக்தி வாய்ந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஜோதிர் லிங்கமாக சிவபெருமான் உருவெடுத்ததும் சிவராத்திரி நாளில் தான் என்று கூறப்படுகிறது.
சனிப் பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி இரண்டும் அரிதாக ஒன்றிணையும் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் நாட்பட்ட நோய்களும் தீரும், தோஷங்கள் நிவர்த்தியாகும், கடன் தொல்லை நீங்கும், வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடைய முடியும் என கூறப்படுகிறது. 🕉️🙏

பார்வதி தேவி நீண்ட காலம் கடும் தவமிருந்து, ஈசனை அடைந்த தினம் தான் மகா சிவராத்திரி.
உலகம் முழுவதும் கடலில் மூழ்கி உலகில் உயிரினங்களே இல்லாது போகும் ஒரு நிலை ஏற்பட்ட நேரத்தில் பார்வதி தேவி உலகத்தில் இருக்கும் உயிர்களை காக்க வேண்டுமென்று தீவிரமாக தவம் இருந்து சிவபெருமானை பூஜித்தார். அவர் பூஜை செய்த அந்த இரவுதான் மகா சிவராத்திரி நாள் என்பது ஐதீகம்.
அதேபோல பார்வதிதேவி சிவபெருமானின் இடது பக்கத்தில் தனக்கு பாகம் பெற்ற நாளும் மகா சிவராத்திரி தான் என்று கூறப்படுகிறது.
மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தீவிரமான தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து ‘பாசுபதம்’ என்ற அஸ்திரத்தை வரமாகப் பெற்ற நாள் சிவராத்திரியாகும்.
அதே போல மார்க்கண்டேயன் என்றென்றும் இளமையாக இறப்பே இல்லாமல் இருப்பதற்கு எமனை சம்ஹாரம் செய்த நாளும் சிவராத்திரி தான்.

Friday, 20 January 2023

புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்

*சென்னையில்... மரணம்  துரத்துகிறது, உஷார்!*

சென்னையில் கடந்த நான்கு மாதமாக இறந்தவர்களின் *வயது 33/31/34/35/37/39/41/43/46* இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர்... காரணம் :- தயவு செய்து யாரும் புரோட்டாவும் முட்டையும் அதிக அளவில் தினமும் உட்கொள்ள வேண்டாம்... கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிடும் எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்! திங்கள் அன்று இறந்தவர் வயது 37 இந்த (மாரடைப்பு) புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள்  முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு,  புரோட்டா தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள் இதில் தான் எத்தனை வகைகள்? *விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா சில்லி புரோட்டா*  இப்படியாக இளைஞர்களை  கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்து  வருகிறது ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள் *கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்* ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் *கொடிய மைதாவால்* செய்யப்படுகிறது  இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால் மைதாமாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின.  புரோட்டாவும் பிரபலமடைந்தது. *மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது*  குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்  அதுமட்டுமல்ல,  மைதாமாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் *பெண்சாயில் பெராக்ஸைடு என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது* இந்த ரசாயனம் தான் நாம் *தலையில் நரைத்த முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம்*  இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அது மட்டுமல்ல,  *அலோக்கான்* என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல்கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினா மோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில் தான் அதிகம். உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். *பாலக்காடு மாவட்டம்* முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும் அங்கு பிரச்சாரம் தொடர்கிறது. இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான *கேழ்வரகு, கம்பு, சோளம்* உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்தபுரோட்டாவை புறம் தள்ளுவோம்.  நாமும் விழித்துக் கொள்வோம்  நம் தலைமுறையையும் காப்போம்!நண்பர்களே...

*தயவு செய்து இதை பகிருங்கள்*
       இப்போ தெரிந்திருக்கும்
ஏன்' டயாபிட்டீஸ்'  வேகமாக
பரவுகிறது என்று!!

Friday, 13 January 2023

இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. போகி என்றால் மகிழ்ச்சியானவன் என்று பொருள்.

 "#காப்புக்கட்டுதல்"

என்பது வெறும் சடங்கல்ல...

நமது முன்னோர்களின் மருத்துவ அறிவு!

#போகிபண்டிகை, மார்கழி மாதத்தின் கடைசி தினத்தில் பழையன கழிந்து புதியன புகும் நாளான அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும்.

பொங்கலிடுவதற்கு முன்னர் "#காப்புகட்டுதல்" என்ற பெயரில் வீட்டின் வாசலில்  வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும், விளைநிலங்களின் நான்கு திசைகளிலும் "#காப்பு_வளைத்தல்" என்ற பெயரில் எல்லைப் பகுதிகளை கண்டறிவார்கள்.

#வயல்விழா :- வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றழைக்கப்படுகிறது. மருதநிலத்தின் கடவுள் இந்திரன், இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. போகி என்றால் மகிழ்ச்சியானவன் என்று பொருள்.


விளைநிலங்களின் கடவுளான இந்திரனை வணங்கும்போது "பசி, பிணி, பகை" நீக்கி, "சம்பா, குறுவை, தாளடி" என்ற முப்போகத்திலும் நல்ல விளைச்சலைக் கண்டு முன்னேற்றம் அடைய #வயல்விழாவாக முற்காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த போகிப் பண்டிகை, காலப்போக்கில் தற்பொழுது #வாசல்பொங்கலாக கொண்டாடப்படுகிறது.

"#காப்புக்கட்டு" பற்றி சிறு விளக்கம்.

1. ஆவாரம் பூ,

2. பீளைப்பூ,

3. வேப்பிலை,

4. தும்பை செடி, அல்லது துளசி,

5. நாயுறுவி செடி,

என ஐந்து வகையான செடிகளை காப்புகட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் காலப்போக்கில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை, என்று மூன்றுவகை மட்டுமே பயன்படுத்திவருகிறார்கள். அதுவும் நகரங்களில் முற்றிலும் மறந்துவிட்டனர்.

மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள். தைமாதம் முதல் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும். எனவே முன்னெச்சரிக்கையாக தங்களைப் பாதுகாத்துக்கொள்ள போகி பண்டிகை அன்று வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களின் நான்கு மூலைகள் மற்றும் வாசற்படிகளில் ஆவாரம்பூ, வேப்பிலை, சிறுபீளை, தும்பை இலை, இவைகளை ஒவ்வொரு கொத்தாத மாவிலை தோரணத்துடன் சேர்த்து காப்புகட்டும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலையாகவும் கட்டி வணங்குவார்கள்.

#ஆவாரம்பூ உடல் வெப்பமாவதை தடுக்கும். #வேப்பிலை காற்றில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் கிருமி நாசினி. #மாஇலை உடல் களைப்பை நீக்கும். #சிறுபீளை நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். #தும்பை வாசம் தலைவலியை போக்க கூடியது. #துளசியின் மகிமை பற்றி நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான் அந்த மகாலட்சுமியின் அம்சம். அதுமட்டுமில்லாமல் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது.எனவே இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வீட்டு வாசலில் கட்டி வந்தார்கள் நம் முன்னோர்கள்.

எனவே அனைவரும் தங்களது இல்லங்களிலும் தொழிற்கூடங்களிலும் மேலே குறிப்பிட்டபடியோ அல்லது தங்களுக்கு தெரிந்த மூலிகைச் செடிகளை ஒன்றாக சேர்த்து நாகரீகம் கருதாமல் காப்புக்கட்டுங்கள். தங்களின் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் நமது முன்னோர்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்க விளக்கமாகச் சொல்லிகொடுத்து, போகிபண்டிகையில் கடந்த காலத்தில் நடந்த நல்ல நிகழ்வுகளுக்கு நன்றி சொல்லி வணங்குவோம்.

அனைவருக்கும் எனது 

#இனிய_பொங்கல்_நல்வாழ்த்துக்கள்.🙏🙏

Tuesday, 13 December 2022

பிபி அல்லது மாரடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் ஒரு முக்கிய காரணம்.



 
   இந்தியாவில் பெரும்பாலான இறப்புகள் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக மாரடைப்பால் ஏற்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
   உங்கள் சொந்த வீட்டில் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ள பலரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
   பல அமெரிக்க பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு கோடிக்கணக்கில் மருந்துகளை விற்கின்றன.
   ஆனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யுமாறு மருத்துவர் கூறுவார்.
   இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர் இதயக் குழாயில் ஸ்டென்ட் எனப்படும் ஸ்பிரிங் ஒன்றைச் செருகுகிறார்.
   இந்த ஸ்டென்ட் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது மற்றும் தயாரிப்பதற்கு வெறும் $3 (ரூ. 150-180) ஆகும்.
   இந்த ஸ்டென்ட் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு 3-5 லட்சத்திற்கு விற்று கொள்ளையடிக்கப்பட்டது.
   டாக்டர்கள் லட்சக்கணக்கில் கமிஷன் பெறுகிறார்கள் அதனால்தான் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய திரும்பத் திரும்ப கேட்கிறார்கள்.
   கொலஸ்ட்ரால், பிபி அல்லது மாரடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் ஒரு முக்கிய காரணம்.
   யாரும் வெற்றி பெறுவதில்லை.
   ஏனென்றால் வசந்தம் என்பது மருத்துவர் இதயக் குழாயில் வைக்கும் பேனா போன்றது.
   சில மாதங்களுக்குள், அந்த கிணற்றின் இருபுறமும் அடைப்புகள் (கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு) சேர ஆரம்பிக்கின்றன.
   இதைத் தொடர்ந்து இரண்டாவது மாரடைப்பு ஏற்படுகிறது.
   மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்கிறார் டாக்டர்.
   உங்கள் லட்சக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
 
                  இப்போது படியுங்கள்
          அதன் ஆயுர்வேத சிகிச்சை
 
   இஞ்சி சாறு -
 
   இது இரத்தத்தை மெல்லியதாக்குகிறது.
   இது இயற்கையாகவே வலியை 90% குறைக்கிறது.
 
   பூண்டு சாறு
 
   இதில் உள்ள அல்லிசின் கொலஸ்ட்ரால் மற்றும் பிபியை குறைக்கிறது.
   இது இதயத்தின் தடையை நீக்குகிறது.
 
   எலுமிச்சை சாறு
 
   இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.
   இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
   ஆப்பிள் சாறு வினிகர்
 
   உடலில் உள்ள அனைத்து நரம்புகளையும் திறந்து, வயிற்றை சுத்தப்படுத்தி, சோர்வை நீக்கும் 90 வகையான பொருட்கள் இதில் உள்ளன.
 
            இந்த நாட்டுப்புற வைத்தியம்
          இதை இப்படி பயன்படுத்துங்கள்
 
   1- ஒரு கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   2- ஒரு கப் இஞ்சி சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   3- ஒரு கப் பூண்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   4-ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள்;
 
   நான்கையும் கலந்து குறைந்த தீயில் சூடாக்கி, 3 கப் இருக்கும் போது, ​​ஆறவிடவும்;
   இப்போது நீங்கள்
   அதனுடன் 3 கப் தேன் சேர்க்கவும்
 
   இந்த மருந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
   அனைத்து தொகுதிகளும் செல்கின்றன.
 
   இச்செய்தியை இயன்றவரை பரப்புமாறு கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் அனைவரும் இம்மருந்து மூலம் குணமடையலாம்;  நன்றி!
 
   மாலை பற்றி யோசி
   இரவு 7:25 ஆகிறது, அவர் தனியாக வீட்டிற்கு செல்கிறார்.
   அத்தகைய சூழ்நிலையில், திடீரென்று உங்கள் மார்பில் ஒரு கூர்மையான வலியை உணர்கிறீர்கள், அது உங்கள் கைகளை கடந்து செல்கிறது.
   தாடைகளை அடைகிறது.
   நீங்கள் அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து உங்கள் வீட்டிற்கு 5 மைல் தொலைவில் உள்ளீர்கள், துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அங்கு செல்ல முடியுமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது.
   நீங்கள் CPR இல் பயிற்சி பெற்றுள்ளீர்கள், ஆனால் அதை நீங்களே எவ்வாறு பயன்படுத்துவது என்று உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை.
 
        மாரடைப்பை எவ்வாறு தவிர்ப்பது
               இந்த தீர்வுகள்
              
   பெரும்பாலான மக்கள் மாரடைப்பின் போது தனியாக இருப்பதால், உதவியின்றி சுவாசிப்பது கடினம்.
   அது அப்படியே நடக்கும்.  அவை சரிந்து 10 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.
   அத்தகைய நிலையில், பாதிக்கப்பட்டவர் தீவிரமாக இருமல் மூலம் தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.  ஒரு பெருமூச்சு
   ஒவ்வொரு இருமலையும் முதலில் எடுக்க வேண்டும்
   மற்றும் இருமல் மிகவும் வலுவானது
   மார்பிலிருந்து துப்பியது.
   உதவி வரும் வரை
   இரண்டு விநாடிகளுக்கு செயல்முறையை மீண்டும் செய்யவும்
   அதனால் துடிப்பு சாதாரணமானது
   இதை செய்வோம்.
   நுரையீரலில் உரத்த சுவாசம்
   ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது
   சத்தமாக இருமலும் ஒரு காரணம்
   அது இதயத்தை மூழ்கடிக்கச் செய்கிறது
   சீரான இரத்த ஓட்டம்
   ஓடு.
 
   தயவு செய்து இந்த செய்தியை முடிந்தவரை பலருக்கு பரப்புங்கள்.  ஒவ்வொருவரும் 10 பேருக்கு இந்த செய்தியை அனுப்பினால் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியும் என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.
 
           நீங்கள் மிகவும் கோருகிறீர்கள்
     வேடிக்கையான புகைப்படங்களை அனுப்புவதற்கு பதிலாக
          இந்த செய்தியை அனைவருக்கும் அனுப்பவும்
      உயிர்களை காப்பாற்ற
 
   ஒரு நண்பர் எனக்கும் அனுப்பினார்
   இப்போது உங்களுக்கு வாய்ப்பு
   பொது நலன் கருதி ஒளிபரப்பு
  
 
   இந்த செய்தியை 3 குழுக்களுக்கு அனுப்ப முயற்சிக்கவும்.  அனைத்து எழுத்துக்களும் திறக்கப்பட்டு உங்கள் பெயர் எழுதப்பட்டுள்ளது

   இது நகைச்சுவை இல்லை, அதன் மந்திரம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
   *Share ❤❤❤

பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா

பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா....
அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு பெயர்கள்....😊

கோவில் உண்டியலுக்கு  செலுத்தினால் *காணிக்கை*

யாசிப்பவருக்கு கொடுத்தால் 
*பிச்சை*

அர்ச்சகருக்குக் கொடுத்தால் 
*தட்சணை*
 
கல்விக் கூடங்களில் 
*கட்டணம்*

திருமணத்தில் 
*ஸ்ரீதனம்*

திருமண விலக்கில் 
*ஜீவனாம்சம்*

விபத்துகளில் இறந்தால் 
*நஷ்டஈடு*

இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் *காப்பீடு*

வங்கிகளில் வைத்தால் *வைப்புத்தொகை* 

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
*தர்மம்*

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் 
*தானம்*

திருமண வீடுகளில் பரிசாக 
*மொய்*

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது 
*கடன்*

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது *அன்பளிப்பு*

விரும்பிக் கொடுத்தால் 
*நன்கொடை*
     
நீதிமன்றத்தில் செலுத்தினால் *அபராதம்*
      
மத்திய அரசுக்குச் செலுத்தினால் 
*வரி*

அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு
கொடுத்தால் அது 
*நிதி*
      
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது 
*சம்பளம்*

தினமும் கிடைப்பது 
*கூலி*
    
பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது *ஓய்வூதியம்*

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் 
*லஞ்சம்*
     
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
*அசல்*

வாங்கியக் கடனுடன் கொடுக்கும் போது *வட்டி*

தொழில் தொடங்கும் போது  
*முதலீடு*

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு *இலாபம்*
     
குருவிற்குக் கொடுக்கும் போது *குருதட்சணை*

ஹோட்டலில் நல்குவது *டிப்ஸ்*

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் *பணத்திற்கு* மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...😊
இந்தப் *பணம்* என்ற காகிதத்தைப் பெற...

*சிலர் அன்பை இழக்கின்றனர்...*

*சிலர் பண்பை இழக்கின்றனர்...*

*சிலர் நட்புகளை இழக்கின்றனர்...*

*சிலர் உறவுகளை இழக்கின்றனர்...*

*சிலர் கற்பை இழக்கின்றனர்...*

*சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...*

*சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...*

*சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...*

*பலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்....*