Friday, 19 February 2021

Zero-வும் infinity-யும் ஒன்றே! | Guru Mithreshiva | அடடா ஆன்மீகம் EP 213 | Aadhan Aanmeegam


 

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...!

சளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.
பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
Playvolume00:07/01:20TruvidfullScreen

 
கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று  நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.
கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர  வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
 
கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்.
 
சளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்.

Tuesday, 16 February 2021

வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!

இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது.

பிரண்டை... சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை... என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.

இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.

மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.

எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.

துவையல்
பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

இலைத் துவையல்
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.
இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகு - 5, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.

வற்றல்
நன்கு முற்றிய  இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.

பிரண்டை உப்பு
பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.

பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.

2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். வீரியம் பெருகும்; உடல் வலிமை பெறும்.

வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.

Sunday, 14 February 2021

பரோட்டா – மெல்லக் கொல்லும் விஷம்!

விருதுநகர் பரோட்டாவும், பொறிச்ச பரோட்டாவும் சுவையாக இருக்கலாம். ஆனால், நீங்கள் உண்பது மெல்லக் கொல்லும் விஷத்தை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தின் நகர, புறநகரப் பகுதிகளில் பரோட்டாக் கடை இல்லாத தெருவைப் பார்க்க முடியாது.  கிராமங்களிலும் பரோட்டா பிரியர்கள் அதிகம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பரோட்டா. ஒரு சாதாரண மனிதன் ஒரு வாரத்தில் பரோட்டா சாப்பிடாமல் கடந்துவிட முடியாது. குறிப்பாக, பேச்சுலர்கள்.

பரோட்டா, வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, கைமா பரோட்டா, முட்டை லாப்பா என பரோட்டாவிலேயே ஏராளமான வகைகள்.

விதவிதமான கிரேவிகளுடன் நினைத்தாலே எச்சிலூறும் சுவை. பரோட்டா உடலுக்குக் கெடுதல் என சில ஆண்டுகளாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் மீதான மோகம் குறையவில்லை.

எளிதில் கிடைக்கும் உணவு. மலிவான விலை. அதன் சுவை எனப் பல காரணங்கள்.

ஆனாலும், பரோட்டா ஏன், எந்த அளவுக்குத் தீமையானது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

பரோட்டாவின் மூலப்பொருள் மைதா. இது வெள்ளை எமன். மைதா கோதுமையில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

மைதாவை மூன்று பெரும் பாகங்களாகப் பிரிக்கலாம்.

தவிடு (Bran)
முளை (Germ)
வித்தக விழையம் (Endosperm).
இதில், மற்ற இரண்டையும் நீக்கிவிட்டு வித்தக விழையத்தில் இருந்து மட்டும் மைதா தயாரிக்கின்றனர்.  இதில், மாவுச்சத்தும், செரிக்க அதிக நேரம் எடுக்கும் குளூட்டனும், புரோட்டினும் உள்ளன.

மைதாவில் உள்ள குளூட்டன் சிக்கலான வடிவம் கொண்டது. எனவே, செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். எனவே, இதை உண்பவர்களுக்குச் செரிமானச் சிக்கல் வரும்.

வித்தக விழையம் நன்றாக அரைக்கப்பட்டால், அது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மாவை பென்சாயில் பெராக்ஸைடு  (benzoyl peroxide )எனும் ரசாயனத்தால் வெள்ளை ஆக்குகிறார்கள். இதுதான் மைதா.

இந்த பென்சாயில் பெராக்ஸைடு முடிக்கு டை அடிக்க பயன்படுத்தும் ரசாயனம். இது, புரதத்துடன் சேர்ந்து, சர்க்கரை நோயை (Diabetes) உருவாக்குகிறது.

 மாவை மிருதுவாக்க, அலோக்ஸான் (Alloxan) எனும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, செயற்கை நிறமூட்டிகள், மினரல் எண்ணெய், சுவையூட்டிகள், சர்க்கரை, சாக்கரின், அஜினோ மோட்டோ போன்றவையும் மைதா மாவில் சேர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் சேர்ந்ததுதான் மைதா மாவு.

அலெக்ஸான் ரசாயனம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். சோதனைக் கூடங்களில், எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதற்காக, இந்த வேதிப் பொருளைத்தான் பயன்படுத்துவார்கள். அப்போதுதானே அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியும். ஆக, பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் நிச்சயம்.

மைதா மாவில் நார்ச்சத்தே இல்லை. இதனால், நம் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, செரிமான சக்தி குறைந்து விடும்.

மைதாவில் செய்யப்படும் பரோட்டா மட்டுமல்லாமல், வேறு எந்த தின்பண்டமாக இருந்தாலும் அது ஆரோக்கியக் கேடுதான். எனவே, நீங்களும் உண்ணாதீர்கள், குழந்தைகளுக்கும் உண்ணக் கொடுக்காதீர்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் மைதா பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் மட்டுமல்ல, சிறுநீரகக் கல், இதய நோயும் வர வாய்ப்புள்ளது.

மக்களே உஷார். விருதுநகர் பரோட்டாவும், பொறிச்ச பரோட்டாவும் சுவையாக இருக்கலாம். ஆனால், நீங்கள் உண்பது மெல்லக் கொல்லும் விஷத்தை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Friday, 12 February 2021

குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றதாக மூலிகை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அரிமஞ்சிரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில் எங்கும் காணப்படுகிறது. இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர்.

மருத்துவ குணங்கள்:

நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும். வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும். குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும். குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.

Thursday, 11 February 2021

நில அளவைகள்(சர்வே பற்றி) தெரிந்து கொள்ளுங்கள்!!

நில அளவைகள்(சர்வே பற்றி) தெரிந்து கொள்ளுங்கள்!!

சர்வே” பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:

1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.
1. நில அளவை துறை
2. நில வரிதிட்ட துறை

2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.

3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.

4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.

5. 1. கிராம வரைபடம்,
2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)
3. புலப்படம்
4.சர்வே கற்கள் பதிவேடு
5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட
உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.

6. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.

7. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.

எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்?

1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது.

2. பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது.

3. சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.

4. கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்

5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும்.

6. நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.

7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது.

8. பராமரிப்பு பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும்.

9. இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும்.

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி …

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

பாரம்பரிய வழக்கம், நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை ஆண்டபோது நில நிர்வாகத்தை 90% அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.

உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றோம்.

• இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது.

• கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது.

• நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன.

• ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

வேலி
• 1வேலி – 2௦ மா
• 1வேலி – 6.17 ஏக்கர்
• 1வேலி – 5காணி

மா
• 1மா – 1௦௦ குழி
• 2௦மா – 1வேலி
• 3மா – 1ஏக்கர்
• 3மா – 1௦௦ சென்ட்
• 7மா – 1ஹெக்டேர்

சதுமீட்டர்
• 1௦,௦௦௦ சதுர மீட்டர் – 1ஹெக்டேர்
• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்
• 4௦.5 சதுர மீட்டர் – 1சென்ட்
• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்
• 1சதுர மீட்டர் – 1௦.76391 சதுர அடி
• ௦.௦929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
• 1௦௦ சதுர மீட்டர் – 1ஏர்ஸ்
• ௦.8361 சதுர மீட்டர் – 1குழி
• 1௦1.17 சதுர மீட்டர் – 121 குழி

செயின்
• 1செயின் – 66அடி
• 1செயின் – 1௦௦ லிங்க்
• 1௦செயின் – 1 பர்லாங்கு
• 1செயின் – 22 கெஜம்

ஏக்கர்
• 1ஏக்கர் – 43,56௦ சதுர அடிகள்
• 1ஏக்கர் – 1௦௦ சென்ட்
• 1ஏக்கர் – 16௦ square Roads
• 1ஏக்கர் – 1.1834 Square Arpents
• 1ஏக்கர் – 1௦ Square Chains
• 1ஏக்கர் – 16௦ Perches
• 1ஏக்கர் – 16௦ Poles
• 1ஏக்கர் – 4௦46.82 சதுர மீட்டர்
• 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர்
• 1ஏக்கர் – ௦. 4௦469 ஹெக்டேர்
• 1.32ஏக்கர் – 1 காணி
• 64௦ஏக்கர் – 1 சதுர மைல்
• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
• 6.17ஏக்கர் – 1 வேலி
• 1ஏக்கர் – 3 மா
• 1ஏக்கர் – ௦. 4௦4694 ஹெக்டேர்
• 1ஏக்கர் – 4௦.5ஏர்ஸ்
• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்
• 64௦ ஏக்கர் – 1 சதுர மைல்
• 8.64ஏக்கர் – 1வள்ளம்

கெஜம்
• 1கெஜம் – 3அடி
• 22கெஜம் – 1 செயின்
• 22கெஜம் – 66 அடி
• 1கெஜம் – ௦.9144 மீட்டர்
• 1.௦93613 – 1மீட்டர்

ஏர்ஸ்
• 1௦ ஏர்ஸ் – ௦2471 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦76 சதுர அடி
• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦௦ ச.மீ
• 1௦௦ ஏர்ஸ் – 1ஹெக்டேர்
• ௦. 4௦5 ஏர்ஸ் – 1 சென்ட்

ஹெக்டேர்
• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦,௦௦௦ ச.மீ
• 1ஹெக்டேர் – 1௦௦ ஏர்ஸ்
• ௦௦4௦ ஹெக்டேர் – 1சென்ட்
• 1ஹெக்டேர் – 247 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦7637.8 சதுர அடிகள்
• ௦. 4௦5 ஹெக்டேர் – 1ஏக்கர்

சென்ட்
• 1சென்ட் – 435.சதுரஅடிகள்
• 1சென்ட் – 4௦.5 சதுர மீட்டர்
• 1சென்ட் – 3குழி
• 1சென்ட் – 48.4 சதுர குழி
• 1௦௦ சென்ட் – 484௦ சதுர குழி
• 1 சென்ட் – ௦௦4௦ ஹெக்டேர்
• 1 சென்ட் – ௦. 4௦5 ஏர்ஸ்
• 1சென்ட் – 4௦. 46 சதுர மீட்டர்
• 2. 47 சென்ட் – 1ஏர்ஸ்
• 1 சென்ட் – 1௦௦௦ சதுர லிங்ஸ்
• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்
• 1.5 சென்ட் – டிசிமல்
• 1சென்ட் – ௦.௦௦4௦47 ஹெக்டேர்
• 1௦ சென்ட் – ௦.௦4௦47 ஹெக்டேர்
• ௦.௦2471சென்ட் – 1 ஏர்ஸ்
• ௦.௦2471சென்ட் – 1௦ ஏர்ஸ்
• 5.5 சென்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 5.5 சென்ட் – 1 மனை
• 33.௦6சென்ட் – 1 மா
• 6.61 சென்ட் – 1 வேலி
• ௦.7 சென்ட் – 1 குழி – 3௦௦ சதுர அடி ( மதுரை)
• ௦.7. சென்ட் – 3௦௦ சதுர அடிகள் ( மதுரை )

சென்ட்
• 11.௦ சென்ட் – 4800 சதுர அடிகள்
• 11.௦ சென்ட் – 2மனை
• 56 சென்ட் – 1குருக்கம்
• 56 சென்ட் – 24,௦௦௦ சதுர அடிகள்
• 2. 47 சென்ட் – 1௦76 சதுர அடிகள்
• 4.7 சென்ட் – 1வீசம்

கிரவுண்ட்
• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
• 1கிரவுண்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்

மீட்டர்
• 1 மீட்டர் – 3.281 அடிகள்
• 161௦ மீட்டர் – 1 மைல்
• 1௦௦௦ மீட்டர் – 1கி.மீ
• 1௦௦௦ மீட்டர் – ௦.62 மைல்
• ௦.9144 மீட்டர் – 1 கெஜம்
• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்
• 2௦1.16 மீ – 8 பர்லாங்கு
• 1 மீட்டர் – 1.௦93613 கெஜம்
• ௦.3௦48 – 1அடி
• 1௦ மீட்டர் – 32. 8௦84 அடிகள்

அடி சதுர அடிகள்
• 435.6 சதுர அடிகள் 1சென்ட்
• 24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட்
• 57,6௦௦ சதுர அடிகள் 1காணி
• 3.28 அடி 1மீட்டர்
• 1அடி 12 இன்ச்
• 1அடி 3௦. 48 செ. மீ
• 528௦ அடி 1 மைல்
• 328௦ அடி 1கி. மீ
• 1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
• 1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்
• 1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர்
• 24௦௦ சதுர அடிகள் 1 மனை
• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்
• 43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர்
• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்
• 1௦89 சதுர அடிகள் 33 அடி
• 1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
• 33 அடி 1 குந்தா
• 66௦ அடி 1 பர்லாங்கு
• 66௦ அடி 22௦ கெஜம்
• 66 அடி 1 செயின்
• 66 அடி 1௦௦ லிங்க்
• ௦.66 அடி 1 லிங்க்
• ௦.66 அடி 7.92 அங்குலம்
• 3 அடி 1 கெஜம்
• 1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட்
• 66 அடி 22 கெஜம்
• 3.28 அடி 1.௦93613 கெஜம்
• 1 அடி ௦.3048 மீட்டர்
• 3.28௦84 அடி 1 மீட்டர்
• 32. 8௦84 1௦ மீட்டர்
• 1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர்
• 1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர்
• 1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர்
• 2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர்
• 5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
• 1௦7.6939 சதுர அடிகள் 1௦ ச. மீ
• 215.278 2௦சதுர மீட்டர்
• 538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர்
• 4,356 சதுர அடிகள் 1௦ சென்ட்
• 48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி
• 24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும்
• 144 சதுர அடிகள் 1குழி

வெங்காயம் - மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.


1. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

2. குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம் கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

3. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

4. முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

5. செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

6. சீதோஷ்ண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

7. புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

8. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

9. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

10. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.

11. அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.